> என் ராஜபாட்டை : FACEBOOK இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமா ?

.....

.

Monday, March 17, 2014

FACEBOOK இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமா ?




சமுகவளைதலங்களில் (FACEBOOK, TWITTER, G+ )நமது எண்ணங்களையும் , அடுத்தவர் கருத்துகளுக்கு பதிலையும்  நமது மொழியான தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும் என நாம் நினைப்போம்  ஆனால் எப்படி தமிழில் டைப் செய்வது என்பது குழப்பமாக இருக்கும் . அந்த குறையை போக்கத்தான் இந்த பதிவு .

 பயன்கள் :

1. நீங்கள் இணைய இணைப்பு இல்லாமலும் தமிழில் டைப் செய்யலாம் .

2. தமிழ் தட்டச்சு தெரிந்து இருக்க  வேண்டிய அவசியம் இல்லை

3. எழுத்துபிழைகளை எளிதில் நீக்கலாம் .

4. மிக சிறிய மென்பொருள்

5 . INSTALL  செய்வது மிக எளிது .
 


எப்படி நிறுவுவது ?(HOW TO INSTALL?)



முதலில்  கோப்பு 2 (FILE 2)   &   கோப்பு 1    (FILE 2) இரண்டையும் தரவிறக்கி(DOWNLOAD) கொள்ளுங்கள்


கோப்பு 2 ன் பெயர் GOOGLE INPUT TOOL. EXE என இருக்கும் அதை டபுள் கிளிக் செய்யவும் .

கோப்பு 1  இன் பெயர் GOOGLE INPUT TAMIL.EXE என்பதை டபுள் கிளிக் செய்யவும் .

இப்போது உங்கள் கணினியின் கிழே (நேரம் தெரியும் இடம் அருகே ) EN என்ற வார்த்தை தெரியும் .


இப்போது அதை கிளிக் செய்தால் அதில் தமிழ் ,ENGLISH என இருக்கும்  அதில் தமிழை தெரிவு செய்யவும் .


இப்போது நீங்கள் விரும்பும் இடத்தில் டைப் செய்யவும் . தமிழ் வரும்


குறிப்பு :

அம்மா என வரவழைக்க AMMA  என அடித்தால் போதும் .

ஆங்கிலம்  அல்லது எழுத்துக்கள் அடிக்க உங்கள் கீ போர்டில் CTRL + G அழுத்தவும் .

இதை MSWORD இல் கூட அடிக்கலாம் .


6 comments:

  1. நல்லதகவல்! நன்றி! என்.எச் ரைட்டர் போன்று தான் போல!

    ReplyDelete
  2. இதைத்தான் நானும் பயன்படுத்துகிறேன்....

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நன்றி .. பயனுள்ள தகவல் !

    ReplyDelete
  5. தரவிறக்கம் செய்துவிட்டேன்.. சூப்பர்!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...