> என் ராஜபாட்டை : டவர் இல்லாமலேயே செயல்படும் செல்போன்கள்

.....

.

Wednesday, March 9, 2011

டவர் இல்லாமலேயே செயல்படும் செல்போன்கள்

செல்போன் டவர்கள் மூலமாக சமிக்ஞைகளை பெற்று தான் தற்போது செல்போன்கள் இயங்கி வருகின்றன. டவர்கள் இல்லாவிட்டால் செல்போன்கள் இயங்காது.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கச் செய்யக் கூடிய செல்போன் தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்த சாப்ட்வேர் அழைப்புகளை ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு ரிலே செய்ய உதவும். இதன் மூலம் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கும். ஒரே ஒரு ஆபரேடிவ் டவர் மட்டும் இருக்கும்.

அதோடு எல்லா செல்போன்களும் இணைக்கப்பட்டு இருக்கும். செயல்படும் (ஆபரேடிவ்) டவரில் இருந்து சமிக்ஞைகள் பெறப்பட்டு அவை சமிக்ஞைகள் இல்லாத பகுதிகளுக்கு செல்போன்கள் மூலமாகவே அஞ்சல் செய்ய இநத நவீன சாப்ட்வேர் உதவும்.
 

2 comments:

  1. தகவல் தொழில்நுட்பத்தில் என்ன வேண்டுமானாலும் சாத்தியம்.

    ReplyDelete
  2. புதுப்புது தகவல்கள்.
    உபயோகமான ப்ளாக் .நன்றி.
    மயிலாடுதுறை என் மனைவியோட ஊரு. நீங்க என் மச்சான் ஆகிட்டீங்க ராஜா

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...