நடிகர் , இயக்குனர் மனோ பாலாவின்
தயாரிப்பில் , லிங்குசாமியின் வெளியிட்டில் வந்திருக்கும் படம் சதுரங்க வேட்டை .
தனுஷின் வேலையில்லா பட்டதாரிக்கு போட்டியாக வந்த இந்த படம் போட்டியில் வெல்லுமா என
பார்ப்போம் .
கதை :
நாம் எல்லாரும் எதோ ஒருதடவையாவது
யாரிடமாவது ஏமாந்து இருப்போம் . அப்படி நமை ஏமாற்றியவரின் புத்திசாலித்தனத்தை
பாராட்டாமல் இருக்கமுடியாது. அதுபோலதான் இந்த படத்தின் ஹீரோ. ஹீரோ காந்திபாபுவாக
மிளகாய் படத்தில் நடித்த நட்டு என்கிற நடராஜன் . இவர் சிறந்த ஒளிபதிவாளரும் கூட .
சீக்கிரம் பணக்காரனாக துடிக்கும் பேராசை கொண்ட மக்களின் பலவினத்தை பயன்படுத்தி
பணம் சம்பாதிப்பது இவரின் தொழில் . ஈமு கோழி முதல் மண்ணுளி பாம்பு வரை இவர்
விளையாடு செல்கிறது .
இந்த குற்றத்திற்காக போலீசிடம் மாட்டி
வெளிவரும் பாபு கடத்தப்பட , பணம் என்ன ஆனது , ஏன் கடத்தல் , இதன் இடையே வரும் காதலி இஷாரா என்ன
ஆனார் , கடைசியில் நட்டு திருந்தினாரா இல்லை எதிரிகளால் கொள்ளபட்டாரா என்ற சதுரங்க
ஆட்டத்தின் முடிவை திரையில் பாருங்கள் .
+ பாயின்ட்
* நடராஜின் அலட்டல் இல்லாத நடிப்பு . இதுல வேறு யாராவது பெரிய
நடிகரைபோட்டு கேரட்டரை கொல்லாமல்விட்டது நல்லது .
* வசனங்கள் மிக பெரிய பலம் (நல்லவனா இருந்த செத்தபின்புதான்
சொர்கத
பார்க்கலாம் ஆனா கெட்டவனா இருந்தா வாழும்போதே
பார்க்கலாம் ..)
* மக்களை ஏமாற்றும் திட்டங்கள் . சமிபத்தில் நடந்த நிகழ்வுகளை
கதையில்
காட்டியது (MLM Plan)
* வழக்கம் போல இளவரசுவின் நடிப்பு அருமை .
* புதுமுக இயக்குனர் என சொல்லமுடியாத அளவுக்கு கலக்கி உள்ள
இயக்குனர்
வினோத்
* பின்னணி இசை
* வேகமான திரைகதை
-
-
பாயின்ட் :
பாடல்கள் சுமார்தான் . இசை ஷான் ரோல்டன்
மற்றபடி பெரிய குறைகள் ஒன்றும் தெரியவில்லை
(எனக்கு )
முடிவா !!!
கண்டிப்பா பார்க்கலாம் , ஜாலியா குடும்பத்துடன் பார்க்கலாம்
Tweet |
வாத்தி எப்படி தியேட்டர்ல போய். படம் பார்த்தீரு? டவுன்லோட் இல்ல?
ReplyDeleteநல்ல விமர்சனம்.....சுருக்கமான தீர்க்கமான...வசனங்கள் மிக பெரிய பலம் (நல்லவனா இருந்த செத்தபின்புதான்
ReplyDeleteசொர்கத பார்க்கலாம் ஆனா கெட்டவனா இருந்தா வாழும்போதே
பார்க்கலாம் ..)// இப்படி எல்லாம் கூட வசனம் எழுத ஆரம்பிச்சுட்டாங்களா...அடப் பாவமே
நானும் பார்த்துட்டேன். நாட்டில் நடைபெறும் ஏமாற்றுதல்களை தோலுரித்து தொங்க விட்டிருக்கிறார் இயக்குனர்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி! சுரேஷ் குமார் நடிச்சிருக்காராமே அவரை பத்தி சொல்லவே இல்லை?!
ReplyDelete