> என் ராஜபாட்டை

.....

.

Thursday, June 11, 2015

இலவசமாக RE-CHARGE செய்ய புதிய இரண்டு அப்ளிகேஷன்கள்




                 நாம் ஏற்கனவே இலவசமாக ரீ சார்ஸ் செய்ய சில அப்ளிகேஷன்கள் பார்த்தோம் . இன்று நாம் பார்க்க போவது அதுபோல இப்பது பிரபலமாக இருக்கும் இரண்டு ANDROID அப்ளிகேஷன்களை தான் . இவை மிகவும் எளிதான , நம்பிக்கையான அப்ளிகேஷன்கள் ஆகும் .


1. FREE MOBILE RECHARGE

                  இதன் பெயரே இதை பற்றி சொல்லிவிடும். ANDROID வைத்திருக்கும் அனைவரும் வைத்திருக்கவேண்டிய அப்ளிகேஷன் இது. மிகவும் குறைந்த அளவு மெம்மரி சைஸ் கொண்டது இது. பயன்படுத்துவதும் எளிது.

நன்மைகள் :

சாதாரண அப்ளிகேஷனை டவுன்லோட் செய்தால் கூட 5 முதல் 10 ரூபாய் வரை கிடைகிறது .

உங்கள் நண்பர்களை இணைத்தால் ஒவ்வொருவருக்கும் 24 ரூபாய் கிடைக்கும்

உங்கள் நண்பர்களை பலவகையில் அழைக்கும் வசதி .

உடனடியாக பணம்ஏறும் .

இதை உங்கள் மொபைல் மூலம் டவுன்லோட் செய்ய :  CLICK HERE



2. FREEB

     இதுவும் முந்தைய அப்ளிகேஷன் போல மிகவும் அருமையான ஒன்றாகும். இதையும் பயன்படுத்தி பாருங்கள். இதிலும் பலவகையான ஆபர்கள் கிடைகின்றது .

நன்மைகள் :

மிக குறைந்த அளவு பைல் சைஸ்

அதிகபட்ச பணமதிப்பு நீங்கள் செய்யும் ஒவ்வொரு டவுன்லோடுக்கும் .

மற்றும் பல வித்தியாசமான ஆபர்கள் உண்டு .

உங்கள் நண்பர்களை இணைத்தால் ஒவ்வொருவருக்கும்  20 ரூபாய் கிடைக்கும்

இதை உங்கள் மொபைல் மூலம் டவுன்லோட் செய்ய :  CLICK HERE

Sunday, June 7, 2015

மருந்தில்லா மருத்துவம்




              இணை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று அக்குபஞ்சர் துறையில் முதுகலைப்பட்டம் பெற்று மருத்துவப்பணி ஆற்றிவரும் திருமதி பி.எஸ். லலிதா எழுதிய நூல். தன்வந்திரி அவார்ட், வைத்திய பூஷன் போன்ற விருதுகள் பெற்றது மட்டுமின்றி பல சமுக சேவைகள் செய்து பல நூல்கள் எழுதியுள்ளார்.

             இன்று சாதாரண தலைவலி என்று டாக்டரிடம் சென்றால் பத்து டெஸ்ட், பதினைந்து மாத்திரை, இருபது ஊசி என உயிரை எடுக்கும் பலர் உள்ளனர். இதுற்குப் பயந்து நாமே மெடிக்கலில் மாத்திரை கேட்டால், கொடுப்பது 10 / +2  படித்துவிட்டு வேலைபார்க்கும் ஆட்களே. இவர்கள் கொடுக்கும் மருந்தால் தலைவலி உடனே போனாலும் வேறு ஏதாவது பின்விளைவுகள் வருமோ என பயம் வருகிறது.  நோயே இல்லாமலும் வாழ முடியாது இன்றைய சூழலில். இதுபோல குழப்பத்துக்கு விடை சொல்வதுதான் இந்த நூல்.

               நம் அன்றாட வாழ்வில் கேள்விப்பட்ட ஒரு மருத்துவ முறைதான் “ரெய்கி”. ரெ என்றால் பிரபஞ்சம், கி என்றால் உயிர்சக்தி, கி என்றால் ப்ராணா (மூச்சு பயிற்சி). இவை இணைந்த ஒரு சொல்தான் ரெய்கி ஆகும். மற்ற முறைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம், மற்ற மருத்துவமுறைகளில் இருந்து இது எவ்வாறு மாறுபடுகிறது, இதன் நன்மைகள் என்ன, இதில் ஏதாவது பக்கவிளைவுகள் உண்டா என்பதைப் பற்றி விரிவாக அலசுகிறது இந்த நூல்.

           நம் உடலை சுற்றி ஒரு ஒளிவட்டம் இருகின்றது. அந்த ஒளிவட்டம்தான் கண்ணுக்குப் புலனாகா காந்தசக்தியாகும் அதுக்கு “ஆரா” என்று பெயர். அதுபோல உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. வண்டி நன்றாக ஓட சக்கரம் எவ்வளவு முக்கியமோ அதுபோல மனிதன் இயங்க இந்த சக்கரம் முக்கியம். ஒவ்வொரு சக்கரமும் “ஓம், ஆம், ஹம், யம், ரம், வம், லம்“ என்ற மந்திரச் சொற்களை மூலாதாரமாக கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சக்தியைக் கொடுத்து அதில் வரும் நோயைக் கட்டுபடுத்துகின்றது.

        அமைதியான ஓர் இடத்தில் அமர்ந்து ஏதாவது ஒரு புள்ளியை உற்றுப் பார்த்து மனதை ஒருமுகபடுத்துவதைத்தான் தியானம் என்கின்றோம். தியானம் எங்கே, எப்போது, எப்படி செய்யவேண்டும் என ஆசிரியர் தெளிவாக கூறுகின்றார்.

    ரெய்கி பயற்சியில் உள்ள ஐந்து நிலைகள் என்ன, ரெய்கியின் தத்துவங்கள் என்ன என்பதைப் பற்றிச் சுருக்கமாக இரண்டு அத்தியாயங்களில் சொல்லியுள்ளார். குண்டலினி என்றால் என்ன, அது எப்படிச் செயல்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

          மணிபூரகம் சக்கரம் பற்றிக் குறிப்பிடும்போது குழந்தைகளின் கல்வியறிவு சார்ந்தது எனக் குறிப்பிடுகிறார். குழந்தை கருவில் இருக்கும்போதே தாய் நல்ல கதைகள், அருமையான இசை எனக் கேட்டால் அது குழந்தையை நல்லவிதமாக பாதிக்கும். இதைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார்.

            சாதாரணமாக் கிராமங்களில் பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள் நிறைய ரெய்கியிலும் உள்ளன. கிராமத்தில் இந்த மருத்துவமுறையைப் பற்றி அறியாமலே சொல்லியுள்ளனர். உதாரணமாக : குழந்தையைத் தலையில் தட்டாதே என்பார்கள். காரணம் உச்சந்தலையில் உள்ள எலும்பு வளர்ச்சி பற்றியதுதான். சரியான உணவுமுறை, புராணக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லுதல் போன்றவை. எண்ணெய்க் குளியல் என்பதுகூட இதுபோல்தான். குழந்தைகளைத் தோப்புக்கரணம் போடச் சொல்வதுகூட ஒரு பயிற்சிதான். நாகரிக வளர்ச்சி என்ற போர்வையில் பலவற்றை மறந்து வாழ்கிறோம். புதிய நோய்களுக்கு அடிமையாகிறோம்.

                இசையில் ரெய்கி மற்றும் தங்கப் பந்து தியானம் என்றால் என்ன என்று எளிதில் புரியும் வண்ணம் எழுதியுள்ளார். வண்ணங்கள் கூட மருத்துவக்குணம் கொண்டவை என்பது இவரின் கருத்து.

               எந்த நல்ல விஷயமும் கொஞ்சம் கஷ்டபட்டால்தான் கிடைக்கும். ஆனால் நம்மவர்களுக்கு உடனே நிவாரணம் கிடைக்க வேண்டும், அதுவும் கஷ்டப்படாமல் நிவாரணம் கிடைக்கவேண்டும். அப்படிப்பட்ட ஆட்களுக்கு இது சரி வராது. தியானம், மனதை ஒருமுகப்படுத்துதல், உணவுக் கட்டுபாடு, மனக் கட்டுபாடு போன்ற செய்கைகள் மூலம் உடலை எப்படிக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வது எனச் சொல்லியுள்ளார். இந்தநூலில் உள்ளவற்றை அப்படியே எல்லாரும் செய்வார்களா என்றால் கஷ்டம்தான். ஆனால் ரெய்கி என்றால் என்ன, அதன் பயன் என்ன என்பதை புரிந்துகொள்ள உதவும் நல்ல நூல் இது என்பதில் ஐயமில்லை.

இது மதிப்புரை . காம் தளத்தில் நான் எழுதிய பதிவு :

பதிவுக்கு செல்ல .....


ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-366-8.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

Wednesday, April 8, 2015

புதிய இலவச ரீ - சார்ஜ் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்







                             நாம் முன்பு பல இலவச ரே சார்ஜ் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பார்த்துள்ளோம். இதுவும் அந்த வையில் ஒன்றுதான். ஆனால் மிக எளிதான ஒன்று. பயன்படுத்துவது மிக சுலபம் . நான் இதை பயன்படுத்துகிறேன். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் .


FreeB Application:

                  மிக மிக அளித்தான அப்ளிகேஷன் இது. மிக குறைந்த அளவு நினைவு தேரானை எடுத்துகொள்கின்றது. எனவே இதனால் உங்கள் போன் பாதிக்கபடாது.

நன்மைகள் :

சாதாரண சிறு அப்ளிகேஷனை தரவிறக்கினால் கூட குறைந்து 5 ரூபாய் கிடைக்கும் .

பத்து ரூபாய் சேர்ந்ததும்இலவசமாக ரீ  சார்ஜ் செய்து கொள்ளலாம் .

உங்கள் நண்பர்களை சேர்ப்பதன் மூலம் ஒருவருக்கு 20 ரூபாய் பெறலாம் . இதன் மூலம் குறைந்தது 10 பேர் சேர்த்தாலே 200 ரூபாய் கிடைக்கும்.


(இந்த படம் நான் இரண்டே நாளில் பெற்ற பணத்தை காட்டுகிறது )

டவுன்லோட் செய்ய :  click here

அல்லது

டவுன்லோட் செய்ய :  CLICK HERE 




இதையும் படிக்கலாமே :

இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம்


Tuesday, March 17, 2015

இலவசமாக ON-LINE இல் ஷாப்பிங் செய்யவேண்டுமா ?







                              இன்றைய இணைய உலகில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது வெகு வேகமாக வளர்ந்துவரும் ஒன்றாகும் . FILPKART, AMAZON, EBAY என பல தளங்கள் உள்ளன . ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சலுகைகளை வழங்கிவருகிறது . இன்று நாம் பார்க்கபோவது கொஞ்சம் வித்தியாசமான தளம் . இது நீங்கள் முன்பே தெரிந்த தளம் தான் . வித்தியாசம் அவர்கள் வழங்கும் ஆபர் தான் .


                   ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணி நிறுவனமான SNAPDEAL தனது ANDROID அப்ளிகேஷன் பயன்படுத்தும் வாடிகையாலர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குகிறது . இதன் மூலம் கொஞ்சம் இலவசமாக ஷாப்பிங் செய்யலாம் .


* முதலில் CLICK HEREலிங்கில் சென்று அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும் .

* அல்லது PLAY STORE இல் SNAPDEAL என தேடி டவுன்லோட் செய்யவும் .

* உங்கள் ஆண்ட்ரைடு போனில் இன்ஸ்டால் செய்யவும் .

* செய்து முடித்ததும் முதல் பக்கத்தில் ஒரு REFERER CODE கேட்கும் அதில்  J2qG507643 என டைப் செய்யவும் .

* ரெபரல் கோட் இல்லாமல் உங்கள் கணக்கில் பணம் ஏறாது .

* பின்பு உங்கள் மெயில் ஐடி கொடுத்து கணக்கு துவங்கவும் .

* இப்போது உங்கள் கணக்கில் ரூபாய் 50 ஏறி இருக்கும் .

* உங்கள் மொபைல் என்னை சேர்த்த பின் உங்களுக்கு தனியாக ரெபரல் கோட் கிடைக்கும் . இதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களை சேர்க்கலாம் . அவர்களுக்கும் ரூபாய் 50 கிடைக்கும் . உங்களுக்கு 50 ரூபாய் கிடைக்கும் .

* இப்படி சேரும் பணத்தில் நீங்கள் SNAPDEAL மூலம் ஏதாவது பொருளை வாங்கலாம் .

நன்மைகள் :

* மிக சிறிய அளவு அப்ளிகேஷன் ( 5MB)

*உடனடியாக பணம் ஏறும் .

* எத்தனை நண்பர்களை வேண்டுமானாலும் சேர்க்கலாம் .



குறிப்பு :

கண்டிப்பாக ரெபரல் கோட் கொடுத்தால் மட்டுமே பணம் ஏறும் . இல்லையெனில் சாதாரண அப்ளிகேஷனாக இது செயல்பட துவங்கும் .

உங்கள் கணக்கில் உள்ள பணத்தை சரியாக 30 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும் .

REFERER CODE J2qG507643 


 இதையும் பாருங்கள் :


இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம்

Monday, March 9, 2015

ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ?




           பலபெயர்கள் எப்படி வந்தது ஏன் வந்தது என நமக்கு தெரியாது ஆனாலும் நாம் தினமும் அதை பயன்படுத்தி வருகிறோம் . அப்படி பட்ட சில பெயர்களின் காரணத்தை நாம் இன்று பாப்போம் .

கடிகாரம்:
              "கடிகை' என்றால் "நாழிகை' என்று பொருள். நாழிகையை அளக்கும் கருவி ஆரமாக வந்தபோது ""கடிகாரம்'' என்ற சொல் தோன்றியிருக்கலாம்.
கெஜட்:
1566-ஆம் ஆண்டு இத்தாலிய அரசாங்கத்தின் மிக முக்கியமான செய்திகளைப் பெரிய பலகையில் எழுதி வெனிஸ் நகரத்தின் முக்கியமான வீதிகளில் குறிப்பிட்ட இடங்களில் வைத்தார்கள். அதைப் பார்த்துப் படிக்கும்போது மக்களிடமிருந்து கட்டணமாக ""கெஜட்டா'' என்னும் இத்தாலிய நாணயம் வசூலிக்கப்பட்டது. பின்னர்தான் அரசாங்கச் செய்திப் பத்திரிகைக்கு ""கெஜட்'' எனப் பெயர் வந்து அதுவே நிலைத்துவிட்டது.
பாண்டேஜ்:
பண்டைக்காலத்தில் எகிப்தில் பிணங்களைப் பாதுகாத்து வைப்பதற்காகப் பிணத்தின் தலை முதல் கால்வரை போர்த்தி வைக்கும் பழக்கத்திலிருந்துதான், இன்று மருத்துவ உலகில் பழக்கத்திலிருக்கும் "பாண்டேஜ்' முறை வந்தது.


ஏக்கர்:
நிலத்தின் அளவைக் குறிக்க ஏக்கர், ஏக்ரா என்று சொல்கிறோம். அந்தச் சொற்கள் வழக்குக்கு வந்த விதம் இப்படித்தானாம். ""யோக்'' என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பே ஏக்கர், ஏக்கரா என்பது. "யோக்' என்றால் "நுகம்' என்பது பொருள். நுகத்தில் கட்டிய மாட்டைக் கொண்டு விடியற்காலை முதல் இருட்டும்வரை ஓட்டக்கூடிய நில அளவிற்குத்தான் "ஏக்கர்' என்ற பெயர் ஏற்பட்டது.

தரங்கம்பாடி - ஒரு சிறு விளக்கம்:

"தரங்கம்பாடி' என்பது ஒரு கடற்கரை கிராமம். "தரங்கம் பாடி' என்பது தனித் தமிழ். "தரங்கம்' என்றால் அலை. அலை ஓயாமல் பாடிக் கொண்டிருக்கும் பாடி தரங்கம் பாடி. "பாடி' என்பதற்கு ஊர் என்பதும் பொருள்.

புயல்:

                புயலுக்கு ஆங்கிலத்தில் "சைக்ளோன்' என்று பெயர் எப்படி வந்தது என்றால் "சைக்ளோன்' என்ற பதத்திற்கு கிரேக்க மொழியில் ""பாம்புச் சுருள்'' என்று பெயர். காற்று சுழன்று, சுழன்று அடிப்பதால் அதற்கு அப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வெப்பப் பிரதேசங்களில் வீசும் சுழற்காற்றுகளையே "சைக்ளோன்' என்று சொல்கிறோம்.

மனிதன்:

மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். நினைக்கும் கருவி மனம். மனத்தையுடையவன் "மனிதன்'. தமிழில் "மனிதன்', வடமொழியில் "மநுஜர்', ஆங்கிலத்தில் "மேன்' - இவையெல்லாம் "மன்' என்ற பகுதியாகவே பிறந்தன.

பினாங்:
          மலேசிய மொழியில் "பினாங்' என்றால் "வெற்றிலை' என்று பொருள். தமிழர்கள் முதன்முதலாக இங்கு "வெற்றிலை பாக்கு' வியாபாரம் நடத்த வந்திருந்தாலும் பினாங்கில் வெற்றிலைதான் அதிகமான விளைபொருள். அதனால் "பினாங்' என்ற பெயரே அந்நகரத்திற்கு நிலைத்துவிட்டது.

லைப்ரரி:

            நூல் நிலையத்திற்கு ஆங்கிலத்தில் "லைப்ரரி' என்று பெயர். "லிபர்' என்ற லத்தீன் சொல்லின் மூலமாகப் பிறந்ததுதான் "லைப்ரரி'. "லிபர்' என்னும் சொல்லுக்கு "நூல்களின் தொகுப்பு' என்று பெயர்.

பேண்ட்:

            முதன்முதலாக ஜப்பான் நாட்டில் "பாண்ட்லூ' (PANTLU)என்ற என்ற சர்க்கஸ் கோமாளிதான் பெரும்பாலோர் இன்று அணிந்து வரும் "PANT' என்று சொல்லக்கூடிய முழுக்கால் சட்டையை அணிந்து வந்தார்கள். அப்போது முதல் முழுக்கால் சட்டைக்கு (PANT) "பாண்ட்' என்ற பெயர் ஏற்பட்டது.

வாட்டிகன்:
             கிறிஸ்துவ மதத் தலைவர் போப்பாண்டவர் வசித்து வரும் நகருக்கு "வாட்டிகன்' என்று பெயர். "வாட்டிகன்' என்றால் ""கடவுளிடமிருந்து வரும் வாழ்த்துச் செய்திகளைப் பரப்பும் இடம்'' என்று பொருள்.


பாட்மிண்டன்:
                       பாட்மிண்டன் (BADMINTON) என்று அழைக்கப்படும் பூப்பந்தாட்டம் 1880-ஆம் ஆண்டுக்கு முன் பூனா (POONA)என்ற பெயரில் இந்தியாவில் ஆடப்பட்டு வந்த ஒரு விளையாட்டாகும். இந்த விளையாட்டைக் கண்ட ஆங்கில அதிகாரிகள் தங்கள் நாட்டிற்குச் சென்று "பாட்மிண்டன்' என்ற எஸ்டேட் பகுதியில் விளையாடினார்கள். பின் அதுவே அந்த விளையாட்டின் பெயராகவே அமைந்துவிட்டது.

வாலிபால்:
            வாலி (VOLLEY) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாறி, மாறி அடித்தல் என்று பொருளாகும். அந்த அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர்தான் "வாலிபால்' என்பதாகும்.


ரூபாய்:
            "ரூபாய்' என்ற சொல் "ரூப்யம்' என்ற வடமொழிச் சொல்லில் மருவி வந்ததாகும். கௌடில்யர் தன் அர்த்த சாஸ்திரத்தில் ""ரூப்யரூபம்'' என்று வெள்ளி நாணயங்களுக்கும், ""தாமிர ரூபி'' என்று செப்பு நாணயங்களுக்கும் பெயர் வழங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

டையமண்ட்:
            வைரத்தை ஆங்கிலத்தில் டையமண்ட் (DIAMOND) என்று கூறுவார்கள். இந்தப் பெயர் ""உடைக்க முடியாதது'' என்றும் அர்த்தம் கொண்ட கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது.

நன்றி : வாட்ஸ்அப்

இதையும் படிக்கலாமே ?

 விஜய் ரசிகர்கள் வாழ்க .... 

இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம்