> என் ராஜபாட்டை : தெறி : விமர்சனம்

.....

.

Thursday, April 14, 2016

தெறி : விமர்சனம்





இளைய தளபதி விஜய் நடிப்பில் , அட்லி இயக்கத்தில் , கலைபுலி தாணு தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில் சமந்தா, நைனிதா, எமி , மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளி வந்த படம் தெறி. படம் எப்படி என பாப்போம்.

              தெறிக்கும் அதிரடியோடு தேவையான செண்டிமெண்ட் - களின் காக்டெய்ல் கலவையாய் வெளி வந்திருக்கும் விஜய் படம்.நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் விஜய் ஒரு வலுவான வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.




              இந்த படத்தின் ஒரு காட்சியில் வில்லன் புகைப்பிடித்து கொண்டிருக்கும் போது அதை அவரது உதட்டிலிருந்து பிடிங்கி எறிந்து "புகை பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும்" - ன்னு விஜய் பேசும் வசனம் சமூக அக்கறையின் வெளிப்பாடு. பாடல் காட்சியில் கூட ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை ஜாலி ஹோலியாக சொல்லி செல்வது கூடுதல் அழகு.
மது அருந்தாத, சிகரெட் புகைக்காத, இரட்டை அர்த்த மற்றும் வீண் சவடால்கள் விடும் வசனங்கள் பேசாத ஹீரோவாக விஜய் ஜொலித்திருக்கிறார்.

            குற்றவாளிகள் உருவாவதற்கு பெற்றோர்களின் வளர்ப்பு முறைகளே காரணம் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தினை இந்த திரைப்படம் பதிவு செய்ய முயன்று இருக்கிறது. கொஞ்சம் கூட தொய்வில்லாத விறுவிறுப்பான திரைக்கதையோடு ஒரு Family + Action + Youth Entertainment திரைப்படத்தை கொடுத்தற்காக இயக்குனர் அட்லிக்கும், பிண்ணனி இசையில் பட்டையை கிளப்பிருக்கும் G.v.பிரகாஷ்குமாருக்கும் ஒரு தெறிக்கும் சபாஷ் போடலாம்..!!
தெறி ...


‪#‎நம்பி_போங்க‬....!!
‪#‎சந்தோஷமா_வாங்க‬....!!!

விமர்சனம் : மலேசியாவில் இருந்து நண்பர் துரை  கோபி



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...