> என் ராஜபாட்டை : விபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMO

.....

.

Wednesday, June 13, 2012

விபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMO



என்ன தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சியாக உள்ளதா ? ஆனால் இது உண்மைதான். விபசாரம் என்பதில் ஆண் , பெண் தவிர இடைத்தரகர்களாக சிலர் வருவார்கள் அவர்கள் போல செயல்படுகின்றது இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் (பெயரிளியே தொடர்பு என இருப்பதாலோ என்னவோ ).இதில் எனக்கு தெரிந்து Airtel , Vodafone, Docomo மூன்றிலும் வரும் செய்திகளை கிழே குடுத்துள்ளேன் ...

சில தினகளுக்கு முன் வந்த ஒரு SMS in தமிழாக்கம் :

தமிழ் ஹாட் கேர்ள் சங்கீதா உங்களுக்காக காத்திருகின்றார். அவருடன் பேச உடனே தொடர்பு கொள்ளுங்கள் என கூறி ஒரு எண் குடுத்து உள்ளனர் . கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.


மற்றொரு SMS :

தனது இரவு நேர அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சுதா காத்திருக்கிறார். உடனே அழையுங்கள் . இதுக்கும் கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.


இது போல SMS மட்டுமல்லாது உங்கள் கணக்கில் உள்ள தொகையினை சோதிக்கும் போதும் வருகின்றது . இதில் என்ன கொடுமை என்றால் சண்டே அன்று 50% தள்ளுபடியாம்

நேற்று வந்தது :
Make new friends and Love chat with beautiful Girl 24  Hours call Now 006745599251 Neha..    ISD rates apply only 18 Yrs +.
(கடல்கடந்து கடலைபோட வழி செய்றாங்களாம் ) 

ரோட்டு ஓரத்தில் நின்று கொண்டு, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு ஆட்கள் பிடிக்கும் மாமாக்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

TRAI க்கு சில கேள்விகள் :

  • இது போன்ற SMS அனுப்புவது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ?
  • வியாபார சம்பந்தமாக SMS அனுப்புவதை தடுக்க தினமும் 200 SMS மட்டுமே அனுப்பலாம் என தடை போட்ட நீங்கள் இதுக்கு ஏன் தடை போடவில்லை ?
  • போட்டிக்கு அனுப்பும் SMS முலம் மீடியாக்கள் கோடி கணக்கில் வருமானம் பார்கின்றது. மீடியாக்களும் தினமும் இவ்வளவு SMS தான் பெற முடியும் என கொண்டு வந்தால் என்ன ?
  • குழந்தைகள் கூட பதில் சொல்லும் கேள்விகளை கேட்டுவிட்டு Call Waiting இருந்தாகூட நிமிடத்திற்கு 10 ரூபாய் பிடுங்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதி வழங்கவேண்டும் ?
  • Vodafone இல் ஓகே பட்டனை அழுத்தினாலே சில கட்டண வசதிகள் தானாகவே Activate ஆகின்றது . கேட்டால் உங்கள் மொபைல்ல FLASH MESSAGE என்ற வசதியை OFF பண்ணி வையுங்கள் என்கின்றனர் . இது தெரியாத கிராமத்து ஆட்கள் என்ன செய்வார்கள் ?
  • ரீ-சார்ஜ் செய்தால் குறைந்த பைசாவும் , சில SMS உம் தருகின்றன நிறுவனங்கள் . SMS அனுப்ப தெரியாத , அனுப்பாத நபர்களுக்கு இது வேஸ்ட் தானே ?

இது போல பல தேவை இல்லாத செயல்களில் பல தொலை தொடர்பு நிறுவங்கள் ஈடுபடுகின்றது இதை தடுக்க என்ன வழி ?

டிஸ்கி : இதுபோல நீங்கள் பட்ட அவஸ்தைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் ..

 இதையும் படிக்கலாமே :

பாட்ஷா ரீ-மேக்கில் விஜய் மற்றும் அஜித்.

விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?

 



20 comments:

  1. இது போல் எல்லாம குறுந் தகவல் வருகிறது (நிற்க : எனக்கு வரவில்லையே என்கிற ஆதங்கத்தில் கேட்கவில்லை இவ்வளவு பெரிய நிறுவனகள் இவ்வளவு கீழ்த்தரமாகவா தகவல் அனுப்புகிறார்கள் என்ற மன நிலையில் கேட்டேன்) . நீங்கள் கூறியது போல் தெருவோர மாமாகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமே இல்லை


    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்

    ReplyDelete
  2. நீங்க கடலை போட்டிங்களா..?இல்லையா?

    ReplyDelete
  3. செருப்பால அடித்தது போல-
    கேட்டீங்க?

    உங்கள் முயற்சிக்கு மிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. பிரயோசனமான பதிவு.என்ன தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்தின் மூலமும் விபச்சாரம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது இவர்கள் செய்த மடத்தனம் இவர்களுடைய காரியாலயத்திலிருந்தே இப்படிப்பட்ட sms களை அனுப்புவது தான். இவர்கள் இப்படியான sms களை அனுப்பாவிட்டாஅலும் இவர்களுளின் தொடர்புசாதனங்க்ள் ஊடக விவச்சாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    ReplyDelete
  5. கொடுமை

    நல்லா கேட்டீங்க கேள்வி

    ReplyDelete
  6. இது
    நவ தொழில் தந்திரங்கள்
    கொடுமைதான் நண்பரே

    ReplyDelete
  7. நானும் கேள்விப்பட்டேன். முன்னாடி செல்போன் யூஸ் பண்ணி இதெல்லாம் பண்ணிட்டு இருந்தாங்க, இப்போ செல்போன் கம்பெனிகளே இதை பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.............. நல்ல டெவலப்மெண்ட்.........

    ReplyDelete
  8. டெக்னாலஜி இம்ப்ரூவ்மென்ட் .. எப்படியெல்லாம் காசு சம்பாரிகறாங்க..

    ReplyDelete
  9. சிறிய தகவல் ஒன்று நண்பரே: DND- DO NOT DISTURB என 1909ல், பதிவு செய்துவிடுங்கள்.ஏழு நாட்களுக்கு பின், எந்த கமர்சியல்(!)அழைப்பும் வராது.

    ReplyDelete
  10. என்னா ஒரு கேப்மாரித்தனம்!

    ReplyDelete
  11. //போட்டிக்கு அனுப்பும் SMS முலம் மீடியாக்கள் கோடி கணக்கில் வருமானம் பார்கின்றது. மீடியாக்களும் தினமும் இவ்வளவு SMS தான் பெற முடியும் என கொண்டு வந்தால் என்ன ?//நெத்தியடி கேள்வி

    நீங்கள் கூறியது போன்ற sms aircel இல் போனில் தெரிவிக்கிறார்கள்

    ReplyDelete
  12. அட.. இப்படியும் நடக்குதா?

    ReplyDelete
  13. நம்ம பைசாவை நமக்கே தெரியாம நம்ம போன்ல இருந்து ஆட்டையை போடுறதுக்கு பதிலா இவிய்ங்க இந்த வேலையை செய்யலாம் தப்பில்லை

    ReplyDelete
  14. வார்த்தைகள் கடினமானவைபோல் தெரிந்தாலும்
    உண்மையைத் தானே சொல்லியிருக்கிறீர்கள்
    நாங்கள் சொல்ல நினைப்பதை மிக அழகாகத் தெளிவான
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. //தனது இரவு நேர அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சுதா காத்திருக்கிறார்.//

    வெறும் 5 ரூபாய்க்கா? சூப்பர் சார் அவங்க ஹி ஹி ஹி

    ReplyDelete
  16. நம்ம அனுபத்தை ஏற்கெனவே பதிவா போட்டிருக்கேன் இப்படி செய்வதற்கு பதில் பிச்சையெடுத்து பிழைக்கலாம் ஏர் டெல்.http://koodalbala.blogspot.com/2012/04/blog-post_30.html

    ReplyDelete
  17. ஓடாபோன் இப்படியே பண்ணி no.2 இடத்துல இருக்காங்க ..

    ReplyDelete
  18. DND செய்தால் அழைப்பைத் தான் தடை செய்கிறார்கள்... இவற்றில் பல குறுஞ்செய்திகளை தொடர்புடைய அலைபேசி நிறுவனங்கள் அனுப்புவதில்லை என்பது எனது கணிப்பு!!

    பின்னே..... BSNL மட்டுமே பயன்படுத்தும் எனக்கும் இது போன்ற செய்திகள் வருகிறதே!

    ReplyDelete
  19. அருமையான கேள்விகள்

    இந்த மாதிரி வர கால் அட்டன் செய்த அடுத்த நிமிடமே இவனுங்களே இத அக்டிவ் பண்ணி பணத்தயும் எடுதுகரனுங்க திருட்டு பசங்க

    ReplyDelete
  20. அருமையான கேள்விகள்
    உங்கள் முயற்சிக்கு மிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...