> என் ராஜபாட்டை : இவளுகளை என்ன செய்யலாம் சார்..?

.....

.

Monday, September 5, 2011

இவளுகளை என்ன செய்யலாம் சார்..?


 
சமிபத்தில் என் நண்பனின் வேண்டுகோளுக்கினங்க ஒரு மொபைல் சர்விஸ் கடையில் உள்ள கம்பியூட்டரை சரி செய்ய சென்றேன். அங்கு அனைத்து விதமான ரீ-சார்ஸ் கார்டுகள் மற்றும் மொபைல் பழுதுகள் சரிசெய்யபடும். அந்த கடையின் முதலாளிக்கு வயது 40 இருக்கும். என்னிடன் நன்றாக பேசினார்.

அப்போது கடைக்கு ஒரு 18 வயது மதிக்கதக்க ஒரு பெண் வந்தார். அவரது மொபைலில் scratch guard  (மொபைல் screen மேலே ஒட்டுவது) ஒட்டவேண்டும் , 10 நிமிடம் கழித்து வருகிறேன் என்றார். இவர் அந்த மொபைலை வாங்கி வைத்து கொண்டார்.

இவர் அதை ஒட்டிகொண்டு இருந்த  சமயம் அந்த போன் க்கு ஒரு message வந்தது. தவறுதலாக அதை ஒபன் செய்துவிட்டார். அதில் இருந்த ஒரு வார்தையை பார்த்ததும் கடுப்பாகிட்டார். “சார் இங்கே பாருங்க “என கூறி அதில் உள்ள Message படித்து காட்டினார்.

அதில் “ நான் marriage ஆனவன்னு தெரிஞ்சுதானே பழகுரா..அப்புரம் எப்படி தப்பா நினைப்பேன்” என்று இருந்தது. இவர் கடுப்பாகி send item open செய்து பார்தார். அதில் கடைசியாக அனுப்பிய செய்தியில் “ நான் கெட்டுபோனவனு தெரிஞ்சு என்னை தப்பா நினைக்கிறியா?” என்று  இருந்தது.

“இங்கே வர பல பெண்கள் கதை இதுதான் சார். இதுபோல சின்ன வயசுலயே இப்படி வீணாபோறத நினைத்தால் வருத்தமாக இருக்கு. இவளுகளை என்ன செய்யலாம் சார்..?” என்றார். அவர் அந்த message திறந்து பார்ததும் தப்புதான் என்றாலும் அவர் கேட்ட கேள்வி நீயாயமானது. ஆனால் பதில்?







35 comments:

  1. மூடி இருக்கற குப்பைங்கள திறந்து பார்த்தா நாறத்தான் செய்யும்..

    நம்ம இன்பாக்ஸ் மட்டும் விதிவிலக்கா என்ன?!

    ReplyDelete
  2. என்ன கொடும சார் இதெல்லாம்னு சொல்ல மாட்டேன்...தனிப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து பார்ப்பது தவறு....இது என் தாழ்மையான கருத்துங்க மாப்ள!

    ReplyDelete
  3. அந்தக் கடைக்காரரை சும்மாவா விட்டீங்க?

    ReplyDelete
  4. இனி கடையில் மொபைலை சரி செய்ய குடுக்கும் பொழுது சிம்மை கலட்டி விட்டு குடுக்கவேண்டும்.


    மற்றபடி தனி நபர் அந்தரங்கம் அது.

    ReplyDelete
  5. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள், ராஜா.

    ReplyDelete
  6. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  7. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. ஓ ஹோ!!! இன்றைக்குத்தானா ஆசிரியர் தினம்.
    மறந்துவிட்டேன்....

    சகோ !!!
    கவலை எதற்கு...
    நாகரிகமும் நாடும்..
    குப்பையாயிட்டே வருதே....

    ReplyDelete
  9. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. ஆசிரியர் தினநல்வாழ்த்துக்கள் நண்பா..

    நீங்கள் பகிர்ந்த செய்தி கொஞ்சம் பயத்தை தருகிறது..

    ஆனால் அது எவ்வளவு தூரம் உண்மை என்பதை சம்மந்தப்பட்டவர் சொல்லும் வரை தெரியாதே!!??

    ReplyDelete
  11. தல Facebook comment box மாத்துங்க மற்ற பதிவுகளுக்கு போட்ட மொத்த கமேன்ட்களையும் காட்டுது.

    ReplyDelete
  12. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. மாப்பிள அந்த பெண் சிம்காட்ட விட்டு வைச்சதே தப்பு... ஹி ஹி 

    அடுத்தவர் மெசேஸ்ச பாக்கிறது நாகரிகமா மாப்பிள..

    ReplyDelete
  14. அவர்களுக்கு நிறைய குப்பைகள் ஒளிந்துக்கிடக்கிறது...

    ReplyDelete
  15. காலம் கலி காலம் என்பது இதனைத் தானே....

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள். (ஆசிரியர் தினம்)

    ReplyDelete
  17. தவறுதலா அத பார்த்தவர், எதுக்கு படிச்சார்...
    படிச்சத அப்படியே விடாம எதுக்கு உங்ககிட்ட
    சொன்னார்.
    அந்த பெண் செய்றது சரின்னு
    சொல்ல முடியாதுதான்.
    நீங்க அத பெருசா எடுத்துகாம விட்டிங்க
    வேறயாராவது அத கேட்டு
    தவறா அந்த பெண்கிட்ட முயற்சி செஞ்ச மேலும்
    தவறுக்கு தானே வழிவகுக்கும்...

    ReplyDelete
  18. சில நேரங்களில் சில மனிதர்கள்......



    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. ஒரு சிறப்பான நல்ல செய்தியை பதிவு செய்து இருகிறீர் இன்றைய இளம் பெண்களும் ஆண்களும் ஒருபக்கம் சீரழிவை நோக்கி முன்னேறுகிறார்கள் நல்வழி படுத்த வேண்டியவர்கள் இன்மையால் இடுகைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  21. த.ம.9
    அவர் தப்பு செய்யப் போய்தானே அந்தப் பெண்ணின் தப்பு தெரிந்தது!எது தப்பு?

    ReplyDelete
  22. ஒரு பக்கம் செக்ஸ் ஸ்டார்வேசன்,இன்னொரு பக்கம் கட்டுப்பாடாக வாழ்வது எப்படி என்ற நிலையிலே இந்தியா இருக்கிறது.இரு மெசேஜ் வைத்து மொத்த பெண்களையும் எடை போட இயலுமா?

    ReplyDelete
  23. வேலை பார்க்க போனதோட இல்லாம மேட்டரையும் படிச்சுட்டு வந்திருக்காரு... ஹி...ஹி...

    ReplyDelete
  24. இதுல இருந்து என்ன தெரியுது என்றா நம்ம மொபைலை கண்டிப்பாக அடுத்தவன் கையில் கொடுக்க கூடாது... ஹீ ஹீ

    ReplyDelete
  25. அப்புறம்.... அவங்க அவங்க அந்தரங்கம் பாஸ் என்னத்த சொல்லுறது........

    ReplyDelete
  26. என்ன கொடுமை சரவணன்

    ReplyDelete
  27. நாலு பேத்துக்கு தெரியனுன்னு தான் அவ போன அங்க வச்சிட்டு போயிருக்கா.... அவ நினைச்சிருந்தா அதை டெலிட் செய்து கொடுத்திருக்கலாம்..ஹும்ம்ம்ம் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  28. நம்ம என்ன பண்ணணும்னா? அப்படியே விட்டுட்டு நம்ம வேலைய பார்க்க போயிடலாம். ஏன்னா இதில் வருத்தப்பட்டால் ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்களுக்கு காலம் பாடம் கற்றுக்கொடுக்கும். அது நமக்கு தேவை இல்லை.

    ReplyDelete
  29. இன்றைய இளைய தலைமுறை சரியாக வழிநடத்தப்படவேண்டும். வேறென்ன சொல்ல

    ReplyDelete
  30. பாலா அண்ணன் கமென்ட் தான ரிப்பீட்டு!!
    கவலைப்பட்டு ஒன்னும் நடக்கப் போறேல!

    ReplyDelete
  31. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  32. எங்கே முடியும் இதுவே-மனம்
    ஏங்குது வருமா விடிவே

    புலவர் சாஇராமாநுசம்

    ReplyDelete
  33. சினிமாதான் முக்கியமான காரணம். ஆனால் நாம் சினிமாகாரர்களைத்தான் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறோம்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...