> என் ராஜபாட்டை : ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்

.....

.

Monday, April 21, 2014

ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்

           நேற்று மாலை மயிலாடுதுறையில் உள்ள கென் பிரிட்ஸ் பள்ளி ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார் . அவர் இப்போது வளரும் நடிகராகவும் , மாஸ் நடிகர் பட்டியலில் முக்கியமானவராகவும் இருப்பதாலும் , கல்லூரி மாணவ, மாணவியர் முதல் குழந்தைகள் வரை பலதரபட்ட ரசிகர்கள் இருப்பதாலும் கூட்டம் அதிகம் வரும் என கணிக்கபட்டது .

ஐந்து மணிக்கு துவங்க ஆரம்பித்தது விழா சிவா இல்லாமல் . அப்போதே பயங்கர கூட்டம் . என் வாழ்க்கையில் இவ்வளவு கூட்டத்தை பார்த்ததில்லை . வண்டியை நிறுத்த இடம் இல்லாமல் வயலில் நிறுத்தினோம் .

மாணவிகள் கலை  நிகழ்ச்சி ,தலைமையுரை என மேடையில் பேச அதை யாரும் கவனித்தது போல தெரியவில்லை . சிவாவுக்காகதான் வெய்டிங் . அவர் வர ஒரு பாதை அமைத்து இருந்தனர். இருபக்கமும் செம கூட்டம் , அவர் அதில் நடந்து வர வாய்பில்லை என தெரிந்தது . எப்படி அழைத்து வர போகிறார்கள் என ஆவலுடன் காத்திருந்தோம் .


திடிரென ஒரு கார் கூட்டத்திற்குள் வந்தது , அனைவரும் ஓடிபோய் அந்த காரை சூழ்ந்து கொண்டார்கள் . காரில் இருந்து மெதுவாக ஒருவர் இறங்கினார் . அவர் யாரோ தெரியவில்லை , கூட்டம் ஏமாற்றத்தில் திரும்ப , மேடையில் பார்த்தால் சிவா. இங்கு ஒரு காரை காட்டி ஏமாற்றிவிட்டு அவரை வேறு காரில் மேடைக்கு அழைத்து சென்றுவிட்டனர் .

ஏமாற்றிய சிவா பேச்சு :

மேடையில் சிவா பேசியது ..

"இங்கு உள்ள அனைவருக்கும் , பள்ளி நிருவாகம், ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் . நான் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை . நான் இந்த அளவு வளர நீங்கள்தான் காரணம் . எனக்கு மாயவரம் புதிதில்லை . எனது உறவினர்கள் இங்குதான் உள்ளார்கள் . இங்கு உள்ள விஜயா, ரத்னா தியட்டரில்தான் அடிகடி படம் பார்ப்பேன் .

முன்பு கொஞ்சம் உறவினர்கள் இருந்தார்கள் . இபோது உங்களையும் சேர்த்து எனக்கு நெறைய உறவினர்கள் . என் வளர்ச்சிக்கு உங்கள் கைதட்டல்தான் காரணம் . நிறைய பேசவேண்டும் என நினைத்தேன் . ஆனால் முடியவில்லை .

வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் இருந்து முதல் பாடலை நாலு வரி பாடுகிறேன் நீங்களும் பாடுங்கள் .(பாடுகிறார் ). அனைவருக்கும் நன்றி ."


சிவா பலகுரல் மன்னன் என்பது அனைவருக்கும் தெரியும், அதுமட்டுமல்ல நகைசுவையாக பேசுவதில் வல்லவர் . நேற்று அவரிடம் இதைதான் பலர் எதிர்பார்த்தார் . குறைந்த பட்சம் அரைமணி நேரமாவது பேசுவார் என மக்கள் நினைத்தார்கள் ஆனால் ஐந்து நிமிடத்தில் முடித்துவிட்டார் . மற்றும் அவர் பேசும் போது நேரடி ஒளிபரப்பும் வேலை செய்யாததால் பலர் அவரை சரியாக பார்க்க முடியவில்லை . எதோ எட்ட இருந்து பார்த்ததே போதும் என பலர் உடனே கிளம்பிவிட்டனர் . 


மொத்தத்தில் அவர் ரசிகர்களுக்கு கொஞ்சம் சந்தோசம் , கொஞ்சம் கஷ்டம் , நெறைய ஏமாற்றம் .

4 comments:

  1. வருத்தப்படாத மயிலாடுதுறை மக்கள்
    வருதப்பட்ட கென் பிரிட்ஸ் பள்ளி மாணவர்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...