> என் ராஜபாட்டை : ஒரு வீடு இரு திருடர்கள்- தேர்தல் ஸ்பெஷல்

.....

.

Wednesday, April 2, 2014

ஒரு வீடு இரு திருடர்கள்- தேர்தல் ஸ்பெஷல்


அது அவர்களுடைய தொழில்.
கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.
நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல
அவர்களுக்கு தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

முதல் திருடன் சொன்னான்,
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.
இரண்டாம் திருடன் சொன்னான்
‘திருடுவது நம் உரிமை
அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.
அவன் முன் வாக்குப்பெட்டி.
யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய
அறிவு புகட்டப்பட்டது.
இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.
கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.


பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை
‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்
அது என்  தவறல்ல.

இதை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கு நன்றி :

இது ஒரு மீள் பதிவு 



===========================================================================
இதையும்  படிக்கலாமே :

யார் தெய்வம் ?

 

விஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2


 

 

8 comments:

  1. சரியான நேரத்தில்
    மிகச் சரியான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஹா..ஹா...

    அருமை...

    ReplyDelete
  3. நல்லாத்தான் கீது!

    ReplyDelete
  4. மிக சிறப்பான கவிதை! நண்பர் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாமே! நாங்கள் திருடர்கள் என்றுதான் புரிந்துகொண்டோம்! அரசியல்வாதிகள் என்று புரிந்துகொள்ளவில்லை! ஹாஹா!

    ReplyDelete
  5. சரி சரி எங்களுக்கு நன்றாகவே புரிந்தது...

    ReplyDelete
  6. இது ஈழத்திற்காக தன் உயிரையே அழி(ளி)த்த முத்துகுமாரின் கவிதை என்று படித்ததாக ஞாபகம்!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...