மிக நீண்ண்ண்ட இடைவெளிக்கு பின் கதம்பம் வருகிறது .
படித்தது :
நீண்ட நாட்களாகவே சாரு நிவேதிதா அவர்களின் நூலை படிக்கவேண்டும் என ஆசை ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை . அமேசன் தளத்தில் அவரது நூல் "தீராக்காதலி " கிடைத்தது . கொஞ்சமாவது காசுகொடுத்து வாங்கி படிப்போமே என்ற "நல்ல " எண்ணத்தில் ஆடர்போட்டு வாங்கி படித்தேன் . அந்த நடிகர்கள் கிட்டப்பா, பாகவதர் , பி,யு .சின்னப்பா போன்ற பெரும் தலைகளை பற்றிய பல அறிய தகவல்களின் தொகுப்பாக , கட்டுரையை எழுதியுள்ளார் .
அதில் உள்ள பல விஷயங்கள் மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது . அதில் ஒரு தகவல் ..
"தமிழில் முதலில் இரட்டை வேடம் மற்றும் பத்து வேடம் போட்ட நடிகர் பி.யு. சின்னப்பா " என்பது புதிய, அறியாத தகவல் .
டிஸ்கி : இதை முகநூளில் போட்டபோது வாத்தியார் பால கணேஷ் அவர்கள் அடித்த கமெண்ட் :
"அவர் சின்னப்பா இல்லை "பெரிய"ப்பா ..."
செத்து தொலைங்கடா :
நேற்று சென்னையில் பைக் ரேசில் இடுபட்டு , விபத்தில் சிக்கி ஒரு மாணவர் உயிரிழந்த செய்தி கேட்டேன் . வருத்தத்தை விட கோவம்தான் வந்தது . படிக்கும் பையனுக்கு ஏன் விலையுர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் ? பணம் இருக்கே என இப்படி வாங்கிகொடுத்து அவனை கெடுத்து , அந்த பையனும் ரேஸ் என போய் இப்போ உயிரைவிட்டுவிட்டான் . இனி துடித்து என்ன பயன் ?
இப்படி ரேஸ் போய் , ரேஸில் கலந்துகொள்ளும் ஆள்கள் செத்தால் பரவாயில்லை , அப்பாவியாக ரோட்டில் போகும் ஆட்களை காலி செய்துவிடுகிறார்கள் . எவனோ திமிரெடுத்து செய்யும் செயலுக்கு அப்பாவிகள்தான் பலியாக விடுமா ?
டிஸ்கி : இப்போ தலைப்பை படியுங்கள்
பார்த்த படம் :
"வேலையில்லா பட்டதாரி " தனுஷின் மார்க்கெட்டை தூக்கி பிடிக்கும் படம் . ஆரம்பம் முதலே ஜாலியாக செல்கிறது . இடைவேளைக்கு பின் படம் தடம்மாருகிறது . கடைசி சண்டை தேவையே இல்லை. திணிப்பு . தனுஷின் உடம்பை காட்டவேண்டும் என்றே அந்த சண்டை போல . நம்ம படங்களில் தேவையே இல்லாமல் பாடல் ,சண்டைகளை சேர்ப்பதை எப்போது விடபோகிரர்களோ ?
படத்தில் லாஜிக் பற்றி யோசிக்க கூடாது . படத்துக்கு வந்தோமா , ஜாலியா என்ஜாய் செய்தோமோ போனோமான்னு இருக்கணும் . இங்கோ\இங்கிலீஷ் சரியா தெரியாதவன் எப்படி BPO இல் முதல் மாசமே 50000 சம்பாதிப்பான் , ஏலட்ரானிக் ஜாமர் எப்படி தனுஷின் வீடியோ ரெகார்ட்ராய் மட்டும் தடுக்கவில்லை என்று யோசித்தால் படம் பார்க்க முடியாது .
டவுட் :
பாலஸ்தீனத்தின் காஸா மீதான
இஸ்ரேலின் கொடூர
தாக்குதலுக்கு எதிர்ப்பு
தெரிவித்தும் இம்
மோதலை முடிவுக்கு
கொண்டுவராத
அமெரிக்காவை கண்டித்தும்
மும்பையில் பெப்சி, கோக்
குளிர்பானங்கள்
விற்பனைக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.
#ஆனா அதே அமெரிக்கன் கண்டுபிடிச்ச பேஸ்புகை மட்டும் தடை செய்யாம பயன்படுத்துவோம்.
#ஒரே கன்பியூஷன். . .
==============================================================
இந்தியா முழுதும் போட்டியிட்டு 44 சீட் மட்டும் ஜெய்த்து எதிர்கட்சி பதவி வேனும்னு கேட்குது. ஏன் ஒரு மாநிலத்தில் மட்டும் போட்டியிட்டு 37 சீட் ஜெய்த்த அ.தி.மு.க அந்த பதவியை கேட்க்ககூடாது?
10 ம் வகுப்பில் 480 எடுத்தவனை விட 12 ம் வகுப்பில் 482 எடுத்தவன் பெரிய ஆளா?
#டவுட்
============================================================
இலங்கை நிறுவனம் தயாரிப்பதால் "கத்தி" படத்தை தடைசெய்யவேண்டும்.
#செய்தி
அப்போ இலங்கைகு விமானம் விடும் சன் நெட் ஒர்க்கில் உள்ள டிவியை தடை செய்யனும்னு ஏன் யாரும் போராடல?
#ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆண்டியா?
Tweet |
கதம்பம் அருமை! பைக் ரேஸ் பெற்றோர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும்...பையன் கேட்பது எல்லாம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே...சும்மா நடந்து போனாலே தட்டிட்டு உயிர எடுத்துடறாங்க....இதுல பைக் ரேஸ் அதுவும் சிட்டிக்குள்ள...இது பத்தி பேப்பர்ல ஆர்டிக்கிள் வந்துச்சுங்க.....ஆனா என்ன பிரயோசனம்?
ReplyDeleteஉங்க டவுட் செம டவுட்டுங்க...ஃபேஸ் புக்க விடுங்க.....எல்லா கணக்கும் எழுதறதுக்கும், ஃபேஸ்புக்க பாக்கறதுக்கும் அவன் கம்ப்யூட்டர் தானேங்க யூஸ் பண்ணறோம்........அதுக்கு தடை சொல்லுவாங்களா? அவ்வளவுதான் அவனவன் தலை முடிய பிச்சுக்குவான்...
2 வது 3 வது டவுட்டும் ரைட்டே!
கதம்பம் அருமை! டவுட்டுக்கள் எல்லாம் சிறப்பு! நன்றி!
ReplyDeleteகதம்பம் சுவையாக இருந்தது,
ReplyDeleteபைக் விசயம் சிந்திக்க வேண்டியதுதான் நண்பரே....
Nice one i like it, The news you shared was really sad
ReplyDeleteFamous places of coimbatore
அருமையா எழுதுறீங்க. நெத்தியடி.
ReplyDelete