> என் ராஜபாட்டை : வடிவேலு சினிமாவில் நடிக்க தடை- நடிகர் சங்கம் முடிவு

.....

.

Monday, June 6, 2011

வடிவேலு சினிமாவில் நடிக்க தடை- நடிகர் சங்கம் முடிவு

சென்னை-இன்று நடைப்பெற்ற நடிகர் சங்க சிறப்பு கூட்டதில் நடிகர் வடிவேலு இனி நடிக்க காலவரையற்ற தடைவிதிக்க படுவதாக முடிவு செய்யப்பட்டது.

கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் மிகசிறந்த நகைசுவை நடிகராக விளங்கியவர் நடிகர் வடிவேலு. சில படங்களில் கதா நாயகனாகவும் நடித்தார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவர் நடிப்பை ரசிகாதவர்கள் இல்லை. அவரது பல வசனங்கள் பிரபலமானவை.

2011 தேர்தல்

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க க்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். ஆரம்பத்தில் இவரது பேச்சை ரசித்த மக்கள், போக போக இவர் விஜயகாந்தை தரம்கெட்டு விமர்ச்சிததை வெறுத்தனர். ஒரு பெண் என்றும் பாராமல் விஜய்காந்த் மனைவியை அது, இது என விமர்ச்சித்தது கடும் கண்டனதை கிள்ப்பியது.

ரஜினியின் “ரானா” வை கிண்டல் பன்னியது

2011 தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கு சாதகமாக இருக்கும் என்ற நினைப்பில் ரஜினியின் “ரானா” வை ரானாவாது, கானாவாது என கிண்டல் பன்னியது திரைதுறையினரை கொதிப்படைய செய்தது. தேர்தல் முடிவுகள் அவருக்கு பாதகமாக வந்ததும் மதுரை போய் பதுங்கிகொண்டார்.

சினிமாவில் நடிக்க தடை

இந்நிலையில் இன்று நடந்த நடிகர்கள் சங்க சிறப்பு கூட்டதில் வடிவேலுக்கு காலவரையற்ற தடைவிதிக்கப்பட்டது. விஜய்காந்தை விமர்ச்சிததுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும், இனி அரசியலையும் சினிமாவையும் கலக்க மாட்டேன் என எழுத்து மூலம் உறுதியளிக்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆதரவும், எதிர்ப்பும்

இந்த தடைக்கு ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஷால், சிம்பு, தனுஷ், சந்தானம், செந்தில், திரிஷா, லட்சுமிராய், டாப்ஸி மற்றும் பலர் ஆதரவு தெருவித்துள்ளனர்.

நடிகர் சந்திரசேகர், குஷ்பு, இயக்குனர் ராம நாராயனன் ,விவேக் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வடிவேலு பேட்டி

இதுபற்றி வடிவேலுவிடம் கேட்டதுக்கு “இது ஜன நாயக படுகொலை, இதை பற்றி நான் உச்ச நீதி மன்றம் வரை செல்வேன், அங்கும் நீதி கிடைக்காவிட்டால் தீகுளிப்பேன்” என தெரிவித்தார்.

இது பற்றிய மேலும் பல விவரங்கள் விரைவில் வரும் என நமது DND நிருபர் தெரிவித்தார்.

DND பற்றியும் அதன் உரிமையாளர், நிருபர் பற்றியும் தெரியாதவர்கள் கீழே பார்க்கவும்.DND (DUPAKUR NEWS DEVELOPERS)
OWNER and REPORTER  : ராஜா (ராஜா, ராஜா  ராக்கெட் ராஜா)

14 comments:

 1. என்னமோ ஏதோ ன்னு ஓடி வந்தா?

  ReplyDelete
 2. யோவ் உருட்டுக்கட்டை வேணுமா? அது எப்படி இருக்குமெண்டு தெரியுமா? கடைசிவரை வாசிக்க வைத்து கழுத்தரிங்க ஐயா? என்ன கொடுமை சார் இது

  ReplyDelete
 3. ராஜா ராக்கெட் ராஜா ஜாக்கிரதை!

  வடிவேலு உங்க வீட்டு முன்னாடிதான் நின்னுட்டு இருக்கிறாராம்.

  ReplyDelete
 4. பாஸ்...ரொம்ப ஆடினால் அடங்கித் தானே ஆகனும்,

  ஹி...ஹி.....
  ஐயோ ஐயோ.

  ReplyDelete
 5. தொடங்கிடின்களா

  ReplyDelete
 6. நம்பி வந்து படிச்சுப்புட்டு ஏமாந்துப்பிட்டேனே அவ்வ்வ்வ் .

  ReplyDelete
 7. அடிச்சு ஆடுங்க நண்பரே!

  ReplyDelete
 8. வரவர டி..என்.டி அக்கப்போர் ரொம்ப அதிகமுங்கோ..கண்டிச்சி வைங்கோ

  ReplyDelete
 9. ஏய்யா எங்களை கொல்ற..அந்த உளவுப்படையை அடக்கி வாசிக்க சொல்லுமய்யா

  ReplyDelete
 10. வடிவேலு பாவம்....அந்த ஜீவனை வதைக்காதீங்க...அதுவே கதற்கிட்டு இருக்கு

  ReplyDelete
 11. இதெல்லாம் நடந்தா நல்லாத்தான் இருக்கும் ...

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...