> என் ராஜபாட்டை : அரசியல்

.....

.
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, July 28, 2014

கதம்பம் 28-07-2014





மிக நீண்ண்ண்ட இடைவெளிக்கு பின் கதம்பம் வருகிறது .


படித்தது :

நீண்ட நாட்களாகவே சாரு நிவேதிதா அவர்களின் நூலை படிக்கவேண்டும் என ஆசை ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை . அமேசன் தளத்தில் அவரது நூல் "தீராக்காதலி " கிடைத்தது . கொஞ்சமாவது காசுகொடுத்து வாங்கி படிப்போமே என்ற "நல்ல " எண்ணத்தில் ஆடர்போட்டு வாங்கி படித்தேன் . அந்த நடிகர்கள் கிட்டப்பா, பாகவதர் , பி,யு .சின்னப்பா போன்ற பெரும் தலைகளை பற்றிய பல அறிய தகவல்களின் தொகுப்பாக , கட்டுரையை எழுதியுள்ளார் .

அதில் உள்ள பல விஷயங்கள் மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது . அதில் ஒரு தகவல் ..

"தமிழில் முதலில் இரட்டை வேடம் மற்றும் பத்து வேடம் போட்ட நடிகர் பி.யு. சின்னப்பா " என்பது புதிய, அறியாத தகவல் .

டிஸ்கி : இதை முகநூளில் போட்டபோது வாத்தியார் பால கணேஷ் அவர்கள் அடித்த கமெண்ட் :

"அவர் சின்னப்பா இல்லை "பெரிய"ப்பா ..."


செத்து தொலைங்கடா :


நேற்று சென்னையில் பைக் ரேசில் இடுபட்டு , விபத்தில் சிக்கி ஒரு மாணவர் உயிரிழந்த செய்தி கேட்டேன் . வருத்தத்தை விட கோவம்தான் வந்தது . படிக்கும் பையனுக்கு ஏன் விலையுர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் ? பணம் இருக்கே என இப்படி வாங்கிகொடுத்து அவனை கெடுத்து , அந்த பையனும் ரேஸ் என போய் இப்போ உயிரைவிட்டுவிட்டான் . இனி துடித்து என்ன பயன் ?

இப்படி ரேஸ் போய் , ரேஸில் கலந்துகொள்ளும் ஆள்கள் செத்தால் பரவாயில்லை , அப்பாவியாக ரோட்டில் போகும் ஆட்களை காலி செய்துவிடுகிறார்கள் . எவனோ திமிரெடுத்து செய்யும் செயலுக்கு அப்பாவிகள்தான் பலியாக விடுமா ?

டிஸ்கி : இப்போ தலைப்பை படியுங்கள் 


பார்த்த படம் :

"வேலையில்லா பட்டதாரி " தனுஷின் மார்க்கெட்டை தூக்கி பிடிக்கும் படம் . ஆரம்பம் முதலே ஜாலியாக செல்கிறது . இடைவேளைக்கு பின் படம் தடம்மாருகிறது . கடைசி சண்டை தேவையே இல்லை. திணிப்பு . தனுஷின் உடம்பை காட்டவேண்டும் என்றே அந்த சண்டை போல . நம்ம படங்களில் தேவையே இல்லாமல் பாடல் ,சண்டைகளை சேர்ப்பதை எப்போது விடபோகிரர்களோ ?

படத்தில் லாஜிக் பற்றி யோசிக்க கூடாது . படத்துக்கு வந்தோமா , ஜாலியா என்ஜாய் செய்தோமோ போனோமான்னு இருக்கணும் . இங்கோ\இங்கிலீஷ் சரியா தெரியாதவன் எப்படி BPO இல் முதல் மாசமே 50000 சம்பாதிப்பான் , ஏலட்ரானிக் ஜாமர் எப்படி தனுஷின் வீடியோ ரெகார்ட்ராய் மட்டும் தடுக்கவில்லை என்று யோசித்தால் படம் பார்க்க முடியாது .


டவுட் :


பாலஸ்தீனத்தின் காஸா மீதான
இஸ்ரேலின் கொடூர
தாக்குதலுக்கு எதிர்ப்பு
தெரிவித்தும் இம்
மோதலை முடிவுக்கு
கொண்டுவராத
அமெரிக்காவை கண்டித்தும்
மும்பையில் பெப்சி, கோக்
குளிர்பானங்கள்
விற்பனைக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.

#ஆனா அதே அமெரிக்கன் கண்டுபிடிச்ச பேஸ்புகை மட்டும் தடை செய்யாம பயன்படுத்துவோம்.

#ஒரே கன்பியூஷன். . .



==============================================================
இந்தியா முழுதும் போட்டியிட்டு 44 சீட் மட்டும் ஜெய்த்து எதிர்கட்சி பதவி வேனும்னு கேட்குது. ஏன் ஒரு மாநிலத்தில் மட்டும் போட்டியிட்டு 37 சீட் ஜெய்த்த அ.தி.மு.க அந்த பதவியை கேட்க்ககூடாது?

10 ம் வகுப்பில் 480 எடுத்தவனை விட 12 ம் வகுப்பில் 482 எடுத்தவன் பெரிய ஆளா?

#டவுட்


============================================================
இலங்கை நிறுவனம் தயாரிப்பதால் "கத்தி" படத்தை தடைசெய்யவேண்டும்.

#செய்தி

அப்போ இலங்கைகு விமானம் விடும் சன் நெட் ஒர்க்கில் உள்ள டிவியை தடை செய்யனும்னு ஏன் யாரும் போராடல?

#ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆண்டியா?

  

Monday, July 14, 2014

கர்மவீரர் காமராசர்








கிங் மேக்கர் என்றும் கருப்பு தங்கம் என்றும் கல்விக்கண் திறந்த கர்ம வீரர் என்றும் மக்களால் பாராட்ட பெற்ற ஒரு உன்னத மக்கள் தலைவர் திரு காமராஜர் அவர்கள் . தனது சுயநலமில்ல உழைப்பால் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்தவர் இவர் . அரசில் ஒரு பதவிக்கு வந்த உடன் தனது குடும்பத்தில் உள்ளவர்களை எப்படி கோடிஸ்வரன் ஆக்கலாம் என நினைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் போல் இல்லாமல் தன் குடும்பத்துகேன வாழாமல் தமிழக மக்களையே தன் குடும்பம் என வாழ்ந்தவர் இவர் .


இன்று ஏழை குழந்தைகள் பசியின்றி பள்ளி செல்ல இவரின் மதிய உணவு திட்டமே காரணம் . பசிக்கும் குழந்தை எப்படி பாடத்தில் கவனம் வைப்பான் என சிந்தித்ததின் வெளிபாடே இந்த மத்திய உணவு திட்டம் . இந்த திட்டத்தை பற்றி ஒரு விளம்பரப்படம் எடுக்கலாம் என ஒரு அதிகாரி யோசனை சொல்ல அந்த படம் எடுக்க ஆகும் செலவுக்கு இன்னும் சில பள்ளிகள் திறக்கலாம் என்றார் .



திருச்சி BHEL திட்டம் இவரால் வந்ததே . பல அதிகாரிகள் பல இடங்களை பார்த்துவிட்டு அந்த தொழில்சாலை அமைய சரியான இடம் இல்லை என சொல்ல , காமராஜர் கொஞ்ச நேரம் யோசித்து "ஏன் திருச்சி இதுக்கு சரியாவருமே " என்றார் . அப்புறம் சோதனை செய்ததில் அந்த இடம் மிக பொருத்தம் என அறிந்தனர் .



தனதுகுடும்பத்துக்காக பணம் சேர்க்காத , தனது நலனை பார்க்காத , தான் செய்யும் சேவைகளை விளம்பரபடுத்தி கொள்ளாத , மக்களுக்கு எந்த திட்டம் நல்லது என யோசித்த , கடைசிவரை மக்களுக்காகவே வாழ்ந்து இறுதியில் அந்த மக்களாலேயே தோற்கடிக்கபட்ட  நல்ல மனிதர் காமராஜர் .

இவரின் பிறந்த நாள் நாளை :(15-07-2014)

இவரை பற்றிய நூலை தரவிறக்கம் செய்ய : 

 CLICK HERE



இவரை பற்றிய நூலை தரவிறக்கம் செய்ய :   CLICK HERE 


இதையும் படிக்கலாமே :

Wednesday, April 16, 2014

கதம்பம் 16-04-14









12 தேர்வு சதவிதமும் சில உண்மைகளும் :

வருடா வருடம் தேர்வு சதவிதம் உயர்வதாக அரசு சொல்கிறது . நாமும் மாணவர்கள் நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என நெனைகிறோம் . ஆனால் அது உண்மையல்ல எனபது இந்த வருடம் பேப்பர் திருத்த சென்றபோது தெரிந்தது . மாணவன் என்ன எழுதினாலும் பரவாயில்லை முடிந்த அளவு அவனை பெயில் ஆக்காமல் மார்க் போடுங்கள் என சொல்லுகிறார்கள் . இப்படி பாஸ் போட்டால் எப்படி கல்விதரம் உயரும் என தெரியவில்லை .

இதிலும் பெயில் ஆகும் மாணவர்கள் பலர் உள்ளனர் . 15 மார்க் எடுத்தால் பாஸ் என்றால் அவன் எழுதுவதே 10 மார்க்குதான் எப்படி அவனை பாஸ் போடுவது ? 
இன்னுன் சிலர் திருத்தும் ஆசிரியர்க்கு என தொடக்கி ஒரு சோகமான கடிதத்தை கடைசி பக்கத்தில் எழுதுகிறான் . 

வாழ்க கல்வி துறை / முறை .


=========================================================================

ஆழ்துளை கிணறும் சீழ் பிடித்த சமூகமும் .


நேற்றுதான் ஒரு குழந்தையை காப்பற்றினார்கள் , அதுக்குள் இன்று மற்றொரு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது . கடுமையான தண்டனைகள் இல்லாததே இதுக்கு காரணம் . குழந்தை மீண்டால் கொலை முயற்சி வழக்கும் , ஏதாவது ஆனால் (ஆக கூடாது ..) கொலை வழக்கும் பதியபட்டல் தான் திருந்துவார்கள் .

 
 ======================================================================

எது மதசார்பின்மை ?

நமக்கு பிடிக்குதோ இல்லையோ ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் ஊருக்குள் ஓட்டு கேட்க வரகூடாதுனு சொல்வது சரியா? நாளை ஒருவேளை அந்த கட்சி ஜெய்த்தால் எங்கள் ஏரியாவுக்கு எதும் செய்யாதீர்கள்னு சொல்வார்களா?

எதிரியே வீட்டுக்கு வந்தாலும் வரவேற்பதுதான் பண்பாடுனு எல்லா மதமும் சொல்லுது. ஓட்டு கேட்பது அவர்கள் இஷ்டம் போடுவதும், போடாததும் உங்கள் உரிமை. ஊருக்குள் வரகூடாதுனு சொல்லி நீங்களே ஊரைவிட்டு தனித்து போவதுபோல் தோன்றுகிறது.

#மாற்று கருத்துகள் வரவேற்க்கபடுகிறது.. . .


========================================================================
IPL திருவிழா :


பலரை கவர்ந்த , ஊழலை அதிகரித்த IPL இன்று துவங்குகிறது . இனி பல வீட்டில் சண்டைதான் . சீரியலா ? மேட்சா ? என ..

ஒரு வீட்டில் கனவன் ஆதிக்கமா? மனைவி ஆதிக்கமா? என தெரியவேண்டுமா? நாளை இரவு 8 மணிக்கு IPL ஓடினா கனவன் ஆதிக்கம், அப்பவும் சீரியல் ஓடினா( எல்லா வீடு போல) மனைவி ஆதிக்கம் தான். . .


===================================================================

உலகம் உருண்டை :

போன தேர்தலில் :
 
கலைஞர் டிவியில், விஜயகாந்தை கிண்டல் செய்யும் காட்சிகள் மற்றும் வடிவேலுவின் பேட்டிகள் ஓடியது.

இப்போ :

ஜெயா டிவியில் விஜயகாந்தை கிண்டல் செய்யும் காட்சிகள், வடிவேலு பேட்டி ஓடுது.

#உலகம் உருண்டைனு நிருபித்துவிட்டார்கள்!!!
   

Tuesday, March 11, 2014

அரசியல்



கிழே நீங்கள்  பார்க்கபோவது இன்று முகநூலில் நான் படித்து ரசித்த அரசியல் சம்பந்தபட்ட நிலை தகவல்கள் (STATUS) தான் . இது உங்களுக்கும் பிடிக்கும் என எண்ணுகிறேன் . உங்கள் அரசியல் கருத்தை கமெண்டில் பதிவு செயுங்கள் .







70 கோடி மக்களை நடுத்தர மக்களாக உயர்த்துவதே காங் ன் லட்சியம் ‪#‎ராகுல்‬

//// அடேய் !! போனமாசம் வரைக்கும்,
மைதா 50kg 1200
இப்ப  1450

ஆயில் 15kg  980
இப்ப 1150

நல்லெண்ணை 150 1kg இப்ப 180

சீனி 1kg 30.50
இப்ப 34.80

ஒரு சிறுதொழில் வியாபாரி எனக்கே இவ்வுளவு விலை ஏற்றம் என்றால், அன்றாட கூலி தொலிழாளி யின் நிலைமை.


====================================================================

இந்த தேர்தலில் நான்
போட்டியிடவில்லை - ஜி.கே.வாசன் #

கூட்டத்துல மட்டும் தான்
கோவிந்தா
போடுவிங்களா ஆபிசர்..


====================================================================

விஜயகாந்துடன் மேடை ஏறமாட்டேன்… டாக்டர் ராமதாஸ்

# டாஸ்மார்க்கை ஏன் இழுது மூடவேண்டும் என்று கேட்டு போதையில் பளார் என்று அடித்துவிடுவார் என்கிற பயமா ?


==================================================================

இங்க எல்லாரும் கழுவி ஊத்துறாங்க.

ஒரு உ.பி. மட்டும் "திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளதற்கு ஃபேஸ்புக்கே சாட்சி" ன்னு கமெண்ட் போட்டுக்கிட்டு திரியுறார்.

சத்தியமா, இவங்களைத் திருத்தவே முடியாது .


=====================================================================


கூட்டணி அமையாவிட்டால் தனியாக நிற்போம் - ப.சிதம்பரம்.

இத்தனை வயசுக்கு அப்புறம் தனியா நின்னா நல்லா இருக்காது...
உடம்பு ஒத்துழைக்காது.

=====================================================================

மோடி , ராகுல் அல்லதா ஒருவர் பிரதமர் ஆக திமுக ஆதரவு_ தலைவர்

மத்தியில் அம்மா !!!!!!!!!!!!!!!!!மாநிலத்தில் தலைவர் !!!!!!!!!!!!!!!!!!!!

.. இப்படி நடக்காது என்கிறீர்களா. டாஸ்மாக் கொள்முதல் கிரானைட் ஆற்றுமணல் இவற்றில் ஒற்றுமை இருக்கும் போது இதில் வராதா வரக்கூடாதா

===================================================================

ஜெ போட்டியிடுவார் எனில் ராசாவும் போட்டியிடலாம்.....அவ்ளோதான்...இதுக்கு மேல நீதி நியாயம்லாம் பேச கூடாது.....
காங்கிரஸ்காரு சீக்கியன கொன்னான்ல...அப்ப மோடி முஸ்லிமை கொன்னது பத்தியெல்லாம் பேச கூடாது....

‪#‎மானங்கெட்ட‬ அரசியல் லோலாயங்கள்

=======================================================================

ஒரு ஒத்த படத்துக்கு கூடுன 24 அமைப்புகளை தேடுறேன் தேடுறேன் தேடுறேன்......
கண்ணுக்கு தெரியா கடவுளுக்கு கூடின கூட்டம் மனுஷ பய நன்மைக்கு ஒன்னா கூடலன்னா என்னவே அர்த்தம்?

=========================================================================

கேள்வி: அதிமுகவின் முடிவால் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதா?
தா பாண்டியன் -இந்த உலகத்தில் யாரும் கம்யூனிஸ்ட் கட்சிகளை வருத்தம் அடையச் செய்யும் முடிவை எடுக்க முடியாது

:>>அதாவது தனக்கு சொரணையே வராதுன்னு சொல்றாரு....

======================================================================
 மதநல்லிணக்க வரலாறு படைப்போம் - திமுகவின் தேர்தல் அறிக்கை

# 'இந்து என்றால் திருடன்'
'ராமன் எந்த எஞ்சினியரிங் காலேஜில் படித்தான்?

இது போன்ற மத நல்லிணக்கத்தை அனைவரையும் கடைபிடிக்க சொல்கிறார் திருவாளர்.நோன்புக்கஞ்சி

===========================================================================

இந்த வருடத்தின் மிக சிறந்த நகைசுவை :

(இவர் காங்கிரஸ்பிரமுகர் அமெரிக்கை நாராயணன் )




Saturday, January 11, 2014

ராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும்



செப்டம்பரில் நடந்த பதிவர் சந்திப்பின் போது இந்த புத்தகத்தை வாங்கினேன் . இதை பற்றி எழுதலாம் என பலமுறை நினைத்தும் முடியவில்லை .இபோதுதான் நேரம் கிடைத்தது .வாருங்கள் பதிவுக்குள் போகலாம் .




1991 MAY 21 அன்று ராஜீவ் கொல்லபட்ட பின் தமிழகத்தில் நடந்த , அந்த கொலை தொடர்பாக CBI மற்றும் இதர இலாக்காக்கள் விசாரித்த முறையில் இருந்த குறைகளை , தவறான நடைமுறைகளை பட்டியலிடுகிறது இந்த புத்தகம் .இதன் ஆசிரியர் கேட்கும் பல கேள்விகளுக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை . அல்லது சொல்ல முடியவில்லை .ஒரு மர்ம நாவலை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பல சஸ்பென்ஸ் இந்த ராஜீவ் கொலையில் உள்ளது . இன்றுவரை இதற்க்கு சரியான பதில் இல்லை . அதில் சில கேள்விகள் இதோ ...



  • ·         குண்டு வெடிப்பு நடந்த பொதுகூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடக்டர் இல்லையே ஏன் ?
  • ·         ராஜீவுடன் எப்போதும் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் கூட அந்த குண்டு வெடிப்பில் பலியாகவில்லையே எப்படி ?
  • ·         டெல்லி செல்வதாக சொல்லிவிட்டு சென்ற சுப்பிரமணியசாமி ஏன் போகாமல் சென்னையில் தங்கினார் ?
  • ·         ராஜீவ் கொல்லபட்டதும் காணாமல் போன வாழப்பாடியார்  30 நிமிடம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்தார் . அதுவரை அவர் எங்கே சென்றார் ?
  • ·         ராஜேந்திர ஜெயின் என்பவர் ஜெயின் கமிஷன் முன் வாக்குமூலம் வழக்க வேண்டிய நாளுக்கு முதல் நாள் கொல்லபட்டது எப்படி ? ஏன் ?

  • ·         சிவராசனில் டைரியில் வாழப்பாடி ராமமுர்த்தி அவர்களை அடிகடி சந்தித்தகாக இருந்தது அதை ஏன் சி.பி.ஐ கண்டுகொள்ளவில்லை ?
  • ·         ராஜீவ் கொலையாகும் போது மூப்பனார் அங்கு இல்லை , ஏன் என கேட்டதுக்கு பீடி குடிக்க போனேன் என்றார் , இது உண்மையா ?
  • ·         கொலை சதியில் முக்கிய பங்கு உள்ளவர் என சந்தேகிக்கப்படும் ரோசையாவுக்கு முதல்வர் பதியும் இப்பொது தமிழக ஆளுநர் பதவியும் காங்கிரஸ் வழங்கியது ஏன் ?
  • ·         மனித வெடிகுண்டாக இருந்த தானுவை காரில் அழைத்துவந்தது மரகதம் சந்திரசேகரின் மகள் லதாபிரியா . ஏன் அவர் பெயர் குற்றவாளிகள் பட்டியலில் வரவில்லை ?
  • ·         மே 21 (கொல்லபட்ட நாள் ) அன்று மாலை 5 மணிக்கு மேல் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் ஸ்டாலின் ஏன் ரத்து செய்தார் ?

  • ·         போட்டோகிராபர் அரிபாபு என்பவர் விடுதைபுலிகளின் ஆதரவாளர் என சீ.பி.ஐ சொன்னது . ஆனால் அவர் எடுத்த புகைப்படங்கள் மூலமாகத்தான் கொலையாளிகள் படம் தெரிந்தது . கொலையாளிகள் எப்படி புகைபடகாரரை துணைக்கு வைத்துகொள்வார்கள் ?
  • ·         வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கிகொடுத்ததுக்கு பேரறிவாளனுக்கு தூக்கு ஆனால் அந்த வெடிகுண்டை செய்து கொடுத்தது யார் என இதுவரை கண்டுபிடிக்காதது ஏன் ?
  • ·         காந்தியடிகள் , இந்திரா போன்றோரின் கொலை வழக்கை பகிரங்கமாக நடத்திய இந்திய அரசு ராஜீவ் கொலைவழக்கை மட்டும் ரகசியமாக நடத்தியது ஏன் ?

  • ·         மதுரை சி.பி.ஐ நகரமன்ற உறுப்பினர் லீலாவதி கொன்றவர்களை 7 வருடத்தில் விடுதலை செய்த அரசு நளினியை மட்டும் இன்னும் ஏன் விடுவிக்கவில்லை ?
  • ·         காந்தியை கொன்ற கோட்சேக்கு கூட 11 ஆண்டுகள் மட்டும்தான் தண்டனை கிடைத்தது ஆனால் பேரறிவாளம், நளினிக்கு ?
  • ·         இந்த கொலைவழக்கின் முக்கிய ஆவணங்கள் ப .சிதம்பரம் வசம் இருந்த போது எப்படி காணாமல் போனது ?

  • ·         ராஜீவ் கொலைக்கு காரணம் சோனியாதான் என சுப்பிரமணிய சாமி ஒரு புத்தகமே வெளியிட்டு உள்ளார். ஏன் காங்கிரசார் அதை பற்றி கண்டுகொள்ளவில்லை ?

இதுபோல பல நூறு கேள்விகள் கேட்க்கபட்டு உள்ளது ஆனால் பதில்தான் இல்லை .


நூலின் தொகுப்பாசிரியர் : தமிழன் பாபு
வெளியிடு : வள்ளலார் பதிப்பகம் 
        (டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும் )
விலை : 60

Saturday, January 4, 2014

விஜயகாந்த் மேல் என்ன தப்பு ?






தே . மு .தி .க தலைவர் விஜயகாந்தை நக்கல் செய்யாத பத்திரிக்கைகளே இல்லை . பத்திரிகைகள் மட்டும் இன்றி கட்சிகள் பலவும் கிண்டல் செய்கிறது . இது சரியா ? தவறா ? என அலசலாம் வாங்க .


 கட்சிகள் :


முன்பு :

சென்ற தேர்தலில் தனியாக நின்றால் ஜெய்போமா இல்லையோ என்ற பீதியை விட விஜயகாந்த் தி.மு.க பக்கம் போனால் நாம் ஜெய்க்க வாய்ப்பு குறைவு என உணர்ந்ததால்தான் ஜெயா அவரை தன பக்கம் அழைத்துகொண்டார் .

அவர் அந்த பக்கம் இணைந்ததால் விஜயகாந்தை அவர் நடத்தையை கிண்டல் செய்யும் வேலையை தி மு க ஆரம்பித்தது . விஜயகாந்த் ஒரு குடிகாரர் என பரப்ப ஆரம்பித்தது . அவர் தனது கட்சி நபர்களை கூட அடிப்பார் என காட்டியது .


இப்போ :

விஜயகாந்தை கை கழுவிய ஜெயா , அவர் கட்சி ஆட்களை தம் பக்கம்இழுத்துதான் அவரைஜெய்க்க நினைக்கிறார் .

கருணாநிதி தே மு தி க எங்களுடன் இணைந்தால் மகிழ்வோம் என்கிறார் . (இப்போ குடி பத்தி பேசுவதில்லை ) 

பா.ஜ . க விஜயகாந்தை இழுக்க முழு முயற்ச்சி செய்கிறது .

காங்கிரஸ் தன் பங்குக்கு அவரை சந்திக்க வாசனை அனுப்புகிறது .

இப்படி எல்லா கட்சிகளும் அவரையே மையம் கொண்டு வருகிறது .

ஆனால் குறை சொல்வது அவரை . இதில் விஜயகாந்த் மேல் என்ன தப்பு ?

ஊடகங்கள் :



விஜயகாந்த்பற்றி எழுதாத ஊடகங்களே இல்லை . ஆனால் அவரிடம் நியாயமான கேள்விகள் கேட்காமல் அவரை எப்படியாவது கோவபடுத்தி  பார்க்க தான் ஆசைபடுகிறது . கருணாநிதியிடம் அல்லது ஜெயாவிடம் கேள்வி கேட்க பம்முகின்ற இவர்கள் விஜயகாந்திடம் மடக்கி மடக்கி கேட்பார்கள் .

ஆனால் குறை சொல்வது அவரை . இதில் விஜயகாந்த் மேல் என்ன தப்பு ?

டெல்லி தேர்தல் :

டெல்லி தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்டதை பலர் கிண்டல் செய்கின்றார்கள் . திருவள்ளுவர் கூட முயல் வேட்டையில் ஜெய்பதை விட யானை வேட்டையில் தோற்ப்பது நல்லது / பெருமை என்கிறார் . டெல்லியில் போட்டியிட இங்கு உள்ள எந்த கட்சிக்கும் தைரியம்  இல்லை . அப்படி போட்டியிட்டால் இதே நிலைதான் மற்றவர்களுக்கும் .

ஆனால் குறை சொல்வது அவரை . இதில் விஜயகாந்த் மேல் என்ன தப்பு ?


விஜயகாந்த் மாற்றி கொள்ள வேண்டிய விஷயங்கள் :

  • கருணாநிதியை போல ஜெயாவை போல வார்த்தை விளையாட்டை கற்றுக்கொள்ளவேண்டும் .

  • பொது இடத்தில் நடிக்க தெரிய வேண்டும் . நல்லவன் போல நடிப்பவர்களுக்குதான் நல்ல பெயர் கிடைக்கும் .


  • கட்சி கரைவதை தடுக்க வேண்டும் .


  • குடும்ப கட்சி என்ற பெயரை சரி செய்யவேண்டும் .


  • பா. ஜ .க வுடன் இணைவதே இபோதைக்கு நல்லது .


  • மக்கள் பிரச்சனைக்கு அடிகடி குரல்கொடுக்க வேண்டும் .



இவையனைத்தும் என் மன எண்ணங்கள் . உங்கள் கருத்தை சொல்லுங்கள் .

Tuesday, December 24, 2013

அஜித் , விஜய் , ரஜினி ரசிகர்களை கேவலமாக பேசிய சீமான்






நாம் தமிழர் இயக்க தலைவரும் இயக்குனருமான சீமான் பேசிய வீடியோ ஒன்று இப்போது பலத்த சர்சையை கிளப்பிவிட்டு உள்ளது . அதில் தமிழ் சினிமா ரசிகர்களை மிக மிக கேவலமாக பேசியுள்ளார் . சமிபத்தில் ஹிந்து கடவுள் ராமனை கிண்டல் செய்து விட்டு “என்னை கேட்டக ராமன்த்ஹான் வரவேண்டும் ஹிந்துக்கள் ஏன்டா வர்ரிங்க ?” என புத்திசாலித்தனமாக கேட்டார் .

அஜித் :
   தல ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் திரியுது . எல்லாம் தருதலைங்க . . .


விஜய் :
  இவனுங்க எந்த படைக்கு தளபதியா இருந்தானுங்கனு இவனுக்கு தளபதின்னு பட்டம் . 


விஜயகாந்த் :
  எங்கள் இன தலைவர் பிரபாகரனே கேப்டன் என போட்டுகொண்டது இல்லை இவ எப்படி கேப்டன் ?


ரஜினி :
   இவருக்கு உடம்பு சரியிள்ளனதும் 2000 லூசுங்க மொட்டை போடுறானுங்க . “தலைவா வா தமிழ்நாடு காத்திருக்கு “னு போஸ்டர் அடிக்குறான் . அப்ப நாங்கெல்லாம் என்ன சட்டமன்றத்தை கூட்டி , கழுவவா இருக்கோம் .


அந்த கேவலமான பேச்சின் வீடியோ :



  • நடிகரை விமர்சனம் செய்வது தனி . ஆனால் ரசிகர்களை விமர்சிக்க இவர் யார் ?
 
  • மக்களாக கொடுத்தால் மரியாதை . நாமாக கேட்டால் அது பிச்சை 
 .
  • விஜயை கிண்டல் செய்யும் இவர் ஏன் அவர் கால்ஷிட்க்கு (பகலவன்னு படம் பேரு கூட சொன்னார் ) அலைந்தார் .
 
  • இவர் படங்களில் நடித்தவர்கள் அனைவரும் தமிழர்கள் தானா ?
 
  • இலங்கையில் இருந்து சுற்றுலா வந்த அப்பாவிகளை அடித்த இவர் கட்சிகாரர்கள் இலங்கை நடிகையை  (பூஜா – தம்பி படம் ) வைத்து படம் எடுத்த இவரை எதால் அடிப்பார்கள் ?

டிஸ்கி : உங்கள் கருத்துகளை கண்டிப்பாக சொல்லவும் .