> என் ராஜபாட்டை : June 2011

.....

.

Wednesday, June 29, 2011

பேஸ்புக் பற்றிய யதார்த்தமான உண்மைகள்

1111111111
இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆய்வுத் தகவல் ஒன்றில் 47 வீதமான பேஸ்புக் பாவனையாளர்கள் தமது பேஸ்புக் பக்கங்களில் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆல்கஹால் பற்றிப் பேசும் இளங்கலைப் பட்டதாரி மாணவர்களுக்கு அதிக நண்பர்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுகள் ஒன்லைனில் நம்முடைய நடத்தையில் உள்ள புதினங்களையே காட்டுகிறது.
கிட்டத்தட்ட 600 மில்லியன் பேர் பேஸ்புக் பாவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆய்வுகள் எமது கலாசாரங்கள், மதிப்புகள், நன்னடத்தைகள், மாறும் உறவுமுறைகள் போன்றவை குறித்த ஆழ்ந்த புரிந்துணர்வை வழங்குகிறது.
என்னை இன்னும் நீங்கள் நம்பவில்லையா? கீழே தரப்பட்டுள்ள விடயங்களை வாசித்துப் பாருங்கள்.
1.பேஸ்புக்கில் தம்முடைய முதலாளியுடன் நட்புக்கொள்வதை 56% அமெரிக்கர்கள் பொறுப்பற்றதனம் என நினைக்கின்றனர்
2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, பெரும்பாலான அமெரிக்கர்கள் தம்முடைய முதலாளிமாருடன் பேஸ்புக்கில் நட்பு வைத்திருப்பதை சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கிறது.
இதேவேளை 62 வீதமானோர் ஒரு மேலாளர் தனது பணியாளருடன் பேஸ்புக்கில் நட்பு வைத்திருப்பதை தவறு என்றுள்ளனர். அதேவேளை 76 வீதமானோர் தம்முடைய வயதை ஒத்தவர்களுடன் நட்புக்கொள்வதைப் பரிந்துரைத்துள்ளனர்.
2.பேஸ்புக் தொடர்பு சுட்டிகளில் (links) 90 வீதமானவை பாலியல் தொடர்பானவை
2010ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் மே மாதம் வரையில் சமூக ஊடக விஞ்ஞானி டேன் ஷெரெல்லா மேற்கொண்ட ஆய்வில் 12,000 பேஸ்புக் தொடர்பு சுட்டிகள் செய்தித் தளங்கள் மற்றும் ப்ளொக்களிலிருந்து பகிரப்பட்டவை என தெரியவந்தது. இதில் ஏனைய விடயங்களை விட 90 வீதமானவை பாலியல் பற்றிய விடயங்களாகவே இருந்தன.
அதேவேளை, பேஸ்புக்கில் பகிரப்பட்ட விடயங்கள் எதிர்மறை எண்ணங்களைவிட நேர்மறை எண்ணங்களையே அதிகம் வெளிப்படுத்துவனவாக அமைந்திருந்தமையும் கண்டறியப்பட்டது.
3.தனி நபர்களை விட பேஸ்புக்கில் உறவுகளைக் கொண்டிருப்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள்
2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொண்டாடப்பட்ட காதலர் தினத்தன்று பாவனையாளர்களின் பேஸ்புக் பதிவுகளைக் கொண்டு உறவுமுறைகளை மையப்படுத்தி நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவின் படி உறவில் இருப்பவர்கள் தனியாக இருப்பவர்களை விட சற்று அதிகமாக மகிழ்ச்சியாக உள்ளார்கள். விகிதாசாரப்படி தனியாக இருப்பவர்களை விட திருமணமானவர்கள் மற்றும் திருமண ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பவர்கள் சற்று அதிகமாகவே மகிழ்ச்சியாக உள்ளார்கள். அதோடு வெளிப்படையான உறவில் இருப்பவர்கள் தனி நபர்களை விட குறைவான மகிழ்ச்சியுடனே உள்ளார்கள்.
4. பேஸ்புக் வழியாக 21 வீதமானோர் உறவு முறிவுகளைப் பெற்றுள்ளார்கள்
1000 பேரில் (70% ஆண்கள்) மேற்கொள்ளப்பட்ட 2010ஆம் ஆண்டு ஆய்வில் 25 வீதமானவர்கள் பேஸ்புக் வழியாக உறவு முறிவுகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டது. இதில் 21 வீதமானவர்கள் பேஸ்புக்கில் தாம் தனி நபர் (Single) என உறவு முறைப் பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தி தமது உறவுமுறையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இதில் ஆண்களே அதிகமானவர்கள். இருந்தாலும் பெரும்பாலானவர்கள் பேஸ்புக் வழியாக முறிவுகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை என தெரியவந்துள்ளது.
5.85 வீதமான பெண்கள் தமது பேஸ்புக் நண்பர்களால் தொந்தரவு செய்யப்பட்டுள்ளார்கள்
பேஸ்புக்கில் உள்ள பெண்களை அவர்களது நண்பர்கள் சிலவேளைகளில் தொல்லை செய்வதுண்டு. மார்ச் மாதம் இடம்பெற்ற ஆய்வில் 85 வீதமான பெண்கள் அவ்வாறான அனுபவத்தைப் பெற்றுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
6.25 வீதமான குடும்பத்தவர்களுக்கு பேஸ்புக் தரவுகளை இரகசியமாகப் பாதுகாக்க முடியும் என்பது தெரியாது
2010ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நான்கில் ஒரு விகிதமான குடும்பத்தவர்களுக்கு பேஸ்புக் கணக்கினை தாம் விரும்பிய படி பாதுகாப்புக் கட்டளைகளைப் பயன்படுத்திப் பாதுகாக்க முடியும் என்ற விடயம் தெரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதில் குழந்தைகளைக் கொண்டுள்ள குடும்பத்தவர்களில் 26 வீதமானவர்கள் தம்முடைய குழந்தைகளின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை அவை பிரச்சினைகளுக்கு உட்படுத்தப்படும் என்பதை அறியாமல் பேஸ்புக்கில் வெளிப்படுத்தியுள்ளனர்.
தனிப்பட்ட கணக்குக் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தி 74 வீதமானவர்கள் அவ்வாறான தவறுகளை மேற்கொள்வதில்லை எனவும் தெரியவந்துள்ளது.
7.48 வீதமான பெற்றோர்கள் தமது குழந்தைகளுடன் பேஸ்புக்கில் நண்பர்களாகியுள்ளனர்
உங்கள் பிள்ளைகளுடன் பேஸ்புக்கில் நண்பர்களாக இணைந்திருப்பது சரியானதா இல்லையா என்ற கேள்விக்கு 48 வீதமானவர்கள் சரியானது தான் என பதிலளித்துள்ளார்கள்.
அதேவேளை பேஸ்புக் அல்லது மைஸ்பேஸ் பாவனையை குழந்தைகள் எந்த வயதில் ஆரம்பிக்கலாம் என்ற கேள்விக்கு 26 வீதமான பெற்றோர்கள் 18 வயதிற்குப் பிறகு எனவும் 36 வீதமானவர்கள் 16 முதல் 18 வயது வரையில் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 30 வீதமானவர்கள் 13 முதல் 15 வயது வரை எனவும் 8 வீதமானவர்கள் 13 வயதிற்குக் கீழ் எனவும் தமது கருத்துக்களை பதிந்தள்ளனர்.
8.47 வீதமானவர்கள் கெட்டவார்த்தைகளை தமது பேஸ்புக் பக்கத்தில் பாவித்துள்ளார்கள்
இது முன்னரே உங்களுக்குத் தெரியப்படுத்திய விடயம் தான். இவ்வாறான வார்த்தைகள் பாவனையை பேஸ்புக் பாவனையாளர்களில் பாதிப்பேர் சௌகரியமானதாகவே கருதுகின்றனர். அவ்வாறு அதிகம் பாவிக்கப்பட்ட கெட்ட வார்த்தை எது என தெரியுமா? அதிகம் யோசிக்காதீர்கள் F இல் தொடங்கும் அந்த வார்த்தை தான்.
9.48 வீதமானவர்கள் தமது முன்னாள் காதலர்களின் ப்ரபைல்களை அதிகம் பார்வையிடுகின்றனர்
இதனால் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய தொழில்நுட்பங்கள் அதிக உணர்ச்சிகளைத் தூண்டுவனவாக இருந்தாலும் நம்மில் பெரும்பாலானவர்கள் அவ்வாறான நடத்தைகளைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவே உள்ளனர்.
10.35 வயதிற்கு கீழ்பட்ட 36 வீதமானவர்கள் பாலுறவிற்குப் பின்னர் சமூக வலைத்தளங்களைப் பாவிக்கின்றனர்
2009ஆம் ஆண்டு ஆய்வொன்று சமூக வலைத்தளங்கள் இளம் வயதினர் வாழ்வில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது என பரிந்துரைக்கிறது. 35 வயதிற்குக் கீழ்ப்பட்ட 36 வீதமானவர்கள் பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைப் பார்வையிடுகின்றனர்.

Thanks: vanakamnet

Tuesday, June 28, 2011

நடிகர் விக்ரம் மேல கேஸ் போடபோறேன்.





சிரிக்காதிங்க.. சீரியஸாதான் சொல்லுரேன். அவர் மிக பெரிய நடிகரா இருக்கலாம். உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்களாம், அதுக்காக அவர் இப்படி செய்யலாமா?


மூனு படம் எடுத்தாலும் நல்ல படமா எடுத்த சுசிந்தரன் கூட சேர்ந்து இப்படி பன்னுவார்னு நான் எதிர்பார்க்கவில்லை.

அப்படி என்ன பண்ணிடார்னு கேட்கின்றிற்களா? என்னிடம்
ஒரு வார்த்தை கூட கேட்காமல் தனது அடுத்த படத்திற்க்கு “ராஜபாட்டை” என எனது BLOG பெயரை வைத்துள்ளார்.

என்னிடன் கேட்டால் தராமலா போய்விடுவேன்(குடுத்து..குடுத்து சிவந்த கரங்கள் என்னுடையது). கோடிகனக்கான FOLLOWERS, லட்சகனக்கான HITS உடன் உலகம் முழுவதும் பார்க்கபடும் வலைதளம் எனது.(சீ..இதுலாம் ஒரு பொழப்புனு கருனும், சி.பியும் திட்டுரது என் காதுல விழவில்லை)


சரி , எதோ நடந்தது நடந்துபோச்சு( நடக்காதது பறந்து போச்சா?) என் வலை பெயரை வைதுள்ளிற்கள் உங்கள் படம் வெள்ளி விழாகான வாழ்துக்கள்.

டிஸ்கி : “என் ராஜபாட்டை “ என்ற பெயர் நடிகர் சிவகுமார் எழுதிய அவரின் சுயசரிதையின் தலைப்பு என கண்டுபிடிக்காத அணைவருக்கும் என் நன்றி.



Sunday, June 26, 2011

பள்ளிமுன் போராட்டம் நடத்துபவர்களுக்கு சில கேள்விகள்?




இப்பொழுது பல இடங்களில் அதிகம் கட்டணம் வசூலிக்க படுவதாக கூறி பல பள்ளிகள் முன் போராட்டங்கள் நடத்தபடுகின்றது. அப்படி நடத்துபவர்களிடம் சில கேள்விகள்.

(இது என் மனதில் தோன்றியவை.. சரியா தவறா என சொல்லவும், விவாதிப்போம் ஆனால் சண்டை போடவேண்டாம்)

  1. ஒரு ஹோட்டலில் 2 ரூபாய்க்கு இட்டிலி போடுகிறான், அதே இட்லி கொஞ்சம் பெரிய ஹோட்டலில் 5 ரூபாய், அதுவே 5 நட்சதிர ஹோட்டலில் 15 ரூபாய். இட்லி ஒன்றுதான் அதை சாப்பிடும் இடமும், கூட வைக்கும் side dish, அங்கு உள்ள சுத்தமும் தான் விலையை நிர்ணயம் செய்கிறது. அது போல தான் பள்ளியும், காலை முதல் மாலை வரை நல்ல கல்வி வேண்டும், கணினி, பொது அறிவு என அனைத்திலும் அவனை வளர செய்யவேண்டும், புதுசா வர எல்லா டெக்னாலஜியிலும் அவனுக்கு நடத்த வேண்டும் அப்ப கட்டணமும் அதிகமாகதான் இருக்கும்.

அரசு சொல்லாமலே புது டெக்னாலஜியில் பாடம்(E-Learning, projectors) பாடம் நடத்தும் போது எதிர்காத நீங்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வாங்க சொல்லுவது நியாயமா?

  1. கல்வி ஒரு சேவை அதை சம்பாதிக்க பயன்படுத்தாதிர்கள் என கூறுகின்றனர் ஒரு சாரார். சரி உங்கள் பிள்ளைகளை B.A தமிழ் படிக்கவைத்து தமிழ்க்கு சேவை செய்ய வைப்பிற்களா? அல்லது B.E or M.B.B.S படிக்கவைத்து நல்ல வருமானம் வரும் வேலைக்கு அனுப்புவிற்களா? உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

  1. பிள்ளைகளை அதிக கட்டணம் உள்ள பள்ளியில் சேர்த்துவிட்டு பின்பு போராட்டம்  நடத்துவதைவிட அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு அங்கு நல்ல கல்விதர வேண்டும் என கோரிக்கை விடுக்கலாமே.

  1. காலை 7 மணி முதல் மாலை 6 அல்லது 7 மணிவரை வகுப்பு எடுத்து உங்கள் பிள்ளை நல்ல மதிப்பென் பெற உங்களைவிட அதிகம் பாடுபடும் ஆசிரியருக்கு 2000 , 3000 சம்பளம் குடுத்தால் அவர்கள் எப்படி ஆர்வமுடன் வேலை பார்பார்கள்.(ஆசிரியர் தொழிலும் சேவைதான் என ஆரம்பிக்காதிர்கள், அதுக்கு 2 வது பாயிண்ட்தான் பதில்)

  1. பள்ளி கட்டணம் 8000 கட்டிவிட்டு , டியூஷனுக்கு 15,000 கட்டிவிட்டு மானவனை இரு இடங்களில் அலையவிடுவதைவிட இது நல்லது என நினைக்குறேன்.

  1. (MAXIMUM)எந்த அரசு அதிகாரிகளும் தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்கவைபதில்லை ஏன்?( கலெக்டர் ஒருவரை காட்டாதிர்கள் அவர் விதிவிலக்கு) இதை வைத்து ஒருவரும் போராட்டம் நடத்துவதிலையே ஏன்?

  1. புதுபடம் போடுற தியட்டருல டிக்கெட் பலமடங்கு அதிகம் வச்சு விக்கிறான், அதை கண்டுகாம செலவு பன்னி படம் பார்போம், பிள்ளை எதிகாலத்தை நிர்னயிக்கும் கல்விக்கு செலவுபன்ன யோசிப்போம்.

  1. இது L.K.G, UKG க்கு 40000, 50000 பிடுங்கும் பள்ளிகலுக்கும், எந்த வசதியும் இல்லாத பள்ளிகலுக்கும், பெற்றேரை மதிக்காத பள்ளிகலுக்கும் பொறுந்தாது.

டிஸ்கி : இவை அனைத்தும் என் மனஓட்டம், இது தவறாககூட இருக்களாம். சரியா? தவறா? மற்றும் உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

Saturday, June 25, 2011

கேட்கிறவன் கேணப்பயலா இருந்தா……….!





இரண்டு நாட்களுக்கு முன் பாலிமர் டி.வியில் மக்களுக்காக நிகழ்ச்சியில் திரு. E.V.K.S இளங்கோவன் கலந்துகொண்டார். அவரின் பேட்டியில்..



நிருபர் : நீங்க தி.மு.க விடம் போராடி 63 தொகுதிகள் பெற்றும், அதில் 5
           மட்டுமே வெற்றி பெற்றிற்கள், அதிக தொகுதிகள் பெற்றதால்தான்
           தோல்வி அடைந்திற்களா?

E.V.K.S இளங்கோவன் :  நாங்கள் 63 தொகுதிக்கு பதில் 110 தொகுதியை
                               கேட்டு பெற்று இருக்கவேண்டும். தி.மு.க வும்
                               நான்களும் சமஅளவில் தொகுதியில் போட்டியிட்டு
                               இருந்தால் மக்கள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி
                               அமையும் என்ற நம்பிக்கையில் எங்களை அதிக
                               தொகுதியில் ஜெயிக்க வைத்திறுப்பார்கள்.


டிஸ்கி 1: கேட்கிறவன் கேணப்பயலா இருந்தா ஆவின்பால் கம்பெனி ஓனர் அமலாபால்னு சொல்லுவானுங்க..( அப்பாடி.. இப்ப அமலா பால் போட்டோ போட வாய்ப்பு வந்துட்டு..(சி.பி சாந்தோஷமா?)



Friday, June 24, 2011

முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதிவிட்டு +2 மாணவன் தற்கொலை: ஆசிரியர் கைது

சேலம் அருகே உள்ள பணமரத்துப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 கணிதப்பிரிவில் படிக்கும் மாணவன் சீனிவாசன். சீனிவாசன் வீடு பணமரத்துப் பட்டியிலிருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள நெய்க்காரபட்டியில் உள்ளது. கடந்த 15ம் தேதி பள்ளிக்கூடம் திறந்த பின்னர், மூன்று நாட்களாக பள்ளிக்கு சென்று வந்தான். நேற்று முன்தினம் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளான். சீனிவாசனின் பெறோர்கள் சேகர், விமலா மற்றும் அண்ணன் சத்தியமூர்த்தி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர், இந்நிலையில் சனிக்கிழமை மதியம் சீனிவாசனின் தயார் விமலா சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்துள்ளார்.
 
அப்போது வீடு திறந்து கிடந்துள்ளது, சந்தேகமடைந்த விமலா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டு உத்திரத்தில், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தான். மகனின் தற்கொலையால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், மற்றும் உறவினர்கள், கிராமத்தில் உள்ள வழக்கப்படி சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனை ஆய்வுக்கு உட்ட்படுத்த பயந்துகொண்டு காவல்துறைக்கு புகார் கொடுக்காமலேயே சீனிவாசனின் உடலை எரித்துவிட்டனர்.
 
சீனிவாசனின் தற்கொலைக்கு காரணம் தெரியாத உறவினர்கள் சிலர், நேற்று காலையில் சீனிவாசனுடன் படிக்கும் சக மாணவர்களிடம் பள்ளியில் என்ன நடந்தாது என்பது குறித்து விசாரித்துள்ளர்கள். சீனிவாசனின் வகுப்பு மாணவர்கள், எங்களது கணித ஆசிரியர் செந்தில் சார் சரியாக புரியும்படி கணக்கு பாடம் நடத்துவதில்லை, அதனால் தலைமையாசிரியரிடம் புகார் கொடுப்பதற்கு எல்லா மாணவர்களிடமும் கையெழுத்து வாங்கிகொண்டிருந்தான் என்று சொல்லியுள்ளார்கள்.
 
சீனிவாசனின் தற்கொலைக்கு பள்ளியில் நடந்த சம்பவம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு உறவினர்கள் நேற்று சீனிவாசனின் பள்ளி புத்தகப்பையை திறந்து பார்த்துள்ளார்கள். அதில், சீனிவாசன் கைப்பட எழுதிய ஏழு பக்க கடிதம் இருந்துள்ளது. அதில், எனது சாவுக்கு என் பெற்றோர்களோ, உறவினர்களோ காரணமல்ல... என் முடிவை எழுதியவர்கள், நான் படிக்கும், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் செந்தில், தமிழ் அய்யா ராமலிங்கம், இயற்பியல் ஆசிரியர், மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது.
 
நான் 11வகுப்பு படிக்கும் போதிலிருந்தே எங்களுக்கு கணக்கு பாடம் நடத்தும் செந்தில் ஆசிரியர் பாடம் நடத்துவது புரிவதில்லை... எங்களுக்கு, புரியும்படி பாடத்தை மெதுவாக நடத்துங்கள் என்று பலமுறை சொல்லியுள்ளோம். கடந்த 16ம் தேதி எங்களுக்கு செந்தில் ஆசிரியர் கணக்கு பாடம் நடத்தினார். அவர் வேகமாக நடத்தியதால், எனக்கு புரிய வில்லை, சார் மெதுவாக நடத்துங்கள் என்று கேட்டேன், என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, போர்டில் உள்ளதை மட்டும் எழுது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
 
செந்தில் ஆசிரியர், கணக்கு படத்தை புரியும்படி, மெதுவாக நடத்தச்சொல்லி, தலைமையாசிரியரிடம் புகார் கொடுக்க என் வகுப்பு மாணவர்களிடம் கையெழுத்து வாங்கினேன், இந்த புகாரை தலைமையாசிரியரிடம் கொடுக்கலாமா...? என்று கெமிஸ்ட்டரி ஆசிரியரிடம் கேட்டேன். அவர் எல்லா ஆசிரியகளிடமும் நான் சொன்னதை சொல்லிவிட்டார்....
 
அன்று, மாலை நான் பள்ளி முடிந்து நானும், என் நண்பர் ஜீவாவும் வீட்டுக்கு வந்து கொடிருந்த போது, வேதியல் ஆசிரியர், என்னை கூப்பிட்டு... படிக்க வந்தா படிக்கற வேலைய மட்டும் பார், தேவையில்லாத வேலையெல்லாம் பாக்காதே, என கோபமாக திட்டினார். நீ எல்லா பசங்க முன்னாலயும் கணக்கு பாடம் புரியலையுன்னு கேட்டியாமே... என்னுடைய வகுப்புல அப்படி கேட்டுப்பார் என்ன நடக்குதுன்னு பார்.... என மிரட்டினார். பாடம் நடத்தும் போது சந்தேகம் கேட்க கூடத சார்..., எங்க கிலாசுல செந்தில் சார் நடத்துற கணக்கு பாடம் யாருக்கும் புரிய மாட்டிங்குது சார்.... என்று கூறினேன்.
 
மறுநாள் 17 தேதி கம்ப்யூட்டார் ஆசிரியர், என்னை கூப்பிட்டு என்ன ரிப்போர்ட் எழுதி கையெழுத்து எல்லாம் வாங்கியிருக்கிராயாமே... ஏன் வகுப்பு ஆசிரியரான என்கிட்ட சொல்லலை... என்று கேட்டார். அப்போது இயற்பியல் ஆசிரியர், நீ என்ன பெரிய இவனா... மூடிக்கிட்டு டெஸ்ட் எழுதுடா என்று மிரட்டினார். அப்போது பின்னல் வந்த தமிழ் அய்யா ராமலிங்கம், நீ என்னடா...பெரிய ரௌடியா, நீ படிக்கறது பள்ளிக்கூடம், இது காலேஜ் கிடையாது, எங்க மேல நீ பெட்டிசன் எல்லாம் போடமுடியாது, உன்ன பள்ளிக்கூடத்துல செத்துக்கிட்டதே பெரிய விஷயம், இந்த லட்சணத்துல நீ ரௌடித்தனம் பண்ணறே... உனக்கு புரிஞ்சா படி..., இல்லன்னா, டி.சி வாங்கிக்கிட்டு போய் உனக்கு பிடிச்ச வாத்தியார் இருக்கற பள்ளிக்குடத்துக்கு சேர்ந்து படி என்று மிரட்டினார்.
 
மாலை 3.30 மணிக்கு தலைமையாசிரியரிடம் பர்மிசன் வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்து, இந்த கடிதத்தை எழுத்துகிறேன். எனக்காக அம்மா, அப்பா இருவரும் அழக்குகூடாது, அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும். எனக்கு அடுத்த பிறவியிருந்தால் அதில் நான் மனிதனாக பிறக்க கூடாது, அரசு பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் நன்றாக கவனித்தால் தான் என்னைப்போன்ற மாணவர்களை மேம்படுத்த முடியும்.
 
என் சாவு, அரசு பள்ளியில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும், இல்லையானால் என்னை மாதிரி எத்தனை உயிர்களை ஆசிரியர்கள் எடுக்கப்போகிரார்களோ தெரியவில்லை... திறைமையான ஆசிரியர்கள் பலர் வேலையில்லாமல் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், மேல்நிலை வகுப்புகளுக்கு, நல்ல திறமையான ஆசிரியர்களை போடவேண்டும் என முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த கடிதத்தை சி.ஈ.ஓ விடம் ஒப்படைக்க வேண்டும்.
 
என் மரணத்திற்கு பின்னர் சட்டம் அதன் கடமையை செய்யவேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளான். சீனிவாசன் சாவுக்கு காரணம் ஆசிரியர்கள் தான் எனபதை அறிந்த உறவினர்கள், நேற்று சேலம் எஸ்.பி அலுவலகத்துக்கு புகார் சொன்னதன் பின்னர், மல்லூர் காவல் ஆய்வாளர் சீனிவாசனின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். சீனிவாசனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சீனிவாசன் தற்கொலை பற்றி காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்க அறிவுறுத்தினார்.
 
அதன் பின்னர், மல்லூர் காவல் நிலையத்தில் சீனிவாசன் தற்கொலை செய்துகொண்டது சம்பந்தமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இன்று துறை ரீதியான விசாரணையை துவக்கியுள்ளர்கள். கணக்கு ஆசிரியர் செந்திலை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
Thanks: Kingtamil.com

Thursday, June 23, 2011

“இதற்கும் வருவோமில்ல… இந்தியாவிலிருந்து!”

சீனாவும், ஜப்பானும், நிலவில் தங்களின் தளங்களை அமைக்க திட்டமிட்டு வரும் நிலையில், அது போன்ற முயற்சியிலிருந்து இந்தியா வெகு தூரத்தில் பின்தங்கி இருக்க முடியுமா? இதற்கு இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் மாதவன் நாயர் பதில் கொடுத்திருக்கிறார். “நிலவுக்கு செல்லும் திட்டத்திலிருந்து இந்தியாவால் விலகியிருக்க முடியும் என  நான் நினைக்கவில்லை”
“2015ம் ஆண்டு நிலவுக்கு முதன் முறையாக விண்வெளி வீரரை அனுப்பும் திட்டத்திற்கு  தேவையான தொழில்நுட்பங்களை வடிவமைக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது” என நாயர் தெரிவித்திருக்கிறார். (இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றது இந்திய விண்கலத்தில் அல்ல. அவர் சோவியத் யூனியனின் சோயுஸ்  என்ற விண்கலத்தின் மூலம் 1984ம் ஆண்டு விண்ணுக்கு சென்று 8 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்).
நிலவில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 122 முறை விண்கலங்களை அனுப்பும் முயற்சிகள் நடைபெற்றன. இதில் 59 முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன. தற்போது பூமியின் அருகில், அதாவது 3 லட்சத்து 85 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரகமான நிலவுக்கு பயணம் மேற்கொள்வதில் புதிய ஆர்வம் பிறந்துள்ளது.
இந்த நிலையில், சர்வதேச நிறுவனங்கள், வரும் 2020ம் ஆண்டுக்குள், நிலவில் தங்களின் தளங்கள் இருக்கும் என அறிவித்துள்ளன. அறிவித்த நிறுவனங்களில் ஆசிய நிறுவனங்களும் இருக்கின்றன.
ஆசியாவிலிருந்து நிலவிற்கு பயணம் செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளில் ஜப்பானின் ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேஷன் ஏஜென்சி முன்னணி வகிக்கிறது. நிலவுக்கு ககுயா என்ற விண்கலத்தை அனுப்பும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது இந்த அமைப்புத்தான்.
நிலவுக்கான சாங்கி-1 என்ற, தனது திட்டம் முழுக்க முழுக்க விஞ்ஞான ரீதியிலானது என்றும், எந்த நாட்டுடனும் (ஜப்பான்) போட்டியிடும்  எண்ணம் இல்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.
ராக்கேஷ் சர்மா
நிலவுக்கு 2015ம் ஆண்டு ஆள் உள்ள விண்கலத்தை அனுப்ப தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில்  1.5 பில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பெரும்பாலான வடிவமைப்பு, ஆய்வு மற்றும் தொழில்நுட்ப பணிகள் அடுத்த (2012) ஆண்டுக்குள் நிறைவுபெற்று விடும் என்று கூறப்பட்டுள்ளது.
நிலவில் நிரந்தரமாக துணை நிலையம் ஒன்றை அமைக்க அமெரிக்கா விரும்புகிறது. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், 1000க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு, நிலவில் சாத்தியமாகக்கூடிய திட்டங்களின் பட்டியலை வெளியிட்டபோது, அதிலுள்ள ஒரு திட்டம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
அந்தத் திட்டம் என்ன தெரியுமா?  நிலவை வர்த்தகமயமாக்குவது!
பூமியில் வாழ்க்கை நடத்துவதற்கு, நிலவில் கிடைக்கும் கனிம ஆதாரங்களை பயன்படுத்த முடியும் என்றும், அவை மிக இங்கு கிடைப்பதைவிட மலிவாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நிலவிலிருந்து எவற்றை மலிவாகப் பெறலாம்? தூய்மையான எரிசக்தி, சூரிய குடும்பம் மற்றும் வெளிப்புற வளிமண்டலத்தில் மனிதர்கள் ஆய்வு நடத்த மலிவான செலவில் ரொக்கெட் எரிபொருள், விண்வெளிக்கு செல்வதற்கான விண்கலத்தை உருவாக்குவதற்கான கட்டுமானப் பொருட்கள், ஆகியவற்றை நிலவிலிருந்து மலிவாகப் பெற முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நிலவில் அலுமினியம், மக்னீசியம், டைட்டானியம், இரும்பு (நிலவில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க) மற்றும் சிலிக்கன் (எரிசக்திக்காக சூரிய தகடுகளை தயாரிக்க) ஆகியன உள்ளன. அத்துடன், நிலவில் உள்ள மண்ணில் அளவுகடந்த ஒக்ஸிஜின் (ராக்கெட் எரிபொருள் தயாரிக்கவும், விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கும்)  மற்றும் ஹைட்ரஜின் உள்ளது.
அங்குள்ள மண்ணை உருக்கி, கட்டுமானப் பணிக்கான உறுதியான செங்கற்களை தயாரிக்க முடியும் என்பது மற்றொரு சுவாரசியம்.
அப்பல்லோ விண்கலத்தில் பயணம் செய்த முன்னாள் விண்வெளி வீரரான ஹாரிசன் சிமிட்,  “நிலவில் தொன் கணக்கில் கிடைக்கும் ஹீலியம்-3 வாயுவை, பூமிக்கு திருப்பி விட முடியும், அதன் மூலம் எரிசக்தியை தயாரிக்க முடியும்” என்கிறார். இவ்வாறு தயாரிக்கப்படும்  எரிசக்தி, எண்ணெய் விலையைவிட மலிவாக இருக்கும். ஒரு பாரல் எண்ணையில் இருந்து கிடைக்கும் அதே எரிபொருள் சக்தியைப் பெற 30 டொலர்கள் மாத்திரமே செலவாகும் என்றும் அவர் கூறுகிறார்.
இன்று 1 பாரல் எண்ணையின் விலை 98 டொலர்!
“நிலவில் மேற்கொள்ளப்படும் முதலீட்டுத் திட்டங்கள் திட்டமிட்டப்படி மேற்கொள்ளப்பட்டால், இங்கிருந்து பார்க்கும்போது நிலவில் புள்ளிகளாக  ரோபோ தொழிற்சாலைகள், பாதாள நகரங்கள், மின் கோபுரங்கள், சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் இடங்கள், விஞ்ஞான கூடங்கள், மயானம் ஆகியவை தெரியும்” என ஸ்பேஸ் என்ற அமைப்பு வாக்குறுதி அளிக்கிறது.
அண்மையில் அமெரிக்காவில் தொழிலதிபர்கள், நில மேம்பாட்டாளர்கள், விண்வெளி தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்ற  நிலவு மேம்பாட்டுக்கான மாநாட்டில் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது.
மாதவன் நாயர்
விண்வெளிக்கு சுற்றுலா செல்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளதால், நிலவில் மனிதர்கள் குடியேறும் கனவு நனவாகும் வாய்ப்பு நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜப்பானில் உள்ள அஸாபு பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியரும், விண்வெளி சுற்றுலா நிபுணருமான பட்ரிக் கோலின்ஸ், “ஆண்டுதோறும் விண்வெளி சுற்றுலாவை 100 பில்லியன் டொலர் வருமானம் தரக்கூடிய தொழிலாக மாற்றுவதற்கு, தற்போதுள்ள அரசாங்க பட்ஜெட்களில் 10 சதவீத தொகையே போதுமானது’‘ என்கிறார்.
நிலவுக்கு சுற்றுலா செல்லும் திட்டம் 2010ம் ஆண்டு தொடங்கப்படும் என ரஷ்யாவின் ஃபெடரல் ஸ்பேஸ் ஏஜென்சி தொடக்கத்தில் அறிவித்திருந்தது. ஆனால் அது தற்போது 2 ஆண்டுகள் தள்ளிப் போயிருக்கிறது. அடுத்த வருடம் பொதுமக்களுக்காக இத்திட்டம் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலவுச் சுற்றுப்பயணத் திட்டம் என்ன?
கலிபோர்னியாவின் ஸ்பேஸ் அட்வெஞ்சர்ஸ் மற்றும் டோக்கியோவை சேர்ந்த டிராவல் ஏஜென்சியான ஜே.டி.பி.யைக் கூட்டாளிகளாக கொண்டு தொடங்கப்படவுள்ள இத்திட்டத்தின்படி, ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் நிலவை சுற்றி வரலாம். நிலவை சுற்றிப்பார்க்க செல்லும் ஒவ்வொரு பயணத்திற்கும் இரண்டு சுற்றுலாப்பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர். அவர்களுடன் நன்கு பயிற்சி பெற்ற விண்வெளி வீரரும் உடன் செல்வார்.
ஜப்பானைச் சேர்ந்த ஷிமுசு ஸ்பேஸ் சிஸ்டம் என்ற நிறுவனம், விண்வெளி மற்றும் நிலவில் சுற்றுலா செல்வதற்கான திட்டங்களை தயாரித்து வருகிறது. அதன்படி நிலவில், சுருட்டி மடக்ககூடிய கட்டிடங்களை கொண்ட தளங்களை அமைக்கவும், கோல்ஃப் மைதானங்கள், டென்னிஸ் அரங்குகள் ஆகியவற்றை நிலவில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள சில தகவல்கள் (அவை சாத்தியமோ இல்லையோ) சுவாரசியமாக இருக்கின்றன. இதோ அவற்றையும் பாருங்கள்.<
நிலவில் அமையவுள்ள ஹில்டன் ஹோட்டல், லாஸ்வேகஸ், நெவேடா ஆகிய இடங்களில் அமைந்துள்ளதைவிட பெரியதாக இருக்கும். ஹில்டன் இன்டர்நேஷனலுக்காக, பிரிட்டனின் புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுனரான பீட்டர் இன்ஸ்டோன்  காம்ப்ளெக்ஸை வடிவமைத்தால், அது மூன்ஸ்கேப் என்ற பெயரில் மின்னும்.
நிலவில் அமையும் ஹில்டன் ஹோட்டலில் 5 ஆயிரம் அறைகள் இருக்கும். சூரிய சக்தியை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படும். நிலவில் உள்ள ஐஸ் கட்டிகளை கொண்டு தண்ணீர் எடுக்கப்படும். ரெஸ்டாரன்ட்கள், தேவாலயம், கடற்கரை, நிலவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு விருந்தினர்களை ஏற்றிச்செல்ல நிலவு பேருந்துகள் இயக்கப்படும். எப்படிப் போகிறது கதை?
ரஷ்யாவின் SOYUZ TMA-16 விண்கலம்
நிலவை வர்த்தகமயப்படுத்தும் திட்டங்கள் பலவற்றை வைத்திருக்கும் மற்றொரு  அமைப்பு அமெரிக்காவின் டெக்ஸாஸில் அமைந்துள்ள மூன் சொசைட்டி. இந்த அமைப்பு ஆசியாவிலும் விரைவில்  தனது செயற்பாடுகளைத் தொடங்கத் திட்டமிடுகிறது. ஆர்ட்டிமிஸ் சொசைட்டியின் அங்கீகாரம் பெற்ற இந்த அமைப்பு, நிலவில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிற்காக முதன்முறையாக தனியார் நிறுவனத்தால் அமைக்கப்படும் தளத்தை வடிவமைப்பதுடன், அதற்கு நிதியுதவியும் அளிக்கிறது.
நிலவில் மனிதர்களை குடியமர்த்துவது; பெரிய அளவில் தொழில்மயமாக்கத்திற்கு ஊக்கமளிப்பது மற்றும் நிலவில் தனியார் நிறுவனங்களை அமைப்பது ஆகியவைதான் மூன் சொசைட்டியின் தலையாய நோக்கமாக இருக்கிறது.
நிலவில் வடக்கு அல்லது தெற்கு பகுதியில் 2024ம் ஆண்டுக்குள் தளம் அமைக்க அமெரிக்காவின் நாசா அமைப்பு திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுழற்சி முறையில் எப்படி விண்வெளி வீரர்கள் இருக்கிறார்களோ, அதே போன்று தொடர்ந்து நிலவிலும் ஆண்டு முழுவதும் ஆட்கள் இருப்பார்கள்.
நிலவுக்கு விண்கலங்களை அனுப்பும் தொழிலில் ஏற்கனவே, அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிலவை சுற்றிவருவதற்கு விண்கலத்தை அனுப்புவது, நிலவில் இறங்கும் கலங்கள் அல்லது ரோபோ ரோவர்களை அனுப்பும் முயற்சிகளில், அந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
கலிபோர்னியாவை தளமாக கொண்டதும் , ‘அண ஞுணtணூஞுணீணூஞுணஞுதணூடிச்டூ ண்ணீச்ஞிஞு-ண்தூண்tஞுட்ண் ஞிணிட்ணீச்ணதூ‘  என்று தன்னை தானே கூறிக்கொள்ளும் ஸ்பேஸ்டேவ் என்ற நிறுவனம், கடந்த வருடம் தமக்கு 17.7 மில்லியன் டொலர் வருவாய் கிடைத்துள்ளதாகவும், அதற்கு முதல் ஆண்டைவிட இது 12 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. விண்வெளி தொடர்பான உபகரணங்கள், சேவைகள் ஆகியவற்றின் மூலமே இந்த வருவாய் கிடைத்திருக்கிறது.
“வர்த்தகத்திற்கு நிலவு திறந்துள்ளது’‘ என்ற வாசகத்தை மேற்கோள் வரியாக கொண்டுள்ள ட்ரான்ஸ் ஆர்பிட்டல் என்ற நிறுவனம், நிலவுக்கு வர்த்தக ரீதியாக விண்கலங்களை இயக்க அமெரிக்க அரசாங்கத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை  தாங்கள் பெற்றுள்ளதாக கூறியுள்ளது.
இந்திய-சீன பொருளாதார வளர்ச்சியை பார்க்கும் போது, சீன அல்லது இந்திய நிறுவனங்களும் இதுபோன்ற முயற்சிகளில் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (அப்படி நடந்துவிட்டால் தமிழகத்தில் நிலவு வர்த்தகமும் அரசியல்வாதிகளின் கைகளுக்குப் போய்விடுமோ?)

Thanks: viruvirupu.com

Wednesday, June 22, 2011

அருமையான படங்கள் உங்கள் பார்வைக்கு ...

அருமையான படங்கள் உங்கள் பார்வைக்கு ...








நன்றி மெயில் அனுப்பிய நண்பனுக்கு

Tuesday, June 21, 2011

விஜயகாந்த் இன்றைய தினமும், முதுகில்தான் போடுவாரா?

சென்னை, இந்தியா: கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு கணிசமான இடங்களைக் கைப்பற்றிய தே.மு.தி.க., இப்போது தனது அடுத்த காலடியை எப்படி எடுத்து வைப்பது என்ற யோசனையில் இறங்கியுள்ளது. சென்னையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தே.மு.தி.க. நிர்வாகிகளுடன், கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.
அடுத்த காலடியை எடுத்து வைக்க இப்போது என்ன தேவை? வேறொன்றுமில்லை, தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல்கள் நடக்கவுள்ளன.

இத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. தமிழக சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியல் அடிப்படையில், வார்ட்களில் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
மொத்தத்தில், இதோ வருகின்றன உள்ளாட்சி தேர்தல்கள்!
தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன்,  உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியை தொடர்வதா, இல்லையா என்ற முடிவை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். அதற்காகவே, கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை கேட்கவும் தே.மு.தி.க. தலைமை முடிவு செய்துள்ளது.

சட்டசபைத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது உண்மைதான்.ஆனால், தேர்தலுக்கு முன்பேயே இந்த இரு கட்சிகளுக்கும் நல்ல உறவு இருக்கவில்லை. இனிமேலும், அதற்கான வாய்ப்புமில்லை.காரணம், இவ்விரு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலுள்ள ஈகோ.

தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தின் போதே இருவரும் தனித்தனியாகவே செயல்பட்டார்கள். கோவையில் நடந்த அ.தி.மு.க அணி கூட்டத்திற்கு கூட விஜயகாந்த் செல்லவில்லை. பின்னர் அ.தி.மு.க வெற்றி பெற்ற பிறகும்கூட,  அழைப்பு வந்தால் பதவியேற்பு விழாவிற்கு செல்வோமென பட்டும்படாமலும்தான் விஜயகாந்த் கூறினார்.

நல்ல வேளையாக, அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
விஜயகாந்தைப் பொறுத்தவரை, கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க காலியாகும் என்பது அவருக்குத் தெரியும். அப்படியான நிலையில், அ.தி.மு.கவிற்கு போட்டியாக தான் வந்துவிடலாம் என்று ஒரு கணக்கை நிச்சயம் போட்டிருப்பார். அப்படி நடந்தால், ஏதோ ஒரு காலத்தில் அவர், தமிழகத்தில் முதல்வராக வந்தாலும் வரலாம்.

இதனால், உள்ளாட்சி தேர்தல் போன்ற சிறிய தேர்தல்களில் தனது கட்சியைத் தனித்துப் போட்டியிட வைக்க முடிந்தால், அது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது. இந்த ரூட்டிலேயே அவரது சிந்தனை ஓடும் என்று எதிர்பார்க்கலாம்.

சென்னையில் தே.மு.தி..க தலைமை கழகத்தில் இன்று காலையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து கட்சியின் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், நகர செயலாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடைய கருத்துக்களைக் கேட்டுத்தான் விஜயகாந்த் முடிவெடுக்கவுள்ளார் என்று யாராவது நம்பினால், அந்த நபருக்கு தமிழக அரசியல் பாணி பிடிபடவில்லை என்று அர்த்தம்.

இந்திய அரசியலில் எந்தக் கட்சியிலும், மூன்றாம் மட்டத்திலுள்ள ஆட்களிடம் ஆலோசனை கேட்டு முடிவுகள் எடுக்கப்படுவதில்லை.  ஆனால், மக்களுடன் நேரடியாக மூவ் பண்ணும் இப்படியான ஆட்களிடம், மக்கள் மத்தியில் என்ன ரியாக்ஷன் என்று பல்ஸ் பார்க்க முடியும்.

அதைத்தான் விஜயகாந்த் இன்று செய்யவிருக்கிறார் என ஊகிக்கலாம்.
கட்சிக்காரர்கள் இன்று சொல்லப்போவதை, தன் காதில் போடுவாரா? அல்லது அவர்களுக்கு முதுகில் போடுவாரா? என்பது அவர்களது கட்சி உள்விவகாரம். (பிரச்சாரக் கூட்டத்தில் முதுகிலும் போட்டிருக்கிறார்!)
காதிலோ, முதுகிலோ போட்டுவிட்டு, அவர் எடுக்கும் முடிவு (இன்று எடுக்க வேண்டியதில்லை), தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவாக இருந்தால், கேப்டன் புத்திசாலி.

Thanks :viruvirupu.com

Monday, June 20, 2011

ஆத்தாவா?தாத்தாவா ?- மாறன் குழப்பம்


சென்னை, இந்தியா: கலைஞருக்கு நிஜமாகவே காலம் சரியில்லை போலிருக்கிறது. அடுத்த பேரிடி ஒன்று விரைவில் காத்திருப்பதாக தகவல் ஒன்று கசிகின்றது. “வர்த்தக நலன்களுக்கு முன்னால், குடும்ப உறவுகள் இரண்டாம் பட்சமே” என்பதுதான் இந்தத் தகவலின் பஞ்ச் வாக்கியம்.
அதன் விரிவாக்கம், தமது வர்த்தக சாம்ராஜ்யத்தைக் காத்துக்கொள்ள கலைஞரின் குடும்ப உறவொன்று, எதிராகத் திரும்ப ரெடியாகின்றது என்பதே.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம். டில்லியின் உதாசீனம். இந்த இரண்டுமே மேற்படி முடிவை எடுக்கத் தூண்டியது என்கிறார்கள்.


இந்த முடிவை எடுக்காவிட்டால், ஏற்படக்கூடிய உடனடி நஷ்டம் லேசானது அல்லவாம்..  நான்கு இலக்கத்தில் கோடிகள் என்கிறார்கள், இவர்களது வர்த்தகத்தை அறிந்தவர்கள். இந்தத் தொகை உடனடி நஷ்டம். அதைவிட வருடாவருடம் ஏற்படக்கூடிய நஷ்டம் தனி.
சகோதரர்கள் இருவருக்கும் கூட்டு வியாபாரமும் இருக்கிறது. தனித்தனி வியாபாரங்களும் இருக்கின்றன.

மாறன் குடும்பத்தின் இரு சகோதரர்களில் ஒருவருக்கே, இந்த இக்கட்டான நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. மற்றைய சகோதரர், தன்பங்குக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தைத் தானே தாங்கிக்கொள்ளத் தயாராகிவிட்டாராம். அவருக்கு தமிழகத்தில் ஏற்படக்கூடிய நஷ்டம் அவ்வளவு பெரியளவில் இருக்காதாம்.

இந்த இரண்டாவது சகோதரரின் முடிவின் காரணங்களை முதலில் பார்க்கலாம். இவரது ‘தனி’ முதலீடுகள், தமிழ்நாட்டை மையப்படுத்தி இல்லை. வெளி மாநிலங்களிலும், தலைநகரிலும் மையப்படுத்தப்பட்ட முதலீடுகள் அவை. அதன் ஒரு பகுதியே தமிழகத்தில் எக்ஸ்டென்ஷனாக இருக்கிறது.

அதைவிட அவரது பணம் தமிழகத்தில் பாய்ந்ததெல்லாம் குறுகியகால பிசினெஸ்களில். குறைந்தபட்சம் சில வாரங்களில் இருந்து, அதிகபட்சம் சில மாதங்களுக்குள் போட்ட பணத்தை லாபத்துடன் எடுத்துவிடக்கூடிய பிசினெஸ்கள் அவை.

இதனால் அந்த சகோதரர், ஏற்கனவே போட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதிலேயே இப்போது பிசியாக இருக்கிறார்.  புதிய புராஜெக்ட்கள் எதுவும் தற்போதைக்கு இல்லையாம். இன்னமும் சில வாரங்களில் அவரது கம்பனிகள் உறங்கு நிலைக்கு (sleep stage) போய்விடும்.
அதற்குப்பின் அவற்றால் இழக்கக்கூடிய பணம் 100 கோடிக்கு உள்ளேதான்! அவரால் மிகச் சுலபமாகத் தாங்கிக்கொள்ளக்கூடிய தொகை அது.
மற்றைய சகோதரரின் கேஸை எடுத்துக்கொண்டால், அது பெரிய மெஸ்ஸியான ஸ்டேஜில் இருக்கிறது. காரணம், அவருக்கும் வெளி மாநில வியாபாரங்கள் இருந்தாலும், பிரதான பிஸினெஸ் தமிழகத்தை மையப்படுத்தியே உள்ளது. அதில் அடி விழுந்தால், நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல, 4 இலக்க கோடிகளில் நஷ்டம் வரும்!
இவர்தான் இப்போது தான் இதுவரை ஓடிக்கொண்டிருந்த பாதையிலிருந்து, யூ-டர்ன் அடிக்க ரெடியாகிறார் என்கிறார்கள்.

இந்தச் சகோதரார் ஏற்கனவே கட்சியிலிருந்து (தி.மு.க.) விலகி நடக்கத் தொடங்கிவிட்டார். அதைக் கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்கும்படி வெளிப்படையாகவும் செய்யத் தொடங்கிவிட்டார். அடுத்த கட்டம் கலைஞர் குடும்பத் தொடர்புகளில் இருந்து விலகிக் கொள்வதுதான் என்று அடித்துச் சொல்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன், இவரது நிறுவனத்தின் சென்னை அலுவலகத்துக்குப் புதிதாக இளைஞர் ஒருவர் அழைத்து வரப்பட்டிருக்கின்றார். அமெரிக்காவில் MBA படித்ததாகக் கூறப்படும் இந்த இளைஞர், நிறுவனத்தின் COO பதவியில் அமரவைக்கப்படவுள்ளார் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிப்படையாகப் பார்த்தால், இது ஒரு வர்த்தக மேம்படுத்தல் நடவடிக்கை போலவே தோன்றும். ஆனால், இதற்குள் வேறு ஒரு விஷயம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்த MBA இளைஞர், முன்பிருந்த அ.தி.மு.க. அரசின் ‘பவர்’ அரசியல்வாதி ஒருவரின் மகன்.
குறிப்பிட்ட அரசியல்வாதி, தற்போதைய அ.தி.மு.க. அரசில் செல்வாக்கு அற்றவராகத்தான் தற்போது இருக்கிறார். ஆனால், விரைவில் அவரது செல்வாக்கு ஓகோ என்று எழுந்துவிடும் எனக் கணித்துள்ளாராம் மாறன் சகோதரர்களில் ஒருவர்.

இந்த அரசியல்வாதி மூலமாகவே, அ.தி.மு.க.வுடன் ஒரு பிசினெஸ் ரூட் போடப்படுமாம்.திகாருக்கும், சி.ஐ.டி. காலனிக்குமிடையே கலைஞர் ஓடிக்கொண்டிருக்க, மறுபக்கமாக இந்த டீல் ஓடத்தொடங்கியிருக்கிறது. டீல் கலைஞரின் காதுகளுக்கும் அநேகமாகப் போயிருக்கும். ஆனால், என்னதான் செய்ய முடியும்?.

‘ஆத்தா’வோடு பகை வராமலிருக்க வேண்டுமானால், ‘தாத்தா’வைக் கழட்டித்தான் விடவேண்டும்.


 தகவல் உதவி : விறுவிருப்பு . com

Sunday, June 19, 2011

பிகரை கரெக்ட் பண்ணுவது எப்படி ?


பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும் , யாரிடம் கேட்பது , எப்படி கேட்பது , அப்படியும் கேட்டுவிட்டால் இவனுக்கு இது கூட தெரியாத என எண்ணிவிட்டால் என்ன பண்ணுவது என்ற குழப்பம் இருக்கும் , அப்படி பட்டவருகளுக்காகதான் இந்த பதிவு.

எதோ எனக்கு தெரிந்த அளவில் எழுதிள்ளேன். உங்களுக்கு வேறு வழிகள் தெரிந்தால் பின்னுட்டம் அடிங்கள் .


எனக்கு தெரிந்த வரை இரண்டு வழிகள் மிக சிறப்பானவை. இதை முதலில் முயற்சி செய்து பாருங்கள். இது ஒத்து வரவில்லை என்றால்வேறு வழியை பாருங்கள் .
 

முதல் வழி :

1 . ரப்பர் பயன்படுத்தலாம்
       தமிழில் இதை அழிப்பான் என கூறுவார்கள் . இதன் முஉளம் எந்த
       பிகரையும் கரெக்ட் பண்ணலாம். அழித்துவிட்டு எழுதுவதால் நேரம்
       வீணாகலாம் ஆனால் நல்ல பயன் உண்டு.

2 . whitner (வெண் -  மை )

        இந்த வெள்ளை மையால் முதலில் எழுதிய பிகரை அழித்துவிட்டு அது 
       மேலே புதிதாக எழுதலாம்.



இது எதுவும் சரிவரவில்லை என்றால் எழுதிய தாளலை கிழித்துவிட்டு புதிதாக எழுதவும்


  டிஸ்கி 1 : பிகர் ன நம்பர்னு அர்த்தம்
  டிஸ்கி 2 : வேறு அர்த்தத்தை நினைத்து வந்த சி .பி டைப் ஆள்களுக்கு பலப்
                      தான்
  டிஸ்கி 3 : நான் ரொம்ப நல்ல புள்ள எனவே எனக்கு தெரிந்த பிகர் நம்பர் ,
                      நம்பர் மட்டும் தான் 






Saturday, June 18, 2011

வருகிறார்-ஜேம்ஸ் பாண்ட்-23

• அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் திட்டம் கைவிடப்பட்டது என செய்திகள் சமீபத்தில்தான் வெளியாகியிருந்தன!

 

 

லண்டன், பிரிட்டன்: ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய செய்தி. வருமா, வராதா என்ற இழுபறியில் இருந்துகொண்டிருந்த அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 26ம் தேதி 2012ல் பிரிட்டனுக்கு வருகிறார் ஜேம்ஸ் பாண்ட்-23.
சோனி பிக்சர்ஸ் இத்தகவலை உறுதிப்படுத்தியிருக்கின்றது. பிரிட்டிஷ் ரிலீஸ் தேதிக்குச் சில நாட்களின் பின்னரே அமெரிக்க ரிஸீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சோனியின் அறிவிப்பின்படி, அமெரிக்காவில் நவம்பர் 9ம் தேதி ரிலீசாகின்றது.

சில நாட்களுக்கு முன்னர்தான், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் திட்டம் கைவிடப்பட்டது என செய்திகள் வெளியாகியிருந்தன. இனி ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களே வெளியாவது சாத்தியமில்லை என்றுகூட கூறப்பட்டது.

அந்தச் செய்திகளால், உலகெங்கிலுமுள்ள ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் சோர்ந்து போயிருந்த நேரத்தில், ஜேம்ஸ் பாண்ட்-23ன் ரிலீஸ் தேதியை அறிவித்து, பாண்ட் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றது சோனி பிக்சர்ஸ்.
ஜேம்ஸ் பாண்ட்-23 என்பது, வரப்போகும் திரைப்படத்தின் நிஜமான பெயர் கிடையாது. படத்துக்கான பெயர் இன்னமும் தேர்ந்தெடுக்கப்படவில்லை (அல்லது, பகிரங்கப்படுத்தப்படவில்லை) அதுவரை படத்தின் தயாரிப்பு வேலைகளுக்காக வைக்கப்பட்டுள்ள working titleதான், ஜேம்ஸ் பாண்ட்-23.
Daniel Craigதான் புதிய படத்திலும் ஜேம்ஸ் பாண்ட்.  Craig நடித்து, கடைசியா வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் வெற்றிகரமாக Quantum Of Solace ஓடியதில் இவருக்குக் கிடைத்துள்ள சான்ஸ் இது. மூன்றாவது முறையாக ‘லைசென்ஸ் டு கில்’ துப்பாக்கியைக் கையிலெடுக்கிறார் இவர்.
எம்.ஜி.எம். ஸ்டூடியோஸ் நிதி நெருக்கடியில் இருந்த காரணத்தால் ஜேம்ஸ் பாண்ட்-23 தயாரிப்பு இடைநிறுத்தப் பட்டிருந்தது. கடந்த நவம்பரில்தான் எம்.ஜி.எம், திவால் நிலையிலிருந்து மீண்டிருந்தது.

டைரக்டர் நாற்காலியில் அமரப்போவது, Sam Mendes. வில்லன் பாத்திரத்தில் Anthony Hopkins நடிப்பார் என்று ஒரே பேச்சாக இருக்கின்றது. ஆனால், அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக உறுதியான தகவல் இல்லை.

நன்றி :viruvirupu.com

Friday, June 17, 2011

இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா?என்ன கொடும இது ?

புதுடில்லி, இந்தியா: சோமாலியக் கடற்கொள்ளையரால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ஆறு இந்தியர்களும் விடுவிக்கப்பட்டு, இன்று இந்தியா வந்தடைந்தனர். இவர்களது விடுதலைக்கு உதவியது இந்திய அரசல்ல, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்!
10 மாதங்களுக்குமுன், எகிப்திய கப்பல் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கப்பல் சோமாலியக் கடல் கொள்ளையரால் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த 22 மாலுமிகளும் கொள்ளையர்களால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர். அவர்களை விடுவிப்பதற்கு பணயத் தொகையாக 2.1 மில்லியன் டொலர் பணம் கொடுக்க வேண்டும் என அறிவித்தனர் கொள்ளையர்கள்.
பணயக் கைதிகளாக்கப்பட்ட 22 பேரில் 6 இந்தியர்கள், 4 பாகிஸ்தானியர், 11 எகிப்தியர்கள், 1 ஸ்ரீலங்கன் ஆகியோர் இருந்தனர். இவர்களை விடுவிக்க, கப்பல் நிறுவனமோ, அவற்றின் மாலுமிகளின் நாடுகளோ, ஓரளவுக்குமேல் முயற்சிக்கவில்லை.
இந்த நிலையில் 22 மாலுமிகளையும் விடுவிக்கும் முயற்சியில் இறங்கினார், பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அன்சார் பேர்னி. இவர் கொள்ளையருடன் பேச்சுக்களை நடாத்தினார். அவர்கள் பணம் கொடுத்தால்தான் பணயக் கைதிகளை விடுவிக்க முடியும் எனப் பிடிவாதமாக இருந்துவிட்டனர்.
இதையடுத்து அன்சார் பேர்னி, பாகிஸ்தானில் நன்கொடைகள் மூலம் பணம் திரட்டத் தொடங்கினார். அப்படிச் சேர்ந்த 2.1 மில்லியன் டொலர் பணத்தைக் கொடுத்து, 22 மாலுமிகளையும் மீட்டிருக்கிறார்.
இந்த பாகிஸ்தானியரால், பாகிஸ்தானில் திரட்டப்பட்ட நன்கொடைகள்மூலம் மீட்கப்பட்ட 6 இந்தியர்களும்தான், இன்று இந்தியா வந்தடைந்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட இந்திய மாலுமி என்.கே. சர்மாவின் மனைவி மது சர்மா, “நாம் இந்திய அரசிலுள்ள கிட்டத்தட்ட சகல அமைச்சர்களையும் ஒவ்வொருவராகச் சந்தித்து உதவி கோரினோம். யாரும் உதவவில்லை. ஆனால், எங்கோ பாகிஸ்தானில் இருந்த அன்சார் பேர்னி, நாங்கள் கேட்காமலேயே உதவினார். அவரின் உதவியால்தான் எனது கணவரை உயிருடன் பார்க்க முடிந்துள்ளது” என்றார் கண்ணீருடன்.
இவர்கள் விடுதலை செய்யப்பட்டதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவர்கள் இதுபற்றி வாய்திறக்கவே விரும்பவில்லை. சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பதால், இந்திய கடற்படையிடமும் கருத்து கேட்கப்பட்டது.
இந்திய கடற்படையிடமிருந்து பதில் கிடைத்துள்ளது!
இந்திய கடற்படை அதிகாரி கொமடோர் மாதவன், “கப்பலின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அந்தக் கப்பல் எந்த நிறுவனத்துக்குச் சொந்தமானதோ, அந்த நிறுவனம்தான் பொறுப்பு. இதில் நாம் (இந்திய கடற்படை) செய்வதற்கு ஏதுமில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.


(ஆர்வகோளாறு)


தகவல் உதவி :viruvirupu.com

Thursday, June 16, 2011

அவன்-இவன் திரைவிமர்சனம்




பாலாவின் படம் என்றால் பலவருடங்கள் தயாரிப்பில் இருக்கும் என்ற எண்ணத்தை உடைக்கவும், இனி விளிம்பு நிலை மனிதர்களை வைத்து படம் எடுக்கமாட்டேன் என தனது குரு பாலுமகேந்திராக்கு உறுதியளித்ததை காப்பாற்றவும் பாலா எடுத்த படம் தான் அவன்-இவன்.

கதை :

பொணத்தின் நெத்தியில் உள்ள ஒரு ரூபாய் முதல்(பார்திபன் போல) ஆஸ்பத்திரியில் உள்ள பால், பிரட் வரை அணைத்தையும் ஆட்டைய போடும் களவானிகள் அவன்(ஆர்யா)-இவன்(விஷால்). அக்காபாளையம் கிராமத்தில் உள்ள இவர்கள் அடிக்கும் லூட்டிகள்தான் படம்.


ஆர்யா ஒரு திருட்டு வழக்கில் போலிஸ் ஸ்டேஷன் செல்லும் போது அங்கு ஏட்டாக உள்ள கதா நாயகியிடம் மயங்க, அவர்க்காக இவர் அடிக்கும் அலம்பல் நமது வயிரை பதம் பார்க்கும்.

தனது ஓன்ரறை கண்னால் விஷால் ஒருவரை பார்க்க , அடுத்தவர் இவர் தன்னைதான் பார்கிறார் என எண்னி சண்டைக்கு வருவது இயல்பான காமெடி. அந்த பார்வை பிரச்சனையாலியே அவருக்கு காதலி கிடைப்பது அருமை.

படு காமெடியாக போகும் கதையில் கடைசி 20 நிமிடங்கள் நமது கண்ணை கலங்க செய்துவிடும். ஆர்யா, விஷால் அவர்கள் ஜோடிகள் நால்வரும் பயணம் செய்யும் கார் விபத்தில் சிக்குவதும், விஷால் பார்வை பரிபோவதும், அதனால் அவர் திருமணம் நிர்ப்பதும், அதர்க்காக ஆர்யா எடுக்கும் முடிவும் தான் கிளைமேக்ஸ்.

(தயவு செய்து படம் பார்த்தபின் கிளைமேக்ஸ்ய் யாரிடமும் சொல்லாதிர்கள்)

பாராட்டகூடிய வசனங்கள்.

  1. பொண்த்துல உள்ள ஒரு ரூபாய எடுக்கிரியே பாவம் இல்ல
-          ஒரு ரூபாவ வச்சு ஒரு டீ கூட குடிக்க முடியாது இதை வச்சு அவனை புதைக்கிரியே இதுதான் பாவம்.

  1. டேய் ! உனக்கு பொண்ணு பார்த்து இருக்கேன், பெயர் கனிமொழி
-          பொன்னு எங்கே டில்லில இருக்கா(இதற்க்கு பலத்த கைதட்டல்)
-           
  1. ஏண்டா கோவில்ல உள்ள லட்டை திருடுரியே உன்னை சாமி சும்மா விடாது.
-          அவன் அவன் கோவிலயே ஆட்டைய போடுறான், அவனையே சாமி ஒன்னும் பன்னல

  1. விஷால் : அவளை பார்த்ததும் டாவடிக்க ஆரம்பிசிடேன்
ஆர்யா : நீ இந்த கண்னை வச்சு பார்பதே அதிகம், இதுல டாவு வேறயா?
  1. காதலிக்கும் போது எதைபத்தியும் கவலபடாதவள், கல்யாணம் என்றதும் வேலை, சம்பளம் என எல்லாதயும் கேட்பாள்ளுக.


டைரக்டர் பல்பு வாங்கும் இடங்கள்

  1. திருடங்கள் என தெரிந்தும் அவர்களை போலிஸ் காதலிப்பது.

  1. விஷாலின் கண்னை அடிகடி கிண்டல் செய்வது.


  1. கதா நாயகி வீட்டில் ஆர்யா திருட போகும்போது கைலியில் இருப்பது, உள்ளே திருடும் போது பேண்ட் அனிந்து இருப்பது.


இப்படி சிறு, சிறு குறைகள் இருந்தாலும், அது தெரியாத வண்னம் திரைகதையில் கலக்கி உள்ளார் பாலா. அதுவும் இறுதி காட்சியில் வசனமும், இசையும், ஆர்யா நடிப்பும் அமர்களம்.


எதிர்பார்க்கபடும் ஆனந்தவிகடன் மார்க் : 45
எதிர்பார்க்கபடும் குமுதம் ரேட்டிங் : நன்று

எல்லா தியட்டரிலும் குறைந்தது 25 நாள் ஓடும்


நான் நேற்று இரவு தூங்கும் போது கனவில் இந்த படத்தை பார்தேன்
(ஆஹா பல்பா எல்லாருக்கும்)
 நம்பி வந்தேன் இப்படி கவுத்துடானே

Wednesday, June 15, 2011

எங்கே பார்த்தாலும் பொம்பளைகள்


 

India now ruled by..

Amma  in South
Description: cid:image001.jpg@01CC1658.6AD2E140 

Didi
in East
Description: cid:image002.jpg@01CC1658.6AD2E140

Bhenji
in North
Description:
 cid:image003.jpg@01CC1658.6AD2E140

Aunty
in the Capital
Description: cid:image004.jpg@01CC1658.6AD2E140 
 
Madam
in Center
Description: cid:image005.jpg@01CC1658.6AD2E140

Nani
on top (the president)
Description: cid:image006.jpg@01CC1658.6AD2E140

 
     & 



                     Description: "Wife At Home"

 


And yet people say.. It’s a Man's World?



Description: cid:image010.gif@01CC1658.6AD2E140


Description: bramhi
 
என்னத்த சொல்ல ?!!!

Tuesday, June 14, 2011

என்னமோ நடக்குது ...?

நம்ம எல்லாருக்கும் கிசு கிசு படிப்பதில் ஒரு ஆர்வம் உண்டு .(உதாரணம் :சி.பி க்கு முன்று மனைவி , இப்ப நாலாவதா ஒன்னுக்கு ட்ரை பண்றார் , கருண் இன்னும் 10  th  பாஸ் பன்னால )இதுபோல சினிமாவில் உள்ள சில கிசு கிசுகள் உங்களுக்காக (செய்தி உதவி : வெப்துனியா )
 
சூட்டை கிளப்பும் ‌ஜித்தன் 

படங்களே இல்லாமல் இருந்த ‌ித்தன் நடிகர் இப்போது தெரு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் விளம்பரங்களில் நமது அடுக்குமொழி தாடி நடிக‌ரின் படமும் பிரதானமாக இடம் பிடித்துள்ளது.

ச‌ரி, அஷ்டவதானியான தாடிக்காரர் இந்தப் படத்தில் நடிக்கிறாரா? இல்லை. pத்தன் இந்தப் படத்தில் தாடிக்காரன் ரசிகராக நடித்துள்ளாராம். ரசிகன் என்றாலும் தாடிக்காரரை ஏகத்துக்கும் கிண்டலடித்திருப்பதாக தகவல்கள் பரவியுள்ளது. இது அவரது ரசிகர்களின் காதுகளையும் எட்டியிருக்கிறது.

தலைவரை கிண்டல் செய்தால் நடக்கிறதே வேற என்று கண்ணில்படும் போஸ்டரையெல்லாம் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் தாடி நடிக‌ரின் விசுவாசிகள்.
 கடுப்பில் நடனப்புயல்
எந்தப் படத்தையும் எழுபது நாட்களில் முடிப்பவர் நடனப்புயல். இவர் தோரணையான நடிகரை வைத்து டிசம்ப‌ரில் படம் தொடங்குவதாக இருந்தது.

தோரணை மில்க் இயக்குன‌ரின் படத்தில் பிஸி என்பதால் நடனத்தின் கால்குலேஷனில் பெரும் பிகாகிவிட்டது.

இன்னும் சில நாள்தான் அதற்குள் வராவிட்டால் வேறு வேலை பார்க்கப் போயிடுவேன் என கறுவிக் கொண்டிருக்கிறார். 
காற்று வாங்கப் போன காதல் ஜோடி
பிரசன்ன நடிகரும், புன்னகை இளவரசியும் காதலிக்கிறார்கள் என்று ஒரு வருடம் முன்பே கிசுகிசு கிளம்பியது. அமெ‌ரிக்காவில் தயாரான அச்சம் படத்தில் நடித்த போது இவர்களின் காதல் மேலும் இறுக்கமானதாகவும் செய்தியுண்டு.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சென்னை கடற்கரையில் ஜோடியாக தென்பட்டிருக்கிறார்கள். பேன்சி நம்பர் கா‌ரில் கண்ணாடியை ஏற்றிவிட்டு இருவரும் அளவளாவிக் கொண்டிருந்தனர். கண்ணாடியை திறந்தால் ரசிகர்கள் தொந்தரவு இருக்குமே என்றுதான் இந்த பாதுகாப்பு.

இதுபற்றி கேட்டாலும் காதெலல்லாம் இல்ல... சும்மா காத்து வாங்கதான் வந்தோம் என்றுதான் பதில் கிடைக்கும் இருவ‌ரிடமிருந்தும்.
 வாய் துடுக்கு நடிகர்
வானவில் காலனியில் அறிமுகமான நடிகர் நேற்று வெளியான இராமாயண காண்டம் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் நடித்த பல காட்சிகள் வேண்டுமென்றே வெட்டப்பட்டுள்ளன.

படப்பிடிப்பில் வழக்கம் போல தனது தெனாவெட்டு குணத்தை நடிகர் காட்டியிருக்கிறார். இதனால் கடுப்பான இயக்குனர் நடிக‌ரின் காட்சிகளில் கத்தி‌ரிபோட, நடிகர் செம அப்செட். இது பஞ்சாயத்துக்கும் போனது.

தயா‌ரிப்பாளர், இயக்குனர் உள்பட அனைவரும் காத்திருக்க சாவகாசமாக சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர். பலமுறை அழைத்தும் வரவில்லையாம். ஒருவழியாக அவர் உள்ளே வர, கொதித்துப் போயிருந்த இயக்குனர் கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்திருக்கிறார்.

அப்போது ஓடிப் போனவர் பிறகு இயக்குனர் பக்கமே திரும்புவதில்லை. படம் வெளியான சாலிகிராம திரையரங்கில் இதைதான் சுவாரஸியமாக பேசிக் கொண்டிருந்தனர் நடிகரால் அவமானப்படுத்தப்பட்டவர்கள் 
 

Monday, June 13, 2011

சிறந்த பொழுதுபோக்கு வலைத்தளம் - விருது



இந்த மாதத்திற்கான சிறந்த பொழுதுபோக்கு விருதை நமது நண்பர் சி .பி . செந்தில்குமார் அவர்களின் "அட்ரா சக்க " தளம் பெறுகின்றது .

எழுதும் முறையில் , நடையில் , செய்தியில் என அனைத்திலும் அருமையான  மற்றும் நகைசுவையுடன் எழுதி படிபவரின் மனதை லேசாக மாற்றும் அதிசய நபர்.


இந்த சிறியவனின் விருதை அவர் ஏற்று கொள்ளுவர் என எண்ணுகின்றேன் .



 



Saturday, June 11, 2011

Free Internet from Airtel

இது ஒரு மீள் பதிவு (To.. . .R.K.SATHISHKUMAR ) 

 
இலவசமாக  INTERNET வேண்டுமா ?( only airtel)


1. OPEN WWW. AIRTELGURU.COM
2. download OM4.2 AG2011  software
3. Install to your mobile
4. Keeb  balance < 30 paisa


Friday, June 10, 2011

எந்த ராசிக்காரர் காதலில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் பதில்:


ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் தனி சிறப்பம்சம் உண்டு என்று கூறியிருந்தீர்கள். மனிதர்களின் பழக்க வழக்கம் கூட ராசியின் அடிப்படையில் வேறுபடும் என்றும், ஒருவர் உணவு சாப்பிடும் முறை, பிடித்த உணவு வகைகளைக் கூட ராசியைக் கொண்டு தெரிவிக்க முடியும் என்றும் சமீபத்திய கட்டுரை ஒன்றில் கூறியிருந்தீர்கள். அந்த வகையில் எந்த ராசிக்காரர் காதலில் அதிக ஆர்வம் உடையவராக இருப்பார் என்று விரிவாக் கூறுங்கள்?



பதில்: ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைபிடிப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம். கன்னி ராசிக்காரர்கள் எப்போதுமே காதலித்துக் கொண்டிருப்பவர்கள்.



காதலிப்பார்கள், காதலில் ஈடுபாடு இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்கள் என்று மேற்குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களையும் குறிப்பிடலாம். ஆனால் காதலில் வெற்றி பெறுவார்களா? காதலித்தவரை கைபிடிப்பார்களா? என்பதை அவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்தே கணிக்க முடியும்.



ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் அந்த ஜாதகர், தான்காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார். சுக்கிரன் மோசமாக இருந்தால் காதலில் தோல்வி, திருமணத்திற்கு பின் குறுகிய காலத்தில் பிரிவு போன்ற சம்பவங்கள் ஏற்படும்.



பொதுவாக எந்த லக்னம்/ராசியாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்றழைக்கப்படும் 7, 8ஆம் வீடுகளைக் கொண்டே எந்த வகையான திருமணம் அமையும் எனக் கூற வேண்டும். ஒருவருக்கு 7, 8ஆம் அதிபதி நல்ல நிலையில் இருந்து பாவ கிரகங்களின் பார்வை/சேர்க்கை இல்லாமல் இருந்தால் அவருக்கு பெற்றோர் பார்க்கும் வரன் துணைவராக அமைவார்.



களஸ்திர ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும் வலுவாக இருந்தால் நெருங்கிய உறவிலேயே (அத்தை, மாமன் முறையில்) திருமணம் நடைபெறும்.

நன்றி: webduniya.com


Wednesday, June 8, 2011

சோனா - அரசியலுக்கு வந்த சோதனை

எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் தமிழர்கள் என்பதற்காக இப்படியா? நடிகை சோனா விஜய்யின் அரசியல் செயல்பாட்டில் பங்கெடுக்கப் போகிறாராம். இது சோனாவின் பிறந்த நாள் செய்தி.

FILE
சீனாவை‌த் தெ‌ரியாதவர்களுக்கும் சோனாவை‌த் தெ‌ரியும். இருந்தாலும் ஒரு அறிமுகம். குசேலன் படத்தில் வடிவேலு பார்த்து நிற்க டைட்டான உடையில் கவர்ச்சியாக உடற்பயிற்சி செய்வாரே அவர்தான் இந்த சோனா. வெளுத்த தோல், கும்மென்ற உடல்வாகு. இவைதான் அவ‌ரின் சினிமா முதலீடு. அர‌சிய‌ல்வா‌திக‌ளி‌ன் குடு‌ம்ப‌த்‌தின‌ர் ஊரை அடித்து உலையில் போடும் ஆபாசத்துடன் ஒப்பிடுகையில் சோனாவின் முதலீடு எவ்வளவோ கௌரவமானது.

சோனாவுக்கு நேற்று பிறந்தநாளாம். நடிகர் விஜய் ரசிகர்களின் பிள்ளைகளை அழைத்து வந்து கேக் வெட்டியிருக்கிறார். விஜய்யை எனக்குப் பிடிக்கும் அதனால் அவரது ரசிகர்களின் பிள்ளைகளுடன் பிறந்தநாளை கொண்டாடினே‌ன் என்றார் சோனா. அவர் யாருடன் வேண்டுமானாலும் பிறந்தநாள் கொண்டாடட்டும். அது அவ‌ரின் சுதந்திரம். அடுத்து சொன்னதுதான் கவனிக்க வேண்டியது. விஜய்யை பிடிக்கும் என்பதால் அவரது அரசியல் செயல்பாட்டிலும் பங்கெடுக்கப் போகிறாராம். அதாவது அரசியலுக்கு வரப் போகிறாராம் சோனா.

விஜய்யின் அரசியல் செயல்பாடு... அதுதான் வேடிக்கை. அடுத்த முதல்வர் ஆசையில் காய் நகர்த்திக் கொண்டிருப்பவர் விஜய் என்பது ஊருக்கே தெ‌ரியும். முதல்வர் ஆக வேண்டும் என்றால் குறைந்தபட்சம் நாட்டுப் பிரச்சனையில் ஆர்வம் இருப்பது போல் நடிக்கவாவது வேண்டும். ஈழப் பிரச்சனையா... ரசிகர்களே பிரதமருக்கு தந்தி குடுங்க, தண்ணிப் பிரச்சனையா... ரசிகர்களே முதல்வருக்கு கார்டு போடுங்க, விலைவாசிப் பிரச்சனையா... வெள்ளையனுக்கு எஸ்எம்எஸ அனுப்புங்க. இதுதான் இளையதளபதியின் அதிகபட்ச அரசியல் செயல்பாடு.

WD
காவலன் படத்துக்கு நெருக்கடி என்றதும் எதிர்தரப்பை பயமுறுத்துவதற்காக நாகப்பட்டினத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார். எனக்கு இவ்வளவு ஆட்கள் இருக்காங்க, சும்மா எங்கிட்ட விளையாடாதீங்க என்று திமுக தரப்பை பயமுறுத்தி தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாகப்பட்டினத்தில் கூட்டத்தை கூட்டிவிட்டு, மீனவர்கள் பாதுகாப்புக்காக என்று வெட்கமே இல்லாமல் புளுகினார்கள். திமுக இருந்தால் தொழில் செய்ய முடியாது என்று அதிமுக-வுக்கு ஆதரவு அளித்ததில் சுயநலமில்லாமல் வேறென்ன அரசியல் செயல்பாடு இருக்கிறது?

அதுவும் வெளிப்படையாக ஆதரவை தெ‌ரிவிக்க இளைய தளபதிக்கு பயம். எதிர்ப்பு அலையையும் மீறி திமுக ஆட்சிக்கு வந்தால் ஆப்பாகிவிடுமே என்று தனயனுக்குப் பதில் தந்தை வாய்ஸ் கொடுத்தார். அதுவும் எப்படி? யாருக்கு ஓட்டுப் போடணும்னு விஜய் ரசிகர்களுக்கு தெ‌ரியும், அவங்க ச‌ரியா போடுவாங்க என்று செப்பிடு வித்தைக்காரன் போல் பூசி மெழுகத்தான் முடிந்தது. அட.. யாருக்கு ஆதரவுன்னு வெளிப்படையா சொல்ல முடியாத இந்த புடலங்காய் அரசியல் செயல்பாட்டில்தான் நமது கவர்ச்சிக் கன்னி பங்கெடுத்துக் கொள்ளப் போகிறாராம்.

சோனாவால அரசியல்ல என்ன செய்ய முடியும். இதுக்கெல்லாம் எதிர்வினையா என்று பாராமுகமாக இருந்துவிட முடியாதபடி கேவலமாகப் போய்க் கொண்டிருக்கிறது தமிழக அரசியல். இவரைப் போன்ற செல்லாக் காசுகள்தான், இந்தத் தோல்வி திமுக-வின் தோல்வியல்ல மக்களின் தோல்வி என்று மீடியாக்களின் முன் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

நாராயணா... என்ன கொடுமை இது. 
Thanks: Webduniya 

Tuesday, June 7, 2011

இறைவனு‌க்கு 16 ப‌ணி‌விடைக‌ள் (ஆன்மிகம் )



திருமணமுடித்தவர்களை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க என்று வாழ்த்துவோம்.

அதாவது கல்வி, மகிழ்ச்சி, செல்வம் உள்ளிட்ட பதினாறு செல்வங்களைப் பெற்று வாழ்க என்பது அதன் பொருள்.

அது போல இறைவனை உபசரிப்பதிலும் 16 பணிவிடைகள் உள்ளன.

அதாவது வீட்டிற்கு வரும் இறைவனை விருந்தினரைப் போல பாவித்து எவ்வாறு எல்லாம் உபசரிப்பது என்பதுதான் இந்த 16 பணிவிடை.

முதலில் இறைவனை வரவேற்று அமருவதற்கு ஆசனம் அளிக்க வேண்டும்.

அவரது கால்களை கழுவ நீர் தர வேண்டும். அதனை பாத்யம் என்பர்.

கை கழுவ நீர் அளிப்பதை அர்க்யம் என்பார்கள்.

தூய்மை அடைந்ததும் குடிப்பதற்கு நீர் வழங்க வேண்டும். இதனை ஆசமநீயம் என்பார்கள்.

உடலை தூய்மைப்படுத்த அபிஷேகம் செய்வார்கள். அதாவது திருமுழுக்கு.

அணிந்து கொள்ள ஆடைகள் அளிக்க வேண்டும். உடலை நறுமணத்துடன் வைக்க நறுமணப் பொருட்கள் அளிக்க வேண்டும்.

மலர் மாலைகளைச் சூட்டி அழகூட்ட வேண்டும்.

அவர்களைச் சுற்றி நறுமணம் வீச நறுமணப் பொருட்களை புகையிடுதல் வேண்டும். அதாவது ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை தூபம் போடுதல்.

இறைவன் அருகில் ஒளி விளக்குகளை ஏற்றி அவரை மும்முறை சுற்றி வருதல் அல்லது வலம் வருதல்.

அவர் வாயிறாற உண்ண நைவேத்யம் செய்தல், உணவுப் பொருட்களைப் படைத்தல்.

கற்பூரம் கொளுத்திக் காட்டி இறைவனை வணங்குதல்.

இறைவனை சுற்றி எவ்வித தொல்லையும் இல்லாத வண்ணம் சாமரம் வீசி விட வேண்டும்.

காற்று வர விசிறி கொண்டு வீசுதலும் செய்தல் நலம்.

இறைவனுக்கு குடை கவித்தல் வேண்டும். இதனை சத்ரம் என்பார்கள்.

அவருக்கு கண்ணாடி காட்டி தான் இருக்கும் கோலத்தை காண்பிப்பது தர்ப்பணம் என்பார்கள்.
thanks: webduniya

Monday, June 6, 2011

வடிவேலு சினிமாவில் நடிக்க தடை- நடிகர் சங்கம் முடிவு





சென்னை-இன்று நடைப்பெற்ற நடிகர் சங்க சிறப்பு கூட்டதில் நடிகர் வடிவேலு இனி நடிக்க காலவரையற்ற தடைவிதிக்க படுவதாக முடிவு செய்யப்பட்டது.

கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் மிகசிறந்த நகைசுவை நடிகராக விளங்கியவர் நடிகர் வடிவேலு. சில படங்களில் கதா நாயகனாகவும் நடித்தார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவர் நடிப்பை ரசிகாதவர்கள் இல்லை. அவரது பல வசனங்கள் பிரபலமானவை.

2011 தேர்தல்

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க க்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். ஆரம்பத்தில் இவரது பேச்சை ரசித்த மக்கள், போக போக இவர் விஜயகாந்தை தரம்கெட்டு விமர்ச்சிததை வெறுத்தனர். ஒரு பெண் என்றும் பாராமல் விஜய்காந்த் மனைவியை அது, இது என விமர்ச்சித்தது கடும் கண்டனதை கிள்ப்பியது.

ரஜினியின் “ரானா” வை கிண்டல் பன்னியது

2011 தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கு சாதகமாக இருக்கும் என்ற நினைப்பில் ரஜினியின் “ரானா” வை ரானாவாது, கானாவாது என கிண்டல் பன்னியது திரைதுறையினரை கொதிப்படைய செய்தது. தேர்தல் முடிவுகள் அவருக்கு பாதகமாக வந்ததும் மதுரை போய் பதுங்கிகொண்டார்.

சினிமாவில் நடிக்க தடை

இந்நிலையில் இன்று நடந்த நடிகர்கள் சங்க சிறப்பு கூட்டதில் வடிவேலுக்கு காலவரையற்ற தடைவிதிக்கப்பட்டது. விஜய்காந்தை விமர்ச்சிததுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும், இனி அரசியலையும் சினிமாவையும் கலக்க மாட்டேன் என எழுத்து மூலம் உறுதியளிக்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆதரவும், எதிர்ப்பும்

இந்த தடைக்கு ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஷால், சிம்பு, தனுஷ், சந்தானம், செந்தில், திரிஷா, லட்சுமிராய், டாப்ஸி மற்றும் பலர் ஆதரவு தெருவித்துள்ளனர்.

நடிகர் சந்திரசேகர், குஷ்பு, இயக்குனர் ராம நாராயனன் ,விவேக் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வடிவேலு பேட்டி

இதுபற்றி வடிவேலுவிடம் கேட்டதுக்கு “இது ஜன நாயக படுகொலை, இதை பற்றி நான் உச்ச நீதி மன்றம் வரை செல்வேன், அங்கும் நீதி கிடைக்காவிட்டால் தீகுளிப்பேன்” என தெரிவித்தார்.

இது பற்றிய மேலும் பல விவரங்கள் விரைவில் வரும் என நமது DND நிருபர் தெரிவித்தார்.

DND பற்றியும் அதன் உரிமையாளர், நிருபர் பற்றியும் தெரியாதவர்கள் கீழே பார்க்கவும்.



DND (DUPAKUR NEWS DEVELOPERS)
OWNER and REPORTER  : ராஜா (ராஜா, ராஜா  ராக்கெட் ராஜா)