> என் ராஜபாட்டை : December 2014

.....

.

Friday, December 19, 2014

விவேகானந்தர் – இந்திய மறுமலர்ச்சி நாயகன் : நூல் விமர்சனம்




                      “நூறு இளைஞர்களை தாருங்கள் , இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் “ என சொன்ன அறத்துறவி “விவேகானந்தர்  “ பற்றிய தொகுப்புகள்தான் இந்த நூல்.

ஆசிரியர் :

 நூலின் ஆசிரியர் பலரும் அறிந்த ரஞ்சனி நாராயணன் அவர்கள். இவரின் முதல் நூல் இது . வலைதளங்களிலும் , பத்திரிக்கைகளிலும் எழுதிவரும் அருமையான எழுத்தாளர் .

நூலை பற்றி :

 பாரதியாரின் வார்த்தைகளுடன் இந்த நூல் துவங்குகிறது. விவேகானந்தர் பிறந்த நாள் முதல் அவர் எப்பொழுது ராமகிருஷ்ணரை சந்தித்தார் , அவரிடம் எப்படி சீடனாக சேர்ந்தார் , அதானால் அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்ன , ராமகிருஷ்னா மிஷன் எப்போது , எப்படி துவங்கபட்டது என முதல் 43  பக்கங்கள் ஓடிவிடுகிறது .பின்னர் அவரின் சுற்றுபயணங்கள் பற்றிய விவரங்கள் வருகிறது. பயண கட்டுரைகள் எப்போதும் போர் அடிக்கும் ஆனால் இங்கு இடையிடையே நமக்கு அதிகம் தெரியாத சில தகவல்கள் வருவதால் போரடிக்கவில்லை .

 உதாரணம் :

சுவாமிஜியின் முதல் சீடர் பெயர் “சரத் சந்திர குப்தர் “

பவஹாரி என்றால் காற்றை சாப்பிடுபவர் என அர்த்தம் .

சிக்காகோவில் பயணத்தில் சுவாமிஜி தங்க உதவியவர் மிஸ் கேத்ரின் ஆப்ட் சேன்பான் .

பட்டினியில் கிடக்கும் ஒருவனிடம் மதத்தை பற்றி பேசுவது அவனை அவமதிப்பது போல – சுவாமிஜி

நல்லவர்களை எதிர்க்க கண்டிப்பா நாட்டில் நாலுபேராவது இருப்பாங்க , அதுபோல சுவாமிஜியை எதிர்த்து “வங்கவாஸி “ என்ற பத்திரிகை எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தது .

அவரின் வாழ்கையை பத்து அத்தியாயங்களாக பிரித்து எழுதியுள்ளார். இந்த வருடம் அவரின் 151 வது வருடம்.

 “அனைத்துப் பரிமாணத்திலும் மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியே விவேகானந்தரின் செய்தி “ என்ற ரவீந்தரநாத் தாகூரின் வரிகளுடன் நூல் முடிகிறது .

சிறப்புகள் :

மறைந்த நபர்களை பற்றி எழுதும் போது அனைவரும் அறிந்த செய்திகள்தான் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்த நூலில் பல விஷயங்கள் புதிதாக உள்ளன. அதனால் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது .

மழுப்பாமல் சில விஷயங்கள் நேரிடையாக சொல்லபடுகிறது. உதாரணமாக கிருஸ்துவ மிஷன்கள் இந்துக்களை மதம் மாற செய்த செயல்கள் பற்றிய விவரம்.

விவேகானந்தர் சென்ற இடங்களை பற்றி வரிசையாக எழுதியது.

அதிக அத்தியாயங்கள் இழுக்காமல் சுருக்கமாக முடித்தது .

குறைகள் :

(குறை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை , ஒரு வாசகனாக சில பரிந்துரைகள்/ ஆசைகள் ) ....

வெறும் வார்த்தைகளாக இல்லாமல் விவேகானந்தரின் மாறுபட்ட படங்களை இடையிடையே போட்டிருக்கலாம் .

ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பத்திலும் , இறுதியிலும் அவரின் பிரபலமான / முக்கியமான வரிகளை சேர்த்திருக்கலாம் .

துன்பம் அதிகமானதால் தான் அவர் காளியை ஏற்றுகொண்டார் என்பது போல உள்ளது இது சரியா என தெரியவில்லை .

பதிப்பகத்துக்கு :

ஒவ்வொரு நூலிலும் ஆசிரியரை பற்றி , அவர் எழுதிய பிற நூல்களை பற்றி ஒரு பக்கம் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறன் ,

மொத்தத்தில் மாணவர்கள் மட்டுமல்ல அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது என்பதில் சந்தேகம் இல்லை .


குறிப்பு : இது மதிப்புரை.காம் தளத்தில் நான் எழுதிய பதிவு .

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-97-5135-166-5.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

Wednesday, December 17, 2014

இலவசமாக பேச இரண்டு ஆண்ட்ராய்ட் APPLICATIONS






                இன்று ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தினம் தினம் புது புது ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் வந்த வண்ணம் உள்ளது . அவற்றில் பல தேவையில்லாத, நமது நேரத்தை , காசை வீணடிக்கும் வகையில் உள்ளது . மிக சில அப்ளிகேஷன்கள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . அப்படி நமக்கு மிகவும் உதவக்கூடிய , இலவசமாக பேச உதவும் இரண்டு அப்ளிகேஷன்களை பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம் .

1. BIGO 

                    இது மிகவும் பயனுள்ளது . இதன்மூலம் உலகம் முழுவதும் இலவசமாக பேச முடியும் . இந்த அப்ளிகேஷன் உள்ளவர்களிடம் பேசுவதுமட்டுமல்லாமல் , இதை பயன்படுத்தாத மற்றவர்களிடமும் பேசமுடியும் .

பயன்கள் :

மிக சிறிய அப்ளிகேஷன் .

அனைத்து நாட்டுக்கும் பேசலாம் .

இலவசமாக கிடைகிறது .

இந்த அப்ளிகேஷன் மற்றவர்கள் இன்ஸ்டால் செய்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை .

மொபைல் மட்டும் இன்றி லேண்ட் லையனுகும் பேசமுடியும் .

இந்த அப்ளிகேஷன் உள்ளவரிடம் பேச நேர அளவு இல்லை (UNLIMITED CALLS..)

மாதம் மாதம் லாகின் செய்தால் தனியாக கிரடிட் ஏறுகிறது .



நிபந்தனைகள் :

முதலில் சேரும் போது 600 பாயிண்ட் கிரடிட் சேரும் இதைதான் இலவசமாக பேசமுடியும் .

உங்கள் மூலம் யாராவது இணைந்தால் எக்ஸ்ட்ராவாக 300 பாயிண்ட் சேரும் .

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நிமிடத்துக்கு எத்தனை பாயிண்ட் என்பது மாறுபடும் .

உங்கள் நண்பர்களால் கிடைக்கும் பாயிண்ட் அடுத்த மாதத்திற்கும் சேர்ந்துவரும் .

WI-FI, 3G இல் மிக அருமையாக வேலை செய்கிறது .

இந்த அப்ளிகேஷனை தரவிறக்க :  CLICK HERE



2. NANU 


            இதுவும் இலவசமாக பேச உதம் அப்ளிகேஷன் தான் . இதுவும் இலவசமாக கிடைகிறது . மேலே சொன்ன அப்ளிகேஷன் போல் இதும் மிகவும் பயனுள்ள ஒன்றுதான் .

நன்மைகள் :

கால் குவாலிட்டி மிகவும் அருமையாக உள்ளது .

2G இல் கூட தெளிவாக பேசமுடியும் .

இலவசமாகவே கிடைகிறது .

தரவிறக்கம் செய்ய :  CLICK HERE
                                                                   OR
 


நிபந்தனைகள் :

மாதம் 15 நிமிடங்கள் மட்டுமே இலவசம் .

நண்பர்களை இணைப்பதால்எந்த கிரடிட்டும் கிடைபதில்லை .



                           நண்பர்களே .. மேலே சொன்ன இரண்டையும்பயன்படுத்தி பாருங்கள் . முழுமையாக இலவசமாக கிடைக்காவிட்டாலும் இவ்வளவு இலவசம் என்பது சந்தோஷம்தானே .

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்