பதிவுலகில் அடியடுத்து வைத்த நாள் முதல் இன்று வரை தனது எழுத்துகளால் அனைவரையும் கட்டி போடும் அருமையான பதிவர் இவர் . இவரது எழுத்து நடை , நகைசுவை உணர்வு , சமுகத்தின் மேல் இவருக்கு உள்ள அக்கறை இவற்றால் இவர் தொடர்ந்து தமிழ்மணத்தில் முதலிடத்தில் இருக்கிறார் .
தனது பதிவுகள் மட்டுமே அதிக வாக்கு பெற்று முன்னிலை பெறுவதை விரும்பாமல் , 18 வாக்குக்கு மேல் தமிழ்மணத்தில் போடவேண்டாம் என தானே விரும்பி ஓட்டை வேண்டாம் என்றது பலரின் பாராட்டை பெற்றது .
சில பதிவுகள் ஆபாசமாக இருகின்றன என குற்றாட்டுகள் இருந்தாலும் இவருக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு அதிகம் . பதிவுலகில் நண்பர்களும் அதிகம் . அப்படி பட்ட பதிவர்தான் " நாற்று " நிரூபன்.
அவருக்கு இந்த விருதை அளிப்பதில் ராஜபாட்டை பெருமை அடைகிறது .
