> என் ராஜபாட்டை : நான் அழகா பொறந்தது என் தப்பா ?

.....

.

Thursday, June 28, 2012

நான் அழகா பொறந்தது என் தப்பா ?


நான் பிறக்கும் பொது பிரசவம் பார்த்தது ஒரு பெண் டாக்டராம் . பிறந்த உடனே என்னை கையில் எடுத்து நீ அழகு செல்லம்டா என கொஞ்சி உள்ளார் . அது மட்டுமில்லாமல் அங்கு பணிபுரியும் நர்ஸ்களும் இவ்வளவு அழகா ஒரு குழந்தையை நாங்கள் பார்த்ததில்லை என ஆச்சர்யபட்டார்கலாம் . வளர வளர அழகும் சேர்ந்து வளந்தது . எண்கள் ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் கட்டுனா என்னைத்தான் கட்டுவேன் அல்லது சாமியார போய்டுறேன் என்று சொல்வார்கள் . பள்ளியில் கூட நான் இருக்கும் வகுப்பில் சேரத்தான் மாணவிகள் போட்டி போடுவார்கள் .

## டேய்  நிறுத்து நிறுத்து .. எதுக்கு இப்படி ஓவரா பில்டப் குடுக்குற ? பொய் சொல்றதுக்கு ஒரு அளவு வேண்டாமா ?

                                                   ## வீடு சுரேஷ் ###

அன்பு வாசகர்களே !! சுரேஷ் பொறாமையில் புலம்புகிறார் . நான் சொல்வதை நீங்கள் நம்புங்கள் .எனக்கு திருமனமாய் விட்டது என்று தெரிந்து இன்றும் எத்தனை காதல் கடிதம் வருகிறது தெரியுமா ? அதில் இரண்டை உங்களுக்கு சாட்சியாக சமர்பிக்கிறேன் .

கடிதம் 1 :

"ஹலோ செல்லம் என் பெயர் binta உள்ளது உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல். binta முத்தம்."


என்ன ஒன்னும் புரியலையா ? இதோட ஒரிஜினல் இங்கிலீஷ் லெட்டர் ..

Hello Dear My name is binta I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).
Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot. kiss binta "
கடிதம் 2 :
" வணக்கம் அன்பே என் பெயரை நான் இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் மற்றும் நான் என் படத்தை அனுப்ப சொல்கிறேன் என்று (stellampka@yahoo.com~~V) நீங்கள் என் மின்னஞ்சல் முகவரி மூலம் என்னை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர் மிஸ் ஸ்டெல்லா உள்ளது என்னை பற்றி மேலும். .
இதுவும் புரியலையா ? இதோட ஒரிஜினல் இங்கிலீஷ் லெட்டர் ..
Hello Dear my name is miss Stella i saw your profile today and became interested to know more about you i will like you to contact me through my Email address at(stellampka@yahoo.com)so that i will send you my picture and tell you more about me. "
இப்பவாது நம்புறிங்களா ? என்னை காதலிக்க , அடைய (!!!) வெளிநாட்டு பெண்கள் எல்லாம் போட்டி போடுறாங்கன்னு ...
"கடவுளே என்னை ஏன்டா அழகா படைச்ச ?"
டிஸ்கி 1 : மேலே உள்ள கடிதம் தமிழ் 10 முலமாக யாரோ அனுப்பியது . இங்கிலீஷ் அப்படியே Google translate மூலம் மொழி மாற்றம் செய்துள்ளனர் . 

டிஸ்கி 2: இது போல வந்தா நம்பி யாரும் எமாறாதிங்க .. 

20 comments:

 1. ராஜாவோட நிலைமை ஐயோ பாவம்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சகோ .. கல்யாணம் ஆகிவிட்டாதுன்னு சொன்ன கூட நம்ப மாட்றாங்க

   Delete
 2. நெஞ்ஞல மஞ்சா இருக்கிற ஆளா இருந்தா
  ரிப்ளே அனுப்புய்யா பார்க்கலாம் அந்த காதலிக்கு.......

  ReplyDelete
  Replies
  1. நான் ஏக பத்தினி விரதன் .. எனக்கு சக்தி போதும் ...

   Delete
 3. நமக்கு ஒன்னும் வர மாட்டுதே நான் அழகா இல்லையோ?

  ReplyDelete
  Replies
  1. ஹி..ஹி.. வரலாறு எழுதுறவங்களுக்கெல்லாம் மெயில் அனுப்ப மாட்டாங்களாம்!! (சும்மா சொல்றேன்.. சீரியஸ் ஆகிடாதீங்க!)

   Delete
 4. உங்களுக்காவது பரவாயில்லை.
  லாட்டிரியில் விழுத்த சில மில்லியன்களை என்னோடு பகிர ஆசைபடும் Dorothy theemorgandorfer இ மெய்லை நிர்தாட்சண்யமாக டெலிட் செய்யவேண்டியதாயிற்று..

  ReplyDelete
 5. 2005 Friendster அப்படி ஒரு தளத்தில் இருந்து இந்தமாதிரி மடல் எனக்கும் வந்தது
  நானோ துபாய் வந்த புதிது அந்த தனி மடலை ஒரு மேல்நாட்டு நண்பனிடம் காட்டினேன்
  அவன் இது சும்மா ஏமாற்று வேலை நம்ப வேண்டாம் என்றான்

  இன்னும் இதுபோல் நிறை தொடர்கிறது என்ன செய்ய
  இதை வச்சு ஒரு பதிவு போட்டாலும்
  விழிப்புணர்வு பதிவா போட்டுடீங்க தோழரே

  ReplyDelete
 6. நாசமா போச்சுய்யா வாத்'தீ..........எத்தனை பேரைத்தான் அந்த பொண்ணு லவ்வுகிறாள், நம்ம விக்கி புலம்பிகிட்டே இருக்கான் கொய்யால...

  ReplyDelete
 7. ஆம் நண்பா எனக்கும் வந்தது. மேலும் அவர்கள் திரட்டியில் இருக்கும் ஆபாச தளங்கள் குறித்தும் மெயில் செய்தேன். நீக்கியிருப்பதாக சொன்னார்கள்

  ReplyDelete
 8. அலோ பிரண்ட் எனக்கும் இந்த மாதிரி மெயில் தமிழ் 10 மூலமா வந்தது! உஷாரா டெலீட் பண்ணீட்டேன்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 9. //நான் அழகா பொறந்தது என் தப்பா ?//
  இல்ல இந்த பதிவை படிச்சது தப்பு.ஹ ஹ ஹ ஹா..lolls.
  Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?

  ReplyDelete
 10. இப்பவாது நம்புறிங்களா ? என்னை காதலிக்க , அடைய (!!!) வெளிநாட்டு பெண்கள் எல்லாம் போட்டி போடுறாங்கன்னு ...

  அட கடவுளே இதுவேறையா !....நகைச்சுவையாய் சொன்னாலும் ஒரு நல்ல விசயத்தை சொன்னதனால் மன்னிசிடுறோம் :)
  நன்றி சகோ விழிப்புணர்வுப் பகிர்வுக்கு .

  ReplyDelete
 11. எனக்கும் அந்த மெயில் வந்தது அன்பரே T-SHIRT இல் உங்கள் படம் கலக்கலுங்கோ

  ReplyDelete
 12. இதுக்குப் பேர் தான் அழகுல மயங்குறதோ?

  எனக்கும் இப்படி வந்தது.. (சத்தியமா நான் அவ்வளவு அழகு இல்லீங்க!!)

  Binta, Stella ரெண்டு பேரும் ஒரே ஆள் தான்...அந்த தமிழைப் பார்த்தாலே தெரியுது தறுதலை கூகிளில் டிரான்ஸ்லேட்டியிருக்குன்னு!!

  அதைப் பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன்: http://www.aalunga.in/2012/06/caution-tamil-bloggers.html

  இதற்கு தக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்10 நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்!!


  //"கடவுளே என்னை ஏன்டா அழகா படைச்ச ?"//

  கடவுள்: நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல!!

  ReplyDelete
 13. //எண்கள் ஊரில் உள்ள பெண்கள்\\

  கய்தே ச்சே கவித கவித...அட அட

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...