> என் ராஜபாட்டை : August 2017

.....

.

Thursday, August 31, 2017

AADHAR மற்றும் PAN கார்டை இணைப்பது எப்படி?




             நமது அனைத்து பண பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க அரசு நமது PAN கார்ட்டுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லியுள்ளது. இதை செய்ய இன்றே கடைசிநாள் என சொன்னார்கள். ஆனால் இப்போது அந்த அவகாசம் டிசம்பர் 31 வரை நீடிக்கபட்டுள்ளது.

நாமே எப்படி நமது ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பது என்பதை இன்று பார்ப்போம்.

1. முதலில் இங்கே கிளிக் செய்து அரசு இணையதளத்துக்கு செல்லவும்.

2. அங்கே கீழே உள்ளது போல ஒரு பக்கம் தோன்றும்.



3.  அதில் முதலில் உள்ள காலத்தில் உங்கள் பான் கார்ட் எண்ணை கொடுக்கவும்.

4. அடுத்த காலத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுக்கவும்.

5. அடுத்த காலத்தில் ஆதார் அட்டையில் உங்கள் பெயர் எப்படி உள்ளதோ அப்படியே கொடுக்கவும். (அப்பா பெயருடன் பெரும்பாலும் இருக்கும்.)


6. அடுத்த வரியில் தோன்றும் படத்தில் உள்ள எழுத்துகளை தவறில்லாமல் கொடுக்கவும்.

7. இறுதியாக LINK AADHAR பட்டனை கிளிக் செய்யவும்.