இன்றைய அவசர வாழ்க்கை சூழலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் எதிர்கொள்கிற பிரச்னை தான் அல்சர்(குடல் புண்).
குடல் புண் எதனால் ஏற்படுகிறது?
உணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே குடல்புண் எனப்படும்.
அதாவது வயிறு மற்றும் குடல்களின் சுவர்களில் ஏற்படும் புண் என்றும் கூறலாம்.
பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம்.
குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும், நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.
கலப்பட உணவு, அசுத்த குடிநீர், மோசமான சுற்று சூழலாலும் ஹெலிகோபேக்டர்
பைலோரி (Helicobactor pylori) என்ற பாக்டீரியாவாலும் குடல் புண்
ஏற்படுகிறது.
குடல் புண்ணுக்கான அறிகுறிகள்
* வயிற்றில் எரிச்சலுடன் கூடிய கடுமையான வலி
* நெஞ்செரிச்சல்
* வயிறு வீங்குதல்
* பசியின்மை, உடல் எடை குறைதல்
* வாந்தி, குமட்டல், வாயுக்கோளாறு
எதை தவிர்க்க வேண்டும்?
* காரமான உணவுப் பொருட்களை தவிர்த்து, உடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும், பின் இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
* புகைபிடிக்கக் கூடாது, மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
* சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால்
சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல்
ஏற்படலாம்.
* காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
* டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச்
சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள
வேண்டும்.
* மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
சாப்பிட வேண்டியவை
* சத்தான சரிவிகித உணவு, குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.
* பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
* பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ
ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது
நீர்த்துப் போய் விடுகிறது.
* உடல் எடை குறைய, அல்சர்,
கொலஸ்ட்ரால் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, ரத்தப்புற்று குணமடைய
அருகம்புல் ஒரு சிறந்த டானிக். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச்
செய்வதில் சிறந்தது அருகம்புல்தான்.
* கொத்தமல்லியை தினமும்
உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல டானிக்
ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம்,
வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
* மஞ்சள் காமாலை, அல்சர்,
தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி
முதலியவற்றிற்கு சிறந்தது வல்லாரை. தினமும் 2 வேளை சிறிதளவு இலைகளை
சாப்பிடலாம்.
* மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலம்
ஜீரணக் கோளாறுகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா,
தோல் வியாதிகள் முதலியவற்றை கட்டுப்படுத்தலாம்.
டிஸ்கி : நன்றி மெயில் அனுப்பிய நண்பருக்கு