சில தினங்களுக்கு முன்பு ஏன் உறவினர் ஒருவர் மயிலாடுதுறையில் உள்ள LKS நகை கடையில் ஒரு நகை எடுத்தார். அவர் வாங்கிய நகையை பார்த்தேன். நன்றாக இருந்தது. விலையை பற்றி பேச்சு வந்தது. நகை ரசீதை காட்டுங்கள் விலையை பார்க்கலாம் என கேட்டு வாங்கி பார்த்தால் பெரிய அதிர்ச்சி. காரணம் அந்த ரசீதை கீழே குடுத்துள்ளேன் நீங்களே பாருங்கள் தெரியும்.
- இதில் எந்த இடத்திலும் கடையின் பெயர் இல்லை
- வாங்கிய பொருளின் பெயர் இல்லை
- பொருளின் அளவு , செய்கூலி , சேதாரம் பற்றி ஒன்றும் இல்லை
- கடையின் விதிமுறைகள் ,வரிகள் பற்றி ஒன்றும் இல்லை
இதைவிட ஒரு கொடுமை , நகையின் அளவு 7.750 என போட்டிருந்ததாம், ஆனால் அளக்கும் போது 7.640 மட்டும் இருத்து இருக்கிறது காரணம் கேட்டதுக்கு அங்கு உள்ள விற்பனையாளர் சொன்ன பதில் காமெடியின் உச்சகட்டம். அவர் சொல்லியுள்ளார் “ எடை மெஷினில் உள்ள பாத்திரத்தில் எடைபோட்டால் இரு அளவு நகையை மட்டும் போட்டதால் ஒரு அளவு , முன்பு உள்ளது பாத்திரத்துடன் போட்ட அளவு “ என்று சொல்லியுள்ளார். நாம நகை வாங்க போறோமா அல்லது நகையுடன் அந்த எடை மிஷினில் உள்ள பாத்திரத்தையும் வாங்கபோகிரோமா ?
இவர்கள் இந்த விற்பனைக்கு வரி கட்டுவார்களா ? எந்த விலையின் அடிப்படையில் வரிகட்டுவார்கள்? நகை வாங்கும் அனைவரும் பில் போட்டு நகை குடுங்கள் என கேட்க தெரிந்தவர்கள் என சொல்லமுடியாது ? இது அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை இல்லையா ? இதை திருட்டு என்று கூட சொல்லலாம்.
இவர்களை எப்படி தட்டி கேட்பது ? இதற்க்கு எங்கு புகார் அளிக்க வேண்டும் ? என விவரம் அறிந்தவர்கள் பின்னுடத்தில் தெரிவிக்கலாம். இந்த கடை மட்டும் அல்ல பல கடைகளில் இதுபோல நடக்கின்றது.
இதையும் படிக்கலாமே :
