> என் ராஜபாட்டை : காங்கிரஸ் முகத்திரையை கிழித்த சீமானை வாழ்த்துகிறேன் : மலேசிய துணை முதல்வர்

.....

.

Thursday, June 2, 2011

காங்கிரஸ் முகத்திரையை கிழித்த சீமானை வாழ்த்துகிறேன் : மலேசிய துணை முதல்வர்தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், ‘’காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோதப் போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் முகத்திரையை கிழித்ததில் நாம் தமிழர் கட்சிக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்த ராஜபக்சே மற்றும் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றவாளிகளே என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தாங்களும் நாம் தமிழர் கட்சியும் முயற்சி எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழகம் வரும் வாய்ப்பு கிடைத்தால், உங்களை கண்டிப்பாக நேரில் சந்திக்கிறேன். உங்கள் தமிழின சேவை என்றும் தொடர உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

 காங்கிரஸ் கதையும் இதுதான்

9 comments:

 1. எதாவது சொல்லுங்க.. அதான் சொல்லிட்டோமே!!!!!!

  ReplyDelete
 2. டுடே லொள்ளு நீங்களுமா..

  ReplyDelete
 3. கவிதை வீதியில் இன்று


  சிபி Vs மனோ...

  ReplyDelete
 4. உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.

  Share

  ReplyDelete
 5. படமும் அதற்கான கமெண்டும் சூப்பர்!

  ReplyDelete
 6. காங்கிரஸ் கதையும் இதுதான் ///  சூப்பர்ப் மக்கா.....

  ReplyDelete
 7. காங்கிரஸ் கதை படம் சூப்பர்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...