> என் ராஜபாட்டை : May 2009

.....

.

Saturday, May 30, 2009

ஹீ ... ஹீ ... ( அட ஜோக் பா ....)

வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன். எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!

-------------------

ராம்: நான் கலெக்டர் ஆகணும்!

சீதா: நான் டாக்டர் ஆவேன்!

ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!

கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!

----------- என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!

------------------

உனக்கென இருப்பேன்... உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்... குவார்ட்டர் உட்டுட்டு குப்புறப் படுப்பேன்!

----------------

ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே? நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன். அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்... டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும் இவன் அடிக்கவே மாட்றான். இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்!

---------------

ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்

நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்

பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.

சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.

ஆனா... இதெல்லாம் தேவையே இல்லை.

நான் எதையுமே பிச்சை எடுத்துதான் சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே! ============================

என்ன மாமூ... புதுசுபுதுசா தினுசுதினுசா இவ்வளவு பர்ஸ்-வெச்சிருக்கே. ஒருவேளை கண்டதும் சுட உத்தரவு-னு பேப்பர்ல போட்டிருந்த செய்தியை நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!

=======================

நேத்து நான் சச்சின் டெண்டுல்கர்கிட்ட போன்ல பேசினேன்.

சூப்பர்! என்ன சொன்னார்?

ஸாரி, ராங் நம்பர்ன்னார்!

===================================================

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

எங்கோ... தூரத்தில்

ஒரு சொட்டு மழை வீழ்ந்தவுடன்

பரவி வருகிறதே.. மணம்...

அது போலத்தான் உன் நினைவும்

நினைக்கும்போதே நெஞ்சில் பரவும்

ஆயிரம் பேர் கூடி நின்றாலும்

அரை நொடியில் உனை அறிவேன்

அலுவலகப் பணிமுடிந்து

பின்னிரவில் என் வீடு கடந்துபோகும்

உன் வாகனச் சத்தம்கேட்க...

ராட்சசியாய் விழித்திருப்பேன்

தடதடவென்ற வண்டியின்சத்தத்தோடு

என் இதயமும்போட்டி போடும்,

நீ கடந்து போகும்ஒரு நொடிக்காக..

காத்திருப்பேன்ஒரு நாள் முழுக்க...

இதோ..

உன் வண்டிச் சத்தம்..

அழைப்பு மணியின் அலறல்..

தூக்கக் கலக்கத்தில் சோர்வோடு..

கதவு திறக்கிறேன்..

நாம் காதலித்துக் கொண்டே இருந்திருக்கலாம்

என் காதல் கணவனே..

நன்றி :எஸ்.விஜயா செல்வராஜ்

Tuesday, May 19, 2009

IPLலில் மொள்ளமாரித்தனம்

நான் கிரிக்கெட்டே பாக்குறது இல்லைங்க. எனக்கு புடிக்காது. ஏன்னா எனக்குப் புரியாது. இப்போ சியர் கேர்ல்ஸ் வர்றதுனாலயும், ஷாருக்கான் ஏதோ காமெடி பண்றாருனு முரளிகண்ணன் சொல்றதாலயும், ப்ரீத்தி ஜிந்தா எல்லாருக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்றாங்கனு கேள்விப்பட்டதாலயும் ஒரே ஒரு நாள் பாத்தேன்.

எது இண்டியன் டீம், எது அமெரிக்கன் டீம்னு கூட எனக்கு கண்டுபுடிக்க தெரியல. நான் பரவாயில்ல.. என் கூட குப்ப கொட்டுற பிரகஸ்பதிங்களுக்கு எது ஸ்டெம்ப், எது பேட்னு கூட தெரியல. ஆனாலும் நாங்க கண்டுபுடிச்ச சில உண்மைகளை உங்க முன்னால போட்டு உடைக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன்.

மொள்ளமாரித்தனங்கள்:

1) கைல ball வச்சுகிட்டே No ballனு சொல்றாங்க

2) Overனு சொல்லிட்டு ஓவர் மேல ஓவரா போட்டுகிட்டே இருக்காங்க

3) All outனு சொன்னாங்க. ஆனா பத்து பேரு தான் அவுட் ஆனாங்க.

4) ஒரு ஓவருக்கு ஆறு பந்துனு சொன்னாங்க. ஆனா ஒரே பந்தை தான் வச்சிருந்தாங்க. (ஸ்பான்ஸர்ஸ் கவனிக்க)

5) ஒரு பேட்ஸ் மேன் அவுட்னா அம்பயர் ஒரு கையைத் தூக்குறாங்க. அப்போ ரெண்டு கையை தூக்கினா ரெண்டு பேட்ஸ் மேனும் அவுட் தான? ஆனா சிக்ஸ்னு சொல்றாங்க.உங்களுக்கும் எங்களைப் போல ரத்தமெல்லாம் கொதிக்குதா?

நானும் என்னோட நண்பர்களும் ரெண்டு அங்குல நீளத்துல ஒரு பேட் வாங்கி வச்சிருக்கோம். அதுல எங்க ஊர் நாட்டாமை உட்பட எல்லாரும் கையெழுத்து போட்டு வச்சிருக்கோம்.

நீங்களும் இந்த வேள்வியில் பங்கெடுக்க விரும்பினா வந்து கையெழுத்து போடலாம். மேலையூர் வரைக்கும் வரமுடியாதேனு வருத்தப்படுறவங்க, பின்னூட்டத்துல உங்க பேரை வடை அல்லது அடைமொழியோட சொல்லிட்டு போங்க. உங்க கையெழுத்தை நானே போட்டுடுறேன்.

Saturday, May 16, 2009

Sunday, May 10, 2009

சிரிக்க மட்டும்

சிரிக்க மட்டும்

விஜய் தன் மகனிடம்: தம்பி! நீ ஒழுங்கா சாப்பிட்டா, உன்னை வில்லு படத்துக்குக் கூட்டிட்டு போவேன்.

மனைவி சங்கீதா: பெத்த புள்ளைய கொல்லப் பாக்குறியே! நீயெல்லாம் ஒரு மனுஷனா?

விஜய் ரசிகர்கள்(என்று யாராவது இருந்தால்) தயவுசெய்து கோபித்துக் கொள்ளாமல், முறையே அஜித், மகள், ஏகன், ஷாலினி என்று எடிட் செய்து படித்துக் கொள்ளவும்.