சமிபத்தில் திரு பத்ரி அவர்களின் நடிகர் அஜித்பற்றி ஒரு பதிவை நான் பிரசுரம் செய்திருந்தேன். அந்த பதிவை பற்றியும் , பதிவர்கள் பற்றியும் மிகவும் மட்டகரமாக வினவு தளம் ஒரு கட்டுரை எழுதியுள்ளது. அதில் இருந்து சில பகுதிகளும், சில கேள்விகளும்.
//பத்ரியின் இந்த பதிவை 42 பதிவர்கள் லைக்கியிருக்க, 21 பதிவர்கள் பகிர்ந்து பாராட்டியிருக்கிறார்கள். பத்ரியின் வலைப்பதிவிலும் தனது உணர்ச்சிகளை பதிவு செய்திருக்கின்றனர். கருவளையத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் அந்த மூகப்பூச்சுக் கலைஞர் ஈடுபடும் போது பேசிய உரையாடல் இந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்று ”தோற்கடிக்க முடியாதவன்” என இப்பதிவுக்கு பெயரிட்ட பத்ரிக்கு தெரியாமல் இருந்திருக்காது. ஆனாலும் இதற்காகவே தன்னை சினிமா ப்ரியன், தலயின் ரசிகன் என்று அஜித்தின் இரசிகர்கள் நம்புவது உண்மையில்லையென சற்று வெட்கத்துடன் என்றாலும் வெளிப்படையாகவே மறுக்கிறார் பத்ரி. என்ன இருந்தாலும் இரசிகர்கள் எனப்படுவோர் பெஞ்ச் டிக்கெட் வர்க்கம்தானே? ஒரு சினிமா நடிகனின் இரசிகன் என்ற அடையாளத்தை நமது அறிஞர் பெருமக்கள் மலிவாகவே கருதுவதை தவறு என்று சொல்ல முடியாதில்லையா? //
வினவுவில் இந்த கட்டுரையை எழுதியவர் கட்டில் ரகமா?( பெஞ்ச்!!) ரசிகனை இழிவுபடுத்த இவருக்கு என்ன உரிமை உள்ளது?
// ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமது ஊதியம் அதாவது தினசரி பேட்டா உயர்த்தப்படாத நிலையில் போராடப் போவதாக பெப்சி அதாவது தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் அறிவித்திருந்ததை எத்தனை பேர் அறிவீர்கள்?
//
எங்க ஊருல பஸ் ஸ்டாண்ட் சரியில்ல அது உங்களுக்கு தெரியுமா? உலகில் உள்ள அனைத்து பிரசனையும் ஒருவர் அறிந்து வைத்திருக்க வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம். எனக்கு தெரிந்தது உங்களுக்கு தெரியாது, உங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியாது..
// தொழிலாளர்களின் சம்பளத்தை நியாயமாக உயர்த்தாமல் நான் நடிக்கமாட்டேன் என்று தலயோ, தளபதியோ, உலக நாயகனோ, சூப்பரோ பேசினார்களா? இல்லை அவர்கள் ஏன் பேசவில்லை என்று பதிவுலகம்தான் துள்ளிக் குதித்ததா?
//
இது லூசுதனமான வாதம். இப்ப பஸ் கட்டணம் உயர்ந்ததுக்கு ஏன் நீங்கள் சாகும்வரை உண்ணாவிருதம் இருக்ககூடாது?
// அந்த சினிமா உலகில் சில கோடிகளை சம்பளமாக வாங்கும் அஜித் இல்லையா? அவரும் அதற்கு காரணமில்லையா? கேட்டால் அதற்கு அவர் என்ன செய்வார், அதெல்லாம் தயாரிப்பாளரது பிரச்சினை என்று நமது புத்திசாலி பதிவர்கள் கேட்பார்கள்.
//
உங்களிடம் வேலைபார்பவர்களுக்கு நீங்கள் ஏன் சம்பளம் தருகிறிர்கள்? திறமைக்கும், மார்கெட்க்கும்தான் மரியாதை. உங்களுக்கு வரும் அளவு என் வலைக்கு பார்வையாளர்கள் ஏன் வருவதில்லை எது நியாயமா என நான் கேட்டால் அது எவ்வளவு கேனதனமான இருக்குமோ அதுபோல இருக்கு உங்கள் கேள்வி.
// படைப்பாளிகளான முதலாளிகளின் யோக்கியதையை தோலுரித்து ரூ.2 விலையில் ஒரு சிறு வெளியீடு கொண்டு வந்து கிட்டத்தட்ட 10,000 பிரதிகள் தொழிலாளிகளிடம் விற்பனை செய்யப்பட்டன (வினவிலும் விரைவில் வெளியிடுகிறோம்). கூட்டம் முடிந்ததும் துணை நடிகைகள், ஏனைய தொழிலாளர்கள், பெப்சி நிர்வாகிகள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்ததும் நினைவுக்கு வருகிறது.
//
ஏன் புத்தகத்தை இலவசமாக அளிக்கவேண்டியதுதானே? ஒரு 2 ரூபாய் புத்தகத்தை இலவசமாக தர துப்பில்லை, 190 ரூபாய் பிரியானி போட்டவரை குற்றம் சொல்ல வெட்கமா இல்லை.
// தமிழ் சினிமா நட்சத்திரங்களின் வள்ளல் கதைகள் குறித்து எம்.ஜி.ஆர் தொட்டு விஜயகாந்த் வரை ஏராளமுண்டு. ராமாவரம் தோட்டத்தில் புரட்சித் தலைவர் போடாத விருந்தா, சாப்பிடாத ஆட்களா? விஜயகாந்த் கொடுக்காத அயர்னிங் மிஷினா, மூன்று சக்கர வண்டியா? இல்லை அகரம் பவுண்டேஷனுக்கு அழைத்தால் ஸ்விட்சுடு ஆஃப் (ஆதாரம் அண்ணன் உண்மைத் தமிழன்) என்று வந்தாலும் சூர்யாவின் வள்ளல்தனத்தை வியக்காத பதிவர்களா? எழுதாத பத்திரிகையாளர்களா? யாரிடம் கதை விடுகிறீர்கள்?
//
அண்ணே நீங்க தினமும் 100 பேருக்கு நல்ல உணவும், வருடா வருடம் 100 குழந்தைக்கு படிப்பு செலவையும் செய்ரிங்களா? நீங்களே நன்கொடை தாருங்கள் என பிச்சை எடுக்குறிங்க, இதுல நல்லது செய்றவங்களை கிண்டல் பண்ணுறிங்க.
// ஆனால் தொழிலாளிகள் கூட என்றாவது ஒரு நாள் திருந்துவார்கள். ஆனானப்பட்ட நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கிக் குளித்த அமெரிக்க மக்களே திருந்தவில்லையா என்ன? அதே நேரம் பத்ரியோ இல்லை பதிவர்களோ இந்த மட்டன் பிரியாணி மனிதாபிமானத்திலிருந்து திருந்துவார்கள் என்பதற்கு உத்திரவாதம் இருக்கிறதா? தெரியவில்லை!//
நாங்க திருந்துறது இருக்கட்டும், நீங்கள் எப்ப திருந்த போறிங்க?
அடுத்தவங்களை குறைமட்டுமே சொல்லுவது ஒரு சைக்கோ குணம். முடிந்தால் நல்லது செய்யுங்கள் , நல்லது செய்வோறை பாரட்ட கற்றுகொள்ளுங்கள். இல்லை மூடிகிட்டு சும்மா இருங்க.
டிஸ்கி: அந்த பதிவின் Link
டிஸ்கி 2: பதிவுலகில் யாரிடமும் சண்டை போடகூடாது என நினைத்தேன். நம் பதிவர்களை மட்டமாக பேசியதை பார்த்து கோவம் வந்துவிட்டது.
Tweet |
"""உலகில் உள்ள அனைத்து பிரசனையும் ஒருவர் அறிந்து வைத்திருக்க வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம். எனக்கு தெரிந்தது உங்களுக்கு தெரியாது, உங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியாது..'''
ReplyDeleteஅருமையான கருத்து, சும்ம பின்னி பெடலெடுத்துட்டிங்க நண்பரே, அமர்க்களம்
உம்...ரௌத்ரம் பழகு பாரதியே சொல்லிருக்கார்.....
ReplyDeleteஇயற்கை தான்......
@A.R.ராஜகோபாலன்
ReplyDeleteவாங்க சார் ..
என்னத்த சொல்ல...ஸ்ஸ் அபா!
ReplyDeleteகும்ப கோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி விட்டு இரண்டு வருடங்கள் எதுவும் செய்யாமல் காலம் கடத்திய எந்த நடிகர்களையும் நான் மனிதனாக மதிக்க முடியவில்லை... அந்த பட்டியலில் தமிழக நடிகர்கள் அனைவரும் இருந்தார்கள் என்பது தான் கொடுமை
ReplyDeleteஅஜித் செய்த நற்காரியங்கள் குறித்து தெரிந்தும் தெரியாது போல் நடிப்பார்கள் அவர்கள். பதிவுலக 'தல' என்று எண்ணம் போல. எங்களுக்கு உதவுங்கள் என்று சொல்லிவிட்டு ஊரை வசைபாடும் பெரியோர்கள் வாழ்க.
ReplyDeleteபட்டைய கிளப்பீட்டீங்க
ReplyDelete@! சிவகுமார் !
ReplyDeleteநல்லா சொன்னிங்க
முன்னாலயே இந்த கட்டுரையை படித்து நானும் காண்டாகி விட்டேன். இப்போ நீங்களா? நன்றி
ReplyDeleteஇது போன்றோரின் தாக்குதல்களால் தலையும் சரி நர்மும் சரி தரம் தாழ்ந்து விடப்போவில்லை...
ReplyDeleteஒரு சிலருக்கு மத்தபதிவர்களை குறைச்சொல்லி பொழைப்பை ஓட்டுவதே வேலையாக போய்விட்டது...
வினவு தளத்திலையா?
ReplyDeleteஎன்ன இருந்தாலும் நான் தல ரசிகன்தான்.
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் நாம் கடந்து செல்வோம்...!
ReplyDelete// நம் பதிவர்களை மட்டமாக பேசியதை பார்த்து கோவம் வந்துவிட்டது.//
ReplyDeleteமனசாட்சிபடி சொல்லுங்க, இதே மாதிரி விஜய் பத்தி யாராவது நல்லபடியா சொல்லி இருந்தா எப்படி கிண்டல் அடிசுருபிங்க மட்டன் பிரியாணி போட்டு முதலமைச்சர் ஆகப் போறார் அப்படி எப்படி னு ............
ReplyDeleteமாமியார் உடைச்சா மண் குடம் மருமக உடைச்சா பொன் குடமா?
உண்மைகள் உரிக்கப்பட்ட நிலையில் ..
ReplyDeleteஅருமையா சொன்னீங்க.
ReplyDeleteவணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் கருத்துக்கள் அருமை. அர்த்தமுள்ள கோபம். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல பகிர்வுக்கு எனது வாழ்த்துக்கள். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே!
ReplyDeleteநம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
வினவை தொடர்ந்து ஒரு மாசம் படித்தால் ப்ளட் பிரஷர் ஏறிவிடுகிறது. கரெக்டாக குற்றம் மட்டும் கண்டு பிடித்து 'அலறுகிறார்கள்'. சொல்கிற விதம் அதற்கு மேல்...
ReplyDeleteஎன் வலையில் ;
கருணாவும் ஜெயாவும் பாடும் 'கொலைவெறி' பாட்டு!
பகிர்வுக்கு நன்றி சகோ ......
ReplyDeleteநல்லாவே சொல்லிட்டீங்க.
ReplyDeleteகட்டுபாடுகள் இலா கணிணி பதிவுலகில், ஆதிக்கம் செலுத்துவோர் குழுக்களாகவே இயங்குகின்றனர்! வெறியை விரலில் ஏற்றி,தூற்றி மகிழ்வது ஆதிக்கர்களின் வடிகால்! அவர்களின் பாஷையில், அவர்கள் பதிவுலக பார்ப்பனவாதிகள்!
ReplyDelete<<>>
ReplyDeleteகுற்றம் பார்க்கின் சுற்றமில்லை. சரிதானே நண்பரே..!!!
என்ன தல நீங்க அவன்லாம் ஒரு ஆளுன்னு பதில் சொல்லிடு இருக்கீங்க ,
ReplyDeleteஉலகில் உள்ள அனைத்து பிரசனையும் ஒருவர் அறிந்து வைத்திருக்க வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம். எனக்கு தெரிந்தது உங்களுக்கு தெரியாது, உங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியாது//
ReplyDeleteநல்லா சொன்னீங்க ...
உங்க தலைப்பு மட்டும் தான் சுவாரஸ்யமா இருக்கு... உங்க விவாதங்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை... பாலாவின் கட்டுரையை படித்துப் பார்க்கவும்...
ReplyDeleteஅடுத்த பதிவு எங்க?..என் கவிதை காத்திருக்கு சகோ .
ReplyDeleteநம் பதிவர்களை மட்டமாக பேசியதை பார்த்து கோவம் வந்துவிட்டது.
ReplyDelete>>
நன்றி சகோ
காரசாரமான பதிவு
ReplyDeleteவாழ்த்துக்கள்
உங்களின் கோபம் நியாயமானது
ReplyDeleteவினவு கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்பதையே புரிந்து கொள்ளாமல் பதில் வேறு எழுதுகிறீர்கள். உங்கள் மொக்கை கட்டுரையை பாராட்ட ஒரு கூட்டம் வேறு. என்னத்த சொல்ல?
ReplyDelete