> என் ராஜபாட்டை : தொழில் நுட்பம்

.....

.
Showing posts with label தொழில் நுட்பம். Show all posts
Showing posts with label தொழில் நுட்பம். Show all posts

Tuesday, September 8, 2015

காணாமல் போன ஆண்ட்ராய்ட் போனை கண்டுபிடிக்க எளிய வழி

         ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனை போன் தொலைந்து போவதுதான். போனில் பலதரபட்ட தகவல்களை சேமித்து வைத்திருப்போம். அவை மற்றவர்களிடம் சென்றால் பல தவறுகள் நடக்க வாய்ப்புண்டு. இது போன்ற நிலையில் நமது போன் தொலைந்தால் எப்படி கண்டுபிடிப்பது அல்லது தகவல்களை அழிப்பது என பார்ப்போம்..

நன்மைகள் :

உங்கள் போன் இருக்கும் இடத்தை google map மூலம் அறியலா.

உங்கள் மொபைல் வீட்டில் ஏதேனும் இடத்தில் மறைத்திருந்தால் அது சைலன்ட் மோடில் இருந்தாலும் ரிங் செய்ய வைக்கலாம்.

உங்கள் போனின் தகவல்களை , போனை கண்டெடுத்தவர் பார்க்காமல் அழிக்கலாம்.

போனுக்கு புது பாஸ்வோர்ட் செட் செய்யலாம்.

உங்கள் போனில் செய்யவேண்டியவை:

போனில் GOOGLE SETTING செல்லவும்.(போனில் உள்ள செட்டிங் மெனு இல்லை.

 Security. ஆப்ஷனை தெரிவு செய்யவும்.

 "Android Device Manager,"  என்ற ஆப்ஷனுக்கு கிழே 

 Remotely locate this device ஆப்ஷனை டிக் செய்யவும், 

Allow remote lock and factory reset  கிளிக் செயவும்.

அதில் கிழே  உள்ளது போல ஒரு விண்டோ வரும்.

ஆக்டிவேட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான்....

கணினியில் ...

www.google.com/android/devicemanager  என்ற தளத்துக்கு செல்லவும். (உங்கள் போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். ) 

உங்கள் GMAIL ID மூலம் உள்நுழையவும்.

உங்கள் இருப்பிடம் GOOGLE MAP இல் தெரியும்.

இதில் RING  என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் போன் அலாரம் அடிக்கும்.(சைலன்ட் மோடில் இருந்தாலும்)

LOCK & ERASE  மூலம் காணாமல் போன போனில் உள்ள தகவைகளை அழிக்கலாம். அல்லது போனை லாக் செய்யலாம்.

GOOGLE MAP மூலம் தற்போது போன் இருந்க்கும் ஏரியாவையும் அறியலாம்.

ஒரு முக்கியமான இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யவும்.

Monday, July 22, 2013

Facebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..

இன்று மிக பெரிய சமுக வலைத்தளம் என்றால் அது Facebook தான். தினம்தோறும் பலர் அதில் இணைத்து வருகின்றனர். தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் , தனது பழைய நண்பர்களை தேடி கண்டுபிடிக்கவும் , தனது ரசனையுடன் ஒத்துபோகும் நண்பர்களை கண்டுபிடிக்கவும் இது உதவுகிறது. இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளது .

குறிப்பாக பெண்கள் இந்த Facebook இல் படும்பாடு சொல்லிமாலாதது . Facebook ஆல் வாழ்க்கையை தொலைத்த , பல கஷ்டங்களை அனுபவித்த பெண்கள் பலர் உள்ளனர் . சமுகத்திற்கு பயந்து அவர்கள் சொல்லுவதில்லை . பிறரால் நீங்கள் கஷ்டப்பட்ட கூடாது என நினைத்தால் , உங்களுக்காக சில யோசனைகள் ...

  1. தயவு செய்து உங்கள் புகைப்படங்களை பதிவேற்றாதிர்கள் . அந்த படங்கள் சில சமுக விரோதிகளால் ஆபாச படமாக மாற்ற வாய்ப்புள்ளது .

  1. எக்காரணத்தை முன்னிட்டும் உங்கள் உண்மையான முகவரி , தொலைபேசி எண்ணை கொடுக்காதீர்கள் .

  1. குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் உங்கள் கடவு சொல்லை (Password) மாற்றி கொண்டே இருங்கள் .

  1. கடவு சொல் எளிதில் யூகிக்க முடியாததாக வையுங்கள் . உங்கள் பிறந்த நாள் , மொபைல் நம்பர் , பெற்றோர் பெயரை வைக்காதீர்கள் .

  1. என்ன நெருங்கிய உறவினராக இருந்தாலும் , நன்பர்களாக இருந்தாலும் கடவு சொல்லை கொடுக்காதீர்கள் . திருமணம் நிச்சயமான பெண்கள் கூட கொடுக்காதீர்கள் .

  1. நன்றாக தெரிந்தவர்களின் Friend Request மட்டும் Accept செய்யுங்கள் .

  1. உங்கள் நண்பர்கள் புகைப்படங்களில் உங்களை Tag செய்வதை தடுங்கள். அப்படி Tag செய்தாலும் அது உங்கள் அனுமதி கிடைத்த பின்தான் உங்கள் Wall இல் தோன்ற வேண்டும் என Setting கில் மாற்றம் செய்யுங்கள் .

மாற்றம் செய்ய :Home -> Privacy setting ->Timeline and Tagging 

  1. தவறான படங்கள் அல்லது ஆபாசமான Status போடும் நண்பர்களை உடனே Unfriend செய்யுங்கள் .

  1. உங்கள் கணக்கில் Mobile Notification option Enable செய்யுங்கள் .
Enable செய்ய : Home -> Account setting ->security setting -> login notification

  1. மற்றவருடன் Chat செய்யுன் போது உங்களின் உண்மை தகவல்களை சொல்லவேண்டாம் . அதுபோல உங்களின் பலவினங்களை சொல்லாதீர்கள் .

  1. இதையும் மீறி எதாவது தவறு வந்தால் உடனடியாக உங்கள் Account ஐ அழித்துவிடுங்கள் .

ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கபடுவதால் இந்த பதிவு .

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

Friday, September 7, 2012

டிஸ்கி : விரைவில் Facebook ஆல் நிம்மதி இன்றி வாழும் இளம் பெண் உண்மை கதை ..

Wednesday, September 14, 2011

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..

பதிவு திருட்டு என்பது இப்பொழுது சகஜமாகிவிட்டது. நாம் கஷ்ட்டபட்டு , மூளையை கசக்கி( இருக்குறவங்க..) எழுதும் பதிவுகளை கஷ்டபடாமல் காப்பி அடித்து அவர்கள் தளத்தில் பயன் படுத்தி கொள்கின்றனர்.  இது போல உள்ள திருட்டை தடுக்க சில வழிகள்.

1) முதலில் உங்கள் Account ல் நுழையுங்கள்.

2) Dashboard = > design க்குள் செல்லுங்கள்.

3) Add gedgetAdd HTML/Javascript  செலக்ட் பன்னுங்க.

4) அதில் கீழ் வருபவதை copy பன்னி paste பன்னவும்.

ஐயா.. சாமி இது கஷ்டப்பட்டு நான் எழுதிய பதிவு, எனவே தயவு செய்து இதை திருடாதீர்கள்.

அல்லது

இதுலாம் ஒரு பதிவுனு திருட வந்து இருக்கியே உன்ன நினைத்தால் சிரிப்பு வருது.

அல்லது

அறிவுகெட்டவர்கள், வீணாபோனவர்கள், விளங்காதவ்ர்கள், உருப்படதாவர்கள், (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை போட்டுகொள்ளவும்) மட்டும் இந்த பதிவை காப்பி எடுக்கலாம்.

அல்லது

இது மலையாள ஷகிலா(சாரி) சாமியாரிடம் மந்திரிச்சு உருவாக்கிய வளைதலம். இதில் இருந்து பதிவை திருடுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள்.

        5) இதை Add பன்னி save செய்யவும்.

இதையும் மீறி யாராவது உங்கள் பதிவை திருடினால்

நீங்கள் பதிவே எழுதாதிர்கள், அப்புறம் எப்படி திருடுவார்கள் பார்போம்.

Wednesday, May 4, 2011

வெங்காயத்தின் உதவியுடன் ஐபாட்களை சார்ஜ் செய்யலாம்

ஒன்னும் தெரியாதவர்களை வெங்காயம் என ஏளனம் செய்வதுண்டு. ஆனால் அந்த வெங்காயத்தின் மகத்துவம் ஏராளம். வைத்தியத்திற்கு மட்டும்தான் என நினைத்து விடாதீர்கள் எம் தொழில்நுட்ப தேவைக்கும் உதவ வந்து விட்டது வெங்காயம். ஆம் நமது ஐ.பாட்களை இந்த வெங்காயத்தின் மூலம் சார்ஜ் செய்யலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
 
எப்படி என கேட்கிறீர்களா? தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள் 1 பெரிய வெங்காயம் 2 ஏதாவது ஒரு சத்து பானம் 3 திருப்புலி ஜ.பாட் மற்றும் அதனை வெங்காயத்தோடு இனைக்கும் ஒயர். இது எல்லாவற்றையம் எடுத்த பின்னர் வீடியோவில் காட்டப்படுவது போன்று செய்து 30 நிமிடங்கள் வரை சார்ஜ் செய்யுங்கள்

Thanks : Kingtamil.com