> என் ராஜபாட்டை : ANDROID போன் மூலம் கணினியை கட்டுபடுத்துவது எப்படி?

.....

.

Saturday, September 5, 2015

ANDROID போன் மூலம் கணினியை கட்டுபடுத்துவது எப்படி?



          

          இன்றைய அறிவியல் உலகமே நம் கையில் ஆண்ட்ராய்ட் போன் வடிவில் வந்துள்ளது. இதன் மூலம் பல நன்மைகள் உள்ளது. நமது வீட்டில் உள்ள கணினியை ஆண்ட்ராய்ட் போன் மூலம் எப்படி கட்டுபடுத்துவது என்பதை இன்றைய பதிவில் பார்க்கலாம்.

நன்மைகள் :

உங்கள் கணினியை உலகில் எந்த மூலையில் இருந்தும் இயக்கலாம்.
உங்கள் கணினியில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்கலாம்.
போன் மூலம் கணினியை நிறுத்தலாம்.
மென்பொருள்களை நிறுவலாம், அழிக்கலாம்.

வழிமுறை :

முதலில் உங்கள் கணினியில் GOOGLE CHROME WEB BROWSER திறந்துகொள்ளவும்.



அந்த விண்டோவில் இடது பக்கத்தில் APPS  என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.


அதில் WEB STORE  என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.


அதில் வரும் விண்டோவில் இடதுபக்கம் உள்ள SEARCH BOX இல் CHROME REMOTE DESKTOP என தேடவும்.


வரும் விண்டோவில் முதலில் உள்ள AD-ON CHROME REMOTE DESKTOP என்ற AD-ON ஐ கிளிக் செய்யவும். இது முழுவதும் இன்ஸ்டால் ஆகும் வரை காத்திருக்கவும்.(ADD APP என்பதை கிளிக் செய்யவும் )


இப்போது CHROME விண்டோவில் CHROME REMOTE DESKTOP என்ற ஐகான் புதிதாக இணைந்திருக்கும். அதனை கிளிக் செய்யவும். 





அதில் MY COMPUTER என்ற ஆப்ஷனுக்கு கீழே GET STARTED என்பதை கிளிக் செய்யவும்.



அதில் ENABLE REMOTE CONNECTION என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . CHROME INSTALLER என்ற கோப்பு தரவிறக்கம் ஆகும்.



இன்ஸ்டால் ஆனதும் PIN NUMBER கேட்கும். ஏதேனும் ஆறு இலக்க எண்ணை கொடுக்கவும்.(EX: 123456 )


இப்பொது ஒகே பட்டனை கிளிக் செய்யவும். 


திரையில் உங்கள் கணினியின் பெயர்  வந்திருக்கும். 

ஆண்ட்ராய்ட் போனில் செய்ய வேண்டியவை "


உங்கள் மொபைல் போனில் PLY STORE இல் CHROME REMOTE DESKTOP என்ற அப்ளிகேஷனை தரவிறக்கி இன்ஸ்டால் செய்யவும்.





அதில் நீங்கள் CHROME இல் LOGIN செய்த மெயில் ஐடியிலேயே இந்த ஆப்ளிகேஷனிலும் LOG IN செய்யவும்.



இப்போது திரையில் உங்கள் கணினியின் பெயர் தெரியும்.(உங்கள் கணினியில் பெயர் தெரிய MYCOMPUTER இல் RIGHT MOUSE CLICK செய்து PROPERTIES சென்று பார்க்கவும்.)





நீங்கள் முன்பு கொடுத்த PIN NUMBER (EX: 123456) ஐ கொடுக்கவும்.
இப்பொது உங்கள் கணினியும் மொபைலும் இணைந்து விடும். கணினியில் நடப்பதை போனில் பார்க்கலாம். போன் மூலம் கணினியை இயக்கலாம்.


மேலும் விவரத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும்.



1 comment:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...