புதியபதிவர்களை அறிமுகம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது வலைசரம் . நம்மையும் யாராவது அறிமுகம் செய்ய மாட்டார்களா என ஏங்கிய நாட்கள் உண்டு . பல நல்லபதிவுகள் வெளியே தெரியாமலே போய்விடுகிறது . எனவே இனி அடிகடி இது போல சில புதிய பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யலாம் என எண்ணுகிறேன் .
1. நீடூர் சீசன்
முகமது அலி என்ற பதிவரால் எழுதபட்டு வருகிறது .இவர் இந்த வலைத்தளம் மட்டுமல்லாமல் பல தளங்கள் நடத்திவருகிறார் . மிக எளிய நடையில் எழுதுவது இவர் சிறப்பு .
சில பதிவுகள் :
1. லேனா ஓர் ஆச்சரியம்
2. காதல் தோழி !
3. கணினியும் கன்னியும் வைரஸ்!
==========================================================================
2. நினைத்து பார்க்கிறேன் .
திரு வே .நடனசபாபதி என்ற பதிவரால் நடத்தபடுகிறது . ஒரு வங்கியில் வேலை பார்ப்பவர் எழுதிய பதிவுகள் என்று சொல்ல முடியாத அளவு வார்த்தை பிரயோகம் அருமையாக உள்ளது . தொடர் பதிவுகள் இவரின் சிறப்புதன்மையாகும் .
சில பதிவுகள் :
1. மீண்டும் சந்தித்தோம்! 19
2. நினைவோட்டம் 75
3. வாடிக்கையாளர்களும் நானும் 39
========================================================================
3. நில் ... கவனி .. செல்
ஆனந்தராஜ் என்பவர் எழுதும் வலைபூ இது . மிக சில பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளார் . ஆனால் அனைத்தும் அருமையான பதிவுகள் . போய் படித்து பாருங்கள் .
சில பதிவுகள் :
1. சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது..!
2. விசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..!
==================================================
4. நாம் நண்பர்கள் ஜானி
சமுக அக்கறையுடன் , சமுகத்தில் நடக்கும் அவலங்களை தன பதிவில் சுட்டிகாடும் பதிவர் இவர் . மிக சில பதிவுகள் தான் எழுதியுள்ளார் . ஆனால் அனைத்தும் அருமையாக உள்ளது படித்து பாருங்கள் .
சில பதிவுகள் :
1. யார் குற்றவாளி
2. மலை மனிதன் தசரத் மான்ஜி
3. மனித உறவுகள் மேம்பட
தொடரும் !!!!!!!!!!!!!!