> என் ராஜபாட்டை : துப்பறியலாம் வாங்க . . .!

.....

.

Friday, July 25, 2014

துப்பறியலாம் வாங்க . . .!
உங்கள் புத்திசாலிதனதை கண்டுபிடிக்க ஒரு வாய்ப்பு. கதையின் முடிவில் யார் குற்றவாளி என கண்டுபிடியுங்கள்.

கதை 1 :

அந்த வீட்டின் படுக்கை அறையில் ரவியின் உடல் மின்விசிறியில் தொங்கியது. இன்ஸ்பெக்டர் ராஜா வீட்டில் உள்ளவர்களிடம் விசாரனை செய்கின்றார். அனைவரும் இது தற்கொலை என்றும் , அவர் சாகும் முன் ஒரு கடிதம் எழுதி வைதுள்ளார் எனவும் கூறினர்.

ரவிக்கு 3 மகன்கள் . மூத்தவன் சுப்பு “ நான் செய்தி கேள்விபட்டுதான் இந்த வீட்டுகு வந்தேன்”

இரண்டாம் மகன் விஜய் “ நான் பக்கத்து ரூம் ல துங்கிடேன்”

மூன்றாம் மகன் சக்தி “நான் காப்பி குடுக்க வந்தேன், அப்பதான் பாத்தேன்.”

ராஜா “ இந்த கடிதம் எங்கே இருந்தது?”

சக்தி “ அவர் படுக்கையில் இருந்த ராமாயணம் புத்தகதில் 49 , 50 ம் பக்கதுக்கு நடுவுல இருந்தது “

இப்படி ராஜா பலரிடம் விசாரனையை நடத்தி முடித்தார். முடிவில் இது தற்கொலை இல்ல கொலை தான் , இந்த கொலைய செய்தது சக்திதான் என்றும் முடிவு செய்தான்.

எப்படி ?????
===========================================================================


கதை 2 :20 மார்ச் 2011., அந்த வீட்டின் படுக்கை அறையில் ரவியின் உடல் கட்டிலில் கிடந்தது. கத்தி அவர் நெஞ்சில் ஆழமாக சொருகி இருந்தது. இன்ஸ்பெக்டர் ராஜா வீட்டில் உள்ளவர்களிடம் விசாரனை செய்கின்றார்.

ரவிக்கு 3 மகன்கள் . மூத்தவன் சுப்பு “ நான் குளித்து கொண்டு இருந்தேன்“

2 வது மகன் ராமு “ நான் தோட்டதில் செடிக்கு தண்ணி ஊத்தி கொண்டு இருந்தேன் “

3 வது மகன் சோமு “நான் POST OFFICE போய்யிருந்தேன், அங்க ஸ்டாம்ப்(STAMP) வாங்க்கிட்டு இப்பதான் வாறேன்”


இப்படி ராஜா பலரிடம் விசாரனையை நடத்தி முடித்தார். முடிவில் இது இந்த கொலைய செய்தது சோமுதான் என்றும் முடிவு செய்தான்.

எப்படி ?????டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு


8 comments:

 1. //49 , 50 ம்// ஒரே தாள்ல இருக்குற ரெண்டு பக்கமோ??

  ReplyDelete
  Replies
  1. 49. 50 முன் பின் இருக்கும் பக்கங்களாக தான் இருக்க வேண்டும்.. வேற க்ளுவே இல்ல..

   Delete
 2. //20 மார்ச் 2011// ஞாயிற்று கிழமை.. கொலை பண்ணவனை ட்ரிஷ்யம் படம் பார்க்க சொல்லுங்க

  ReplyDelete
 3. மீள் பதிவுன்னாலும் சூப்பராத்தான் இருக்கு! ஆனா துப்பறியத்தான் முடியலை!

  ReplyDelete
 4. முதலாவது க்ளூ மேலே நண்பர்கள் சொன்னது போல் அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் ....

  இரண்டாவது , (கணினியில், அந்தத் தினத்தைக் காலண்டரில் பார்ட்தோம்....ஞாயிறு போஸ்ட் ஆஃபீஸ் கிடையாதே!

  ReplyDelete
 5. சூப்பரா இருக்குங்க தொடருங்கள்

  ReplyDelete
 6. 20-03-2011 அன்று ஞாயிறு என்றாலும் ,
  அன்றும் கூட எங்க கிராமத்து போஸ்டாபிஸ்ல ஸ்டாம்ப் கெடைக்கும்ங்க்னோ ,எங்க வாத்தியாரு தருவாரு உங்களுக்கு தெரியுமா ?
  நாங்க இதையெல்லாம் குறுக்கு விசாரணைலே பாத்துக்குறோம் ,
  அவரு தற்கொலை பண்ணுனதை நிருபிப்போம் ,
  பாத்துக்கலாமா ,...

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...