> என் ராஜபாட்டை : இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலப்பா ....

.....

.

Monday, August 27, 2012

இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலப்பா ....கோவிலில் ...

மனோ :கடவுளே கடந்த 5 வருடமா எனக்கு லாட்டரி டிக்கெட்ல
        ஒரு கோடி விழனும்னு வேண்டுறேன் ஆனா நீ   
        செய்யமாட்ற .. ஏன் ? நான் உனக்கு என்ன பண்ணனுனா  
        பரிசு விழ வைப்ப ?

கடவுள் : வெண்ணெய் .... எனக்கு ஒன்னும் பண்ண வேண்டாம்
         முதலில் நீ லாட்டரி டிக்கெட் வாங்கு .
==========================================================================

கடவுள் : பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும் ?

மனசாட்சி : பூமியில் இருந்து சொர்க்கத்துக்கு ரோடு வேண்டும் .

கடவுள் : அதற்க்கு வாய்ப்பே இல்லை வேறு எதாவது கேள் .

மனசாட்சி : வீடு சுரேஷ் , தனுஷ் போல ஒல்லியா ஆகணும்

கடவுள் : சொர்க்கத்துக்கு எப்படி சிங்கிள் ரோடா ? அல்லது டபுள் ரோடா ?
========================================================================
காதலி : அன்பே ஒரு கவிதை சொல்லுங்கள் ..

கவிதை வீதி சௌந்தர் : அன்பே உன்னை பார்த்தேன் உலகை
                           மறந்தேன் .

காதலி : அருமை .. மேலே சொல்லுங்க

கவிதை வீதி சௌந்தர் : உன் தங்கையை பார்த்தேன் உன்னை
                           மறந்தேன் .

=================================================================
வேடந்தாங்கல் கருண் வகுப்பில் பாடம் நடத்தும் போது வகுப்புக்கு வெளியே ஒரு நாய் கத்தி கொண்டு இருக்கிறது . அதனால் இவர் பாடம் நடத்துவதை நிறுத்தி வைக்கிறார் .

மாணவன் : சார் அது கத்துவதை நிறுத்திவிட்டது , நீங்க
            ஆரம்பியுங்கள்
===========================================================================

விக்கி : சி பி ஒரு தத்துவம் சொல்லுங்க .

சி பி : மனசுக்குள்ள பிகர் வந்தாலும்
         உடம்புல சுகர் வந்தாலும்
         தொல்லைதான்
================================================================

சி பி : நேற்று ஜேம்ஸ் பாண்ட நடித்த படம் பார்த்தேன்
கவிதைகள் பிரேம் : என்ன படம் ?

சி பி : காண்டம் பார் சேல்ஸ்

கவிதைகள் பிரேம் : யோவ் !!! அது குவாண்டம் ஆப் சோலிஸ்

சி .பி ; அப்படியா ? அப்புறம் குங்கும பூ போண்டா என்று ஒரு படம் பார்த்தேன் ..

கவிதைகள் பிரேம் :கடவுளே .. அது குங்பூ பாண்டா


===============================================================26 comments:

 1. அந்த கடைசி ஜோக் சீரியஸா இருக்கு சிரிக்காம இருக்க முடியல...

  ReplyDelete
 2. பின்னூட்டம் எழுதனும்னா எழுதிட்டுப்போறோம்.. அதுக்கெதுக்கு அரிவாள் வச்சுப் பயமுறுத்துறீங்க??
  அவ்வ்வ்..

  ReplyDelete
 3. ரசிக்க வைத்த நகைச்சுவைகள்.... மனோவை முதல்ல லாட்டரி டிக்கெட் கடவுள் வாங்கச்சொன்ன அழும்பு சிரிக்காமல் இருக்கமுடியலை... இதைச்சொன்னதும் மனோ கடவுளை பார்க்கும் பார்வை நினைத்து பார்த்தேன். சிரித்துவிட்டேன்...

  அன்பு நன்றிகள் சிரிக்கவைத்தமைக்கு...

  ReplyDelete
 4. இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலப்பா
  >>>>
  மனோ அண்ணா போட்டோவை பார்த்தாலே தலைப்பு நிஜம்தான்னு தோணுது

  ReplyDelete
 5. பதிவர் சந்திப்புல உங்களை சந்திக்க ஆவலா இருந்தேன். ப்ச்ச் அது இந்த டைம் முடியலை.

  ReplyDelete
 6. சிரிப்பை அடக்க முடியவில்லை :) இதெல்லாம்
  எப்படி !!!............

  ReplyDelete
 7. நீர் நடத்தும்வோய்

  ReplyDelete
 8. சரக்கு போட்ட பின் யோசித்ததா....

  ReplyDelete
 9. கலக்கல்!

  இன்று என் தளத்தில்
  நினைவுகள்! கவிதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
  நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

  ReplyDelete
 10. கடைசி... சிபி & பிரேம்....... செம தல ஹி ஹி ஹி ஹி! :D

  ReplyDelete
 11. ஹா... ஹா... ரசிக்க வைத்தது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. செம நக்கல்..சூப்பர்...

  ReplyDelete
 13. மனோ அண்ணனின் அரிவாள் படத்தை பார்த்தப்புறமும் பின்னாடி சிரிப்பு வருமா?

  ReplyDelete
 14. இருந்தாலும் விக்கி அண்ணே சிரிக்க வச்சிட்டார்

  ReplyDelete
 15. ///குங்குமப்பூ போண்டா///

  அடப் போப்பா.. சிரிச்சு முடியல!

  ReplyDelete
 16. ரசித்து சிரித்தேன் !
  நன்றி !

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...