> என் ராஜபாட்டை : உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...

.....

.

Friday, February 17, 2012

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...






பதிவு திருட்டு என்பது இப்பொழுது சகஜமாகிவிட்டது. நாம் கஷ்ட்டபட்டு , மூளையை கசக்கி( இருக்குறவங்க..) எழுதும் பதிவுகளை கஷ்டபடாமல் காப்பி அடித்து அவர்கள் தளத்தில் பயன் படுத்தி கொள்கின்றனர்.  இது போல உள்ள திருட்டை தடுக்க சில வழிகள்.


1) முதலில் உங்கள் Account ல் நுழையுங்கள். 

2) Dashboard = > design க்குள் செல்லுங்கள்.

3) Add gedgetAdd HTML/Javascript  செலக்ட் பன்னுங்க.


4) அதில் கீழ் வருபவதை copy பன்னி paste பன்னவும்.


ஐயா.. சாமி இது கஷ்டப்பட்டு நான் எழுதிய பதிவு, எனவே தயவு செய்து இதை திருடாதீர்கள்.

அல்லது

இதுலாம் ஒரு பதிவுனு திருட வந்து இருக்கியே உன்ன நினைத்தால் சிரிப்பு வருது.

அல்லது

அறிவுகெட்டவர்கள், வீணாபோனவர்கள், விளங்காதவ்ர்கள், உருப்படதாவர்கள், (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை போட்டுகொள்ளவும்) மட்டும் இந்த பதிவை காப்பி எடுக்கலாம்.

அல்லது

இது மலையாள ஷகிலா(சாரி) சாமியாரிடம் மந்திரிச்சு உருவாக்கிய வளைதலம். இதில் இருந்து பதிவை திருடுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள்.



        5) இதை Add பன்னி save செய்யவும்.



இதையும் மீறி யாராவது உங்கள் பதிவை திருடினால்

நீங்கள் பதிவே எழுதாதிர்கள், அப்புறம் எப்படி திருடுவார்கள் பார்போம்.




இது ஒரு மீள் பதிவு :

இதையும் படிக்கலாமே :

விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி !

 

உங்கள் கடவுச்சொல்(PASSWORD) பாதுகாப்பானதா



38 comments:

  1. நீங்கள் பதிவே எழுதாதிர்கள், அப்புறம் எப்படி திருடுவார்கள் பார்போம்.

    அருமையான ஐடியா.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. ராஜா நீங்க ஏதோ தொழில்நுட்ப ஐடியா தான் கொடுக்கப்போகிரீர்கள் என்று நினைத்தேன், ஆனால் இந்த ஐடியாவும் சூப்பர்தான்.

    ReplyDelete
  3. //இது மலையாள ஷகிலா(சாரி) சாமியாரிடம் மந்திரிச்சு உருவாக்கிய வளைதலம். இதில் இருந்து பதிவை திருடுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள்.//

    சரி...சரி....ஷகிலா எங்க?

    ReplyDelete
  4. அடங்கமாட்டீரா.. ராஜபாட்டையாரே..!!

    ReplyDelete
  5. Blogger வீடு K.S.சுரேஸ்குமார் said...

    //இது மலையாள ஷகிலா(சாரி) சாமியாரிடம் மந்திரிச்சு உருவாக்கிய வளைதலம். இதில் இருந்து பதிவை திருடுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள்.//

    சரி...சரி....ஷகிலா எங்க?
    //
    மனோ அண்ணனை தேடி போயிருக்கு

    ReplyDelete
  6. //தங்கம் பழனி said...

    அடங்கமாட்டீரா.. ராஜபாட்டையாரே..!!
    //

    நாள் நல்ல புள்ள

    ReplyDelete
  7. எப்படி சார் நீங்க மட்டும் இப்படி எடக்குமடக்கா யோசிக்கிறீங்க....

    ReplyDelete
  8. ஏன் இந்த கொலைவெறி நண்பரே ....!

    ReplyDelete
  9. இப்படி போட்டா வருற கொஞ்ச பேரும் வரமாட்டாங்களோ என பயம் வருது சார்..ஆனால், ஐடியாக்கள் செம்ம சூப்பர்..நன்றி.

    ReplyDelete
  10. பேஷ்... பேஷ்... ஐடியால்லாம் ரொம்ப்ப்ப்ப நன்னாயிருக்கு...

    ReplyDelete
  11. முடியல முடியல வாத்தி அவ்வ்வ்வ்வ்வ்......

    ReplyDelete
  12. ஹா..ஹா.. நல்ல யோசனை!!

    சில வலைத்தளங்களில் கவனித்து இருக்கிறீர்களா? நீங்கள் நகல் எடுத்து ஒட்டினால், கூடவே
    "excerpts from ****" / "Read More on *** at ****"
    என்றோ சேர்ந்து ஒட்டுப்படும்..
    அவற்றை நீக்கவும் முடியாது.

    ஒட்டி பதிவிட்டால், அதையும் சேர்த்து தான் பதிவிட முடியும்!!

    அதனை எப்படி செய்கிறார்கள்?

    ReplyDelete
  13. ஏதோ தொழில்நுட்ப பதிவுன்னு நினைச்சு வந்தா ... ஐடியா நல்லாத் தான் இருக்கு.

    ReplyDelete
  14. கடைசியா சொன்னீங்களே!அதைத்தான் செய்யலாமா எனப் பார்க்கிறேன்!!

    ReplyDelete
  15. ஆகா!..கா!..மிகப்பெரிய யோக்கு இது.. நானும் ஏதோ ஐடியா தரப் போகிறார் என்று வாசித்தேன் சிரிப்புத் தான் போங்க...பாராட்டுக்கள்..
    .வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  16. சார் எதோ டிப்ஸ் கொடுக்கிறாரு ஏன்னு பார்த்த சார் ரொம்ப மோசம் நீங்க ;

    ReplyDelete
  17. அடப்பாவி நானும் நமக்கு புதுசா சொல்லபோறீங்கன்னு வந்தா ..கவிழ்த்த்ப்புட்டீங்களா எசமான்

    ReplyDelete
  18. // இதில் இருந்து பதிவை திருடுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள்.//


    என்ன ஒரு வில்லத்தனம்

    ReplyDelete
  19. ஆகா.. என்னா ஒரு ஜடியா? ஆமா.. இந்த வழிமுறைகளை ஏன் உங்க வலைப்பதிவுகளுக்கு நீங்க செயற்படுத்தல??

    ReplyDelete
  20. அந்தக் கடைசிக்குறிப்பு சூப்பர்!!!!!

    ReplyDelete
  21. ஐயா...இந்த பதிவை காப்பி பேஸ்ட் செய்யலாமுன்னு இருக்கேன் ...ஹி..ஹி... உங்க அனுமதி தேவை :-))))))))))))))))))))))))))))))))).

    ReplyDelete
  22. ஏங்க இப்படி .. முடியல ..

    ReplyDelete
  23. ஹா..ஹா நீங்க கொடுத்த ஐடியா எல்லாம் சூப்பர். எங்க ஊரில் சுவற்றில் இப்படி எல்லாம் எழுதுவார்கள்.

    இங்கு சிறுநீர் கழிப்பவர்கள் நாசமாக போவார்கள், இது நாய்கள் சிறுநீர் கழிக்கும் இடம் என்று...

    அதே போல உள்ளது

    ReplyDelete
  24. பய புள்ளைக்கு குசும்பு அதிகமா பூடுச்சி!

    ReplyDelete
  25. எங்க ஊரில் சுவற்றில் இப்படி எல்லாம் எழுதுவார்கள்.

    இங்கு சிறுநீர் கழிப்பவர்கள் நாசமாக போவார்கள், இது நாய்கள் சிறுநீர் கழிக்கும் இடம் என்று...


    repeat....

    ReplyDelete
  26. சூப்பர்... இத்தனை நாள் இப்படி நடந்தால் இதை எப்படி சமாளிப்பது என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தேன். மிக்க நன்றி...

    :))))

    ReplyDelete
  27. செம ஐடியாக்கள்.. அதுவும் கடைசி ஐடியா ஜூப்பரோ ஜூப்பரு. அவ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  28. ஏன் ஏன் இப்படி ........

    ReplyDelete
  29. ஆகா
    எவ்வளோ நல்ல ஐடியா எனக்கு எப்படி தோணாம போச்சு..

    ReplyDelete
  30. ஆஹா ! நல்ல யோசனை சொல்லப் போகிறீர்கள் என்று பார்த்தால். என்ன இப்படியா செய்வது இருந்தாலும் ரசித்தேன் ...

    ReplyDelete
  31. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...