Wednesday, February 27, 2013
Monday, February 25, 2013
ஆச்சர்யம் ஆனால் உண்மை
இந்த ஓவியங்கள் உங்களை சிரிக்க வைக்கும் ,ஆச்சர்யப்பட வைக்கும் , வியக்கவைக்கும் ,இது ஓவியமா அல்லது PHOTOSHOP WORK கா என்று குழப்ப வைக்கும் . ரசித்து பார்த்து உங்கள்கருத்தை சொல்லுங்கள் .
கிழி கிழின்னு கிழிச்சுடான்
கடற்கரையில் ஒரு ஓவியம்
வானவில் அலைகள்
இது வானவில் கடற்குதிரை
சின்னத்தில் இருந்து பெருசு வரை ..
பென்சில் சங்கிலி
மரம்மட்டுமா தெரிகிறது ?
தேங்காய் பறிக்கும் நண்டு
வீடா ?? விமானமா ?
பிறப்பு தேவா வச்ச மரமோ ???
நீருக்குள் புலி
மேம்பாலம் ???ரன்வே ???
உடைந்தமரத்தில் ஆந்தை
இது அசையுதா இல்லையா ?
சாக்லேட் கீ போர்டு
எத்தன படி ?
அறிவியோரம் கடை
டிஸ்கி : எப்படி இருந்தது ? உங்கள்கருத்து என்ன ? பிடிச்சு இருக்கா ?
Labels:
ஓவியங்கள்,
புகைப்படங்கள்
Wednesday, February 20, 2013
அப்பா !!
அப்பாவை பிடிக்கும் ,மதிக்கும் நபர்களுக்கும் , அப்பாவை கண்டுகொள்ளாத நபர்களுக்கும் ...
உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.
இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.
அதில்...வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.
தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.
பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.
பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.
ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.
ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபாரியாவார்.
மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.
எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும்.
பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும். மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர்.
எனவே நாமும் நமது முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம்.
நன்றி : FACEBOOK
Labels:
அப்பா
Tuesday, February 12, 2013
தெரியுமா உங்களுக்கு ??
கற்றது கையளவு கல்லாதது கடலளவு என்பார்கள் . சில விஷயங்கள் நமக்கு தெரிந்து இருக்கலாம் . தெரியாத பல விஷயங்கள் உலகில் உள்ளது . கிழே உள்ளவை உங்களுக்கு தெரியுமா என பாருங்கள் ?
மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.
200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம்.
நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.
மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.
நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.
நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.
வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.
மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.
கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.
ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.
நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடுமாம்.
ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்குமாம்.
ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.
சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.
நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.
ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.
வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.
ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.
வளர்பிறை கோடுகள் மேல்நோக்கியும், தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.
கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.
கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.
எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.
"O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.
பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.
அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.
நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார்.
குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23
வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்
அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்
செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்
சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்
பெருங்கரடியின் ஆயுட்காலம் 20 வருடங்கள்
தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்
பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்
திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 முதல் 40 வருடங்கள்
கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்
மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை
பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம்
ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை
பறக்க முடியாத பறவைகள் கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்
தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு தேரை
Labels:
பொதுஅறிவு
Wednesday, February 6, 2013
நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?
உலகம் முழுவதும் மொழி வித்துயாசமில்லாமல் அனைவராலும் போற்றப்படும் புகழ்பெற்ற ஒருவருடைய கதை இது.
அவரது அம்மாவுக்கு தீராத நோய்
அப்பா, அம்மாவை விட்டுவிட்டுப் போய்விட்டார்.
வீட்டில் எப்பொழுதும் பசி, பட்டினி, பஞ்சம்.
சில சமயங்களில் குப்பை தொட்டியில் வாசம்.
வீதியோரமாக பாடி காசு திரட்டியிருகிறார்.
சாப்பாட்டுகாக சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுப்பட்டார்.
அவர் செய்த வேலைகள் :
- பேப்பர் போடும் ஆள்
- டாக்டர்க்கு உதவியாளர்
- முடிவெட்டுபவர்
- பிரிண்டிங் பிரஸில் உதவியாளர்
- பழய துணியை ஏலம்விடுபவர்.
இவை அனைத்தையும் செய்துவிட்டு இறுதியில் சினிமாவுக்கு வந்தார். அவர் வாழ்கை திசை மாறிப்போனது. கோடி கோடியாக கொட்டியது. அவர் தான்
சார்லி சாப்ளின்.
குறைபாடுகள், தோல்விகள், பிரச்சனைகள் இவை ஒவ்வொன்றும் அற்புதமான வாய்ப்புகள்.
நம்மால் முடியும் என்பதை முதலில் நம்ப வேண்டும். அந்த எண்ணம் எதையும் சாதிக்க வைக்கும். ஒரு புன்னகை போதும் சுடும் நெருப்பையும் தாங்கலாம், கடும் குளிரையும் தாங்கலாம். ஐயோ, அதெல்லாம் முடியாது என்று சொல்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. காரணம் அவர்களும் சாதிக்க மாட்டார்கள், பிறரையும் சாதிக்க விடமாட்டார்கள்.
பாஸிட்டிவ் நபர்கள் நம் திறமைக்கு பெரிய ப்ளஸ். அப்படிப் பட்ட நபர்களை தேடிப்பிடித்து நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். பாஸிட்டிவ் மனிதர்கள் பாஸிட்டிவ் எனர்ஜியை வெளிபடுத்துவார்கள். பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல அவர்கள் எனர்ஜி நமக்கும் தொற்றிகொள்ளும். என்றும் பாஸிட்டிவ்வாக இருங்கள், அப்படி இருந்தால் நீங்கள் தான் வாழ்கையின் வெற்றியாளர்.( வாழ்கையில் மட்டும் அல்ல, பதிவுலகிலும் நீங்கள் தான் வெற்றியாளர்தான்)
டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு
இதையும் படிக்கலாமே :
இதையும் படிக்கலாமே :
ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...
விஸ்வருபம் தடை சரியா ? தவறா ? மாபெரும் கருத்து கணிப்பு
அஜித் Vs ஆர்யா மற்றும் சன் டிவி
இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?
Labels:
தன்னம்பிக்கை
Monday, February 4, 2013
ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாத நபர்களை
பார்ப்பது மிக அரிதாக ஆகிவிட்டது . விலை மலிவாக கிடைப்பதும் , போன் இல்லை என்றால்
அது என்னவோ மரியாதை குறைவான விஷயம் என்ற காரணத்தால் அனைவரும் போன் வைத்துள்ளோம் .
இப்போது சந்தையில் அதிகம் விற்பனை ஆவது SMART PHONE எனப்படும் ANDROID MOBILE தான் .
இதில் பலவகையான APPLICATIONS இருக்கின்றது . நமக்குதேவையானத்தை
நாம் தெரிவு செய்து கொள்ளலாம் . பல ஆயிரக்கணக்கான அப்ளிகேஷங்களில் நமக்கு தேவையானது
எது ? நான் கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டியது எது ? என ஒரே குழப்பமாக இருக்ககலாம்
. எனக்கு தெரிந்த சில ஆப்ளிகஷன்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன் . உங்களுக்கு
பிடித்ததை எடுத்து கொள்ளுங்கள் .
TAMIL NEWS LIVE :
இதில் கூகிள
, தினமலர் , தினமணி , தினகரன் , மாலைமலர் ,ஒன் இந்தியா , தமிழ்முரசு , நக்கீரன் ,
விகடன் , தின பூமீ போன்ற நாளிதழிகளின் செய்திகளை படிக்கலாம் . செய்திகளை
முக்கிய செய்தி , அரசியல் , விளையாட்டு , சினிமா என பிரித்து அளிக்கின்றது இது .
TAMIL RADIO :
உங்கள் மொபைல் முலம் ON-LINE இல் பாடல்கள் கேட்க உதவுகிறது இது
. A9RADIO
HD, AIR TAMIL RADIO, CTBC, EXTAMIL , ILC TAMIL , ISAIARUVI.COM, KATHAAL FM, TRT
TAMIL OLI போன்ற பல ரேடியோகளை கேட்கலாம் . முக்கியமாக நமது நண்பர் நீருபன் அவர்களின் புரட்சி FM கூட இதில் உள்ளது .
FREE SMS INDIA
4.4
இலவசமாக SMS அனுப்ப மிக சிறந்த Appliction இது . நீங்கள் கீழ்கண்ட ஏதாவது ஒரு தளத்தில் கணக்கு வைத்திருந்தால் போதும் .
WAY2SMS
ULTOO
INDIAROCKS
FULLONSMS
160BY2
YUPPA TV
இந்திய தொலைக்காட்சிகளை நேரலையாக தரும் Appliction இது . இதை WI-FI முலம் பயன்படுத்தினால் நன்று .
PUTHIYATHALAIMURAI
இப்போது தமிழில் பிரபலமாகிவரும் புதியதலைமுறை செய்தி சேனலின் Application ஆகும் . இதை மட்டும் http://www.puthiyathalaimurai.tv என்ற தளத்தில் தரவிறக்க வேண்டும் .
NIMBUZZ
CHAT செய்வதில் விருப்பம் உள்ளவர்களுக்கான Appliction இது . உங்கள் FACEBOOK, GMAIL கணக்கில் உள்ளவர்களுடன் பேசலாம் . GTALK இல் உள்ளவர்களுடன் இலவசமாக பேசலாம் .
WECHAT
இதுவும் CHAT செய்ய உதவும் Appliction தான் . இதில் உள்ள வசதி இந்த Appliction பயன்படுத்தும் மற்ற பயனாலர்களுடன் இலவசமாக பேசலாம் .
INDIAN
CALLER INFO
இது
உங்களுக்கு வரும் அழைப்பு எந்த நெட்வொர்க் சார்ந்தது என அறிய உதவும் . இதை
இன்ஸ்டால் செய்து விட்டால் தானாகவே நீங்கள் அழைக்கும் போதும் , உங்களுக்கு அழைப்பு வரும் போதும் நெட்வொர்க் பெயர்
வந்து விடும் .
GOOGLE DRIVE
நாம்
சாதாரண DESKTOP COMPUTER
இல் பயன்படுத்தும் அதே அப்ளிகேஷன் தான் இது . கணினி இல்லாமலே உங்கள் பைல்களை
உங்கள் கணினியில் இருந்து பயன்படுத்தலாம் , பிறருடன்
பகிரலாம் .
GALLERY LOCK
உங்கள்
மொபைல்லில நீங்கள் வைத்திருக்கும் படங்கள் , விடியோகளை
மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைக்க இது பயன்படுகிறது .
PDANET 3.50
உங்கள்
மொபைல் மூலம் உங்கள் கணினியில் இணையம் பயன்படுத்த சிறந்த அப்ளிகேஷன் இது . சாதாரண
மொபைல்களுக்கு PC SUITE பயன்படுவது போல ஆன்ட்ராயட போன்களுக்கு இது .
TAMILVISAI
உங்கள்
போனில் தமிழ் டைப் செய்ய மிக சிறந்த அப்ளிகேஷன் இது . GOOGLE INDIC போலவே செயல் படுவதால் நீங்கள் எளிதில் தமிழ்
அடிக்கலாம் .
டிஸ்கி : இவை அனைத்தும் google play store இல் இலவசமாக கிடைக்கும் .
இதையும் படிக்கலாமே :
விஸ்வருபம் தடை சரியா ? தவறா ? மாபெரும் கருத்து கணிப்பு
அஜித் Vs ஆர்யா மற்றும் சன் டிவி
இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?
Labels:
android,
applications,
Google play
Subscribe to:
Posts (Atom)