> என் ராஜபாட்டை : May 2016

.....

.

Friday, May 27, 2016

படித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)


   நம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான நூல்கள் உங்களுக்காக இலவசமாக...


1. PHP un Tamil

   PHP கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள், கணிபொறி வல்லுனர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் இது. மிக எளிய நடையில் இஸியாக புரியும் வகையில் இந்த நூல் உள்ளது .


நூலை தரவிறக்கம் செய்ய : click above ads   or CLICK HERE

2. தியாகபூமி : கல்கி 

        தமிழின் மிக சிறந்த எழுத்தாளர்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக இடம்பிடிக்கும் அருமையான எழுத்தாளர் கல்கி அவர்களின் நூல் இது. படிக்கச் படிக்க ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுத்து நடை அமைந்துள்ளது . கண்டிப்பாக படித்துபாருங்கள்.



நூலை தரவிறக்கம் செய்ய : click above ads   or CLICK HERE

3. JAVA in Tamil


     

JAVA இன்றைய நிலையில் மிகவும் இன்றியமையாத கணினி மொழியாகும். இதனை  கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள், கணிபொறி வல்லுனர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் இது. மிக எளிய நடையில் இஸியாக புரியும் வகையில் இந்த நூல் உள்ளது .



நூலை தரவிறக்கம் செய்ய : click above ads   or CLICK HERE

4. ADOBE PHOTOSHOP in Tamil

      போட்டோஷாப் இன்று மிகப்பெரிய அளவில் பயன்படுத்த படுகிறது. DTP துறையில் , பத்திரிகை துறையில் என அனைத்து துறைகளிலும் இது மிக முக்கியமாக உள்ளது. இதை கற்றுக்கொள்ள இந்த நூல் மிகவும் பயன்படும்.

 

நூலை தரவிறக்கம் செய்ய : click above ads   or CLICK HERE




Sunday, May 15, 2016

பென்சில் : சினிமா விமர்சனம்




         

 

இதையும் படித்து விடுங்கள் :

AIRTEL இலவச இன்டர்நெட் (ONLY ANDROID USERS)


அறிமுக இயக்குனர் மனிநாகராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ,ஸ்ரீ திவ்யா, விடிவி கணேஷ் சுஜாதா நாயுடு, ஊர்வசி மற்றும் பலர் நடித்த படம் இது. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து தற்பொழுது வெளிவந்துள்ளது.


கதை :
         பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே நிகழும் பிரச்சனைகள், செயல்பாடுகள் பற்றிய கதை. இடையே திகிலுடன் ஒரு கொலையையும் இணைத்து உள்ளார்கள். நல்ல புள்ள பிரகாஷ், எல்லா கேட்ட பழக்கமும் உள்ள “சூப்பர் ஸ்டார்” மகன் நித்தின். பெண்கள் குளிக்கும் அறையில் கேமிரா வைப்பது, பெண்களை மயக்குவது என ஜாலியா இருக்கான்.

      படத்துவக்கத்திலேயே நித்தின் யாரோ ஒருவரால் பென்சிலால் குத்தி கொல்லபடுகிறார். அவரை போன்றது யார்? தனது தீசிஸ் பேப்பரை எரித்ததால் பிரகாஷ் கொன்றாரா? தனது காதலனுடன் இருந்ததை படம்பிடித்து மிரட்டியதால் ஆசிரியர் கொன்றாரா? தன்னை பிளாக்மெயில் செய்ததால் சக மாணவி கொன்றாரா? பள்ளியில் வேலை செய்யும் ஊழியருடன் பிரச்சனை செய்ததால் அவர் கொன்றாரா? பள்ளியில் வளர்சியை தடுக்க நினைக்கும் எதிர் அணி பள்ளி நிர்வாகம் செய்ததா? அடிதடி பிரச்சனையால் குப்பத்து ஆள் செய்தாரா? என பல டுவிஸ்ட் வைத்துள்ளனர். விடை யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

+ பாயிண்ட்ஸ் :

  • திரைகதை. படம் ஆரம்பித்த உடனே கதைக்குள் செல்கிறது. ஒவ்வொரு பிரச்சனையும் ஏன் நடத்தது என அழகான பிளாஸ்பேக் மூலம் விளக்கியுள்ளார்.
  • ஜி.வி.பிரகாஷ் கொஞ்சம் நடிக்கிறார். 

  • ஸ்ரீ திவ்யா ஸ்கூல் பொண்ணு என்பதை ஜீரணிக்க கஷ்டமாதான் இருக்கு. ஆனாலும் அருமை.

  • வில்லன் நடிகர், பார்வையாலேயே கெட்டபெயர் வாங்குகிறார். நல்ல நடிப்பு.
  • வசனம் மிக அருமை. அதுவும் இறுதி காட்சியில் வரும் வசனம் ஒவ்வொன்றும் சாட்டையடி. இன்றைய கல்விமுறை , ஊடகங்கள் நிலை பற்றி அருமையா விளாசியுள்ளனர்.
  • யார் கொலையாளி என்பதை கடைசிவரை மெயின்டைன் செய்தது.
  • இவர் கொலை செய்திருப்பாரோ என எல்லார் மேலும் சந்தோகம் வரவைத்த யுக்தி அருமை.
  • பின்னணி இசை அருமை.


-    பாயிண்ட்ஸ்:

  •  இவ்வளவு கேவலமாக நடக்கும் ஒரு மாணவனை பள்ளி எப்படி இவ்வளவு நாள் வைத்துகொள்கிறது . பள்ளிக்குள் / வகுப்பில் செல் வைத்திருப்பதை பிரின்சிபால் சகஜமாக எடுத்துகொள்வது எப்படி ?
  • ISO சான்றிதழ் வழங்க ஆய்வுக்கு வரும் போது இவ்வளவும் நடக்குது ஆனா ஒரு சத்தம் கூட இல்லை எப்படி ?
  • பாடல்கள் ரொம்ப சுமார்.
  • எதிரி பள்ளியில் பிரச்சனை செய்ய வேறு பள்ளி ஓனரே நேரில் வருவது நடக்கும் காரியமா?
  • மாணவர்களின் சேட்டையை இன்னும் அதிகமாக்கி கலகலப்பாக கொண்டு சென்றிக்கலாம்.


மொத்தத்தில் :

ஒரு நல்ல கிரைம் திரிலரை அனுபவிக்க நினைபவர்கள் போகலாம். ஆனால் முடிவை யாரிடமும் கேட்காமல் போகணும்.


Saturday, May 14, 2016

AIRTEL இலவச இன்டர்நெட் (ONLY ANDROID USERS)





நாம எல்லாரிடமும் இன்று ஆண்ட்ராய்ட் போன் உள்ளது. ஆனால் இண்டர்ட்பேக் போட்டே ஏழையாய் போகிறோம். இனி அந்த கவலை இல்லை. AIRTEL பயன்படுத்தும் அனைவரும் இனி இன்டர்நெட்டை இலவசமாக பெறலாம்.

தேவை :

  • ஆண்ட்ராய்ட் போன் 

  • AIRTEL SIM

  • முக்கியமானது அந்த சிம்மில் 0 BALANCE இருக்கவேண்டும்.

எவ்வாறு பயன்படுத்துவது ?

முதலில் DROIDVPN என்ற அப்ளிகேஷனை இங்கே அல்லது GOOGLE PLAYSTORE இல் தரவிறக்கவும்.



அதில் உங்களுக்கு ஒரு கணக்கை உருவாக்கவும்.


உங்கள் USER NAME/ PASSWORD கொடுத்து உள்ளே செல்லவும் :


I TRUST THIS APPLICATION என்பதை தெரிவு செய்யவும்.


CONNECTION PROTOCOL என்பதில் TCP யை தெரிவு செய்யவும்.


அடுத்து HTTP HEADERS என்பதை கிளிக் செய்யவும்.


அதில் கீழே உள்ளவாறு டைப் செய்யவும்.



Host:one.airtel.in
X-Online-Host:one.airtel.in


அடுத்து  free server 6 The Netherlands  என்பதை தெரிவு செய்யவும்.



கீழே உள்ள connect பட்டனை கிளிக் செய்யவும்.


குறிப்பு :

  • free server 6 The Netherlands மட்டுமே இப்போது வேலை செய்கிறது.

  • கண்டிப்பாக உங்கள் சீம்மில் ஜீரோ தொகை இருக்கவேண்டும். இல்லை என்றால் உங்கள் மெயின் பேலன்சில் இருந்து பணம் போகும்.
           Host:one.airtel.in
           X-Online-Host:one.airtel.in     இதை அப்படியே டைப் செய்ய வேண்டும். 
        ஒரே  லயனாக அடிக்க கூடாது.

  • நான் பயன்படுத்தி வருகிறேன். தமிழ் நாட்டில் இது வேலை செய்கிறது.

Friday, May 6, 2016

24 – திரைவிமர்சனம்



   

சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிப்பில், “யாவரும் நலம்” படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் , A.R.ரஹ்மான் இசையில் சூர்யா , சூர்யா , சூர்யா ,(மொத்தம் மூணு சூர்யா அதான் ) சமந்தா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்தான் 24.

கதை :
   1990 இல் நடக்கும் கதையில் சேதுராமன் என்ற சூர்யா கால இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார். இதை அவரிடம் இருந்து ஆட்டையைபோட நிக்கும் அவரது அண்ணன் ஆத்ரேயா (இரண்டாவது சூர்யா ) சேது மற்றும் அவரது மனைவியை போட்டுத்தள்ளுகிறார். இந்த பிரச்சனைக்கு நடுவில் சேதுவின் குழந்தை சரண்யா பொன்வண்ணனிடம் சேர அது வளர்ந்து மணி (மூன்றாவது சூர்யா ) என்ற பெயரில் வாட்சு மெக்கானிக்காக வளர்கிறார்.

   சந்தர்பவசத்தால் டயம் மெஷின் வாட்சு சூர்யாக்கு கிடைக்க அதைவைத்து சமந்தாவை காதலிக்க வைக்கிறார். 26 வருடங்களுக்கு பின் பக்கவாதம் வந்த ஆத்ரேயா தான் குனமாகவேண்டும் என்றால் 26 வருடம் பின்னோக்கி செல்லவேண்டும் என நினைக்கிறார். சூர்யாவிடம் உள்ள கால இயதிரத்தை எப்படி கைப்பற்றினார்? கடந்தகாலம் சென்றாரா? இன்றைய சூர்யாவின் கதி என்ன / சமந்தா சூர்யா காதல் என்னவானது என்பதே மீதி கதை .



+ பாயிண்ட்ஸ் :

  • -    சூர்யா , சூர்யா , சூர்யா , படம் முழுவதும் சூர்யா மட்டுமே. மூன்று வேடத்துக்கும் அவர் காட்டும் வித்தியாசம் கலக்கல்.

  • -    வில்லன் சூர்யாவின் மிரட்டல் நடிப்பு. இறுதி காட்சியில் நக்கலாக பேசுவது.

  • -    வழக்கமான அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், இயல்பான நடிப்பில் கவர்கிறார். அதுவும் சூர்யாவிடம் தனது கடந்த காலத்தை சொல்லும் இடம் சூப்பர்.
  • -    காலம் என் காதலி – பாடல் இசை, செட்டிங் எல்லாம் அருமை.
  • -    ஒளிபதிவு கலக்கல் . டயம் பிரிஸ் காட்சிகளில் ஒளிபதிவாளரின் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள் .
  • -    பின்னணி இசையில் இசைப்புயல் பின்னி பெடலேடுத்துளார்.
  • -    கிரிகெட் கிரவுண்டில் சூர்யா செய்யும் சேட்டை.

-    -

-பாயிண்ட்ஸ் :


  • -      படத்தின் நீளம். 2.40 மணிநேரம் ஓடுவது ரொம்ப அதிகம். எடிட்டர்   கொஞ்சம் கத்திரியை பயன்படுத்தி இருக்கலாம்.

  • -    சமந்தா –சூர்யா காதல் போர்ஷன்  ரொம்ம்ம்ப நீளம். நமக்கு தாடி முளைபதுபோல தோன்ற ஆரமித்து விடுகிறது.
  • -    தமிழ் சினிமாவின் பார்முலாபடி மூளை இல்லாத படித்த பெண்ணாக சமந்தா .
  • -    ஒரு பாடலை தவிர மற்றது எல்லாம் வேஸ்ட். அதுவும் கிளைமேக்ஸ் முன்பு வரும் பாடல் செம கொடுமை.
  • -    சூர்யா அடிகடி (மூச்சுக்கு முப்பது தடவை ) I AM WATCH machanic என சொல்வது செம போர் .
  • -    சுத்தலான திரைகதை. திரைகதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
  • -    சமந்தா குடும்ப கதை தேவையில்லாத ஒன்று. எவ்வளவு நடிகர்கள் பட்டாளம் அதில். ஆளுக்கு ஒரு டயலாக் என பிரிச்சு கொடுத்துடாங்க.(ஒரே ஒரு டயலாக்தான் )
  • -    அற்புதமான நடிகர் கிரீஸ் கர்னாட் வேஸ்ட் செய்யபட்டது கொடுமை.



மொத்தத்தில் :
தமிழில் சயின்ஸ் பிக்ஷன் படங்கள் வர வேண்டும் என விரும்புபவர்கள் பார்க்கலாம். மற்றவர்கள் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் கொஞ்சம் சந்தோஷப்படலாம்.