> என் ராஜபாட்டை : தலைவர்

.....

.
Showing posts with label தலைவர். Show all posts
Showing posts with label தலைவர். Show all posts

Monday, July 14, 2014

கர்மவீரர் காமராசர்








கிங் மேக்கர் என்றும் கருப்பு தங்கம் என்றும் கல்விக்கண் திறந்த கர்ம வீரர் என்றும் மக்களால் பாராட்ட பெற்ற ஒரு உன்னத மக்கள் தலைவர் திரு காமராஜர் அவர்கள் . தனது சுயநலமில்ல உழைப்பால் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்தவர் இவர் . அரசில் ஒரு பதவிக்கு வந்த உடன் தனது குடும்பத்தில் உள்ளவர்களை எப்படி கோடிஸ்வரன் ஆக்கலாம் என நினைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் போல் இல்லாமல் தன் குடும்பத்துகேன வாழாமல் தமிழக மக்களையே தன் குடும்பம் என வாழ்ந்தவர் இவர் .


இன்று ஏழை குழந்தைகள் பசியின்றி பள்ளி செல்ல இவரின் மதிய உணவு திட்டமே காரணம் . பசிக்கும் குழந்தை எப்படி பாடத்தில் கவனம் வைப்பான் என சிந்தித்ததின் வெளிபாடே இந்த மத்திய உணவு திட்டம் . இந்த திட்டத்தை பற்றி ஒரு விளம்பரப்படம் எடுக்கலாம் என ஒரு அதிகாரி யோசனை சொல்ல அந்த படம் எடுக்க ஆகும் செலவுக்கு இன்னும் சில பள்ளிகள் திறக்கலாம் என்றார் .



திருச்சி BHEL திட்டம் இவரால் வந்ததே . பல அதிகாரிகள் பல இடங்களை பார்த்துவிட்டு அந்த தொழில்சாலை அமைய சரியான இடம் இல்லை என சொல்ல , காமராஜர் கொஞ்ச நேரம் யோசித்து "ஏன் திருச்சி இதுக்கு சரியாவருமே " என்றார் . அப்புறம் சோதனை செய்ததில் அந்த இடம் மிக பொருத்தம் என அறிந்தனர் .



தனதுகுடும்பத்துக்காக பணம் சேர்க்காத , தனது நலனை பார்க்காத , தான் செய்யும் சேவைகளை விளம்பரபடுத்தி கொள்ளாத , மக்களுக்கு எந்த திட்டம் நல்லது என யோசித்த , கடைசிவரை மக்களுக்காகவே வாழ்ந்து இறுதியில் அந்த மக்களாலேயே தோற்கடிக்கபட்ட  நல்ல மனிதர் காமராஜர் .

இவரின் பிறந்த நாள் நாளை :(15-07-2014)

இவரை பற்றிய நூலை தரவிறக்கம் செய்ய : 

 CLICK HERE



இவரை பற்றிய நூலை தரவிறக்கம் செய்ய :   CLICK HERE 


இதையும் படிக்கலாமே :