> என் ராஜபாட்டை : ராஜமௌலி

.....

.
Showing posts with label ராஜமௌலி. Show all posts
Showing posts with label ராஜமௌலி. Show all posts

Saturday, July 11, 2015

பாகுபலி - சினிமா விமர்சனம்




               நீண்டகால தயாரிப்பாகவும், இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கபட்டதுமான ,தமிழ் தெலுங்கு என பலமொழில் ஒரே நேரத்தில் வெளியான படம்தான் பாகுபலி. தொடர் வெற்றிகளை குவித்துவரும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தின் அடுத்த பிரமாண்ட வெற்றிபடைப்பி இது.

கதை :


    சகோதர யுத்தம்தான் முக்கியகளம் . மகிழ்மதி என்ற நாட்டை ஆளும் ரானாவுக்கும் அதன் உண்மையான அரசனான ஆனால் குழந்தையிலேயே ஆதிவாசிகளிடம் வளரும் பிரபாஸ்க்கும் இடையில் நடப்பதுதான் கதை. இடையில் தமனாவின் காதல் , போர் என செல்கின்றது. முழுகதையும் யாராலும் சொல்ல முடியாது சொல்ல முடியாது  காரணம் படமே பாதிதான்.

+ பாயிண்ட்ஸ் :

பிரமாண்டம் , பிரமாண்டம், பிரமாண்டம். ஆரம்ப காட்சியில் வரும் அருவிகள் ஆகட்டும் இறுதியில் நடக்கும் போர்கால காட்சிகளாகட்டும் எதிலும் பிரமாண்டம்.

துணைநடிகர்கள் தேர்வு.


சத்தியராஜின்அசத்தலான நடிப்பு. கடப்பா என்ற பாத்திரத்தில் மனுஷன் பின்னிருகார். இரண்டாம் பாகத்தில் அவர் பாத்திரம் இன்னும் வலுவாக இருக்கும் போல. 

பெரிய நடிகர் என்றஈகோ இல்லாமல் சத்தியராஜ் தன தலையில் பிரபாஸ் காலை வைக்க ஒத்துகொண்டது. ஒரு அருமையான நடிகரை தமிழில் வீணடிக்கிறோம்.

ரம்யா கிருஷ்ணனின் அசத்தல் நடிப்பு. 

போர்களகாட்சியில் CG WORK செம. திரை முழுவதும் கூட்டம் , சண்டை , அனா கடைசி அரைமணி நேரம் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைத்துவிட்டனர்.

கண்களை கொஞ்சம் கூட அகலவிடாத ஆர்ட் டைரக்டரின் கடின உழைப்பு.

தெளிவான திரைகதை. சாதாரண கதையைஇப்படியு சொல்லலாம் என காட்டியது இயக்குனரின் திறமை.

அனுஷ்கா , மொத்தமே பத்து வார்த்தைதான் பேசியிருப்பார். ஆனால் அவர் பார்வை பல வார்த்தை பேசுகிறது. இரண்மாம் பாகத்தில் முக்கிய பாத்திரம் இவர்தான்.


- பாயிண்ட் .

வீரமான பெண் பாத்திரத்துக்கு குழந்தமுகம் தமணா பொருந்தவில்லை. 

பாடல்கள் சுமார்.

சில காட்சிகளில் கிராபிக்ஸ் துருத்திக்கொண்டு தெரிவது. ராணா மோதும் அந்தகாட்டுஎருமை .

மொத்தத்தில் :

அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான பொழுதுபோக்கு படம். பிரமாண்டம் என்னும் சொல்லுக்கு இனி இந்த படத்தை உதாரணமாக சொல்லலாம். ஆனால் முழுப்படத்தை பார்க்க ஆசைபடுபவர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும். படம் பாதிதான் ஓடும். மீதி 2016 இல் இரண்டாம் பாகமாக வரும்.