> என் ராஜபாட்டை : free call to mobile

.....

.
Showing posts with label free call to mobile. Show all posts
Showing posts with label free call to mobile. Show all posts

Wednesday, March 9, 2011

டவர் இல்லாமலேயே செயல்படும் செல்போன்கள்

செல்போன் டவர்கள் மூலமாக சமிக்ஞைகளை பெற்று தான் தற்போது செல்போன்கள் இயங்கி வருகின்றன. டவர்கள் இல்லாவிட்டால் செல்போன்கள் இயங்காது.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கச் செய்யக் கூடிய செல்போன் தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்த சாப்ட்வேர் அழைப்புகளை ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு ரிலே செய்ய உதவும். இதன் மூலம் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கும். ஒரே ஒரு ஆபரேடிவ் டவர் மட்டும் இருக்கும்.

அதோடு எல்லா செல்போன்களும் இணைக்கப்பட்டு இருக்கும். செயல்படும் (ஆபரேடிவ்) டவரில் இருந்து சமிக்ஞைகள் பெறப்பட்டு அவை சமிக்ஞைகள் இல்லாத பகுதிகளுக்கு செல்போன்கள் மூலமாகவே அஞ்சல் செய்ய இநத நவீன சாப்ட்வேர் உதவும்.
 

கைத்தொலைபேசியிலிருந்து மற்றுமொரு கைத்தொலைபேசிக்கு எப்படி இலவசமாக பேசுவது ?



இன்று எல்லோருடத்திலும் GPRS ,கமரா, 3G என பல பல வசதிகள் கொண்ட கைத்தொலைபேசிகள்தான் அதிகம் காணப்படுகின்றது. அதுபோல் ஒரு சிம் கார்ட் வாங்கினாலும் சரி ரீலோட் பண்ணினாலும் சரி 30MB மொபைல் இன்டர்நெட் இலவசம் அல்லது மாதம் ஒருமுறை 10MB இன்டர்நெட் இலவசம் என பல நாட்டு தொலைத்தொடர்பு கம்பனிகள் வழங்கிக்கொண்டுருக்கின்றார்கள் அதுமட்டுமல்லாமல் இடத்திற்க்கு இடம் Wi-fi யும் இலவசமாக கிடைக்கின்றன.
 
இவ் வசதியை பயன்படுத்தி நாம் எப்படி கைத்தொலைபேசியிலிருந்து மற்றுமொரு கைத்தொலைபேசிக்கு இலவசமாக அழைப்புகளை ஏற்படுத்துவது என்று பார்ப்போம்.
 
முதலில் இந்த http://www.nimbuzz.com/en இணயத்தளம் சென்று கணக்கொன்றை ஆரம்பித்து நிம்பஸ் மென்பொருளை உங்கள் கைத்தொலைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள் (நிறுவ முன் கைத்தொலைபேசியின் மொடல் இலக்கத்தை சரியாக தெரிவு செய்துகொள்ளவும்) நிறுவும்போது மெமரி கார்டில் இடம் குறைவாக இருந்தால் கைத்தொலைபேசியின் Games பகுதியில் நிறுவலாம். பின்னர் திறந்ததும் உங்களுடைய பயணப்பெயர் மற்றும் கடவுச்சொல்லால் உள்நுழைந்து Google talk, Yahoo, Skpe, MSN/Windows live messenger மற்றும், Facebook ஊடாக உலகெங்கும் இலவசமாக பேசி மகிழலாம்.
 
இது போல அதனில் கொடுக்கபட்டுள்ள SIP ஆப்சன் ஊடாக voip முறை அழைப்புகளையும் ஏட்படுத்தமுடியும்.
 
மற்றும் இது போன்ற சேவையை fring ம் வழங்கிக்கொண்டிருக்கின்றது: http://www.fring.com/default.php