> என் ராஜபாட்டை : சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி

.....

.

Tuesday, November 15, 2011

சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி



கடந்தமுறை ஜெ. முதல்வராக இருந்த போதே அரசு கேபிள் கொண்டு வந்து மூலைமுடுக்கேல்லாம் அரசு கேபிள் வர முயர்சி செய்தார், ஆனால் முடியவில்லை. பின் வந்த கருணாநிதி அந்த திட்டதையே முடக்கிவைத்தார்.

2011 தேர்தலில் ஜெ. அமோக வெற்றி வெற்று ஆட்சி அமைத்ததும் அந்த திட்டத்திற்க்கு உயிர் குடுத்தார். அரசு கேபிள் நன்றாக செயல்பட துவங்கியது. தமிழ் நாடு முழுவதும் ஓளிபரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டது, மக்களும் ஆர்வமுடன் சேர்ந்தனர்.

ஆனால் அரசு கேபிளில் சன் நெட் ஓர்க் சேனல்கள் தெரியாது போனதால் மக்களிடம் பெரிய அதிர்ச்சி எற்ப்பட்டது. தமிழகத்தில் அசைக்க முடியாத வளர்ச்சி பெற்று உள்ளது சன் டி.வி. குடும்ப பெண்களின் முக்கிய பொழுதுபோக்கே சன் டி.வி சீரியல்கள் என்றால் அது மிகையல்ல.

சன் டி.வி இல்லாதது அரசு கேபிள்க்கு பெரிய அடியாக இருகின்றது. அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் மற்ற கட்டண சேனல்களான STAR SPORTS, TEN SOPRTS, SONY, DISCOVERY, ANIMAL PLANET, SONY MAX, AXN, HBO, ESPN போன்ற முன்னனி நிருவனங்கள் தங்கள் சேனலை ஒளிப்பரப்ப அனுமதி தந்தன. ஆனால் சன் டி.வி பிடிவாதமாக மறுத்து வருகின்றது.

சன் டி.விக்கு செக் வைக்கும் விதமாக அதை அரசுடமை ஆக்கிவிடலாம் என ஜெ . எண்னுகின்றார். அப்ப்டி செய்யும் பட்சத்தில் சன் டி.வியை அடக்கி வைத்த மாதிரியும் இருக்கும், அரசு கேபிள்லும் நன்றாக வரும் என எண்ணுகின்றார். அப்படி செய்தால் சன் நிருவாகம் வழக்கு தொடரும் அபாயம் உள்ளது. இதற்க்கும் ஒரு வழிவைத்துள்ளார் ஜெ.

முன்பு இந்திராகாந்தி தனியார் விமானங்களை அரசுடமை ஆக்கினார், நேரு கூட தனியார் வங்கிகளை அரசுடமை ஆக்கினார். இந்த வாதங்களை முன் வைத்து வழக்கில் வெற்றி பெறலாம் என ஜெ. நினைக்கிறார். இந்த விவகாரம் மாறன் குருப்க்கு தெரியவந்ததால்தான் இப்போது சன் டி.வியில் அர்சு பற்றி அதிகமாக விமர்சனம் செய்து செய்திகள் வருவதில்லை.

சன் டி.வி அரசுடமை ஆகுமா? இல்லையா? என இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.



இது போல இன்னும் பல அரசுடமை ஆக்கும் சீன்கள் நடக்கும் என நமது DND நிருபர் தெரிவிக்கின்றார்.

DND பற்றி தெரியாதவர்களுக்கு “DUPAKKUR NEWS DEVELOPERS
உரிமை : ராசா, ராசா (ராக்கெட் ராசா)


51 comments:

  1. அடிச்சு புடிச்சி வந்தா இப்படி டுபாக்கூர் செய்தி போட்டு கொல்றியெ ராசா

    ReplyDelete
  2. அடாடா..ராஜாபாட்டையில் இப்படியொரு அசம்பாவிதமா?

    இருந்தாலும் ராஜபாட்டையில் வேகம் இருக்கிறது..!!

    ReplyDelete
  3. ரொம்ப நல்லதா போச்சே .......

    ReplyDelete
  4. நான் என்னமோ ஏதோன்னு பதறியடிச்சுட்டு வந்துட்டேன்...! யப்பா..!!? வலிக்குது...!!

    ReplyDelete
  5. தொடர்ந்து டூபாக்கூர் செய்திகளை வெளியிடும் நீர் வாழ்க..!! உமது புகழ் செழித்தோங்கட்டும் ராஜாபாட்டையார் அவர்களே..!!!

    ReplyDelete
  6. எனது வலையில் இன்று
    சிந்திக்க வைத்த சிறுகதை

    நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  7. தலைவா இது ரொம்போ ஓவர்....
    http://rmy-batcha.blogspot.com

    ReplyDelete
  8. என்னது டுபாக்கூரா....

    ReplyDelete
  9. DUPAKKUR NEWS DEVELOPERS “ ராஜபாட்டை!!!ராஜா...

    ReplyDelete
  10. இந்த வருட டுபாக்கூர் விருதுகள் பதிவு உங்களுக்குத்தான் ஹிஹி!

    ReplyDelete
  11. @விக்கியுலகம்
    எப்ப வந்து வாங்கிகொள்ளவது ?

    ReplyDelete
  12. @stalin wesley
    எல்லாரும் அதான் நினைக்கிறாங்க

    ReplyDelete
  13. நீ இத டுபாகூர் நூஸ்னு சொல்றபா!
    அனா நான் இன்னாநெனக்கறேன்னா, அந்தம்மாக்கு பாய்ன்ட்ஸ் கொடுக்கிறியோனு தோணுதுபா.
    இன்னாவேணாலும் நடக்கும் நைனா!
    மனஸ ஸ்ட்றாங்கா வச்சுகோ!
    இல்லாட்டீ றொம்ப ஃபீல் பண்ணுவெபா

    ReplyDelete
  14. //
    Blogger சைதை அஜீஸ் said...

    நீ இத டுபாகூர் நூஸ்னு சொல்றபா!
    அனா நான் இன்னாநெனக்கறேன்னா, அந்தம்மாக்கு பாய்ன்ட்ஸ் கொடுக்கிறியோனு தோணுதுபா.
    இன்னாவேணாலும் நடக்கும் நைனா!
    மனஸ ஸ்ட்றாங்கா வச்சுகோ!
    இல்லாட்டீ றொம்ப ஃபீல் பண்ணுவெபா
    //


    நடந்தா சந்தோசம் தான்

    ReplyDelete
  15. சே...ஏமாத்தி புட்டேயே.. எலேய் கையிலே கிடைச்சே.............

    ReplyDelete
  16. என்னமோ ஏதோன்னு வந்து படிச்சா..., இப்படி ஏமாத்திட்டீங்களோ சகோ

    ReplyDelete
  17. பார்த்துங்க ராசா அம்மாவுக்கு உங்க பதிவு புடிச்சு போச்சுன்னா உங்களை அரசுடைமையாக்கிருவார்

    ReplyDelete
  18. ஹலோ.... இது உண்மையானாலும் ஆச்சர்யமில்லை.

    ReplyDelete
  19. என்னுடைய சமீபத்திய இடுகை
    http://venpuravi.blogspot.com/2011/11/blog-post_14.html

    ReplyDelete
  20. //தங்கம்பழனி said...
    தொடர்ந்து டூபாக்கூர் செய்திகளை வெளியிடும் நீர் வாழ்க..!! உமது புகழ் செழித்தோங்கட்டும் ராஜாபாட்டையார் அவர்களே..!!!//

    நான் சொல்ல நினைத்தது....

    ReplyDelete
  21. அம்மா ஆட்சியில் எதுவும் சாத்தியம் இது என்ன பிஸ்கோத்து

    ReplyDelete
  22. பரபரப்பு செய்தி சொல்ற சன் டி.வி. கேவா?
    நல்ல டி. என்.டி....

    ReplyDelete
  23. சரியான டுபாகூரா இருக்கே...

    ReplyDelete
  24. இனிய மதிய வணக்கம் பாஸ்,

    ஏலேய் அரசியலிலும் கலப்படமற்ற கற்பனைச் செய்தியா!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  25. டெம்பிளேட் தக தக என்று ஜொலிக்குதே

    ReplyDelete
  26. DUPAKKUR NEWS DEVELOPERS “ ராஜபாட்டை!!!ராஜா.

    சொல்லியாச்சு இல்ல .பிறகென்ன நா வேற திட்டணுமா
    ராஜா?........ஹி....ஹி ..ஹி ...வாழ்த்துகள் சகோ .மிக்க நன்றி அப்பு பகிர்வுக்கு .

    ReplyDelete
  27. தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சு போச்சு டுபாக்கூர்னு. இருந்தாலும் ரசித்தேன்.

    ReplyDelete
  28. அடப்பாவி நான் ரொம்ப பெறுமையா படிச்சிட்டு வந்தா...

    இப்படி கவுத்திட்டியே...

    ReplyDelete
  29. இன்னைக்குதான் உங்க வலைப்பூவ பாக்குறேன்..
    இனி நானும் உங்களுடன் நடக்கிறேன்...
    சந்தோஷமா இருக்கு...
    ஏன்னா,நானும் மாயவரத்தான் தான்...:)

    நேரம் கிடைக்கும்போது நம்ம வலைப்பூ பக்கம் ஒரு விசிட் அடிங்க தலைவரே...

    ReplyDelete
  30. உங்கள் தளம் மிகவும் சுவாரசியமாகப் போகிறது....
    சக்கை போடாமல்....

    அதுதான்...வெற்றியின் ரகசியமா.....

    டுபாக்கூர் செய்திகள் தொடர்க....வாழ்க....

    ReplyDelete
  31. அப்போ இதெல்லாம் நடக்காதா?

    ReplyDelete
  32. அப்போ இந்த நியூஸ் உண்மை இல்லையா இதுவும் டுபாக்கூர்தானா...?

    ReplyDelete
  33. அதேப்பிடிய்யா இவளவு நாளும் கஷ்ட்ட பட்டு உழைச்சிட்டு அரசுடமை ஆக்கமுடியும்..??

    ReplyDelete
  34. ////இது போல இன்னும் பல அரசுடமை ஆக்கும் சீன்கள் நடக்கும் என நமது DND நிருபர் தெரிவிக்கின்றார்.

    DND பற்றி தெரியாதவர்களுக்கு “DUPAKKUR NEWS DEVELOPERS “
    உரிமை : ராசா, ராசா… (ராக்கெட் ராசா…)////

    ஏன் பாஸ் பதிவு மொக்கையா இல்லை உண்மையா

    ReplyDelete
  35. இந்த நியூஸ் உண்மை இல்லையா? -:)

    ReplyDelete
  36. இன்றைய செய்தி நாளைய வரலாறு!
    நன்றி!சகோ!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  37. ஆனா நான் நெனைச்சேன், இது டுபாக்கூர் செய்தியாதான் இருக்கும்ன்னு..

    அது சரியாயிடுச்சி..

    ReplyDelete
  38. சீரியஸ் மேட்டர் என்று பொறுமையாக படித்தேன்
    ஹும் கடைசியில் ..............

    ReplyDelete
  39. சூப்பரப்பு.. அப்படியே, 'கலைஞர் டி.வி' யையும் அரசுடைமை ஆக்க சொல்லுங்க!

    ReplyDelete
  40. நம்ம ஊர் ஆட்களின் லொள்ளு தாங்க முடியலப்பா

    ReplyDelete
  41. முதலில் அதிர்ச்சி அடைந்தேன்.
    டுபாக்கூர் என்று தெரிந்ததும் சிரித்தேன்.
    இந்த செய்தி நிஜமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ReplyDelete
  42. உங்கள் தளம் load ஆக அதிக நேரம் எடுக்கிறது அன்பரே கவனியுங்கள்

    ReplyDelete
  43. ஐடியா கொடுத்ததால் உங்களுக்கு உடனே அமைச்சர் பதவி கிடைக்கும் என நினைக்கிறேன்.

    இப்படிக்கு
    கமெண்டில் பீதியை கிளப்போர்
    http://twitter.com/#!/Neechalkaran/status/73605178049314816

    ReplyDelete
  44. நல்லபதிவு வாழ்த்துக்கள், தமிழர் சிந்தனை களத்தில் நல்ல பல பதிவுகளை வழங்கி உள்ளீர்கள். நன்றி தோழரே.

    கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
    http://www.sinthikkavum.net/2011/11/blog-post_15.html

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...