> என் ராஜபாட்டை : கதம்பம் 19-04-2012

.....

.

Thursday, April 19, 2012

கதம்பம் 19-04-2012




ரசித்த சினிமா

ஓகே ஓகே படம் பார்த்தேன் , மிக நீண்ட இடைவெளிக்கு பின் திரையரங்கம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலும் கல்லுரி மாணவ மாணவிகள். எனது முன்னாள் மாணவிகள் பலர் ஒரு குருப்பாக வந்திருந்தனர். இரண்டாவது முறையாக பார்கின்றார்கலாம். உதயநிதியை விட சந்தானத்திர்க்கு கைதட்டலும் , வரவேற்பும் அதிகம் . பார்க்கிங் 50 படத்திற்கு 200  என சென்னையில் பிடிக்குவது போல இல்லாமல் வெறும் 50 மற்றும் 30 ரூபாயில் டிக்கெட் கிடைப்பதும் கூட்டத்திற்கு ஒரு காரணம் . மனசுவிட்டு சிரிக்க விரும்புவர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள் .

படித்த புத்தகம்

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சிறுகதை தொகுப்பு அனுமதி படித்தேன் . மிக பழைய கதைகள் ஆனாலும் மிக சுவாரசியம் . அதிலும் அறிவியல் புனைகதைகள் மிக அருமை . மொத்தம் 12  கதைகள் உள்ளது .
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்  
விலை  : 60

எரிச்சல் :

இந்திரா , மற்றும் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவுக்கு விளம்பரம் செய்ய மத்திய அரசு செய்த செலவு 6.25 கோடியாம் . யார் அப்பன் வீட்டு காசு ? ஒரு வேலை உணவில்லாமல் எத்தனையோ மக்கள் தவிக்கும் போது இது தேவையா ? இவனுகளுக்கு ஆப்பு வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை .

ரசித்த ஜோக்

சபரி : நான் சந்திர மண்டலத்துல நாலு ஏக்கர் நிலம்
       வாங்கலாம்னு இருக்கேன் .

சரண் : ஐயோ !! அங்கே கரண்ட் , ரோடுலாம் இருக்காதே ?

சபரி : போடா .... இங்க மட்டும் அதெல்லாம் இருக்கா ?

ரசித்த வார்த்தை :

ஈரம் இருக்கும் வரை
இலைகள் உதிர்வதில்லை

நம்பிக்கை இருக்கும் வரை
நாம் தோற்பதில்லை .

    ( மேலையூரில் உள்ள START SYSTEM COMPUTER CENTER இல் ஓட்டபட்டு இருத்த போஸ்டரில் இருந்தது )

ரசித்த புகைப்படம் :


இதையும் படிக்கலாமே :

ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்

 

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

 

உலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்.

 

 

19 comments:

  1. கதம்பத்தில் நல்லாவே வாசம்! நான் இன்னும் Ok OK பாக்கலை. சுஜாதாவை நான் இப்பத்தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். ரொம்ப லேட்டோன்னு ஃபீல் பண்ணிட்டிருந்தேன். நீங்களும் இப்பத்தான் படிக்கறீங்களா? Same Blood! என்னை Encourage பண்ற உங்களுக்கு My Heartful Thanks Brother!

    ReplyDelete
  2. மனம் மிக்க கதம்ப மாலை நண்பரே..

    ReplyDelete
  3. கதம்பம் மனம் மயக்குது...!

    ReplyDelete
  4. Semaiya irukku thala!!!

    #Adhilum, andha Joke... Good...

    ReplyDelete
  5. அருமையான தகவல்கள் ....

    ReplyDelete
  6. கதம்பம் அருமை .

    ReplyDelete
  7. /////////இந்திரா , மற்றும் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவுக்கு விளம்பரம் செய்ய மத்திய அரசு செய்த செலவு 6.25 கோடியாம் . யார் அப்பன் வீட்டு காசு ? ஒரு வேலை உணவில்லாமல் எத்தனையோ மக்கள் தவிக்கும் போது இது தேவையா ? இவனுகளுக்கு ஆப்பு வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை///////////

    வாய்ப்பே இல்லை தல..., அடுத்ததடவையும் இவனுக செயுச்சு நம்ம எல்லோர் மூஞ்சிலேயும் கரிய பூசி இந்தியாவை எவனுக்காவது பிளாட் போட்டு வித்ருவாணுங்க.., அந்த நாள் வேணும்னா வெகு தொலைவில் இலைன்னு சொல்லலாம் ...!

    ReplyDelete
  8. ஒரு கல் ஒரு கண்ணாடி பாக்கனும்னு தான் நினைக்கிறேன் முடியல

    ReplyDelete
  9. thathuvam!

    kavithai!

    arasiyal!

    ada daa!
    nantru!

    ReplyDelete
  10. போன எடிஷன் அளவுக்கு சிறப்பா இல்ல சார்...ஆனாலும் நல்லாருக்கு...:)

    ReplyDelete
  11. இந்திரா , மற்றும் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவுக்கு விளம்பரம் செய்ய மத்திய அரசு செய்த செலவு 6.25 கோடியாம் . யார் அப்பன் வீட்டு காசு ? ஒரு வேலை உணவில்லாமல் எத்தனையோ மக்கள் தவிக்கும் போது இது தேவையா ? இவனுகளுக்கு ஆப்பு வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
    >>>
    நேரு குடும்பத்துக்கிட்ட நாட்டை அடகு வச்சு ரொம்ப நாளாச்சு சகோ.

    ReplyDelete
  12. அந்த கிளாஸ் ரூம் நீங்க சூப்பர்வைசரா போன ரூமா? புள்ளைங்கலாம் காப்பி அடிக்குறதை கூட பதிவா தேத்தி இருக்கீங்களே. நல்ல வாத்திதான் நீங்க.

    ReplyDelete
  13. மணமுள்ள கதம்ப மாலை
    ரசித்துப் படித்தேன்
    டீம் ஒர்க்கும் நிலவில் இடம் வாங்குதலும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. ரசித்தேன். கதம்ப வாசனையில் மருவு இல்லையா?:-))))

    ReplyDelete
  15. தஞ்சாவூர்க் கதம்பம்.

    ReplyDelete
  16. கதம்பத்தில் உள்ள அனைத்தும் அருமை. அந்த நகைச்சுவை அருமையிலும் அருமை

    உங்களின் வலைப்போ அறிமுகம் இப்பொழுது தான் கிடைத்தது. அருமையாகவும் அழகாகவும் உள்ளது. இனி தவறாது தொடர்கிறேன். வலைப் பூவிற்கு புதியவன். உங்கள் போன்ற ஜம்பவங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. கற்றுக் கொள்கிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...