> என் ராஜபாட்டை : ஆயிஷா

.....

.

Tuesday, December 15, 2015

ஆயிஷா





             ஒரு கவிதை படித்து அழுகை வரலாம் , அல்லது ஒரு கதை அல்லது பாடலை கேட்டு அழுகை வரலாம் . ஆனால் ஒரு புத்தகத்தின் முன்னுரையை படித்து அழுகை வருமா ? கண்டிப்பாக வரும் . திரைப்படங்களில் சென்டிமென்ட் காட்சிகள் வந்தால் சிரிப்பை அடக்கமுடியாமல் பார்ப்பேன் . என் தங்கை திருமணமாகி கிளம்பும்போது அனைவரும் அழுவ , நான் கவலைபடாமல் தூங்கிவிட்டேன் . அப்படி பட்ட என்னை உலுக்கிய , இரவு தூக்கத்தை கெடுத்த ஒரு நூலின் முன்னுரையை தான் உங்களுடன் பகிரபோகிறேன் .


இதை எழுதியவர் யார் என தெரியவில்லை . எதோ ஒரு கிருத்துவ பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியை , அவர் இப்போது பல அறிவியல் கதைகள் எழுதுகிறார் . அவர் இப்படி எழுத தூண்டிய, காரணமான அவரது வாழ்கையை புரட்டிபோட்ட ஒரு மாணவியின் கதையை முன்னுரையாக சொல்லியுள்ளார் .
இன்றைய மதிப்பெண் உலகில் மதிப்பெண் மட்டுமே மாணவர்களின் அறிவை மற்றவர்களுக்கு பறைசாற்றுகிறது . புத்தகத்தில் , நோட்ஸில் உள்ளதை கரைத்து குடித்து தேர்வில் வாந்தி எடுபவர்களைதான் இந்த சமுதாயம் பாராட்டுகிறது . சொந்தமாக எழுத முயர்ச்சிபவர்களை முளையிலேயே கிள்ளி எறிகின்றது .


6 வகுப்பில் தமிழில் “கஷ்டபட்டு முன்னேறினார் “ என்பதை சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுத சொன்னார்கள் . ஒரு மாணவன் “என் தந்தை சொந்த தொழில் செய்து கஷ்டபட்டு முன்னேறினார் “ என எழுதியதை என் சக ஆசிரியர் தவறு போட்டார் . ஏன் என கேட்டதுக்கு புத்தகத்தில் “ஜி.டி நாயுடு கஷ்டபட்டு முன்னேறினார்” என புத்தத்தில் இருக்கு இவன் எப்படி மாத்தி எழுதலாம் என்றார். ரொம்ப நேரம் வாதிட்டும் ஒத்துக்கொள்ளவில்லை.

இன்றைய கல்விமுறையும் , சமுக பார்வையும் இப்படிதான் உள்ளது .     இதை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன் .

கிழே அந்த ஆசிரியை எழுதிய முன்னுரையை இணைத்துள்ளேன் .சாதாரண ஆசிரியரை எப்படி அறிவியல் நூல்கள் எழுதும் எழுத்தாளராக ஒரு மாணவி மாற்றினார் , ஆனால் அந்த மாணவியின் நிலை இப்போது என்ன ? என்ற கேள்விகளுக்கு பதில் இந்த முன்னுரையில் உள்ளது . தரவிறக்கி படித்து பாருங்கள் . மொபைலில் படிப்பவர்கள் எப்படியாவது தரவிறக்கி பிடிக்க முயற்சி செயுங்கள் . கண்டிப்பாக உங்கள் கண்ணில் கண்ணீர் வரும் . இதை படித்த பின் கண்டிப்பாக ஆசிரியர்கள் மனதில் மாணவர்கள் பற்றிய எண்ணத்தில் மாற்றம் வரும் .












6 comments:

  1. படிக்கின்றோம். நிச்சயமாக. உங்கள் பதிவைப் பார்த்ததுமே அதன் தாக்கம் தெரிந்துவிட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி. வாசித்துவிட்டு வருகின்றோம் மீண்டும். ஒருவேளை அதைப் படித்ததும் பதிவு தோன்றினால் நாங்கள் எழுதும் பதிவில் உங்கள் பதிவையும் அதையும் சொல்லலாம் அல்லவா சகோ...

    ReplyDelete
  2. படிக்கின்றேன் நண்பரே...
    - கில்லர்ஜி

    ReplyDelete
  3. சகோ! நொறுங்கிவிட்டது மனது. நமது கல்விமுறை எப்படி இருக்கின்றது பாருங்கள். இதைப் பற்றி நாங்கள் ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருந்தாலும் மற்றுமொரு பதிவு நமது கல்வி முறை பற்றி எழுத நினைத்துப் பகுதி எழுதியிருந்ததால்தான் உங்களிடம் அந்த அனுமதி கோரி இருந்தோம் அதையும் சொல்லலாம் அல்லவா என்று. எங்கள் பதிவிற்கு மிகவும் பொருத்தமான ஒன்று சுட்டிக் காட்ட.

    கல்விமுறை, நமது மாணவர்கள், எஜுகேஷனல் சைக்காலஜி இவற்றைப் பற்றி யோசிப்பதினால் அந்தப் பதிவு எழுத நினைத்திருந்த வேளையில் உங்கள் இந்த முன்னுரை நிச்சயமாக சேர்க்கப்பட வேண்டும். அதன் இறுதிக் கேள்வியை நாங்கள் எங்கள் முந்தைய பதிவில் பெண்கள் என்றில்லாமல் பொதுவாகவே கேட்டிருந்தோம். இந்தக் கேள்வி நமது கல்வி முறைக்குச் சவுக்கடி போலான பொளேர் என்றக் கேள்வி...

    அருமையான முன்னுரை ஆனால் கலங்கடித்த முன்னுரை...ஆயிஷா இன்னும் நிறைய ஆயிஷாக்கள் இருக்கின்றார்கள் மூலை முடுக்குகளில் எல்லாம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  4. ஒரு ஆசிரியை சொல்வது போல் அமைந்த நூல் இது.ஆயிஷா கல்வித் துறையில் பிரபலமான அறியப்பட்ட நூல்.இதை எழுதியவர் நடராஜன். இந்த நூலில் மூலம் ஆயிஷா நடராஜன் என்றே அறியப் படுகிறார். குறும்படமாகவும் வந்துள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கும் போட்டுக் காண்பிக்கப் பட்டுள்ளது.மனதை உருக்கக் கூடியது.இந்த நூலுக்காக பால சாகித்ய அகடமி விருதும் பெற்றிருப்பதாக தெரிகிறது.என்னைப் பொறுத்தவரை மிகைப்படுத்தப்படுத்தி எழுதப் பட்டதாகவே தோன்றுகிறது.
    இவரின் உண்மை முகம் என்று வினவு ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை
    http://www.vinavu.com/2014/11/18/the-double-face-of-ayeesha-natarajan/

    ReplyDelete
  5. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ராஜபாட்டை ராஜா அவர்களுக்கு நேச வணக்கம்!

    என்னை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். மேற்படி பதிவில் உள்ள அந்த இணைப்பைப் படித்தேன். மேலே முரளிதரன் அவர்கள் கூறியது போல், இது ஒரு குறும்புதினம். உண்மை நிகழ்வு இல்லை. மேலும், எந்த ஒரு நூலின் முன்னுரையும் இல்லை அது. அப்படி அதில் குறிப்பிட்டிருப்பதும் அந்தக் கதையுடைய தன்மையின் ஒரு பகுதி அவ்வளவுதான். எனவே, வருந்தாதீர்கள்!

    ஆனால், உண்மையிலேயே மிகவும் சிறப்பான, சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்திய இலக்கியம் இது. இதே ஆயிஷா எனும் பெயரில், ஏறத்தாழ இதே கதையமைப்பைக் கொண்ட ஒரு குறும்படத்தை அரசு நிறுவனமான இந்தியக் குழந்தைகள் திரைப்பட அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அஃது இந்தக் கதையாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். விற்பனையிலும் பெரிய சாதனை படைத்த நூல் இது. இப்பொழுது இதன் எழுத்தாளர் 'ஆயிஷா' நடராசன் அவர்களே இதைத் தன் தளத்திலிருந்து இலவசமாக வழங்குகிறார். இந்த நூல் பற்றிய அவருடைய நேர்காணலின் ஒரு சிறு பகுதி இங்கே உங்கள் பார்வைக்கு.

    --
    ஆயிஷா' உருவான கதை...

    "என்னிடம் பயின்ற முஸ்லிம் மாணவன் ஒருவன்தான் 'ஆயிஷா'வுக்கான உந்துதலாக இருந்தான். மாணவனைக் கதையில் மாணவி என்று மட்டும் மாற்றிக்கொண்டேன். வகுப்பறை என்பது குழந்தைகளுக்கு ஒரு வெறுக்கத்தக்க இடமாக இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். ஒரு கடையில் ஒரு பொருள் வாங்கும் நுகர்வோருக்கு அந்தப் பொருளில் திருப்தி இல்லை எனில் நீதிமன்றத்துக்குப் போகலாம். ஆனால், நம் சட்டமும் சமூகமும் கல்வி பயிலும் மாணவர்களை நுகர்வோராகப் பார்ப்பது இல்லை. அவர்களுக்கு உகந்த கல்வி இல்லை எனில், அவர்கள் ஆட்சேபிக்கும் உரிமைகூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஆசிரியர் நினைப்பதுபோல் எல்லாம் மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டும் இங்கே! கேள்வி கேட்கக் கூடாது. குழந்தைகள் ஆசிரியர்களிடம் வாதாடக் கூடாது.

    இந்தக் கொடுமைகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்கும் இதே சமூகத்தில்தான் திண்டிவனம் அருகே ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச் சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தைத் தழுவினான். இதை வைத்து 'ஆயிஷா'வை எழுதினேன். 1985-ம் ஆண்டே 'ஆயிஷா' எழுதப்பட்டுவிட்டது என்றால் நம்புவீர்களா? அனுப்பிய இடங்களில் எல்லாம் கதை திரும்பி வந்தது. 'ஆயிஷா' சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது நம் சமூகத்தில் இல்லை. குழந்தைகளுக்கு நம் கல்விமுறையில் அளிக்கப்படும் தண்டனைகளில் ஒரு தவறும் இல்லை என்றேதான் நினைத்துஇருந்தது சமூகம். 10 ஆண்டுகள் விடாமல் முயன்றேன். பின்னர், 1995-ல் 'கணையாழி' குறுநாவல் போட்டியில் இரா.முருகன், சுஜாதா இருவரும் நடுவராக இருந்து 'ஆயிஷா'வைத் தேர்ந்தெடுத்தார்கள்."

    - எழுத்தாளர் 'ஆயிஷா' இரா.நடராஜன் (ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் இருந்து)

    --
    இந்த நூல் பற்றியும் அந்தக் குறும்படம் பற்றியும் அவை வெளிவந்தபொழுதே கேள்விப்பட்டேன் என்றாலும், இதுவரை அந்த நூலையும் நான் படித்ததில்லை; அந்தப் படத்தையும் பார்த்ததில்லை. அதைப் படிக்க வழங்கியமைக்கு மிக மிக நன்றி! நீங்கள் இப்படியொரு பதிவை இங்கே எழுதியிருக்கிறீர்கள் என்று கூறியதோடு, படித்துப் பார்க்குமாறும் சொன்ன 'தில்லையகத்து கிரானிக்கிள்சு' கீதா அம்மணி அவர்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  6. சொல்ல மறந்து விட்டேன். மேலே முரளிதரன் அவர்கள், ஆயிஷா நடராசன் அவர்களைப் பற்றி 'வினவு' எழுதிய பதிவு ஒன்றின் இணைப்பைத் தந்து அதன் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார். நான் பார்த்த வரை, 'வினவு' தளம் இதுவரை யாரையுமே நல்லவர்கள் என்று சொன்னதில்லை. உலகில் எல்லாருமே கெட்டவர்கள்தாம் 'வின'வைப் பொறுத்த வரை. இதுவே ஒரு மனநோய். தன்னுடைய அபாரமான வாதத்திறமை மூலம் எப்பேர்ப்பட்டவரையும் கீழ்த்தரமானவராக உருவகப்படுத்தி விடக்கூடிய ஆற்றல் சிலருக்கு இருக்கிறது. அது நல்லதில்லை. அப்படிப்பட்ட கருத்துக்களை மதிக்க வேண்டியதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...