> என் ராஜபாட்டை : காணாமல் போன ஆண்ட்ராய்ட் போனை கண்டுபிடிக்க எளிய வழி

.....

.

Tuesday, September 8, 2015

காணாமல் போன ஆண்ட்ராய்ட் போனை கண்டுபிடிக்க எளிய வழி


         ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனை போன் தொலைந்து போவதுதான். போனில் பலதரபட்ட தகவல்களை சேமித்து வைத்திருப்போம். அவை மற்றவர்களிடம் சென்றால் பல தவறுகள் நடக்க வாய்ப்புண்டு. இது போன்ற நிலையில் நமது போன் தொலைந்தால் எப்படி கண்டுபிடிப்பது அல்லது தகவல்களை அழிப்பது என பார்ப்போம்..

நன்மைகள் :

உங்கள் போன் இருக்கும் இடத்தை google map மூலம் அறியலா.

உங்கள் மொபைல் வீட்டில் ஏதேனும் இடத்தில் மறைத்திருந்தால் அது சைலன்ட் மோடில் இருந்தாலும் ரிங் செய்ய வைக்கலாம்.

உங்கள் போனின் தகவல்களை , போனை கண்டெடுத்தவர் பார்க்காமல் அழிக்கலாம்.

போனுக்கு புது பாஸ்வோர்ட் செட் செய்யலாம்.

உங்கள் போனில் செய்யவேண்டியவை:


போனில் GOOGLE SETTING செல்லவும்.(போனில் உள்ள செட்டிங் மெனு இல்லை.


 Security. ஆப்ஷனை தெரிவு செய்யவும்.


 "Android Device Manager,"  என்ற ஆப்ஷனுக்கு கிழே 

 Remotely locate this device ஆப்ஷனை டிக் செய்யவும், 

Allow remote lock and factory reset  கிளிக் செயவும்.

அதில் கிழே  உள்ளது போல ஒரு விண்டோ வரும்.
ஆக்டிவேட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான்....கணினியில் ...

www.google.com/android/devicemanager  என்ற தளத்துக்கு செல்லவும். (உங்கள் போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். ) 

உங்கள் GMAIL ID மூலம் உள்நுழையவும்.

உங்கள் இருப்பிடம் GOOGLE MAP இல் தெரியும்.இதில் RING  என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் போன் அலாரம் அடிக்கும்.(சைலன்ட் மோடில் இருந்தாலும்)

LOCK & ERASE  மூலம் காணாமல் போன போனில் உள்ள தகவைகளை அழிக்கலாம். அல்லது போனை லாக் செய்யலாம்.

GOOGLE MAP மூலம் தற்போது போன் இருந்க்கும் ஏரியாவையும் அறியலாம்.


ஒரு முக்கியமான இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யவும்.

3 comments:

 1. நல்ல பதிவு...நன்றி..புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.

  ReplyDelete
 2. சூப்பர் நண்பா

  ReplyDelete
 3. நல்ல பதிவு...நன்றி.
  India . india

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...