> என் ராஜபாட்டை : தமிழ் படம்

.....

.
Showing posts with label தமிழ் படம். Show all posts
Showing posts with label தமிழ் படம். Show all posts

Saturday, July 11, 2015

பாகுபலி - சினிமா விமர்சனம்




               நீண்டகால தயாரிப்பாகவும், இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கபட்டதுமான ,தமிழ் தெலுங்கு என பலமொழில் ஒரே நேரத்தில் வெளியான படம்தான் பாகுபலி. தொடர் வெற்றிகளை குவித்துவரும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தின் அடுத்த பிரமாண்ட வெற்றிபடைப்பி இது.

கதை :


    சகோதர யுத்தம்தான் முக்கியகளம் . மகிழ்மதி என்ற நாட்டை ஆளும் ரானாவுக்கும் அதன் உண்மையான அரசனான ஆனால் குழந்தையிலேயே ஆதிவாசிகளிடம் வளரும் பிரபாஸ்க்கும் இடையில் நடப்பதுதான் கதை. இடையில் தமனாவின் காதல் , போர் என செல்கின்றது. முழுகதையும் யாராலும் சொல்ல முடியாது சொல்ல முடியாது  காரணம் படமே பாதிதான்.

+ பாயிண்ட்ஸ் :

பிரமாண்டம் , பிரமாண்டம், பிரமாண்டம். ஆரம்ப காட்சியில் வரும் அருவிகள் ஆகட்டும் இறுதியில் நடக்கும் போர்கால காட்சிகளாகட்டும் எதிலும் பிரமாண்டம்.

துணைநடிகர்கள் தேர்வு.


சத்தியராஜின்அசத்தலான நடிப்பு. கடப்பா என்ற பாத்திரத்தில் மனுஷன் பின்னிருகார். இரண்டாம் பாகத்தில் அவர் பாத்திரம் இன்னும் வலுவாக இருக்கும் போல. 

பெரிய நடிகர் என்றஈகோ இல்லாமல் சத்தியராஜ் தன தலையில் பிரபாஸ் காலை வைக்க ஒத்துகொண்டது. ஒரு அருமையான நடிகரை தமிழில் வீணடிக்கிறோம்.

ரம்யா கிருஷ்ணனின் அசத்தல் நடிப்பு. 

போர்களகாட்சியில் CG WORK செம. திரை முழுவதும் கூட்டம் , சண்டை , அனா கடைசி அரைமணி நேரம் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைத்துவிட்டனர்.

கண்களை கொஞ்சம் கூட அகலவிடாத ஆர்ட் டைரக்டரின் கடின உழைப்பு.

தெளிவான திரைகதை. சாதாரண கதையைஇப்படியு சொல்லலாம் என காட்டியது இயக்குனரின் திறமை.

அனுஷ்கா , மொத்தமே பத்து வார்த்தைதான் பேசியிருப்பார். ஆனால் அவர் பார்வை பல வார்த்தை பேசுகிறது. இரண்மாம் பாகத்தில் முக்கிய பாத்திரம் இவர்தான்.


- பாயிண்ட் .

வீரமான பெண் பாத்திரத்துக்கு குழந்தமுகம் தமணா பொருந்தவில்லை. 

பாடல்கள் சுமார்.

சில காட்சிகளில் கிராபிக்ஸ் துருத்திக்கொண்டு தெரிவது. ராணா மோதும் அந்தகாட்டுஎருமை .

மொத்தத்தில் :

அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான பொழுதுபோக்கு படம். பிரமாண்டம் என்னும் சொல்லுக்கு இனி இந்த படத்தை உதாரணமாக சொல்லலாம். ஆனால் முழுப்படத்தை பார்க்க ஆசைபடுபவர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும். படம் பாதிதான் ஓடும். மீதி 2016 இல் இரண்டாம் பாகமாக வரும்.


Friday, August 9, 2013

தலைவா : திரைவிமர்சனம்







இளைய தளபதி விஜய் , அமலாபால் மற்றும்காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் ,சத்தியராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் "தலைவா " இயக்குனர் தெய்வமகன் "விஜய் ". படத்தை வெளியிட்டு இருப்பவர் வேந்தன் மூவிஸ் .ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடனும் , விஜய்யின் அரசியல் நகர்வுக்கு அடித்தளம் அமைக்க போகும் படம் என்ற எதிர்பார்ப்பும் இணைந்து எல்லா தரப்பு மக்களும் எதிர்பார்த்த படம் எப்படி இருந்தது என பார்ப்போம் .

கதை :






ஆஸ்திரேலியவில் நடன குழு வைத்து நடத்துபவர் விஜய் . அவரின் நண்பர் சந்தானம் . அவரிடம் நடம கற்று கொள்ள வருபவர் அமலா பால் . இந்தியாவில் , மும்பையில் ஏழைகளின் பாதுகவலாரக , ஒரு டானாக வாழ்ந்துவருபவர் சத்தியராஜ் . சத்தியராஜின் மகன்தான் விஜய் .

சில சதிகரர்களால் சத்தியராஜ் கொல்லப்பட , அப்பாவின் வேண்டுகோளுக்கிணங்க (!!) அவரின் இடத்தில் இருந்து மக்களுக்கு எப்படி நல்லது செய்கிறார் , தனது அப்பாவை கொன்றவர்களை எப்படி பழி வாங்குகிறார் , அமலா பால் யார் ? கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதை தைரியம் இருந்தா வெள்ளி திரையில் காணுங்கள்



+ பாயிண்ட்ஸ் :







  1. விஜயின் நடனம் . வழக்கம போல விஜய் நடத்தில் கலக்கி உள்ளார் .
  2. சண்டைகாட்சிகள் அருமை
  3. ஒளிப்பதிவு அருமை . சண்டை காட்சிகளை நன்றாக படமாக்கி யுள்ளனர் .
  4. சந்தானத்தின் காமெடி .
  5. வாங்கன்னா , வணக்கமன்ன பாடல் .
  6. ரசிகர்களை விசிலடிக்க வைக்கும் சில வசனங்கள் .







- பாயிண்ட்ஸ் :








  1. அருதபழசான கதை .
  2. பல படங்களில் இருந்து உருவபட்ட காட்சிகள் .
  3. சந்தானத்தை முழுமையாக பயன்படுத்தாதது . கடந்த பல படங்களில் வெற்றிக்கு சந்தானமே முக்கியகாரணம் .
  4. இடைவேளைக்கு பின் இழுவையான கதை .
  5. நல்ல நடிகர் சத்தியராஜை வீணடித்தது .
  6. இது விஜய் அரசியலுக்கு அடிஎடுத்து வைக்க போகும் படம் என பில்டப் கொடுத்தது .





ஆகமொத்தத்தில் :







விஜய் ரசிகர்கள் விஜய்க்காக ஒரு முறை பார்க்கலாம் . இனி விஜய் SAC மற்றும் இயக்குனர் விஜய் பேச்சை கேட்காமல் ஒழுங்கா துப்பாக்கிபோல நல்ல படத்தில் நடித்தால் ரஜினி இடத்தை பிடிக்கலாம் .





ஆனந்தவிகடன் மார்க் : 42

குமுதம் ரேட்டிங்  : பார்க்கலாம்

ராஜபாட்டை  ரேட்டிங்  : 5 / 10




டிஸ்கி : வெளிநாட்டில் வசிக்கும் தீவிர விஜய் ரசிகர் (எனது நண்பர் ) சொன்னதன் அடிப்படையில் எழுதபட்டது .


இதையும் படிக்கலாமே :



தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?

Friday, July 19, 2013

மரியான் : விமர்சனம்








ஆஸ்கர் மூவிஸ் வழங்கும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படன் தான் மரியான் . நீண்ட இடைவெளிக்கு பின் ரகுமானும் , இயக்குனர் பரத் பாலாவும் இணைந்த படம் . வந்தே மாதரம் ஆல்பம் இயக்கிய பரத் பாலாதான் இயக்குனர் . பார்வதி மேனேன் கதாநாயகியாக நடித்துள்ளார் .

கதை :

ஒரு கடலோர கிராமத்தில் வசிக்கும் தனுஷ் , பார்வதி இவர்கள் காதலில் ஏற்படும் சிக்கல்களும் , அதற்காக தனுஷ் சூடான் நாட்டிற்கு வேலைக்கு செல்ல அங்கிருந்து மீண்டும் வரும் பொழுது சில தீவிரவாதிகளால் கடத்த படுகிறார் . அதன் பிறகு தனுஷ் தப்பித்தாரா , தனது காதலியை கரம் பிடித்தாரா என்பதுதான் கதை .


+ பாயின்ட் :

தனுஷின் நடிப்பு . வரவர அனைத்து படங்களிலும்  தனுஷின் நடிப்பு மெருகு ஏறி வருகிறது . இதில் அவரின் உடல் மொழி அருமை .

கதாநாயகி பார்வதியின் அழகான நடிப்பு .

இருவரின் காதல் எபிசொட் .

A.R. ரஹ்மான் இசை படத்திற்கு மிக பெரிய பலம் .

பின்னணி இசையில் கலக்கி உள்ளார் . கிராமத்தில் நடக்கும் ஒரு சண்டைகாட்சியில் பின்னணி இசை பிரமாதமாக இருக்கும் . அது போல கிளைமாக்ஸ் காட்சியில் பின்னணி இசையில் பின்னி எடுத்து இருக்கிறார் .

பாடல்கள் ஏற்கனவே ஹிட் . அதிலும் நெஞ்சே எழு பாடல் படமாக்கபட்ட விதம் அருமை .

ஒளிபதிவு கண்ணை உறுத்தாத வண்ணம் உள்ளது .


- பாயின்ட் :

ஆரம்பத்தில் வரும் தனுஷின் காதல் காட்சிகள் நீட்டி முழங்கபட்டு இருக்கு .

இருவர்குள்ளும் காதல் வருவது மிகவும் செயற்கையாக உள்ளது ( ரவுடியை அடிச்சா காதல் வரும்னு எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல .)

ஹிட் ஆன பாடல்கள் திரையில் சில சரியில்லை .

மீனவர் பிரச்சனை பற்றிய படம்னு பேப்பர்ல சொன்னாங்க ஆனால் அது பற்றி இதில் மூச்சு விட வில்லை .

தீவிரவாதிங்க என்னமோ லோக்கல் ரவுடி போல உள்ளனர் .

திவிரவாதிங்களிடம் மொத்தமே 3 அல்லது 4 ஜீப் தான் இருக்கு போல , பாவம் எதிர்கட்சி தீவிரவாதியோ ?

படத்தின் ஆரம்பம் மிக மெதுவாக உள்ளது .


ஆனந்த விகடன் மார்க் : 42

குமுதம் : பார்க்கலாம் 

ராஜபாட்டை மார்க் : 5/10

குறிப்பு : சிங்கம் 2  நன்றாக ஓடுவதால் மரியான் ஓடுவது கொஞ்சம் சிக்கல்தான் . ஆனாலும் படம் பார்க்கும் வகையில் தான் உள்ளது .


Wednesday, July 17, 2013

விஜய் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாமா ?





தமிழ் சினிமா உலகில் ரஜினி , கமலுக்கு பிறகு அதிக ரசிகர்களையும் , அதிக எதிர்பார்ப்பையும் , அதிக வசூலையும் கொண்ட நடிகர்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் தான் . விஜயின் கடந்த படம் துப்பாக்கி 100 கோடியை தாண்டி வசூல் செய்தததாக சொல்கின்றனர் . இந்நிலையில் அவரின் அடுத்த படம் தலைவா பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது .

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இயைமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இவர்களுடன், சத்யராஜ், சந்தானம், ராகினி நந்த்வானி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். படத்தின் வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

படபிடிப்பு முடிந்து சென்சார் சென்ற படத்தை பார்த்த குழுவினர் , படம் அருமையாக உள்ளது என்றும் , இது அனைவரும் குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் என்றும் சொல்லி " யூ " சான்றிதழ் வழங்கி உள்ளனர் . இதனால் பட குழுவினர் மிகவும் சந்தோஷமாக உள்ளனர் .


குறிப்பு : படம் ஆகஸ்டு 15  அன்று வெளியிடலாம் என எதிர்பார்க்க படுகிறது .


இதையும் படிக்கலாமே :


Thursday, August 2, 2012

விஜய் : TOP 5 படங்கள்




நடிகர் விஜய் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஐந்து படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . அவர் நடித்த பல படங்கள் நன்றாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் சில படங்களில் இந்த ஐந்தும் முக்கிய இடம் பிடிக்கும் .

1.  கில்லி




இதுவரை நான் பார்த்த விஜய் படங்களில் மிக வேகமாக , பரபரப்பாக இருந்த ஒரே படம் கில்லி தான் . அதுவும் திரிஷாவுடன் அவர் ஓடிவரும் போது பல லாரிகளில் வில்லன்களின் அடியாட்கள் வருவார்கள் அவர் அனைவரிடமும் இருந்து விஜய் தப்பிக்கும் காட்சி மிகவும் அருமையாக இருக்கும் . கடைசி வரை இந்த விறுவிறுப்பு குறையாமல் தரணி காட்சிகளை அமைத்து இருப்பார் .



2. காதலுக்கு மரியாதை

நான் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் பார்த்தது . அப்போது கல்லுரி மாணவ மாணவிகளுக்கு மிகவும் பிடித்த படம் இது . விஜய்யின் இமேஜை மாற்றிய படம் இது என்றால் அது மிகை ஆகாது . படத்தில் இறுதி காட்சிகளில் இளையராஜாவின் பின்னணி இசை அருமையாக இருக்கும் . படத்தில் பாடல்களும் , காமெடியும் அதன் வெற்றிக்கு மிக உதவியது .


3. பூவே உனக்காக ..


குடும்ப பெண்களுக்கு விஜய் மிகவும் பிடிக்க காரணமாக இருந்த படம் இது . அதுவரை குத்து பாட்டு , சண்டை , சங்கவி என இருந்த விஜய் இந்த படத்தில் முற்றிலும் வேறு மாதிரியாக நடித்து இருப்பார் . விக்கிரமனின் வசனங்களும் , ராஜ்குமாரின் பாடல்களும் படத்திற்கு பக்க பலமாக இருந்தது . கடைசி காட்சியில் விஜய் பேசும் வசனங்கள் அருமையாக இருக்கும் .

4. துள்ளாத மனமும் துள்ளும்


இயக்குனர் எழில் அறிமுகமான படம் இது . " இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு ..." என்ற பாடல் மிக பிரபலம் . விஜயின் அமைதியான நடிப்பும் , பாடல்களும் பெரிதும் பேச பட்டது . அதுவும் தனது அம்மா இறந்த செய்தி கேட்டு விஜய் பாத்ரூமில் அழும் காட்சி அவரது நடிப்பு திறமைக்கு சான்று . தான் நல்லவன் என சிம்ரனிடம் நிருபிக்க விஜய் எடுக்கும் முயற்சிகள் அருமையாக திரைக்கதையில் பின்ன பட்டு இருக்கும் .

5.  நண்பன்
விஜய் முற்றிலும் மாறுபட்டு , குத்து பாட்டு , ஹீரோ இன்ட்ரோ பாட்டு , பஞ்ச டயலாக்ஸ் என எதுவும் இல்லாமல் வந்த படம் . இதுவரை மற்றவர்களை அடித்து பழக்கபட்ட விஜய் இந்த படத்தில் ஏறக்குறைய அனைத்து கதாபாத்திரங்களிடமும் அடி வாங்கி விடுவார் . ஆனாலும் அலுக்காத , அலட்டாத அவரது நடிப்பு படத்திற்கு மிக பெரிய பலம் . ரீமேக் படமாக இருந்தாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பால் புது வடிவம் கொடுத்து இருப்பார் விஜய் .


டிஸ்கி : இது எனக்கு பிடித்த வகையில் வரிசை படுத்தி உள்ளேன் . இது தவிர வேறு படங்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் பின்னுடத்தில் சொல்லுங்கள்

Wednesday, July 25, 2012

சினிமா ........சினிமா ....


 
தன் கேரியரையே புரட்டிப் போட்ட படம் என்று கமல்ஹாசன் சொன்ன அபூர்வ சகோதரர்கள் படத்தில் - அவருக்கு அம்மாவாக முதலில் நடித்தது காந்திமதிதான். அவருடன் ஒரு பாடல் காட்சியே ஷூட் செய்த பிறகு திரைக்கதையை மாற்றிய கமல், காந்திமதிக்கு பதில் மனோரமாவை அம்மாவாக மாற்றினார்.

கமல்
இதற்காக காந்திமதியிடம் பகிரங்கமாய் மன்னிப்பு கேட்டார். ஆனால் காந்திமதி இதற்கெல்லாம் வருத்தப்படவில்லை. அவர் இறக்கும் வரை, கமல் தன்னுடைய மகன் போல என்றே சொல்லி வந்தார். எல்லா சினிமா பிரமுகர்களிடமும் அன்பாய் நேசிக்கும் வெகுளி மனசு அவருக்கு என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்
 
"வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படம் வெளியாகும் வரை, நாடகமாக மட்டும் 100 முறை மிகமிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திரைப்படம் வெளிவந்து ஓடிமுடிந்தபின்பும் ஒரு 12 முறை நடத்தப்பட்டது.

இந்த
112 முறையில், இந்நாடகத்தின் அபார வசூல் மூலம் நடிகர் திலகம் பல்வேறு ஸ்தாபனங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் பல்வேறு நற்செயல்களுக்கும் அள்ளி அளித்துள்ள நன்கொடை மட்டும் ரூபாய் முப்பத்து இரண்டு லட்சம். இத்தொகை இன்றைய பொருளாதார மதிப்பீட்டில் பற்பல கோடிகளுக்குச் சமம்.

வீர
பாண்டிய கட்ட பொம்மன் நாடகத்தில் வீர வசனம் பேசும் நடிகர் திலகத்தின் புகைப்படம் உங்களுக்காக மேலே .


"முத்த காட்சிகளை அனுமதிப்பதா வேண்டாமா என்று தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்று நடிகர் திலகத்திடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது 1967 வருடம்.

அதற்க்கு
"முத்தம் கொடுப்பதை காட்டவே கூடாது. ஆனா நாம முத்தம் கொடுத்துகிட்டதா ஜனங்க நினைக்கணும். அந்த மாதிரிதான் நடிக்கணும். மூடி காட்டுவதுதான் கலை. பச்சையா, உள்ளதை அப்படியே காட்டினா அது கலை ஆகாது. அதனால முத்த்ம் கொடுப்பதை எல்லாம் திரையிலே காட்ட கூடாது என்பதுதான் என் தாழ்மையான வேண்டுகோள்" என்று பதில் அளித்திருக்கிறார் நடிகர் திலகம்.

இந்த
கேள்வியை கேட்டவர் யார் தெரியுமா ???? நம்முடைய இப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. 1967-ம் வருட பொம்மை ஆண்டு மலர் பேட்டியில் "பொம்மை" முதலாம் ஆண்டு மலரில் 'நக்ஷத்திரம் கண்ட நக்ஷத்திரம்' என்கிற புதுப் பகுதிக்காக இந்த சிறப்பு நேர்காணல் நடத்த பட்டுள்ளது.


"ஒரு கைதியின் டைரி " படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிக்க "ஆக்ரி ராஸ்தா" என்கிற பெயரில் எடுக்கப்பட்டது. அதன் இயக்குனர் பாக்யராஜ். அப்போது ஒரு காட்சியில், ஒரு முழு நீள வசனத்தை ஆங்கிலத்தில் பேசுமாறு அமிதாபிடம் சொல்லி இருக்கிறார் பாக்யராஜ். ஆனால் அதற்க்கு கடும் மறுப்பு தெரிவித்த அமிதாப், ஆங்கிலத்தில் பேசி நடித்தால் ஹிந்தி ரசிகர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும் சொல்லி விட்டாராம். இதையடுத்து இருவருக்குமிடயே ஒரு நீண்ட விவாதம் நடந்து , இறுதியில் பாக்யராஜ் சொல்படி ஆங்கிலம் பேசி நடித்துள்ளார் அமிதாப்.

படம்
வெளியாகி அந்த குறிப்பிட்ட காட்சிக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்க, அதிகாலை இரண்டு மணிக்கு பாக்யராஜுக்கு போன் செய்து பாராட்டியிருக்கிறார் அமிதாப். தன்னுடைய படங்களில் இரண்டு வரி கூட ஆங்கிலம் பேசி இராத அமிதாப், ஒரு நீண்ட காட்சியில் ஆங்கிலம் பேசியது உங்களால் மட்டுமே என்று பாக்யராஜை பாராட்டி இருக்கிறார்கள் ஹிந்தி திரையுலகின் பிரபல வசனகர்த்தாக்கள் சலீம் , ஜாவீத் இருவரும்.

ஒரு
இயக்குனராக தான் நினைப்பதை கொண்டு வர வேண்டும் என்பதில் எத்தனை பிடிவாதம் தனக்கு உண்டு என்பதை ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறியுள்ள பாக்யராஜ், இந்த சம்பவத்தையும் தெரிவித்துள்ளார்.

நன்ன கண்ட எல்லி (என் கணவன் எங்கே) என்ற கன்னடப் படத்தில் ஒரே பாடலில் 14 மொழிகளில் பாடியிருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி.


தகவல் உதவி : Facebook Group   

Tuesday, May 8, 2012

அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 1




சில மாதங்களுக்கு முன் வெளிவந்து அனைவரின் பாராட்டை பெற்று இன்னும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முதல் 3D படம் அம்புலி. அந்த திரைபடத்தின் வெற்றி இயக்குனர் , வருங்கால திரையுலகின் நம்பிக்கை நடசதிரம் ஹரிஷ் நாராயண் அவர்கள் நமது வலைதளத்திற்கு ஒரு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். இவர் ஒரு பதிவர் என்பது கூடுதல் சிறப்பு .

அம்புலி 3 D   படத்தின் இயக்குனர் ஹரிஷ் நாராயண் அவர்களின் சிறப்பு பேட்டி :

வலைபதிவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பேட்டி தந்த அவர்களின் நல்ல மனதை தமிழ் பதிவர்கள் சார்பாக பாராட்டி வணங்குகின்றேன் .


1 . உங்களை பற்றி ஒரு சிறு அறிமுகம் ?

நான் ஹரீஷ் நாராயண், சென்னை புறநகர் பகுதியான திருநின்றவூரில் அப்பா, அம்மா மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறேன்... என் பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை... உடன்பிறந்தாரில்லை... ஆனால் உடன்பிறவா சகோதர சகோதரிகள் பலருண்டு... படிப்பு : M.Sc.I.T. 2008 வரை I.T. துறையில் வேலை செய்து வந்தேன். குறும்படம்,  தொலைக்காட்சிக்காக ரியாலிட்டி ஷோ, ஃபிக்ஷன் கதைகள் என்று எடுத்துக் கொண்டிருந்தேன். தக்க சமயத்தில் எனது ஆதர்ச இயக்குனர் 'மர்மதேசம்' புகழ் திரு.நாகா அவர்கள் வார்தைக்கு கட்டுப்பட்டு வேலைத்துறந்து சினிமாத் துறவியானேன்.

2. சினிமா துறையில் நீங்கள் நுழைய காரணமானவர் யார் ?
எனது குருவும் நலன்விரும்பியும் நண்பருமான இயக்குனர் திரு. கிருஷ்ண சேகர் (என்னுடன் சேர்ந்து 'ஓர் இரவு' படத்தை இயக்கியவர்) என்பவரின் வழிநடத்துதலில் சினிமாத்துறை எனக்கு சாத்தியப்பட்டது. அவரது சினிமா நண்பர்களையும் நுணுக்கங்களையும் எனக்கு சொல்லித் தந்து தக்க சமயத்தில் தக்க மனிதர்களின் அறிமுகங்களையும் எனக்களித்து என்னை சினிமாத்துறைக்குள் நுழைய செய்தவர் இவர்தான். எனது முதல் குறும்படமான 'ராமன் எஃபெக்ட்' எடுக்க கையும், ஊக்கமும், ஆலோசனைகளையும், இடமும் அளித்தவர். 

3 . காதல் கதை , கிராம கதை என அனைவரும் பயணிக்கும் திசையில் செல்லாமல் வித்தியாசமான கதையுடன் படமெடுக்கும் துணிச்சல் எப்படி வந்தது ?
நானும் அதையே எடுத்து என் கதை எனது தனித்தன்மையின்றி போய்விடுமோ என்ற பயம்தான் வித்தியாசமான களம் கொண்ட கதைகளை எடுக்க துணிச்சலைக் கொடுத்தது.


4. திரை துறையில் உங்களால் மறக்கமுடியாத நபர் யார் ?
என் முயற்சிகளிலெல்லாம் கூட இருந்து, அம்புலியில் ஹுரோவாக (அமுதனாக) நடித்து இன்று அமரர் ஆகிவிட்ட எனது ஆருயிர் நண்பர் 'அஜய்'-ஐ என்னால் நிச்சயம் மறக்க முடியாது. அவருடன் சேர்ந்து பயணப்பட வேண்டிய இந்த கலைப்பாதையில் அவரில்லாத பயணம் வருத்தமே... இருப்பினும் நானும் என் குழுவினரும் என்றுமே அவரை மனதளவில் சுமப்போம்... சுகமான நினைவுகளுடன்... RIP அஜய்...

5. இந்த படத்தின் கதையை முதலில் சொன்ன போது தயாரிப்பாளர்களின் ரீ- ஆக்ஷன் எப்படி இருந்தது ?
கேட்பவருக்கு பிடிக்கு விதத்தில் நேர்த்தியாக கதை சொல்லும் வித்தையை...  என்னிடம் பலமுறை மாட்டிக்கொண்டு கதை கேட்டு முழித்த நண்பர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எனவே, ரியாக்ஷன் நான் எதிர்ப்பார்த்ததுபோல்தான் இருந்தது. ஆனால், நான் சிறுவயது முதல் சினிமாத்துறை பற்றி கேள்விப்பட்டதுபோல், 'கதை சூப்பர்... பிடி அட்வான்ஸ் செக்-ஐ' என்று எடுத்துக் கொடுத்துவிடவில்லை... ஆர அமர யோசித்து... சில நாட்களுக்கு பிறகே அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் அவருக்கு கதையும் என் குழுவின் தொழில் பக்தியும் நிச்சயம் பிடித்துப்போயிருந்தது தெரிந்தது... எனவே, படம் ஆரம்பிக்கும் முன்னமே குடும்ப சுப நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைத்தார், தனது முக்கிய நண்பர்களிடம் அறிமுகம் செய்துவைத்தார், இந்த அவகாசத்தில்... நானும் எனது நண்பர் ஹரியும் அவரை மேலும் நன்றாக புரிந்துக் கொண்டோம்... அவர் மீதிருந்த மரியாதை மேலும் கூடியது.
6. ஏன்டா இந்த திரை துறைக்கு வந்தோம் என என்றாவது எண்ணியதுண்டா ?  
      
                                         சரவணன் – ரோட்டரி கிளப் பள்ளி
'ஏன்தான் இந்த துறைக்கு இவ்வளவு லேட்டாக வந்தோமோ..' என்று எண்ணியதுண்டு...


7. இந்த படத்திற்கு உங்களுக்கு கிடைத்த பெரிய பாராட்டாக எதை நினைக்கின்றிர்கள் ?
-          ஜெயபிரகாஷ் - ரோட்டரி கிளப் பள்ளி
 சென்னை பெரம்பூரை சேர்ந்த 'ஆர்த்தி' என்ற 10 வயது சிறுமி 'அம்புலி' படத்தை பார்த்துவிட்டு மிகவும் பிடித்துப் போய்...  'அம்புலி ஆர்த்தி' என்று தனது பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அடம்பிடித்ததாக அக்குழந்தையின் அப்பா எப்படியோ என் நம்பரை தேடிப்பிடித்து எனக்கு ஃபோன் செய்து திட்டினார். அதுவே எனக்கு கிடைத்த பெரியா பாராட்டாக நினைக்கிறேன்.
8. ஒரு பழைய படத்தை ரீ- மேக் பண்ணலாம் என்றால் எந்த படத்தை பன்னுவிர்கள் ?
- சுப்பையா – அன்னம் புக் ஸ்டோர் , மேலையூர்
திரு.எம்.ஜி.ஆர். நடித்த 'விக்கிரமாதித்தன்' என்ற கற்பனை கலந்த வரலாற்றுப் புனைவுப் படம் ... இப்படத்தை இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் உச்சகட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளுடன்... ரீமேக் செய்ய எனக்கு ரொம்ப ஆசை... அருமையான ஸ்க்ரீன்ப்ளேவுடன் கூடிய வித்தியாசமான கதைக்களன் கொண்ட படம் அது.
டிஸ்கி : விரைவில்  அடுத்த பாகம்


இதையும் படிக்கலாமே :