> என் ராஜபாட்டை : July 2014

.....

.

Monday, July 28, 2014

கதம்பம் 28-07-2014





மிக நீண்ண்ண்ட இடைவெளிக்கு பின் கதம்பம் வருகிறது .


படித்தது :

நீண்ட நாட்களாகவே சாரு நிவேதிதா அவர்களின் நூலை படிக்கவேண்டும் என ஆசை ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை . அமேசன் தளத்தில் அவரது நூல் "தீராக்காதலி " கிடைத்தது . கொஞ்சமாவது காசுகொடுத்து வாங்கி படிப்போமே என்ற "நல்ல " எண்ணத்தில் ஆடர்போட்டு வாங்கி படித்தேன் . அந்த நடிகர்கள் கிட்டப்பா, பாகவதர் , பி,யு .சின்னப்பா போன்ற பெரும் தலைகளை பற்றிய பல அறிய தகவல்களின் தொகுப்பாக , கட்டுரையை எழுதியுள்ளார் .

அதில் உள்ள பல விஷயங்கள் மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது . அதில் ஒரு தகவல் ..

"தமிழில் முதலில் இரட்டை வேடம் மற்றும் பத்து வேடம் போட்ட நடிகர் பி.யு. சின்னப்பா " என்பது புதிய, அறியாத தகவல் .

டிஸ்கி : இதை முகநூளில் போட்டபோது வாத்தியார் பால கணேஷ் அவர்கள் அடித்த கமெண்ட் :

"அவர் சின்னப்பா இல்லை "பெரிய"ப்பா ..."


செத்து தொலைங்கடா :


நேற்று சென்னையில் பைக் ரேசில் இடுபட்டு , விபத்தில் சிக்கி ஒரு மாணவர் உயிரிழந்த செய்தி கேட்டேன் . வருத்தத்தை விட கோவம்தான் வந்தது . படிக்கும் பையனுக்கு ஏன் விலையுர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் ? பணம் இருக்கே என இப்படி வாங்கிகொடுத்து அவனை கெடுத்து , அந்த பையனும் ரேஸ் என போய் இப்போ உயிரைவிட்டுவிட்டான் . இனி துடித்து என்ன பயன் ?

இப்படி ரேஸ் போய் , ரேஸில் கலந்துகொள்ளும் ஆள்கள் செத்தால் பரவாயில்லை , அப்பாவியாக ரோட்டில் போகும் ஆட்களை காலி செய்துவிடுகிறார்கள் . எவனோ திமிரெடுத்து செய்யும் செயலுக்கு அப்பாவிகள்தான் பலியாக விடுமா ?

டிஸ்கி : இப்போ தலைப்பை படியுங்கள் 


பார்த்த படம் :

"வேலையில்லா பட்டதாரி " தனுஷின் மார்க்கெட்டை தூக்கி பிடிக்கும் படம் . ஆரம்பம் முதலே ஜாலியாக செல்கிறது . இடைவேளைக்கு பின் படம் தடம்மாருகிறது . கடைசி சண்டை தேவையே இல்லை. திணிப்பு . தனுஷின் உடம்பை காட்டவேண்டும் என்றே அந்த சண்டை போல . நம்ம படங்களில் தேவையே இல்லாமல் பாடல் ,சண்டைகளை சேர்ப்பதை எப்போது விடபோகிரர்களோ ?

படத்தில் லாஜிக் பற்றி யோசிக்க கூடாது . படத்துக்கு வந்தோமா , ஜாலியா என்ஜாய் செய்தோமோ போனோமான்னு இருக்கணும் . இங்கோ\இங்கிலீஷ் சரியா தெரியாதவன் எப்படி BPO இல் முதல் மாசமே 50000 சம்பாதிப்பான் , ஏலட்ரானிக் ஜாமர் எப்படி தனுஷின் வீடியோ ரெகார்ட்ராய் மட்டும் தடுக்கவில்லை என்று யோசித்தால் படம் பார்க்க முடியாது .


டவுட் :


பாலஸ்தீனத்தின் காஸா மீதான
இஸ்ரேலின் கொடூர
தாக்குதலுக்கு எதிர்ப்பு
தெரிவித்தும் இம்
மோதலை முடிவுக்கு
கொண்டுவராத
அமெரிக்காவை கண்டித்தும்
மும்பையில் பெப்சி, கோக்
குளிர்பானங்கள்
விற்பனைக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.

#ஆனா அதே அமெரிக்கன் கண்டுபிடிச்ச பேஸ்புகை மட்டும் தடை செய்யாம பயன்படுத்துவோம்.

#ஒரே கன்பியூஷன். . .



==============================================================
இந்தியா முழுதும் போட்டியிட்டு 44 சீட் மட்டும் ஜெய்த்து எதிர்கட்சி பதவி வேனும்னு கேட்குது. ஏன் ஒரு மாநிலத்தில் மட்டும் போட்டியிட்டு 37 சீட் ஜெய்த்த அ.தி.மு.க அந்த பதவியை கேட்க்ககூடாது?

10 ம் வகுப்பில் 480 எடுத்தவனை விட 12 ம் வகுப்பில் 482 எடுத்தவன் பெரிய ஆளா?

#டவுட்


============================================================
இலங்கை நிறுவனம் தயாரிப்பதால் "கத்தி" படத்தை தடைசெய்யவேண்டும்.

#செய்தி

அப்போ இலங்கைகு விமானம் விடும் சன் நெட் ஒர்க்கில் உள்ள டிவியை தடை செய்யனும்னு ஏன் யாரும் போராடல?

#ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆண்டியா?

  

Friday, July 25, 2014

துப்பறியலாம் வாங்க . . .!




உங்கள் புத்திசாலிதனதை கண்டுபிடிக்க ஒரு வாய்ப்பு. கதையின் முடிவில் யார் குற்றவாளி என கண்டுபிடியுங்கள்.

கதை 1 :

அந்த வீட்டின் படுக்கை அறையில் ரவியின் உடல் மின்விசிறியில் தொங்கியது. இன்ஸ்பெக்டர் ராஜா வீட்டில் உள்ளவர்களிடம் விசாரனை செய்கின்றார். அனைவரும் இது தற்கொலை என்றும் , அவர் சாகும் முன் ஒரு கடிதம் எழுதி வைதுள்ளார் எனவும் கூறினர்.

ரவிக்கு 3 மகன்கள் . மூத்தவன் சுப்பு “ நான் செய்தி கேள்விபட்டுதான் இந்த வீட்டுகு வந்தேன்”

இரண்டாம் மகன் விஜய் “ நான் பக்கத்து ரூம் ல துங்கிடேன்”

மூன்றாம் மகன் சக்தி “நான் காப்பி குடுக்க வந்தேன், அப்பதான் பாத்தேன்.”

ராஜா “ இந்த கடிதம் எங்கே இருந்தது?”

சக்தி “ அவர் படுக்கையில் இருந்த ராமாயணம் புத்தகதில் 49 , 50 ம் பக்கதுக்கு நடுவுல இருந்தது “

இப்படி ராஜா பலரிடம் விசாரனையை நடத்தி முடித்தார். முடிவில் இது தற்கொலை இல்ல கொலை தான் , இந்த கொலைய செய்தது சக்திதான் என்றும் முடிவு செய்தான்.

எப்படி ?????




===========================================================================


கதை 2 :



20 மார்ச் 2011., அந்த வீட்டின் படுக்கை அறையில் ரவியின் உடல் கட்டிலில் கிடந்தது. கத்தி அவர் நெஞ்சில் ஆழமாக சொருகி இருந்தது. இன்ஸ்பெக்டர் ராஜா வீட்டில் உள்ளவர்களிடம் விசாரனை செய்கின்றார்.

ரவிக்கு 3 மகன்கள் . மூத்தவன் சுப்பு “ நான் குளித்து கொண்டு இருந்தேன்“

2 வது மகன் ராமு “ நான் தோட்டதில் செடிக்கு தண்ணி ஊத்தி கொண்டு இருந்தேன் “

3 வது மகன் சோமு “நான் POST OFFICE போய்யிருந்தேன், அங்க ஸ்டாம்ப்(STAMP) வாங்க்கிட்டு இப்பதான் வாறேன்”


இப்படி ராஜா பலரிடம் விசாரனையை நடத்தி முடித்தார். முடிவில் இது இந்த கொலைய செய்தது சோமுதான் என்றும் முடிவு செய்தான்.

எப்படி ?????



டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு


Saturday, July 19, 2014

சதுரங்க வேட்டை : விமர்சனம்





www.rajamelaiyur.blogspot.com



நடிகர் , இயக்குனர் மனோ பாலாவின் தயாரிப்பில் , லிங்குசாமியின் வெளியிட்டில் வந்திருக்கும் படம் சதுரங்க வேட்டை . தனுஷின் வேலையில்லா பட்டதாரிக்கு போட்டியாக வந்த இந்த படம் போட்டியில் வெல்லுமா என பார்ப்போம் .

கதை :

நாம் எல்லாரும் எதோ ஒருதடவையாவது யாரிடமாவது ஏமாந்து இருப்போம் . அப்படி நமை ஏமாற்றியவரின் புத்திசாலித்தனத்தை பாராட்டாமல் இருக்கமுடியாது. அதுபோலதான் இந்த படத்தின் ஹீரோ. ஹீரோ காந்திபாபுவாக மிளகாய் படத்தில் நடித்த நட்டு என்கிற நடராஜன் . இவர் சிறந்த ஒளிபதிவாளரும் கூட . சீக்கிரம் பணக்காரனாக துடிக்கும் பேராசை கொண்ட மக்களின் பலவினத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது இவரின் தொழில் . ஈமு கோழி முதல் மண்ணுளி பாம்பு வரை இவர் விளையாடு செல்கிறது . 
www.rajamelaiyur.blogspot.com

இந்த குற்றத்திற்காக போலீசிடம் மாட்டி வெளிவரும் பாபு கடத்தப்பட , பணம் என்ன ஆனது , ஏன்  கடத்தல் , இதன் இடையே வரும் காதலி இஷாரா என்ன ஆனார் , கடைசியில் நட்டு திருந்தினாரா இல்லை எதிரிகளால் கொள்ளபட்டாரா என்ற சதுரங்க ஆட்டத்தின் முடிவை திரையில் பாருங்கள் .

www.rajamelaiyur.blogspot.com


+ பாயின்ட் 

* நடராஜின் அலட்டல் இல்லாத நடிப்பு . இதுல வேறு யாராவது பெரிய  
  நடிகரைபோட்டு கேரட்டரை கொல்லாமல்விட்டது நல்லது .

* வசனங்கள் மிக பெரிய பலம் (நல்லவனா இருந்த செத்தபின்புதான் 
  சொர்கத பார்க்கலாம் ஆனா கெட்டவனா இருந்தா வாழும்போதே 
  பார்க்கலாம் ..)

* மக்களை ஏமாற்றும் திட்டங்கள் . சமிபத்தில் நடந்த நிகழ்வுகளை 
 கதையில் காட்டியது (MLM Plan)

* வழக்கம் போல இளவரசுவின் நடிப்பு அருமை .

* புதுமுக இயக்குனர் என சொல்லமுடியாத அளவுக்கு கலக்கி உள்ள 
  இயக்குனர் வினோத்

* பின்னணி இசை

* வேகமான திரைகதை


-    
   -   பாயின்ட் :

பாடல்கள் சுமார்தான் . இசை ஷான் ரோல்டன்
மற்றபடி பெரிய குறைகள் ஒன்றும் தெரியவில்லை (எனக்கு )

முடிவா !!!
கண்டிப்பா பார்க்கலாம் , ஜாலியா குடும்பத்துடன் பார்க்கலாம்



Monday, July 14, 2014

கர்மவீரர் காமராசர்








கிங் மேக்கர் என்றும் கருப்பு தங்கம் என்றும் கல்விக்கண் திறந்த கர்ம வீரர் என்றும் மக்களால் பாராட்ட பெற்ற ஒரு உன்னத மக்கள் தலைவர் திரு காமராஜர் அவர்கள் . தனது சுயநலமில்ல உழைப்பால் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்தவர் இவர் . அரசில் ஒரு பதவிக்கு வந்த உடன் தனது குடும்பத்தில் உள்ளவர்களை எப்படி கோடிஸ்வரன் ஆக்கலாம் என நினைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் போல் இல்லாமல் தன் குடும்பத்துகேன வாழாமல் தமிழக மக்களையே தன் குடும்பம் என வாழ்ந்தவர் இவர் .


இன்று ஏழை குழந்தைகள் பசியின்றி பள்ளி செல்ல இவரின் மதிய உணவு திட்டமே காரணம் . பசிக்கும் குழந்தை எப்படி பாடத்தில் கவனம் வைப்பான் என சிந்தித்ததின் வெளிபாடே இந்த மத்திய உணவு திட்டம் . இந்த திட்டத்தை பற்றி ஒரு விளம்பரப்படம் எடுக்கலாம் என ஒரு அதிகாரி யோசனை சொல்ல அந்த படம் எடுக்க ஆகும் செலவுக்கு இன்னும் சில பள்ளிகள் திறக்கலாம் என்றார் .



திருச்சி BHEL திட்டம் இவரால் வந்ததே . பல அதிகாரிகள் பல இடங்களை பார்த்துவிட்டு அந்த தொழில்சாலை அமைய சரியான இடம் இல்லை என சொல்ல , காமராஜர் கொஞ்ச நேரம் யோசித்து "ஏன் திருச்சி இதுக்கு சரியாவருமே " என்றார் . அப்புறம் சோதனை செய்ததில் அந்த இடம் மிக பொருத்தம் என அறிந்தனர் .



தனதுகுடும்பத்துக்காக பணம் சேர்க்காத , தனது நலனை பார்க்காத , தான் செய்யும் சேவைகளை விளம்பரபடுத்தி கொள்ளாத , மக்களுக்கு எந்த திட்டம் நல்லது என யோசித்த , கடைசிவரை மக்களுக்காகவே வாழ்ந்து இறுதியில் அந்த மக்களாலேயே தோற்கடிக்கபட்ட  நல்ல மனிதர் காமராஜர் .

இவரின் பிறந்த நாள் நாளை :(15-07-2014)

இவரை பற்றிய நூலை தரவிறக்கம் செய்ய : 

 CLICK HERE



இவரை பற்றிய நூலை தரவிறக்கம் செய்ய :   CLICK HERE 


இதையும் படிக்கலாமே :

Thursday, July 10, 2014

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3







இன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை தெரிந்துருப்போம் . பல தளங்கள் தெரியாமல் இருக்கலாம் . இதோ உங்களுக்காக சில தளங்கள்.


முந்தைய பதிவுகள் :





Online இல் பொருள்கள் வாங்க :


























சமையல் குறிப்புகள் :


































WEB DIRECTORIES.














டிஸ்கி : இதுபோல இன்னும் பலநூறு தளங்கள் உள்ளது அவற்றை விரைவில் அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம் .

Monday, July 7, 2014

இலவசமாக IDM 7.1 (INTERNET DOWNLOAD MANAGER) புதிய பதிப்பு (PRE CRACKED)

 






      இணையத்தில் நாம் அன்றாடம் பலவற்றை தரவிறக்கம் செய்கிறோம் . அது படங்களாக , பாடலாக , கோப்புகளாக கூட இருக்கலாம் . இவை அனைத்தையும் மிக எளிதில் தரவிறக்க பயன்படும் ஒரு மென்பொருள் தான் இந்த IDM. இதன் புது பதிப்பான  7.1 ஐ உங்களுக்காக வழங்குகிறேன்.இது ஏற்கனவே கிராக் செய்யபட்டுள்ளதால் சாதரணமாக இன்ஸ்டால் செய்தால் போதும்.



பயன்கள் :

  1. வேகமாக தரவிறக்கலாம்
  2. வேண்டும் பொழுது PAUSE செய்யலாம் .
  3. பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கலாம்
  4. தானாகவே UBDATE ஆகும் .
  5. FIREFOX உடன் தானாகவே Integrate ஆகிவிடும் . இதனால் விடியோ , ஆடியோ பைகளில்  தானாகவே டவுன்லோட் பட்டன் இணைந்துவிடும் .

IDM 7.1  புதிய பதிப்பை DOWNLOAD செய்ய :

                         IDM DOWNLOAD
 டிஸ்கி : இது ஏற்கனவே கிராக் செய்யபட்டுள்ளதால் சாதரணமாக இன்ஸ்டால் செய்தால் போதும் .

இதையும் படிக்கலாமே :

Thursday, July 3, 2014

AIRTEL 3G மொபைல் இன்டர்நெட் இலவசமாக வேண்டுமா ?




இன்றைய நிலையில் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதுபோலவே கட்டணமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவருகிறது . எனவே இலவசமாக கிடைத்தால் கசக்குமா என்ன ? எனது மாணவன் ஒருவர் எனக்கு சொல்லித்தந்த ட்ரிக்கை உங்களுக்கும் சொல்லுதருகிறேன் .


நன்மைகள் :
·         

            இன்டர்நெட் கார்டு போடவேண்டிய அவசியம் இல்லை

·          
   மொபைலில் பேலன்ஸ் இருக்க வேண்டிய தேவையில்லை

·          
       MB தீர்ந்து விடுமோ என்ற கவலையில்லை .

·          
   வேலிடிடி பற்றிய கவலையில்லை

 
தேவை :

·         ஒரு AIRTEL SIM
·         
   அதில் 0 பேலன்ஸ் .
·        
            OPERA MINI HANDLER



எப்படி பயன்படுத்துவது ?

1.     
                              முதலில் OPERA MINI HANDLER டவுன்லோட் செய்துகொள்ளவும் .
     அதை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யவும் .
2.     
                                  பின்பு அதை திறந்தால் சில மெனுக்கள் தெரியும் அதில் இறுதியில்  
         உள்ள 
PROXY TYPE :  HTTP
PROXY SERVER : AIRTELLIVE.COM
              என செட் செய்யவும் . (படத்தை பார்க்கவும் ..)

3.                            SETTING ->DATA USSAGE-> MORE->MOBILE NETWORK-> ACCESS POINT NAME                  செல்லவும் .
அதில் NEW APN  தெரிவு செய்யவும் .
அதில் கீழ்கண்டவாறு அமைக்கவும் :
NAME :  AIR
APN: AIRTELGPRS.COM
PROXY : 141.000.011.253
PORT :80
     மற்றவற்றை வெறுமனே விட்டுவிடவும் . இதை SAVE செய்யவும் .

நிபந்தனைகள் :
1.       OPERA MINI HANDLER இன்ஸ்டால் செய்யும் பொது இணைய இணைப்புதேவை .எனவே அதை WI-FI / வேறு சிம் மூலம் இன்ஸ்டால் செய்யவும் .

2.       இது AIRTEL இல் மட்டுமே வேலை செய்யும் .

3.       இது ஆண்ட்ராய்ட்க்கு மட்டுமே .

4.       உங்கள் சிம்மில் பேலன்ஸ் இருந்தால் காசுபோகும் , எனவே பேலன்ஸ் ZERO ஆக வைத்துகொள்ளவும் .

டிஸ்கி : இதை நான் பயன்படுத்தி பார்த்துள்ளேன் . 100% வேலை செய்கிறது .