> என் ராஜபாட்டை : உள்ளாட்சி தேர்தலுக்கு பின் கருணாநிதி கைது : ஜெ. அதிரடி திட்டம்.

.....

.

Saturday, October 1, 2011

உள்ளாட்சி தேர்தலுக்கு பின் கருணாநிதி கைது : ஜெ. அதிரடி திட்டம்.

ஜெ. எப்பொழுதும் அதிரடிக்கு பெயர்போனவர். ஆனால் சட்டமன்ற தேர்தலுக்கு பின் , அதுவும் தனி மெஜாரட்டிக்கு பின்பும் அடக்கி வாசிப்பது ஏன் என பலருக்கு ஆச்சரியம். அதன் காரணம் வரும் உள்ளாட்சி தேர்தல். அதற்க்கு பின் அவரின் அதிரடி ஆரம்பமாகும் என சொல்லுகின்றனர். அதில் சில ஆக்ஷன் பிளான்கள்.

ஆக் ஷன் சீன் 1 : கலைஞர் கைது

                கலைஞர் கைவண்ணத்தில் வந்த இளைஞன் படத்துக்கு மார்ட்டின் என்பவர் 50 லட்சம் கொடுத்ததாகவும் அதை ஒரு ஒரு அரகட்டளைக்கு அளிப்பதாகவும் கலைஞர் ஒருமுறை சொல்லியிருந்தார். இப்போது அந்த மார்ட்டின் ஜெயிலில். அந்த மோசமான கதைக்கு எந்த இளிச்சவாயனும் 50 லட்சம் தரமாட்டான் இவர் எப்படி தந்தார் என போலிஸ் “அன்பாக” விசரித்ததில் பல உண்மைகள் வந்தது. அதன் அடிபடையில் இந்த கைது இருக்கும்.

                இப்பொழுதே கைது செய்தால் அது அவருக்கு ஆதரவான நிலையை உருவாக்கலாம் என்பது ஜெ.யின் கணிப்பு. எனவே உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கைது படலம் நடக்கும்.

ஆக் ஷன் சீன் 2: அழகிரிக்கு ஆப்பு

                “அட்டாக் பாண்டி” முன்பு தினகரன் எரிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். இப்போ அவர் உள்ளே. அவரின் அடிபொடிகளும் உள்ளே. பாண்டியிடம் போலிஸ் கபடி ஆடியதில் அவர் அப்ருவராக மாற ஓப்புகொண்டார். அவர் தந்த தகவல்களின் அடிபடையில் அழகிரிக்கு காப்பு சாரி ஆப்பு தயாராகிறது.

                அவர் மகன் எடுத்த்த படங்களின் வருமானம், அதை வாங்க சொல்லி வினியோகஸ்தர்களை மிரட்டியது தொடர்பாக விவரங்கள் சேகரிக்கப்படுகின்றது. இதன் மூலம் அவருக்கும் “செக்” வைக்க படுகிறது.

ஆக் ஷன் சீன் 3: விஜயகாந்த்துக்கு வேட்டு

                தன்னால் வளர்ந்து இன்று தன்னையே பதம் பார்க்கும் கத்தியாக விஜயகாந்தை நினைக்கிரார் ஜெ. அவரை அடக்கும் விதமாக சட்டமன்ற தேர்தலின் போது அவர் இவரிடம் பேசிய பேரங்களை , அவர் கேட்ட பணம் பற்றிய தகவல்களை வெளியிட உள்ளார்.

                இதன் மூலம் விஜய்காந்தின் வளர்ச்சியையும், அவர் பெயரையும் கெடுக்க முடியும் என எண்ணுகிறார். விஜய்காந்த் நடத்தும் கல்லுரியின் முறைகெடுகளையும், அங்கு வாங்கும் நன்கொடை பற்றியும் , அந்த இடத்தை பற்றிய தகவல்களை திரட்டி வருகின்றனர்.


இது போல இன்னும் பல ஆக்ஷன் சீன்கள் நடக்கும் என நமது DND நிருபர் தெரிவிக்கின்றார்.

DND பற்றி தெரியாதவர்களுக்கு “DUPAKKUR NEWS DEVELOPERS
உரிமை : ராசா, ராசா (ராக்கெட் ராசா)

               20 comments:

 1. ஹா ஹா ஹா நடக்கட்டும் கச்சேரி

  ReplyDelete
 2. மாப்ள நீங்க சொல்வதெல்லாம் நடக்கவும் வாய்ப்புகள் இருக்குய்யா...அசத்தல் பதிவு!

  ReplyDelete
 3. நிஜமாகவா?இதிலேயே ஐந்து வருடத்தையும் ஓட்டி விடுவார்கள் போலும்!

  ReplyDelete
 4. ///மாப்ள நீங்க சொல்வதெல்லாம் நடக்கவும் வாய்ப்புகள் இருக்குய்யா...அசத்தல் பதிவு! ///

  ரிப்பீட்டு....

  ReplyDelete
 5. அடக்கி வாசிக்கிறாரா? சொல்லவே இல்ல

  ReplyDelete
 6. மாறன் சகோதரர்களுக்கு என்ன நடக்கும் ங்கிறத சஸ்பென்ஸா வச்சிருக்கிங்க போல!!

  தொடர்ந்து கலக்குங்க ராக்கெட் ராசா!!

  ReplyDelete
 7. கண்ணு கூசுது... பதிவு படிக்க முடியல...

  ReplyDelete
 8. ஆரம்பிச்சிட்டாங்கப்பா.....

  ஸாதிகா சொல்வது போல இனி ஐந்தாண்டு கால திட்டம் என்பது கருணாநிதி அண்ட் கோவை அரெஸ்ட் செய்வதில் தான் தன் முழு கவனம் இருக்கும் போல....

  கடவுளே மக்களையும் நாட்டையும் காப்பாத்துப்பா...

  ReplyDelete
 9. அய்யய்யோ கொல்றாங்க கொல்றாங்க சத்தத்தை இனியும் கேக்கலாம் இல்லையா....???

  ReplyDelete
 10. ஆமா ஸ்டாலினுக்கு செக் வைக்கலியா...???

  ReplyDelete
 11. நெசமாத்தான் சொல்லூறீங்களா பாஸ்..? ( அஞ்சலி ஸ்டைலில் படிக்கவும் ஹீ ஹீ )

  ReplyDelete
 12. கலக்கல் பாஸ்...

  ReplyDelete
 13. ஹா ஹா நல்ல கற்பனை, நடந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை

  ReplyDelete
 14. இது நிஜமா? அல்ல கற்பனையா..ஆண்டவரே காப்பாற்று..
  கற்பனைகள் நிஜமாகிடும்..
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 15. என்னமோ, நாட்டிற்கு நல்லது நடந்தால் சந்தோசமே...

  ReplyDelete
 16. ம்ம்ம்ம் அம்மா ஆட்டம் சூப்பர் தான் ........மாற்றம் இல்லை ....ஆனால் நிரந்திர முதல்வரும் இல்லை ?????

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...