> என் ராஜபாட்டை : கதம்பம் 16-04-14

.....

.

Wednesday, April 16, 2014

கதம்பம் 16-04-14

12 தேர்வு சதவிதமும் சில உண்மைகளும் :

வருடா வருடம் தேர்வு சதவிதம் உயர்வதாக அரசு சொல்கிறது . நாமும் மாணவர்கள் நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என நெனைகிறோம் . ஆனால் அது உண்மையல்ல எனபது இந்த வருடம் பேப்பர் திருத்த சென்றபோது தெரிந்தது . மாணவன் என்ன எழுதினாலும் பரவாயில்லை முடிந்த அளவு அவனை பெயில் ஆக்காமல் மார்க் போடுங்கள் என சொல்லுகிறார்கள் . இப்படி பாஸ் போட்டால் எப்படி கல்விதரம் உயரும் என தெரியவில்லை .

இதிலும் பெயில் ஆகும் மாணவர்கள் பலர் உள்ளனர் . 15 மார்க் எடுத்தால் பாஸ் என்றால் அவன் எழுதுவதே 10 மார்க்குதான் எப்படி அவனை பாஸ் போடுவது ? 
இன்னுன் சிலர் திருத்தும் ஆசிரியர்க்கு என தொடக்கி ஒரு சோகமான கடிதத்தை கடைசி பக்கத்தில் எழுதுகிறான் . 

வாழ்க கல்வி துறை / முறை .


=========================================================================

ஆழ்துளை கிணறும் சீழ் பிடித்த சமூகமும் .


நேற்றுதான் ஒரு குழந்தையை காப்பற்றினார்கள் , அதுக்குள் இன்று மற்றொரு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது . கடுமையான தண்டனைகள் இல்லாததே இதுக்கு காரணம் . குழந்தை மீண்டால் கொலை முயற்சி வழக்கும் , ஏதாவது ஆனால் (ஆக கூடாது ..) கொலை வழக்கும் பதியபட்டல் தான் திருந்துவார்கள் .

 
 ======================================================================

எது மதசார்பின்மை ?

நமக்கு பிடிக்குதோ இல்லையோ ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் ஊருக்குள் ஓட்டு கேட்க வரகூடாதுனு சொல்வது சரியா? நாளை ஒருவேளை அந்த கட்சி ஜெய்த்தால் எங்கள் ஏரியாவுக்கு எதும் செய்யாதீர்கள்னு சொல்வார்களா?

எதிரியே வீட்டுக்கு வந்தாலும் வரவேற்பதுதான் பண்பாடுனு எல்லா மதமும் சொல்லுது. ஓட்டு கேட்பது அவர்கள் இஷ்டம் போடுவதும், போடாததும் உங்கள் உரிமை. ஊருக்குள் வரகூடாதுனு சொல்லி நீங்களே ஊரைவிட்டு தனித்து போவதுபோல் தோன்றுகிறது.

#மாற்று கருத்துகள் வரவேற்க்கபடுகிறது.. . .


========================================================================
IPL திருவிழா :


பலரை கவர்ந்த , ஊழலை அதிகரித்த IPL இன்று துவங்குகிறது . இனி பல வீட்டில் சண்டைதான் . சீரியலா ? மேட்சா ? என ..

ஒரு வீட்டில் கனவன் ஆதிக்கமா? மனைவி ஆதிக்கமா? என தெரியவேண்டுமா? நாளை இரவு 8 மணிக்கு IPL ஓடினா கனவன் ஆதிக்கம், அப்பவும் சீரியல் ஓடினா( எல்லா வீடு போல) மனைவி ஆதிக்கம் தான். . .


===================================================================

உலகம் உருண்டை :

போன தேர்தலில் :
 
கலைஞர் டிவியில், விஜயகாந்தை கிண்டல் செய்யும் காட்சிகள் மற்றும் வடிவேலுவின் பேட்டிகள் ஓடியது.

இப்போ :

ஜெயா டிவியில் விஜயகாந்தை கிண்டல் செய்யும் காட்சிகள், வடிவேலு பேட்டி ஓடுது.

#உலகம் உருண்டைனு நிருபித்துவிட்டார்கள்!!!
   

3 comments:

 1. கல்வி முறையில் மாற்றங்கள் வேண்டும்! சுவையான கதம்பம்! நன்றி!

  ReplyDelete
 2. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...