> என் ராஜபாட்டை : நம்பிக்கை

.....

.
Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

Thursday, November 3, 2011

தலை, தளபதி மற்றும் புத்தர்




மங்கோலிய நாட்டின் கதை ஒன்று:

                நிறைய தலைகள் கொண்ட பாம்புகளும், நிறைய வால்களும் கொண்ட பாம்புகளும் இருந்தன. குளிர்காலத்தில் பாம்புகள் ஏதேனும் ஒரு புற்றில் ஓளிந்து கொள்ள நினைக்கும். பல தலைகள் உள்ள பாம்பு ஒரு புற்றில் நொழைய நினைக்கும் போதே இன்னொறு தலை இன்னொறு புற்றை பார்க்கும், இன்னொறு தலை உடலௌ இழுக்கும். ஆனால் பல வால்கள் கொண்ட பாம்போ ஒரு புற்றுக்குள் நுழையும். வால்கள் “சரசர”வென உள்ளே போகும்.

நீதி: ஒருமித்த முடிவு “தலை”களுக்குள் இல்லையேல் தகராறு தான்.


புதிதாக வேலைக்கு சேர்ந்த ராணுவ வீரரிடம், தளபதி , ஒரு தீக்குச்சியையும் பாறங்கல் ஓன்றையும் தந்து ,” இனி இவர்றின் இயல்பே உன் இயல்பு” என்றார். ராணுவ வீரர்க்கு புரியவில்லை, அவர் தயங்கி நிற்பதை பார்த்த தளபதி சொன்னார், “ உன் இலக்கை அடைய கலத்தில் இறங்கும் போதுனெருப்பு போல பரபரவென்று ப்ற்றி பரவிடு. இலட்சியத்தை அடைய வெண்டும் என்கிற உறுதியில் பாறைபோல், மலைபோல் இரு” என்றார் தளபதி.

நீதி : உறுதியான இலட்சியம்  ஜெய்பது நிச்சயம்


அணிந்திருந்த ஆடை பெருமளவு கிழிந்ததால் புத்தாடை பெற்றார் புத்தரின் சீடர். புத்தருக்கு அவர் அளித்த அறிக்கை : “புத்தாடை அணிந்தேன், பழைய ஆடையை படுக்கை விரிப்பாய் போட்டேன், பழைய விரிப்பை ஜன்னல் திரைசீலையாக்கினேன், பழைய தீரைசிலயை கிழித்து பாத்திரம் துடைக்கிறேன், பழைய பாத்திரம் துடைத்த துணியை கிழித்து விளக்கு திரியாக பயன் படுத்துகிறேன்.”

நீதி : எதையும் விரயம் செய்யாத விவேகமே துறவு


டிஸ்கி : நமது நம்பிக்கை என்ற புத்தகத்தில் படித்தது


Thursday, August 11, 2011

நீங்கள் வெற்றிகரமான பதிவர் ஆக வேண்டுமா ?




உலகம் முழுவதும் மொழி வித்துயாசமில்லாமல் அனைவராலும் போற்றப்படும் புகழ்பெற்ற ஒருவருடைய கதை இது.

அவரது அம்மாவுக்கு தீராத நோய்

அப்பா, அம்மாவை விட்டுவிட்டுப் போய்விட்டார்.

வீட்டில் எப்பொழுதும் பசி, பட்டினி, பஞ்சம்.

சில சமயங்களில் குப்பை தொட்டியில் வாசம்.

வீதியோரமாக பாடி காசு திரட்டியிருகிறார்.

சாப்பாட்டுகாக சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுப்பட்டார்.

அவர் செய்த வேலைகள் :

-          பேப்பர் போடும் ஆள்
-          டாக்டர்க்கு உதவியாளர்
-          முடிவெட்டுபவர்
-          பிரிண்டிங் பிரஸில் உதவியாளர்
-          பழய துணியை ஏலம்விடுபவர்.

இவை அனைத்தையும் செய்துவிட்டு இறுதியில் சினிமாவுக்கு வந்தார். அவர் வாழ்கை திசை மாறிப்போனது. கோடி கோடியாக கொட்டியது. அவர் தான்
சார்லி சாப்ளின்.


குறைபாடுகள், தோல்விகள், பிரச்சனைகள் இவை ஒவ்வொன்றும் அற்புதமான வாய்ப்புகள்.

நம்மால் முடியும் என்பதை முதலில் நம்ப வேண்டும். அந்த எண்ணம் எதையும் சாதிக்க வைக்கும். ஒரு புன்னகை போதும் சுடும் நெருப்பையும் தாங்கலாம், கடும் குளிரையும் தாங்கலாம். ஐயோ, அதெல்லாம் முடியாது என்று சொல்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. காரணம் அவர்களும் சாதிக்க மாட்டார்கள், பிறரையும் சாதிக்க விடமாட்டார்கள்.

பாஸிட்டிவ் நபர்கள் நம் திறமைக்கு பெரிய ப்ளஸ். அப்படிப் பட்ட நபர்களை தேடிப்பிடித்து நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.  பாஸிட்டிவ் மனிதர்கள் பாஸிட்டிவ் எனர்ஜியை வெளிபடுத்துவார்கள். பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல அவர்கள் எனர்ஜி நமக்கும் தொற்றிகொள்ளும். என்றும் பாஸிட்டிவ்வாக இருங்கள், அப்படி இருந்தால் நீங்கள் தான் வாழ்கையின் வெற்றியாளர்.( வாழ்கையில் மட்டும் அல்ல, பதிவுலகிலும் நீங்கள் தான் வெற்றியாளர்தான்)