> என் ராஜபாட்டை : மயிலாடுதுறை M.L.A வும் FACEBOOK க்கும் ...

.....

.

Friday, April 18, 2014

மயிலாடுதுறை M.L.A வும் FACEBOOK க்கும் ...







கடந்த வருடம் நடந்தசம்பவம் இது . மயிலாடுதுறையின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தே .மு .தி .கவைசேர்ந்த திரு . அருள்செல்வம் அவர்கள் .  அவரும் முகநூளில் இருக்கிறார். இருவரும் நண்பர்களாக இருக்கிறோம் (முகநூலில் தான் ).

அப்போது அவர் தனது பக்கத்தில் டெங்கு காய்ச்சல் பற்றி ஒரு கட்டுரையை பகிர்ந்து இருந்தார் . வழக்கம் போல காலை பள்ளி வந்ததும் முகநூலை நோண்டும் போது அதை பார்த்தேன் . அப்போது பள்ளிக்கு அருகே ஒரு நாய் செத்து கிடந்ததால் செம நாற்றம் .

என் கை சும்மா இருக்காமல் அவர் கட்டுரையில் "இங்கு ஒரு நாய் இறந்து போய் நாறுகிறது , நகராட்சியில் யாரும் கண்டுகொள்ளவில்லை . இப்படி இருந்தால் எப்படி டெங்குவை கட்டுபடுத்தமுடியும் ?" என கமென்ட் போட்டேன் . பின்பு இருந்த வேளையில் அதை மறந்துவிட்டேன் .

மாலை 5 மணி இருக்கும் போது , நான் மாடியில்இருந்தேன் . "யார் இங்க ராஜா"னு யாரோ கேட்பது காதில் விழ , எட்டி பார்த்தால் தே .மு .தி .க கட்சி வெட்டிய கட்டிய சிலரும் , கூட டிப்டாபாக்க சிலரும் . போச்சுடா இன்னைக்கு எதோ பிரச்சனைதான் வரபோகுது , நாம வேற வெள்ளை கர்சிப் எடுத்துவரலை என்ற எண்ணம் மனதில் ஓடியது .

பார்ப்போம் ரொம்ப பிரச்சனை வந்தால் பொத்துன்னு காலில்விழுதுடலாம் என தைரியத்தை (!!!) வரவழைத்து கொண்டு கிழே சென்றேன் . 

"நான்தான் ராஜா , நீங்க ??"


"நீங்கதான் FACEBOOK இல் எழுதியதா ?"- ஒரு கரைவேட்டி .

"ஆமாம் "

" இதோ MLA உங்ககிட்ட பேசணுமாம் ", என சொல்லி செல்போன்னை நீட்டினார் .

"வணக்கம் சார் .."- நான் 

"வணக்கம் சார் , எதோ நாய் செத்துகிடக்குனு போட்டுருந்திங்க , நான் இப்போ திருப்பதியில் இருக்கேன் . அதான் நகராட்சி ஆபீசர்களுக்கு சொன்னேன் . அவர்கள் இடன் தெரியாம தேடுறாங்க . எங்கே செத்துகிடக்குனு சொன்ன சுத்தம் பண்ண வசதியா இருக்கும் .." - MLA

"சாரி சார் , நாத்தம் அதிகமா வந்ததால எங்க வாட்ச்மேன்கொஞ்ச நேரத்துக்கு முன்தான் புதைத்தார் "

"ஓ !!.. நல்ல விஷயம் பன்னிருகிங்க .."- MLA

"சாரி FACEBOOK ல போட்டேன்னு தப்ப நெனைக்காதிங்க "- நான் 

"அய்யயோ , அதுலாம் தப்பில்லை சார் , இப்படி நீங்கலாம் சொன்னாதான் எங்களுக்கு தெரியும் . உங்கள் குறையை போக்கதானே என்னை தெரிவு செய்திர்கள் , இதுபோல எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க " என்றார் .

  • ஒரு சாதாரண முகநூல் கமேண்ட்க்காக திருப்பதியில் இருந்து மயிலைக்கு போன் செய்து நகராட்சி ஊழியரை பணிசெய்யவைத்தது 
 
  • ஊழியரை மட்டும் அனுப்பினால் வேலை நடக்காதோ என எண்ணி தன் கட்சி ஆட்களை கூட அனுப்பி வேலை முடியும் வரை பார்த்துக்கொள்ள சொன்னது .
 
  • மேல்தட்டு மக்கள் மட்டும்தான் அணுகமுடியும் என பல MLA கள் இருக்க சாமானியனின் குறைகளையும் கேட்பேன் என இருப்பது ,
 
  • ஐந்து நிமிட சாகும்வரை உண்ணாவிருதம் , அரைமணி நேர உன்னைருதம் என அரசியல் ஸ்டான்ட் அடிக்காமல் மக்களுக்காக போராடுவது 
 
  • கட்சிக்காரன் , சாதிக்காரன் என பார்க்காமல் இருப்பது .
 
இவை அனைத்தும் திரு அருன்செல்வன் பிடித்து போக காரணங்கள் .



இவரின் முகநூல் பக்கம் :   https://www.facebook.com/arulselvanarasur


4 comments:

  1. அருமை .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //திரு அருன்செல்வன் பிடித்து போக காரணங்கள் //

    நல்ல எம். எல். ஏ. நம்ம எம்.எல்.ஏ.!
    " பிடித்து இருக்க " என்று குறிப்பிட்டால்
    பொருத்தமாகயிருக்கும்.

    ReplyDelete
  3. //அனைத்தும் திரு அருன்செல்வன்//

    திரு அரு 'ள்' செல்வன்!

    இந்த ஃபோட்டோ அப்ப எடுத்ததா?

    ReplyDelete
  4. நல்ல எம்.எல்.ஏ தான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...