அன்பு “காணமல் போன கனவுகள்” பிளாக் சகோதரி ராஜீ அவர்கள் எனக்கு ஒரு விருது தந்துள்ளார். இதை கேள்விபட்டதும் பலபதிவர்களுக்கு ஒரு சந்தேகம் , இந்த விருது இவருக்கு எதுக்கு வழங்கப்பட்டது.( எனக்கும் அதே சந்தேகம்தான்). காரணத்தை கண்டறிய மூன்று குழுக்கள் அமைக்கபட்டது.( கூடன்குளத்துக்கு அமைக்கபட்ட குழுபோல இது பொய் சொல்லாது). இவர்கள் தாங்கள் கண்டறிந்த காரணத்தை வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்த போகின்றனர்.
குழு 1 : ராஜாவின் எழுத்து நடையே இந்த விருதுக்கு காரணம் .
இதில் எனது குரு கரண் , அகில உலக ஷகிலா ரசிகர்மன்ற தலைவர் சி.பி , அதிரடி நாயகன் மனோ பேச்சாளர்களாக உள்ளனர் .
குழு 2 : ராஜாவின் தொழில்நுட்ப அறிவே இந்த விருதுக்கு காரணம் .
இந்த அணியில் தொழில்நுட்ப காண்டாமிருகம் (எத்தனை நாளுக்குத்தான் புலினு சொல்றது?) அண்ணன் சசி , ஆனந்த விகடனில் சமிபத்திய ஓனர் ( என் விகடன்னு தானே சொன்னார் ..) தமிழ்வாசி , அமைதி புயல் பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் ஆகியோர் பேச்சாளர்களாக உள்ளனர் .
குழு 3 : ராஜாவின் நகைசுவை உணர்வே இந்த விருதுக்கு காரணம் .
இந்த அணியில் “தமிழ்மணம் கொன்றான் “, நகைசுவை வள்ளல் “bio-data” புகழ் பண்ணிகுட்டி அவர்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தின் வருங்கால துணை வேந்தர் நாய் – நக்ஸ் நக்கீரன் , மண்ணின் மைந்தன் காடு சாரி வீடு சுரேஷ் ஆகியோர் பேச்சாளர்களாக உள்ளனர் .
நடுவர் : நாட்டாமை விக்கியுலகம்
நாள் : 30 – 2 – 2012
இடம் : நாயுடு ஹால் சாரி நாயகர் ஹால் மதுரை.
டிஸ்கி ; இந்த விருதை இன்னும் சிலருக்கு அளிக்க விரும்புகின்றேன் .
- வடகரை தாரிக் – செலவில்லாமல் அனைத்து புத்தகங்களையும் தருவதால்
- S.ராமன் வேலூர் – உழியர்களுக்காக குரல் குடுபவர் இவர்
- கவிதை வீதி சௌந்தர் – இவர் என் இனம் ( ஆசிரியர்னு சொல்லவந்தேன்) கவிதை மன்னன்.
- தமிழ்த்தோட்டம் – வித்தியாசமான வலைத்தளம் நடத்துகின்றார் .
- எனத் தி வேர்ல்ட் என்னும் தளம் முலம் பல அறிய தகவல் தரும் ஸ்டாலின் வெஸ்லி
இதையும் படிக்கலாமே :






