> என் ராஜபாட்டை : System Restore Point என்றால் என்ன ?

.....

.

Saturday, September 12, 2015

System Restore Point என்றால் என்ன ?


         

             இன்று பள்ளியில் உள்ள ஒரு கணினியில் ஒரு பிரச்சனை. எந்த பைலையும் காபி செய்தாலும் "the file already exists" என்ற பிழை செய்தி வந்தது. சில கோப்புகள் காப்பி செய்து பெண் டிரைவில் போட்டால் எல்லாமே shortcut ஆக மாறிவிடுகிறது. shortcut virus எடுக்க உள்ள வழியை செயல்படுத்தியும் போகவில்லை. அப்போது தோன்றியதுதான் இந்த  System Restore Point ஐடியா.

System Restore Point என்றால் என்ன ?

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவை ரஜினி ஹிப்னாடிசம் மூலம் அவரது பழைய நினைவுகளை கிளறி அந்த கால நேரத்திற்கு அழைத்து செல்வார். அதுபோல தான் நமது கணினியில் ஏதாவது பிரச்சனை வந்தால் நமது கணினியை அது எப்போது நன்றாக இருந்தாதோ அந்த நிலைக்கு மீண்டும் மாற்றும் ஒரு வழிதான் இது.

நன்மைகள் :

கணினியில் ஏற்படும் எதிர்பாராத பிழைகளை சரிசெய்யலாம்.

நம்மை அறியாமல் ஏற்படும் பிரச்சனைகளை களைந்து மீண்டும் பழையபடி கணினியை அயன்படுத்தலாம்.

நமது கோப்புகள் அழிவதில்லை.

எளியமுறை

விரைவானமுறை

வழிமுறைகள் :

START => ALL PROGRAM=> ACCESSORIES=> SYSTEM TOOLS=> SYSTEM RESTORE
  இப்படி செய்ததன் மூலம் கணினி முன்பு இருந்த நிலைக்கு மாறுகிறது. இதனால் கணினியில் பிரச்சனைகள் தானாகவே தீர்ந்து விடுகிறது. எனது கணினியும் அப்படி மாறிவிட்டது . இப்பொது அதில் எந்த பிரச்சனியும் இல்லை. நீங்களும் செய்து பாருங்கள்.


1 comment:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...