> என் ராஜபாட்டை : December 2013

.....

.

Friday, December 27, 2013

பாத்திரம் கழுவுவது எப்படி ? கிங்’ஸ் கிச்சன்இவர்களாம் போடும்போது ஒரு” உலகமகா  பிரபல பதிவரகிய “ நீங்கள் ஒன்றும் போடவில்லையா என கேடி சாரி கோடிகணக்கான வாசகர்கள் கேட்டதால் இந்த பதிவு .

பாத்திரம் கழுவுவது எப்படி ?

வெந்நீர் போட்டாலும் , டீ போட்டாலும் , முட்டை அவிச்சாலும் கடைசியில் கண்டிப்பாக பாத்திரம் கழுவ வேண்டும் . பேச்சுலராக இருந்தாலும் , திருமண ஆனா ஆளாக இருந்தாலும் கண்டிப்பாக பாத்திரம் கழுவனும் (இல்லைனா சோறு கிடையாது ).

தேவையா பொருள்கள் :
அழுக்கான பாத்திரங்கள் , (இதுதான் ரொம்ப முக்கியம் )
விம் ,பிரில் , சபீனா அல்லது தேங்கா நாறு  

செய்முறை :


முதலில் ஆண்களாக இருந்தால் கைலியை மடித்துகட்டவும் .(பெண்களாக இருந்தால் என யாராது கேட்டிங்க உம்மாச்சி கண்ணா குத்தும் )

அழுக்கு இரண்டுவகைப்படும் ஒன்னு பவர் ஸ்டார் போல , இரண்டாவது சிவாஜி போல .அழுக்கான பாத்திரத்தை எடுக்கவும் . சில அழுக்கு உடனே போய்விடும் அது பவர் ஸ்டார் போல . சில அழுக்கு பாத்திரத்துடன் ரொம்ப ஒன்றிபோய்விடும் அது சிவாஜி போல .

பாத்திரத்தை அழுக்கு போகும் வரை நன்றாக தேய்க்கவும் . உங்களுக்கு பிடிக்காத ஒருவரை அல்லது உங்கள் மனைவி / கணவன் முதுக்குக்கு சோப்பு போடுவதாக நினைத்து கொள்ளவும் . அப்போதுதான் ரொம்ப வேகமாக அழுத்தி தேய்க்க முடியும் .

பாத்திரத்தை நன்றாக கழுவிய பின் வெய்யிலில் காயவைக்கலாம் , சீனு , ஆவி , தமிழ்வாசி வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் பாத்திரத்தை உங்கள் வீட்டுக்குள்ளேயே காயவைப்பது நல்லது .

டிஸ்கி : இதை விட எளிய வழி ஒரு வேலைக்காரியை வைத்துகொள்வது .(பாத்திரம் கழுவ மட்டும் ). அவளால் குடும்பத்தில் பிரச்சனை வந்தால் சங்கம் பொறுப்பல்ல .

டிஸ்கி : அடுத்து தீவிரவாதி “வீடு கூட்டுவது எப்படி ?” என்றும் அரசன் “துணி துவைப்பது எப்படி என்றும் ?” வரலாற்று சுவடுகள் “ ஒட்டகம் மேய்ப்பது எப்படினும் “ பதிவு போடுவார்கள் .

Tuesday, December 24, 2013

அஜித் , விஜய் , ரஜினி ரசிகர்களை கேவலமாக பேசிய சீமான்


நாம் தமிழர் இயக்க தலைவரும் இயக்குனருமான சீமான் பேசிய வீடியோ ஒன்று இப்போது பலத்த சர்சையை கிளப்பிவிட்டு உள்ளது . அதில் தமிழ் சினிமா ரசிகர்களை மிக மிக கேவலமாக பேசியுள்ளார் . சமிபத்தில் ஹிந்து கடவுள் ராமனை கிண்டல் செய்து விட்டு “என்னை கேட்டக ராமன்த்ஹான் வரவேண்டும் ஹிந்துக்கள் ஏன்டா வர்ரிங்க ?” என புத்திசாலித்தனமாக கேட்டார் .

அஜித் :
   தல ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் திரியுது . எல்லாம் தருதலைங்க . . .


விஜய் :
  இவனுங்க எந்த படைக்கு தளபதியா இருந்தானுங்கனு இவனுக்கு தளபதின்னு பட்டம் . 


விஜயகாந்த் :
  எங்கள் இன தலைவர் பிரபாகரனே கேப்டன் என போட்டுகொண்டது இல்லை இவ எப்படி கேப்டன் ?


ரஜினி :
   இவருக்கு உடம்பு சரியிள்ளனதும் 2000 லூசுங்க மொட்டை போடுறானுங்க . “தலைவா வா தமிழ்நாடு காத்திருக்கு “னு போஸ்டர் அடிக்குறான் . அப்ப நாங்கெல்லாம் என்ன சட்டமன்றத்தை கூட்டி , கழுவவா இருக்கோம் .


அந்த கேவலமான பேச்சின் வீடியோ :  • நடிகரை விமர்சனம் செய்வது தனி . ஆனால் ரசிகர்களை விமர்சிக்க இவர் யார் ?
 
  • மக்களாக கொடுத்தால் மரியாதை . நாமாக கேட்டால் அது பிச்சை 
 .
  • விஜயை கிண்டல் செய்யும் இவர் ஏன் அவர் கால்ஷிட்க்கு (பகலவன்னு படம் பேரு கூட சொன்னார் ) அலைந்தார் .
 
  • இவர் படங்களில் நடித்தவர்கள் அனைவரும் தமிழர்கள் தானா ?
 
  • இலங்கையில் இருந்து சுற்றுலா வந்த அப்பாவிகளை அடித்த இவர் கட்சிகாரர்கள் இலங்கை நடிகையை  (பூஜா – தம்பி படம் ) வைத்து படம் எடுத்த இவரை எதால் அடிப்பார்கள் ?

டிஸ்கி : உங்கள் கருத்துகளை கண்டிப்பாக சொல்லவும் .