> என் ராஜபாட்டை : நான் எதிர்பார்கவே இல்லை, இது போல நடக்கும் என்று

.....

.

Saturday, June 4, 2011

நான் எதிர்பார்கவே இல்லை, இது போல நடக்கும் என்றுநான் எதிர்பார்கவே இல்லை, இது போல நடக்கும் என்று. எப்படி இது சாத்தியமாச்சுனு எனக்கு தெரியல. இதுல எதாவது வெளி நாட்டு சதி இருக்குமோனு ( உனக்கு உள்நாட்டு சதியே அதிகம்..# கரன்)சந்தேகமா இருக்கு.

ஏன் இப்படி புலம்புரேன்னு பார்கின்றிற்களா? எனது FOLLOWERS எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. இது எப்படி சாத்தியமாச்சுனு எனக்கு தெரியல. சி.பி போல கில்மா விமர்சனம் பன்னல, கரன் போல கவிதை, கட்டுரை எழுதல, ஆர்.கே.சதிஷ் போல ஜோதிடம் தெரியாது, “கவிதை வீதி” போல கன்றாவி sorry கலக்கல் கவிதை எழுதல,  தம்பி கூர்மதியன் போல கிண்டல் பன்ன தெரியாது, நாஞ்சில் மனோ போல ஒரு laptop வாங்குனத ஒரு பதிவா போடதெரியாது, பன்னிகுட்டி(சி.பி நான் பன்னி குட்டினு தான் சொன்னேன், வேற எந்த குட்டிய்ம் இல்லை) போல காமெடி தெரியாது.

இப்படி ஒன்னுமே தெரியாத பதிவுலக குழந்தையான என்னையும் (Milk ரெடியா?) நம்பி 100 பேரு வராங்கனா, ஆச்சரியம்தான்.( நீயெல்லாம் Blog எழுதுறதே ஆச்சரியம்தான்# publicpublic)

ஜனவரி 2009 ல எழுத ஆரம்பிசேன், இல்லை இல்லை copy , paste செய்ய ஆரம்பித்தேன். 2 வருடங்களாக எனக்கு வந்த Mail, நான் படித்ததில் பிடித்தது என post மேல post ஆ போட்டேன்.(இப்பயும் அதானடா போடுர..# மனசாட்சி)

என்னிடம் கனி(கருனாநிதி பொண்னு இல்லை) கணிபொறியும் கிடையாது, internet ம் கிடையாது. Friend’s Browsing Center போய் சும்மா போஸ்ட் போடுவேன்(ஓசில தான்..). கடந்த ஜனவரியில் Airtel இளிச்சவாய் தனத்தால் எனது மொபைலில் Internet இலவசமாக பயன்படுத்த முடிந்தது.

நண்பர் கருன் Profile பார்த்து அவர் Follow செய்த பலB log ல நானும் சேர்ந்தேன். பலருக்கு கமெண்ட் போட, போட, எனது பதிவுக்கும் கமெண்ட் வந்தது, பலரும் என்னுடன் இனைந்தனர்.(நன்றி: “வேடந்தாங்கல்” கருன்)

இன்னும் நிறைய சொல்லலாம், பாவம் நீங்கள். So எனது பதிவை படிக்கும் கோடானகோடி (ராசானு பெயர் வச்சதும் கோடிதான் வாய்ல வருது) வாசகர்களுக்கும், என்னை Follow செய்ய போகும் லட்சகனக்கான வாசகர்களுக்கும் நன்றி!... நன்றி!!... நன்றி!!!

டிஸ்கி 1 : இந்த பதிவை பாராட்டி அதிக கமெண்ட் போடுபவர்களுக்கு 1000000  மதிப்புள்ள கார் (போட்டோ  வழங்கப்படும் )

டிஸ்கி 2 : இத்தனை பதிவரை பற்றி எழுதியும் 100  கமெண்ட்க்கு குறைவா வந்தா அது அந்த பதிவர்களை அவமதிப்பது போல  So  கமெண்ட் போடுறதும் போடாததும் உங்க இஷ்டம் .32 comments:

 1. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இப்படி கெஞ்சி கெஞ்சி கமாண்ட் கேட்டாலும் நான் போட மாட்டேன்..

  ReplyDelete
 3. ////
  சி.பி போல கில்மா விமர்சனம் பன்னல, கரன் போல கவிதை, கட்டுரை எழுதல, ஆர்.கே.சதிஷ் போல ஜோதிடம் தெரியாது, “கவிதை வீதி” போல கன்றாவி sorry கலக்கல் கவிதை எழுதல, தம்பி கூர்மதியன் போல கிண்டல் பன்ன தெரியாது, நாஞ்சில் மனோ போல ஒரு laptop வாங்குனத ஒரு பதிவா போடதெரியாது, பன்னிகுட்டி(சி.பி நான் பன்னி குட்டினு தான் சொன்னேன், வேற எந்த குட்டிய்ம் இல்லை) போல காமெடி தெரியாது.////////


  எப்படியோ அத்தனை பேரையும ்காலய்ச்சாச்சி...

  ReplyDelete
 4. ம்ம்ம் கலக்குங்க கலக்குங்க...

  ReplyDelete
 5. இன்னும் தொடர்ந்து நிறைய நண்பர்கள் வட்டம் கிடைக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. இது உன்னுடைய 505 -வது பதிவு....

  நிறை பதிவுகளுக்கு சென்று பின்னுட்டமிடும் பட்சத்தில் தாங்களுக்கும் அதிக பின்னுட்டங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது...


  தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. 101 ஃபாலோயர்ஸ் 1001 ஆக வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. ஏர்டெல் இண்டெர் நெட் சமாச்சாரத்தை அடுத்த பதிவா போடுங்க

  ReplyDelete
 9. எனது வாழ்த்துக்கள் அந்த 101 ஃபாலோயர்ஸ்க்கும்(எதையும்,தாங்கும் இதயங்கள்)

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் ராஜா! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. //பாவம் நீங்கள். So எனது பதிவை படிக்கும் கோடானகோடி (ராசானு பெயர் வச்சதும் கோடிதான் வாய்ல வருது) வாசகர்களுக்கும், என்னை Follow செய்ய போகும் லட்சகனக்கான வாசகர்களுக்கும் நன்றி!... நன்றி!!... நன்றி!!//

  என்னை ஃபாலோ செய்யப் போகும் லட்சக்கணக்கான!!!!??என்ன ஒரு தன்னம்பிக்கை.

  அண்ணன் தன்னம்பிக்கை சிங்கம்(சின்னம்?) என் ராஜபாட்டை ராஜா வாழ்க!வாழ்க!வாழ்க!

  //இந்த பதிவை பாராட்டி அதிக கமெண்ட் போடுபவர்களுக்கு 1000000 மதிப்புள்ள கார் //

  ஹய்....கார் எனக்குதானே?

  ReplyDelete
 12. //டிஸ்கி 1 : இந்த பதிவை பாராட்டி அதிக கமெண்ட் போடுபவர்களுக்கு 1000000 மதிப்புள்ள கார் (போட்டோ வழங்கப்படும் )//

  வாழ்த்துகள்

  ReplyDelete
 13. யாரு சொன்னாங்க?உங்களுக்கு காமெடி வராது எண்டு?
  :-)))))))))))))))))))

  100குவாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. தம்பி வாழ்த்துக்கள்.........
  அதே மத்தவங்க பதிவுக்கு வந்து படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லிட்டு போகவும்....என்னமோ விளம்பர கம்பனி மாதிரி உங்க பதிவு லிங்க மட்டும் கொடுத்துட்டு போறத நிறுத்திக்கொள்ளவும்.......தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்....
  நன்றி!

  ReplyDelete
 15. மாப்ளை கருணை உதைக்கனும் ஹி ஹி

  ReplyDelete
 16. மேலையுர் 'ல எங்க ராசா இருக்க? தேடி வந்து அடிக்கணும் . என்ன சுய சரித விளம்பரமா?

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் நண்பா உங்கள் விடா முயற்சி தொடரட்டும்

  ReplyDelete
 19. அடப்பாவி..
  எப்படியோ ,.. ஏன் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. சரிதான் நான் 102 வது ஆளா தொடர போறேனா?கெஞ்சும் போது தொடராம இருக்க முடியல...வாழ்த்துக்கள் பதிவுகளுக்கு. நன்றிகள் என் வலைப்பூவிற்கு வந்தமைக்கு!

  ReplyDelete
 21. நாம கூட எதிர் பார்க்கலங்க... சி.பி.ஐ’க்கு தகவல் குடுக்கனும் ஸார்.. வயிறு எரியுது!! (அப்போ, fire figade"குள்ள தகவல் குடுக்கனும்)

  ReplyDelete
 22. ////Your comment has been saved and will be visible after blog owner approval.///////

  ஏன் இந்த வெளம்பரம்....?

  ReplyDelete
 23. வந்திட்டோமேள்ள நன்ப்பேன்ட்டா

  ReplyDelete
 24. miga nalla irruku.intru than inthapaakam vanthen .

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...