> என் ராஜபாட்டை : வெற்றி உன் கையில் : பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான தொடர்

.....

.

Saturday, January 30, 2016

வெற்றி உன் கையில் : பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான தொடர்

     இன்னும் ஒரு மாதத்தில் +2 மாணவர்களுக்கு ஆண்டு பொது தேர்வு வர உள்ளது. அதற்காக மாணவர்களும் அவர்களுக்கு துணையாக பெற்றோர்களும் கடினமாக தயாராகிக்கொண்டு இருப்பார்கள். இவர்களுக்காகத்தான் இந்த தொடர். இது அறிவுரை அல்ல கடந்த 15 வருட கல்விபணியில் கிடைத்த அனுபவங்களின் தொகுப்பு மட்டுமே. உங்கள் ஆதரவு இருந்தால் இது இன்னும் நன்றாக தொடரும்.


     முதலில் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கண்டிப்பாக நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் செலவில்லாமல் சேர கண்டிப்பாக ஆண்டவன் அருள்புரிவான். இந்த சூழ்நிலையில் உங்களுடன் சில கருத்துகளை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

செய்ய கூடியவை மற்றும் கூடாதவைகள் : • ·         கஷ்டபட்டு படிப்பதைவிட இஷ்ட்டபட்டு படியுங்கள். சிலர் மிக குறைவான நேரமே படிப்பார்கள் ஆனால் மதிப்பெண் அதிகமாக எடுப்பார்கள். சிலர் விழுந்து விழுந்து படிப்பார்கள் ஆனால் மதிப்பெண் மிக குறைவாக இருக்கும். காரணம் மனபாடம் செய்யும் பாடம் அந்த நேரத்தில் மட்டுமே உதவும் ஆனால் புரிந்து படிக்கும் பாடம் கடைசிவரை மறக்காது தேர்வு நேரத்தில் சும்மா புரட்டிபார்த்தாலே போதும் எளிதாக தேர்வை எதிர்கொள்ளமுடியும்.

 • ·         கண்டதை படித்தவன் பண்டிதன் ஆவான்னு சொல்வாங்க அதுபோல கண்ட நேரத்தில் படிப்பது சரியல்ல. காலை நேரம் என்றால் குறைந்தது நான்கு மணிக்கு ஆரம்பிக்கலாம். மாலை நேரத்தில் 6 – 10 சரியான நேரம். இரவு பத்து மணிக்கு மேல் படிப்பது வேஸ்ட். இரவு கண்விழித்து நைட் ஸ்டெடி செய்வதெல்லாம் உடம்பை கெடுத்துகொள்ளும் வேலையாகும்.

 • ·         LKG குழந்தை போல ஒரு கேள்வி பதில் படித்ததும் எழுதிபார்காமல் இரண்டு அல்லது மூன்று கேள்வி பதில்களை சேர்த்து எழுதுவது நல்லது (அவரரவர் திறமைக்கு ஏற்ப எண்ணிக்கை மாறலாம் ). அப்போதுதான் நாம் எதை மறக்கிறோம் என கண்டறியலாம்.

 • · பாடங்களை அன்றாட நிகழ்ச்சியுடன் இணைத்து நினைவில் வைத்துகொள்ளுங்கள். உதாரணமாக கணினி அறிவியலில் SWITCH CASE PROGRAM எழுதும்போது புத்தகத்தில் 1 = ONE , 2= TWO என இருக்கும் இதை A= AJITH , V= VIJAY  என மாற்றிகொண்டால் புரோகிராமும் மறக்காது SYNTAX என்படும் புரோகிராம் எழுதும் வழிமுறையும் மறக்காது.

 • ·         பழைய தேர்வு விடைத்தாள்கள் , கேள்வித்தாள்கள் அனைத்தையும் சேகரித்து அதை முழுமையாக படிக்கவும். பள்ளியில் நடந்த தேர்வு விடைத்தாள்களில் நமக்கு எந்த பதிலுக்கு ஏன் மதிப்பெண் குறைக்கபட்டது என கவனித்தாலே நிறைய பிழைகளை களையமுடியும். நல்ல மதிப்பெண் / முழுமதிபேன் எடுத்த மாணவர்களின் விடைத்தாள்களையும் பார்க்கவேண்டும். அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என உணரவேண்டும்.

 • ·         கணித பாடத்தை மனபாடம் செய்யும் ஆட்கள் இன்னும் இருகின்றார்கள். அப்படி செய்யாமல் ஒத்த கருத்துடைய மாணவர்களுடன் இணைந்து போட்டுபார்கலாம். நமக்கு தெரிந்த கணக்கை மற்ற மாணவர்களுக்கு சொல்லிகொடுக்கலாம். அவ்வாறு செய்யும் போது நாமும் படித்ததுபோல ஆச்சு, சொல்லிகொடுத்தாபோலவும் ஆச்சு, நமக்கு தோன்றாத புதிய சந்தேகங்களை மற்றவரிடம் இருந்து வரும்போது அதை எப்படி சரிசெய்யலாம் என கற்க உதவுகிறது.

 • · ஒவ்வொரு பாடத்திற்கும் எத்தனை நாள் தேவை என கணக்கிடவேண்டும். நாம் எடுக்க நினைக்கும் மதிப்பெண்ணை பெரிதாக எழுதி நமது அறையில் ஓட்டலாம்.

 • ·    நண்பர்களுடன் வீண் அரட்டை, இருசக்கரவாகனத்தில் ஊர் சுற்றுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

பெற்றோர் கவனத்திற்கு ..


 • ·         நீங்கள் முதலில் உங்கள் பிள்ளைகள் மேல் நம்பிக்கை வையுங்கள். ஆதரவான வார்த்தைகளை கூறுங்கள். பள்ளியில் தற்பொழுது நடக்கும் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்ணை காட்டி அவனை திட்டாதீர்கள். “நீ எல்லாம் எதுக்கும் லாக்கில்லை “ என சொல்லாதிர்கள். அப்படி பெயர் பெற்ற பிள்ளைகள்தான் வருங்காலத்தில் பெரிய ஆளாக வருகின்றார்கள். “உன்னால் முடியும் படிப்பா, உன்னால் முடிஞ்ச அளவு டிரை செய்” என பாசிட்டிவாக பேசுங்கள்.

 • ·         தனி அறையில், இணைய வசதியுடன் கணினி, WI-FI இணைந்த ஆண்ட்ராய்ட் போன் கொடுத்துவிட்டு பையன்படிக்கவேமாட்றான்னு சொன்னா ஆசிரியர்கள் என்ன செய்வார்கள்? மாணவனை அவன் சிந்தனை மாறாவண்ணம் பார்க்கவேண்டியது உங்கள் பொறுப்பும் கூட..

 • ·   24 மணி நேரமும் படி படி என சொல்லாதிர்கள், நம்மால் 24 மணிநேரம் ஒரே வேலையை செய்யமுடியுமா? அவன் கவனம் சிதறாவண்ணம் அவனுக்கு ரெஸ்ட் எடுக்க வழிசெயுங்கள்.

 • ·    மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை நீங்களும் உணர்ந்து அவர்களுக்கும் புரியவையுங்கள்.

 • ·         அடுத்த மாணவர்களுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாதீர்கள்.

 • · சரியான , சத்தான உணவுவகைகளை கொடுங்கள். இரண்டு மாதங்களுக்கு அசைவம், பானிபூரி , நூடுல்ஸ் போன்ற எளிதில் செரிமானம் ஆகாத உணவுவகைகளை தவிருங்கள். நிறைய பழசாறு, இளநீர் குடிக்க சொல்லுங்கள். சாதாரண தலைவலிக்கு மாத்திரைபோட சொல்லாதீர்கள்.

 •  இது பொதுவான கருத்துகளே ஆகும். அடுத்த பகுதியில் இருந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வரு பாடத்திற்கும் எப்படி தயாராக வேண்டும் என அனுபவமிக்க ஆசிரியர்களின் கருத்துகளும் , மதிப்பெண் அதிகம் பெற உதவும் முக்கிய குறிப்புகளும் இடம் பெரும்.


டிஸ்கி : இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகள் எனக்கு தேவை. இங்கேயே உங்கள் கருத்துகளை பதியலாம் அல்லது உங்கள் கருத்துகளை rrajja.mlr@gmail.com மின் அஞ்சலுக்கும் அனுப்பலாம்.1 comment:

 1. நல்ல அறிவுரை.. நல்லதொரு ஆலோசனை.. வாழ்த்துகள்.... கண்டிப்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயன்படும் அருமையான பதிவு இது...

  வாழ்த்துகள்...தொடருங்கள்...!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...