> என் ராஜபாட்டை : உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?

.....

.

Thursday, September 15, 2011

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?







நம் அனைவருக்கும் நமது குழந்தைகளை இந்த உலகில் மிக சிறந்த மனிதனாக, நல்லவனாக, அனைவரும் பாராட்டும் ஒரு புத்திசாலியாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வருங்காலத்தில் நம்மை மட்டுமல்ல நம் பெயரையும் காப்பாற்ற போகின்றவர்கள் அவர்கள். அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என சில குறிப்புகள்.

  1. கல்வி என்பது முக்கியம் ஆனால் அது மட்டுமே வாழ்கையல்ல, எனவே கற்பது என்பது ஒரு இனிய அனுபவம் என அவனுக்கு புரியவையுங்கள்.

  1. குழந்தையை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அது அவர்கள் மனதை பாதிக்கும், அவர்கள் அடுத்தவர்கள் மேல் வன்மம் கொள்ள வழிவகுக்கும்.


  1. குழந்தைகள் பேசுவதை கேளுங்கள். பெற்றோர்கள் பலர் செய்யும் தவறு தங்கள் பிள்ளைகள் பேசுவதை கேட்பதில்லை.

  1. குடும்பத்தின் வரவு- செலவுகளை அவர்களும் தெரிந்துகொள்ளும் படி செய்யுங்கள்.


  1. உங்களிடம் எதையும் மறைக்காமல் அவன் பேச அவனுக்கு தைரியம் கொடுங்கள்.

  1. உடைகள் விஷயத்தில் அவர்கள் சொல்லுவதை கேளுங்கள். உங்களுக்கு பிடித்ததை அணிய சொல்லி கட்டாயபடுத்தாதீர்கள்.


  1. உடம்பை காட்டும் உடைகளை பெண் குழந்தைகள் விரும்பினால், அது தவறு என அவர்களுக்கு உணர்த்துங்கள்.

  1. அம்மாக்கள் தொலைகாட்சி தொடர்களை குறைத்துகொண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.


  1. அவர்கள் பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னால் காது குடுத்து கேளுங்கள்.

  1. உங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொன்னாலும் , புதிதாக கேட்பதுபோல் கேளுங்கள். அது அவர்களை சந்தோஷப்படுத்தும்.


  1. நீங்கள் உங்கள் உறவினர்கள் பற்றி நல்ல படியாக பேசுங்கள், அப்பதான் அவர்களும் பேசுவார்கள்.


டிஸ்கி: இன்னும் விளக்கமாக குழந்தையை புத்திசாலியாக, நல்லவனாக, அன்பானவனாக, அறிவாளியாக, பலசாலியாக வளர்ப்பது எப்படினு தெரியனுமா? உடனே எங்க அம்மாகிட்ட கேளுங்க.

32 comments:

  1. அருமையான தகவல்கள் .கண்டிப்பாக பார்க்க வேண்டியது

    ReplyDelete
  2. ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete
  3. நடைமுறை வாழ்க்கைக்கு தேவையானதை சொல்லிருக்கீங்க நண்பா.ஓட்ட்டும் போட்டாச்சு

    கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க

    4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

    ReplyDelete
  4. பயனுள்ள பகிர்வு நண்பா.

    உண்மைதான்.

    குழந்தையைத் திட்டுவதாலோ மிரட்டுவதாலே
    திருத்திவிடமுடியாது

    புரியவைக்கவேண்டும்.

    ReplyDelete
  5. தமிழ் மணம் ஆறு

    ReplyDelete
  6. நல்ல அருமையான தகவல் நண்பரே

    ReplyDelete
  7. என் வழி குறுக்கு வழின்னு போறவர் நல்லவரா? தெரியாம போச்சே...

    ReplyDelete
  8. அனைத்தும் அருமையான தகவல்கள்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. தங்கள் தகவலுக்கு நன்றி ராஜா.. இதில் நீங்கள் கூறியிருக்கும் 6 வது தகவலில் மட்டும் தான் எனக்கும் என் மகனுக்கும் ஒத்துப் போகாது...
    நாங்கள் எங்களின் சிறு சிறு சந்தோஷங்களை கூட
    என் மகனிடம் பகிர்ந்து கொள்வோம்.. கஷ்டங்கள் வரும் நேரங்களில் 'விடுங்கப்பா எல்லாம் சரியாகிடும்' அப்படினு சொல்லி எங்களை அரவணைப்பான்..

    இக்காலத்தில் கணவன் மனைவி இருவரும் பணிபுரிவதால் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவது குறைவாகி விட்டது.. ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது உங்கள் குழந்தைகளுடன் செலவளியுங்கள்..உடையவர் பாராதது எதுவும் நன்றாக அமையாது என்பது சொல்லித் தெரிவதில்லையே..

    உங்கள் கருத்துக்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள்.. அவர்களின் கருத்துக்களுக்கு செவி சாயுங்கள்.. அதன் நன்மை தீமைகளை அவர்களிடம் கூறி ஆராய்ந்து பார்க்க சொல்லுங்கள்.. அதுவே சிறந்தது..

    முதலில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் ஒரு நண்பராக பழக வேண்டும்.. தவறு செய்யும் போது அடித்து திருத்துவதை தவிர்த்து அத் தவறினால் ஏற்பட்ட பாதிப்பு அல்லது ஏற்படப் போகும் பாதிப்பினை அவர்களுக்கு உணர்த்தலாம்..அது அக் குழந்தைகள் நன்மை தீமைகளை தாமே உணர்ந்து செயல் பட உறுதுணையாகும்...

    சில சமயங்களில் சொல் அறிவினை விட அனுபவ அறிவு தான் பலமான பல பாடங்களை கற்றுத் தறும்..

    அனைத்து பெற்றோர்களுக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள்...
    " நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களையும் சமூக அந்தஸ்தையும் சேர்த்துக் கொடுப்பதை விட, ஆண்பிள்ளையோ பெண்பிள்ளையோ அவர்களுக்கு கல்வி.. தன்னம்பிக்கை.. நாணயம், இதை கொடுங்கள் போதும்.. அது அவர்களுக்கு எஞ்சிய அனைத்தையும் பெற்றுத் தரும்.. வாழ்வின் மிகச்சிறந்த மனிதனாக மாற்றும்.."

    (மன்னிக்கனும்.. இங்க இருக்கற எல்லா பெற்றோர்களுக்கும் இப்படி அறிவுரை சொல்ற அளவிற்கு நான் பெரியவள் இல்லைங்க.. இது என் கருத்து அவ்வளவு தான்..)


    நன்றி,
    நட்புடன் சௌம்யா...

    ReplyDelete
  11. அருமையான தகவல்கள்
    பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டியது
    வாழ்த்துக்கள் ராஜா

    ReplyDelete
  12. வாழ்விற்கு தேவையான
    வாழ்வியல் துணுக்குகள்

    ReplyDelete
  13. அருமையான டிப்ஸ்கள்.அனைத்து பெற்றோருக்கும் அவசியமான தகவல்கள்.இது போன்ற குறிப்புகளை அவசியம் வெளியிடுங்கள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. ஆஹா அருமையா சொல்லி இருக்கீங்க...

    ReplyDelete
  15. நான் திருமணம் முடித்தால் நல்ல தகவல் வாழ்த்துக்கள்...!
    தமிழ்மணம் 12.

    ReplyDelete
  16. பாயிண்ட் பை பாயிண்டா சூப்பரா சொல்லி இருக்கீங்க...

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றி அவசியமான பதிவு

    ReplyDelete
  18. பாஸ் கலக்குறீங்க... நானும் படிச்சு மண்டைக்க ஏத்தி வைச்சு இருக்கேன்...
    பின்னால உதவும் இல்ல.... ஹீஹீ

    அப்புறம்... கடைசி டிஸ்கி ஓவர் குசும்பு தானே...??? நல்லாத்தான் சொல்லூறாங்கய்யா....... ஹீஹீ

    ReplyDelete
  19. நல்ல பதிவு நண்பா பெற்றோர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  20. வணக்கம் பாஸ்,

    நல்லதோர் தகவற் பகிர்வு,
    நான் புக் மார்க் பண்ணி வைக்கிறேன்.
    வருங்காலத்தில் உதவும்.

    ReplyDelete
  21. என் வலையில் அடக்கம் செய்யவா அறிவியல் என்னும் இடுகை வெளியிட்டிருக்கிறேன் அன்பரே..
    காண அன்புடன் அழைக்கிறேன்.

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

    ReplyDelete
  22. பயனுள்ள் குறிப்புகள்.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  23. //சௌம்யா....... said...
    அனைத்து பெற்றோர்களுக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள்...
    " நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களையும் சமூக அந்தஸ்தையும் சேர்த்துக் கொடுப்பதை விட, ஆண்பிள்ளையோ பெண்பிள்ளையோ அவர்களுக்கு கல்வி.. தன்னம்பிக்கை.. நாணயம், இதை கொடுங்கள் போதும்.. அது அவர்களுக்கு எஞ்சிய அனைத்தையும் பெற்றுத் தரும்.. வாழ்வின் மிகச்சிறந்த மனிதனாக மாற்றும்.." //


    100% correct

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...