> என் ராஜபாட்டை

.....

.

Monday, June 6, 2011

வடிவேலு சினிமாவில் நடிக்க தடை- நடிகர் சங்கம் முடிவு





சென்னை-இன்று நடைப்பெற்ற நடிகர் சங்க சிறப்பு கூட்டதில் நடிகர் வடிவேலு இனி நடிக்க காலவரையற்ற தடைவிதிக்க படுவதாக முடிவு செய்யப்பட்டது.

கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் மிகசிறந்த நகைசுவை நடிகராக விளங்கியவர் நடிகர் வடிவேலு. சில படங்களில் கதா நாயகனாகவும் நடித்தார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவர் நடிப்பை ரசிகாதவர்கள் இல்லை. அவரது பல வசனங்கள் பிரபலமானவை.

2011 தேர்தல்

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க க்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். ஆரம்பத்தில் இவரது பேச்சை ரசித்த மக்கள், போக போக இவர் விஜயகாந்தை தரம்கெட்டு விமர்ச்சிததை வெறுத்தனர். ஒரு பெண் என்றும் பாராமல் விஜய்காந்த் மனைவியை அது, இது என விமர்ச்சித்தது கடும் கண்டனதை கிள்ப்பியது.

ரஜினியின் “ரானா” வை கிண்டல் பன்னியது

2011 தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கு சாதகமாக இருக்கும் என்ற நினைப்பில் ரஜினியின் “ரானா” வை ரானாவாது, கானாவாது என கிண்டல் பன்னியது திரைதுறையினரை கொதிப்படைய செய்தது. தேர்தல் முடிவுகள் அவருக்கு பாதகமாக வந்ததும் மதுரை போய் பதுங்கிகொண்டார்.

சினிமாவில் நடிக்க தடை

இந்நிலையில் இன்று நடந்த நடிகர்கள் சங்க சிறப்பு கூட்டதில் வடிவேலுக்கு காலவரையற்ற தடைவிதிக்கப்பட்டது. விஜய்காந்தை விமர்ச்சிததுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும், இனி அரசியலையும் சினிமாவையும் கலக்க மாட்டேன் என எழுத்து மூலம் உறுதியளிக்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆதரவும், எதிர்ப்பும்

இந்த தடைக்கு ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஷால், சிம்பு, தனுஷ், சந்தானம், செந்தில், திரிஷா, லட்சுமிராய், டாப்ஸி மற்றும் பலர் ஆதரவு தெருவித்துள்ளனர்.

நடிகர் சந்திரசேகர், குஷ்பு, இயக்குனர் ராம நாராயனன் ,விவேக் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வடிவேலு பேட்டி

இதுபற்றி வடிவேலுவிடம் கேட்டதுக்கு “இது ஜன நாயக படுகொலை, இதை பற்றி நான் உச்ச நீதி மன்றம் வரை செல்வேன், அங்கும் நீதி கிடைக்காவிட்டால் தீகுளிப்பேன்” என தெரிவித்தார்.

இது பற்றிய மேலும் பல விவரங்கள் விரைவில் வரும் என நமது DND நிருபர் தெரிவித்தார்.

DND பற்றியும் அதன் உரிமையாளர், நிருபர் பற்றியும் தெரியாதவர்கள் கீழே பார்க்கவும்.



DND (DUPAKUR NEWS DEVELOPERS)
OWNER and REPORTER  : ராஜா (ராஜா, ராஜா  ராக்கெட் ராஜா)

Saturday, June 4, 2011

நான் எதிர்பார்கவே இல்லை, இது போல நடக்கும் என்று



நான் எதிர்பார்கவே இல்லை, இது போல நடக்கும் என்று. எப்படி இது சாத்தியமாச்சுனு எனக்கு தெரியல. இதுல எதாவது வெளி நாட்டு சதி இருக்குமோனு ( உனக்கு உள்நாட்டு சதியே அதிகம்..# கரன்)சந்தேகமா இருக்கு.

ஏன் இப்படி புலம்புரேன்னு பார்கின்றிற்களா? எனது FOLLOWERS எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. இது எப்படி சாத்தியமாச்சுனு எனக்கு தெரியல. சி.பி போல கில்மா விமர்சனம் பன்னல, கரன் போல கவிதை, கட்டுரை எழுதல, ஆர்.கே.சதிஷ் போல ஜோதிடம் தெரியாது, “கவிதை வீதி” போல கன்றாவி sorry கலக்கல் கவிதை எழுதல,  தம்பி கூர்மதியன் போல கிண்டல் பன்ன தெரியாது, நாஞ்சில் மனோ போல ஒரு laptop வாங்குனத ஒரு பதிவா போடதெரியாது, பன்னிகுட்டி(சி.பி நான் பன்னி குட்டினு தான் சொன்னேன், வேற எந்த குட்டிய்ம் இல்லை) போல காமெடி தெரியாது.

இப்படி ஒன்னுமே தெரியாத பதிவுலக குழந்தையான என்னையும் (Milk ரெடியா?) நம்பி 100 பேரு வராங்கனா, ஆச்சரியம்தான்.( நீயெல்லாம் Blog எழுதுறதே ஆச்சரியம்தான்# publicpublic)

ஜனவரி 2009 ல எழுத ஆரம்பிசேன், இல்லை இல்லை copy , paste செய்ய ஆரம்பித்தேன். 2 வருடங்களாக எனக்கு வந்த Mail, நான் படித்ததில் பிடித்தது என post மேல post ஆ போட்டேன்.(இப்பயும் அதானடா போடுர..# மனசாட்சி)

என்னிடம் கனி(கருனாநிதி பொண்னு இல்லை) கணிபொறியும் கிடையாது, internet ம் கிடையாது. Friend’s Browsing Center போய் சும்மா போஸ்ட் போடுவேன்(ஓசில தான்..). கடந்த ஜனவரியில் Airtel இளிச்சவாய் தனத்தால் எனது மொபைலில் Internet இலவசமாக பயன்படுத்த முடிந்தது.

நண்பர் கருன் Profile பார்த்து அவர் Follow செய்த பலB log ல நானும் சேர்ந்தேன். பலருக்கு கமெண்ட் போட, போட, எனது பதிவுக்கும் கமெண்ட் வந்தது, பலரும் என்னுடன் இனைந்தனர்.(நன்றி: “வேடந்தாங்கல்” கருன்)

இன்னும் நிறைய சொல்லலாம், பாவம் நீங்கள். So எனது பதிவை படிக்கும் கோடானகோடி (ராசானு பெயர் வச்சதும் கோடிதான் வாய்ல வருது) வாசகர்களுக்கும், என்னை Follow செய்ய போகும் லட்சகனக்கான வாசகர்களுக்கும் நன்றி!... நன்றி!!... நன்றி!!!





டிஸ்கி 1 : இந்த பதிவை பாராட்டி அதிக கமெண்ட் போடுபவர்களுக்கு 1000000  மதிப்புள்ள கார் (போட்டோ  வழங்கப்படும் )

டிஸ்கி 2 : இத்தனை பதிவரை பற்றி எழுதியும் 100  கமெண்ட்க்கு குறைவா வந்தா அது அந்த பதிவர்களை அவமதிப்பது போல  So  கமெண்ட் போடுறதும் போடாததும் உங்க இஷ்டம் .



Friday, June 3, 2011

பாட்ஷா ரீ-மேக்கில் விஜய் மற்றும் அஜித்.




நமது SUPER STAR நடிப்பில் வெளிவந்து மாபெறும் வெற்றி பெற்ற திரைப்படம் பாட்ஷா. இப்போழுது பார்த்தால் கூட புது பொலிவுடன் இருக்கும் படம் அது. ரஜினியை அரசியலிக்கு இழுத்த படம் கூட அதுதான்.SUPER STAR ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி. அந்த அற்புத படம் மீண்டும் ரீ-மேக் செய்யபட போகிறது.

ரஜினி வேடத்தில் விஜய்


முதலில் ரஜினி வேடத்தில் நடிக்க அஜித் தான் தேர்வுசெய்யப்பட்டார். ஆனால் அவர் கால்ஷிட் இல்லாத காரனத்தாலும், ரஜினிக்கு பின் மாஸ் ஹிரோவாக கருதபடும் விஜய் தேர்வு செய்யப்பட்டார். வேட்டைகாரன் படத்தில் ஆட்டோகாரனாக நடித்ததும் ஒரு முக்கிய காரனமாக கருதபடுகிரது.

சரன்ராஜ் வேடத்தில் அஜித்(கௌரவ தோற்றம்)


ரஜினியின் நண்பனாக சரன்ராஜ் நடித்த கேரட்டரில் அஜித் நடிக்க இருக்கின்றார். இப்போழுது அஜித் நடிக்கும் “ மங்க்காத்தா” படத்தில் விஜய் ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அதற்க்கு பதிலாக இதில் நடிக்க அஜித் ஒப்புகொண்டுள்ளார்.

இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், கதாநாயகி.


படத்தின் இயக்குனர் இன்னும் முடிவு செய்யபடவில்லை. ஷங்கர், ரவிகுமார், தரனி பெயர்கள் பரிசிலனையில் உள்ளது. இவர்கள் இல்லை என்றால் பாட்ஷாவை இயக்கிய சுரேஷ் கிருஷ்னாவே இயக்கவும் வாய்ப்புண்டு. இசை A.R. ரஹ்மான் என்பது நிச்சயம். தயாரிப்பு பாட்ஷா எடுத்த அதே “சத்யா மூவிஸ்” R.M.வீரப்பன் தான். கதாநாயகியாக இலியானா அல்லது அமலாபால் இருக்கலாம்.

மேலும் இதுபோல பல தகவல்களை விரைவில் வெளியிடுவேன் என DND  நிருபர் கூறினார். DND நிறுவனத்தை பற்றியும், அதன் உரிமையாளரை பற்றியும்  தெரியாதவர்களுக்காக..

DND (DUPAKUR NEWS DEVELOPERS)
OWNER and REPORTER  : ராஜா (ராஜா, ராஜா  ராக்கெட் ராஜா)

Thursday, June 2, 2011

காங்கிரஸ் முகத்திரையை கிழித்த சீமானை வாழ்த்துகிறேன் : மலேசிய துணை முதல்வர்



தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், ‘’காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோதப் போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் முகத்திரையை கிழித்ததில் நாம் தமிழர் கட்சிக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்த ராஜபக்சே மற்றும் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றவாளிகளே என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தாங்களும் நாம் தமிழர் கட்சியும் முயற்சி எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழகம் வரும் வாய்ப்பு கிடைத்தால், உங்களை கண்டிப்பாக நேரில் சந்திக்கிறேன். உங்கள் தமிழின சேவை என்றும் தொடர உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

 காங்கிரஸ் கதையும் இதுதான்

Wednesday, June 1, 2011

அட குரங்கே ...


பக்தி மனிதனுக்கு மட்டும் சொந்தம் அல்ல ...







இது போல சண்டை போடா முடியுமா ?